செவ்வாய், 5 நவம்பர், 2013

கடும் வார்த்தை பிரயோகம் அவசியமா?


சலஃபிகளை விமர்சிக்கும் போது நாம் கடும் வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்கிறோம் என்று சிலர் ஆதங்கப்படுகின்றனர்.

ஆனால் அது அவர்களது வரம்பு மீறிய இழி சொற்களுக்கு நாம் கொடுக்கும் பதிலடி தான் என்பதை, நம்மை விமர்சிக்கக் கூடியவர்கள் புரிவது கிடையாது.
இதை புரியாதது இவர்களது குறையில்லை.

காரணம், யாரிடம் சத்தியம் இருக்கிறதோ, எந்த கூட்டத்திடம் கொண்ட கொள்கைக்கு ஆதாரம் இருக்கிறதோ, அவர்களது கருத்துகள் தான் மக்களிடம் விரைவாய் சென்று சேரும்.

அந்த வகையில், சலஃபி கூட்டம் எடுத்து வைக்கும் எந்த வாதமும் மக்கள் உள்ளங்களை ஈர்க்கவில்லை, சமுதாயத்தின் விழிப்புணர்வுக்கு பயன்படவில்லை. அதனால் இவர்கள் நம்மை ஏசுவதும் கேலி செய்வதும் கூட மக்களுக்கு தெரியவில்லை.

ஆனால் தவ்ஹீத் ஜமாத்தை பொறுத்தவரை, அவர்களிடம் தான் ஆதாரம் உள்ளது, அவர்களிடம் தான் சத்தியம் உள்ளது. ஆகவே அவர்கள் செய்யும் பிரச்சாரங்கள் மக்கள் மத்தியில் எளிதில் சென்று சேர்கிறது.

அதன் காரணமாக தான், எதிர்கொள்கையுடையவர்கள் விமர்சிக்கப்படுவது
கூட மக்களின் கவனத்தை தட்டுகிறது.

எவரையும் நாம் வரம்பு மீறி விமர்சிக்க மாட்டோம் என்பது ஒரு பக்கம் இருக்க, இது பிறரால் சுட்டிக்காட்டப்படுவது கூட, நம் பிரச்சாரங்கள் அவர்களை சென்றடைகின்ற அளவிற்கு சலஃபுகளின் எந்த வாதமும் அவர்களை சென்றடையவில்லை என்பதையே காட்டுகிறது !

we are on the right track !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக