நன்றி சகோ. அப்துன்னாசர்
مسند أحمد - (ج 45 / ص 477) 26212 - حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ السُّوَيْدِيُّ قَالَ حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ سُلَيْمَانُ بْنُ عُتْبَةَ الدِّمَشْقِيُّ قَالَ سَمِعْتُ يُونُسَ بْنَ مَيْسَرَةَ عَنْ أَبِي إِدْرِيسَ عَائِذِ اللَّهِ عَنْ أَبِي الدَّرْدَاءِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَدْخُلُ الْجَنَّةَ عَاقٌّ وَلَا مُؤْمِنٌ بِسِحْرٍ وَلَا مُدْمِنُ خَمْرٍ وَلَا مُكَذِّبٌ بِقَدَرٍ
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : விதியை மறுப்பவன், நிரந்தரமாக மது அருந்துபவன், சூனியத்தை உண்மை என்று நம்புபவன், (பெற்றோருக்கு) மாறு செய்பவன் ஆகியோர் சுவனத்தில் நுழைய மாட்டார்கள். அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி) நூல் : அஹ்மது (26212)
மேற்கண்ட ஹதீஸிற்கு சகோதரர் அப்பாஸ் அலி அவர்கள் ”முஃமினும் பிஸிஹ்ர்” என்ற வார்த்தைக்கு ”சூனியத்தை உண்மை என்று நம்புபவன்” என்று மொழிபெயர்த்திருந்தார்.
ஆனால் இஸ்மாயில் ஸலபி என்ற அரைகுறை அப்பாஸ் அலியின் ஆய்வுகளுக்கு பதில் கூற திராணி இல்லாமல் அப்பாஸ் அலியின் மொழிபெயர்ப்பு பிழையானது . ”முஃமினும் பி ஸிஹ்ர்” என்றால் ”சூனியத்தை ஈமான் கொள்பவன்” என்றுதான் பொருள் . ”உண்மை என்று நம்புவது ஈமான் கொள்வது கிடையாது என கிறுக்குத்தனமாக உளறியுள்ளான்.
இப்போது ஈமான் என்பதின் பொருள் என்ன ? என்ற ஆய்விற்குள் நாம் செல்ல விரும்பவில்லை.
முஃமினும் பிஸிஹ்ர் என்ற வார்த்தைக்கு யாருடைய பொருள் சரியானது என்பதை சுருக்கமாக அறிந்து கொள்வோம்.
ஷூஐப் அர்னாவூத் என்ற அரபி மொழி அறிஞர்
முஃமினும் பிஸிஹ்ர் என்பதின் பொருள் ”முஸத்திகும் பிஸிஹ்ர் ” அதாவது ”சூனியத்தை உண்மை என்று நம்புபவன்” என பொருள் செய்துள்ளார்.
அதற்கான ஆதாரம் போட்டோகாப்பியாக இணைக்கப்பட்டுள்ளது.
அப்பாஸ் அலி என்ன பொருள் செய்தாரோ அதே பொருளைத்தான் அரபி மொழி அறிஞரனா ”ஷூஐப் அர்னாவூத்” அவர்கள் கொடுத்துள்ளார்கள்.
இப்போது அரைகுறை இஸ்மாயில் ஸலபி இதற்கு என்ன பதில் கூறப்போகிறார்.
அர்னாவூத் அவர்களுக்கு அரபி தெரியாது என்று கூறப்போகிறாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக