மதினாவாசிகளால் தடபுடல் வரவேற்பு வழங்கப்பட்ட நபி (ஸல்) அவர்கள், மதினாவில் அபு அய்யுப் அல் அன்ஸாரி (ரலி) அவர்களது வீட்டில் தங்கிக் கொள்ள முடிவு செய்கிறார்கள்.
அவ்வீட்டு வாசலில் பெரும் மக்கள் திரளை கண்ட பெருமானார், அவ்விடத்திலேயே மிகப்பெரிய எழுச்சியுரை ஒன்றை நிகழ்த்துகிறார்கள்.
மிகப்பெரும் வரலாற்று பயணம் நிறைவேறிய அந்த நொடி தான் இஸ்லாத்தின் உலகளாவிய வளர்ச்சிக்கான துவக்கமாகவும் இருந்தது. அந்த வரலாற்றை படைத்த நிகழ்வு நிச்சயம் நபி (ஸல்)அவர்களுக்கு தமது தூதுத்துவ பணியில் அது மிக முக்கிய நாள் தான்.
அவர்கள்து எழுச்சியுரையை கேட்க கூடியிருந்த கூட்டத்தில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களும் இருந்தனர், மறுத்த யூதர்களும் இருந்தனர். இஸ்லாத்தை எதிர்ப்பதை விடவும், மக்காவிலிருந்து கொண்டு இந்த அளவிற்கு புரட்சி செய்து வரும் அந்த மாமனிதரை பார்த்து, அவரது உரையை கேட்க வேண்டும் என்பதேஎ அவர்களுக்கும் பிரதானமாய் இருந்தது.
அப்துல்லாஹ் இப்னு சலாம் (ரலி) அவர்கள், அன்றைக்கு இஸ்லாத்தை ஏற்காத யூதராக இருந்தார். நபியின் உரையை கேட்டு விட்டு நபியை நேரில் சந்தித்து பேச விருப்பம் தெரிவித்து வீட்டுக்குள் வருகிறார்.
மூன்று கேள்விகளை தான் கேட்கப்போவதாகவும் அம்மூன்றுக்கும் சரியான பதிலை நபி (ஸல்) அவர்கள் சொல்லி விட்டால் அவர்கள் இறை தூதர் என்பதை தாம் ஏற்றுக் கொள்வதாகவும் சொல்கிறார்.
இதற்கு முந்தைய தீர்கதரிசிகள் பலரும் இஸ்ரவேல சமூகத்திற்கு வந்த்திருந்ததாலும், அவர்களும் இறைவனின் செய்திகளையே கொண்டு வந்திருந்ததாலும், அவர்கள் சொல்வதும் நபிகள் பெருமானார் சொல்வதும் ஒத்துப் போய் விடுமேயானால் அவர்களை போல பெருமானாரும் இறை தூதர் தான் என்பதை உறூதி செய்து விடலாம் என்பதே சலாம் (ரலி) அவர்களது எண்ணமாகயிருந்தது.
என்னென்ன கேள்விகள் என்று கேட்டதற்கு,
1 இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது?
2. சொர்க்கவாசி முதலில் உண்ணும் உணவு எது?
3. குழந்தை தன் தந்தையை (சாயலில்) ஒத்திருப்பது எதனால்?) அது (சாயலில்) தன் தாயின் சகோதரர்களை ஒத்திருப்பது எதனால்?' என்று கேட்டார் அவர்.
சற்று முன்பு தான் இது பற்றிய ஞானத்தை அல்லாஹ் தமக்கு தந்திருந்தார் என்று பதிலலித்த நபி (ஸல்) அவர்கள்,
ஒவ்வொன்றுக்கும் கீழ்காணும் பதில்களை அளித்தார்கள்.
1. இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் ஒரு நெருப்பாகும். அது மக்களைக் கிழக்கிலிருந்து (துரத்திக் கொண்டு வந்து) மேற்குத் திசையில் ஒன்று திரட்டும்.
2. சொர்க்கவாசிகள் முதலில் உண்ணும் உணவு பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப்படியான சதையாகும்.
3. குழந்தையிடம் காணப்படும் (தாயின் அல்லது தந்தையின்) சாயலுக்கு காரணம், ஆண் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அவனுடைய நீர் (விந்து உயிரணு) முந்தினால் குழந்தை அவனுடைய சாயலில் பிறக்கிறது. பெண்ணின் நீர் (கருமுட்டை உயிரணு) முந்தினால் குழந்தை அவளுடைய சாயலில் பிறக்கிறது" என்று பதிலளித்தார்கள்.
இதை கேட்ட மாத்திரத்திலேயே, ஒரு இறை தூதரை தவிர வேறு எவராலும் இதை சொல்ல முடியாது என்பதை உண்ர்ந்த அந்த நபர், தாங்கள் இறைத்தூதர் தாம் என நான் சாட்சி கூறுகிறேன்" என்று கூறி, இஸ்லாத்தை தழுவுகிறார்கள்.
இந்த சம்பவங்கள் அனைத்தும் புஹாரி 3329 இல் பதிவாகியுள்ளது
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது ஹிஜ்ரத்திற்கு முன்பு பல மதினாவாசிகள் இஸ்லாத்தை ஏற்றிருந்த போதும், ஹிஜ்ரத் பயணம் முடிவுற்று நபி அவர்கள் மதினாவிற்கு வந்த பிறகு, முதன்முதலாய் இஸ்லாத்தில் நுழைந்தது இந்த அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள் தான் !
இஸ்லாத்தின் மின்னல் வேக வளர்ச்சி துளிர்விட துவங்கியது !!
தொடரும், இன்ஷா அல்லாஹ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக