காஃபிர்களின் ஆட்சியானாலும் நமது கோரிக்கைகளை கேட்கலாம், உரிமைக்காக போராடலாம், ஏன், ஆட்சியில் பங்கு கூட வகிக்கலாம் என்பதற்கு மூசா நபியிடமும் இப்ராஹிம் நபியிடமும் நமக்கு முன்மாதிரியும் படிப்பினையும் இருப்பதாக குர் ஆன் கூறுகிறது.
ஆனால் இது போன்று கோரிக்கைகள் வைப்பது கூடாது என்று கூறித்திரிகிற சில அரைவேக்காடுகளுக்கு நம்மை எதிர்ப்பது தான் நோக்கமே அல்லாமல் சுய சிந்தனையோ தங்களுக்கு என வரையறுக்கப்பட்ட கொள்கை கோட்பாடுகளோ எந்த காலத்திலும் இருந்ததில்லை.
உரிமைக்காக போராடுவது கூடாது என்று நாளை ஒரு வேளை நாம் முடிவெடுத்து அதை பகிரங்கமாய் அறிவித்தோமேயானால், போராடலாம் என்பதற்கு சான்றாக இப்போது என்ன வாதங்களையெல்லாம் நாம் வைக்கிறோமோ அவற்றை ஒன்று விடாமல் இந்த கூமுட்டை கூட்டங்கள் அப்போது நமக்கெதிராக சொல்லும் !!
மேலும்,
இழந்த உரிமையை மீட்பதற்காக போராடக்கூடாது ஆனால் ரேஷன் கடையில் வரிசையில் நின்று மண்ணெண்ணெய் வாங்கலாம்,
என்றால்,
இழந்த உரிமையை மீட்பதற்காக போராடக்கூடாது ஆனால் நிலம் வாங்கி காஃபிர்களின் பத்திரத்தில் பதிவு செய்து கொள்ளலாம்,
என்றால்,
இழந்த உரிமையை மீட்பதற்காக போராடக்கூடாது ஆனால் நமது வீட்டில் நாம் வசிப்பதற்காக காஃபிர் அரசாங்கத்திற்கு வரி கட்டலாம், நாம் வாங்கும் பொருட்கள் ஒவ்வொன்றுக்கும் சேவை வரி, விற்பனை வரி எல்லாம் கட்டலாம்.
என்றால், இதை விட மதியீனம் வேறு உண்டா?
நாட்டை விட்டு வெளியேறி விட்டு வைக்க வேண்டிய கூறுகெட்ட வாதங்களை எல்லாம் காஃபிர் அரசாங்கம் போடும் சோற்றை முழுங்கி ஏப்பம் விட்டுக்கொண்டு சொன்னால் இவர்களையெல்லாம் சிந்தனையுள்ள மனித இனத்தில் சேர்க்கலாமா என்று நாம் சந்தேகம் கொள்கிறோம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக