செவ்வாய், 5 நவம்பர், 2013

ஹிஜ்ரி ஆண்டுக்கணக்கு முறை கட்டாயமா?


இப்போது நாம் பின்பற்றும் ஹிஜ்ரி ஆண்டு கணக்கு முறையானது, நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்த வருடத்திலிருந்து கணக்கு செய்கிறோம் என்றாலும் கூட, அவ்வாறு கணக்கிடும் முறை நபி காலத்தில் இருக்கவில்லை. 

ஹிஜ்ரத் செய்த ஆண்டை இஸ்லாமிய வரலாற்றின் முதல் ஆண்டாக கணக்கிடுமாறு நபி (ஸல்) அவர்கள் எந்த கட்டளையையும் பிறப்பிக்கவில்லை எனும் போது, 
அவர்களுக்கும், இப்போது நாம் இஸ்லாமிய ஆண்டு முறை என்கிற பெயரில் கடைபிடிக்கும் ஹிஜ்ரி ஆண்டுக் கண்க்குக்கும் எந்த சம்மந்தமுமில்லை என்பதை அறியலாம்.

காஃபாவை தாக்க வந்த ஆப்ரஹா மன்னனை யானைப்படையின் மூலம் அல்லாஹ் அழித்த அந்த சம்பவத்தின் தொடர்ச்சியாய், யானை ஆண்டு தான் நபி காலத்தில் இருந்த கணக்கு முறை.
இருப்பினும், அதையும் கூட அவர்களது வசதிக்கு செய்து கொண்டார்களே தவிர, யானை ஆண்டை தான் இந்த உம்மத் கடைபிடிக்க வேண்டும் என்று அவர்கள் கட்டளை பிறப்பிக்கவில்லை.

அவர்களது மரணம் வரை வெறெந்த ஆண்டு கணக்கு முறையும் நிலவில் இருக்கவில்லை என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

உமர் (ரலி) மற்றும் உஸ்மான் (ரலி) அவர்களது ஆட்சி காலத்தில் தான் மக்காவிலிருந்து மதினாவுக்கு சென்ற வருடத்தை இஸ்லாமிய சரித்திரத்தின் முதல் ஆண்டாய் கருதலாம் என்கிற முடிவு எடுக்கப்பட்டு ஹிஜ்ரி ஆண்டு முறை அறிமுகமானது.

இதற்கு மார்க்கத்தில் தடையேதும் இல்லை என்பதால் ஹிஜ்ரி ஆண்டு முறையை நாம் தாராளமாக பயன்படுத்தலாம்.
அதே சமயம், ஹிஜ்ரி ஆண்டு என்பது மார்க்கம் வலியுறுத்தியிருக்கிற காலக் கணக்கு முறை என்று நம்புவதோ, இதை பின்பற்றுவது சுன்னத் என்று நம்புவதோ பித்அத் ஆகும்.

ஹிஜ்ரி கணக்கை நான் இன்று முதல் பின்பற்ற‌ மாட்டேன் என்று ஒருவர் முடிவு செய்தால் அதில் மார்க்க அடிப்படையில் எந்த தவறும் இல்லை !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக