நன்றி : சகோ. முஹம்மது இஹ்ஸாஸ்
சூனியம் தொடர்பாக நாம் சொல்லும் நிலைபாடு தவறு என்றும் வழிகேடு என்றும் விழுந்தடித்துக் கொண்டு மறுப்பு சொல்வதிலும் எழுதுவதிலும் சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு அலைகின்றனர்.
ஆனால் இவர்கள் சத்தியத்தை சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படியெல்லாம் கூறவில்லை. மாறாக இன்று பீ.ஜே என்ற தனி நபர் மீதுள்ள அளவற்ற காழ்ப்புணர்ச்சிதான் இவர்களை இவ்வாறு பேச வைக்கிறது. எடுத்ததெற்கெல்லாம் பீ.ஜே மத்ஹப் என்று சொல்பவர்கள், தற்போது உண்மையில் அன்டி பீ.ஜே (AntiPJ) மத்ஹபினராக மாறி பீ.ஜேயையும் அவரது அமைப்பைச் சார்ந்தவர்களையும் சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்கின்றனர்.
“சூனியத்தை உண்மைப்படுத்துபவன் சுவனம் செல்ல மாட்டான்” என்று நபி மொழி இருப்பதால் அன்டி பீ.ஜே மத்ஹபினராகிய இந்த சூனியக்கார கும்பல் அதை எப்படியாவது மறுத்துவிட வேண்டும் என்று யூதர்கள் போன்று பல்வேறு சதித்திட்டம் போட்டனர்.
அந்த ஹதீஸ் பலவீனம் என்று போர போக்கில் உளர ஆரம்பித்தார்கள். இப்போது அதற்கு மரண அடி வாங்கியதால் அடுத்தகட்டமாக யூதர்கள் அல்லாஹ்வின் வசனத்தை திரித்தது போன்று இந்த அன்டி பீ.ஜே மத்ஹபுக்காரர்களில் ஒருவரான இஸ்மாயில் சலபி தற்போது அந்த ஹதீஸின் அர்த்தத்தை திரிக்க ஆரம்பித்துவிட்டார். ”வலா முஃமினும் பிஸிஹ்ர்” என்றால் ”சூனியத்தை உண்மை என்று நம்புபவன்” என்று பொருள் இல்லையாம். சூனியத்தை நாடிச் சொல்பவன்” என்று தான் பொருள் வருமாம் என்று தற்போது அடுத்த உளரல் திட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார்.
இவர் இதை காழ்ப்புணர்ச்சியில்தான் செய்கிறார் என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரம் இதோ.
எந்த ஹதீஸ் பலவீனம் என்றும் எந்த ஹதீஸிற்கு நாம் செய்யும் பொருள் தவறு என்றும் தற்போது உளறிக்கொண்டிருக்கிறாரோ அதே ஹதீஸை சரிகண்டு எந்த மொழிபெயர்ப்பு தவறு என்றாரோ அந்த மொழிபெயர்ப்பை சரிகண்டு இவரது உண்மை உதயம் என்ற பத்திரிகையில் எழுதிவைத்திருக்கிறார்.
அதற்கான ஆதாரம் கீழுள்ள படத்தை பார்க்கவும்
அது 2006 ஜனவரி உண்மை உதயத்தில் (பக்கம் 41) மேற்படியார் எழுதியது.
இப்போது சொல்லுங்கள். மேற்படியார் காழ்ப்புணர்ச்சியில்தான் இப்படியெல்லாம் சொல்லித்திரிகிறார் என்பது புலனாகிறதா?
எதை சரி கண்டாரோ அதை நம்மை எதிர்ப்பதாற்காக இன்று தவறு என்பவர் எல்லாம் உண்மையாளரா? மார்க்கம் சொல்ல தகுதியானவரா?
நாம் வஹியை மட்டும் பின்பற்றச் சொன்னால் வஹியோடு சேர்த்து மன்ஹஜூஸ் சலபும் மார்க்கம் என்கிறார்.
நாம் அல்லாஹ் ஒருவன் என்று அழுத்தம் திருத்தமாக நம்பி ஏகத்துவப் பிரசாரம் செய்து வருகின்றோம். இவர் போர போக்கில் நம்மை எதிர்ப்பதற்காக இவர் அல்லாஹ் ஒருவன் அல்ல! பலர் இருக்கிறார்கள் என்று சொன்னாலும் சொல்வார் போலிருக்கிறது. ஏனெனில் இவர் மொழி பெயர்ப்பு செய்துள்ள அதே விடயத்தை நம்மை எதிர்க்க இவா் மறுக்கின்றார் என்றால் அந்த நிலைக்கு வந்துவிடுவார் போலத்தான் உள்ளது.
இவருக்கு மட்டும்தான் பூமராங் வீசத்ததெரிந்தது போல் ஒரு தடவை வீசத் தெரியாது வீசி மூக்கை உடைத்துக் கொண்டார். இப்போது இவரது பூமராங்கை இவருக்கே மறுபடியும் நாம் வீசுகிறோம். இதில் முதுகெலும்பும் முறியப்போகிறது.
பூமராங் 1 :
வஹியோடு விளையாடுபவர்கள் யார்? என்ற தலைப்பில் மேற்படியார் வாதங்களுக்கு பதில் சொல்வதை விட்டுவிட்டு தனது வஞ்சத்தை கொட்டி தீர்ப்பதற்காகவும் தனது பக்தர்களை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் கண்டபடி வார்த்தை ஜாலம் செய்து கபட நாடகம் ஆடினார்.
அதை மூளையுள்ள ஒருவன் கூட ஏற்க முடியாதளவுக்கு படுமோசமானதாக இருந்தது.
அதில் ”ஒரு பொய்யை ஹதீஸ் என்று சொன்னால் நரகமல்லவா? நீங்கள் ஒரு காலத்தில் பொய்யான செய்தியை சஹீஹ் என்று சொன்னீர்கள். பிறகு ஆய்வு செய்து ளயீப் என்கிறீர்கள். அப்படியானால் அதை சஹீஹ் என்று சொன்ன காலத்தில் நீங்கள் இருந்த வழி என்ன? முஃமின்களின் வழியா? வழிகேடர்களின் வழியா?” என்று ஏதோ உலக மகா புத்திசாலித்தனமாக கேள்வி கேட்டதாக அந்தளவுக்கு குஷிப்பட்டுக்கொண்டார்.
இப்போது அது அவருக்கு பூமராங்காக மாறிவிட்டது.
”ஒரு பொய்யான செய்தியை 2006 இலிருந்து 2012 வரை சரி கண்டு இருக்கிறீர்களே… இதன் அர்த்தத்தை தவறாக புரிந்திருக்கிறீர்களே…. அப்படியானால் நீங்கள் அந்த 5 வருட காலத்தில் வழிகேட்டிலா இருந்தீர்கள்?”
பூமராங் 2 :
அது மட்டுமா? சூனியம் கலந்துரையாடல் என்ற நிகழ்ச்சியில் ”95ம் ஆண்டு பீ.ஜேயின் பில்லி சூனியம் என்ற புத்தகம் படித்தவன் நரகத்துக்கும் அதற்கு பிறகு வந்த பில்லி சூனியம் புத்தகம் படித்தவன் சுவனத்துக்குமா? செல்வான்” என்று களியக்காவிளையில் சலீம் சிராஜி என்ற குராபி கேட்டதைப் போல் கேள்வி கேட்டார். இப்போது அதே கேள்வி இவருக்கு பூமராங்காகிவிட்டது.
”2006ம் ஆண்டு உண்மை உதயம் படித்தவன் நரகத்துக்கும் 2013ம் ஆண்டு முகநூலில் உங்களது டைம்லைனை பார்த்தவன் சுவனத்துக்குமா செல்வான்?”
பூமராங் 3 :
அது மட்டுமல்ல அதே நிகழ்ச்சியிலும் இன்னும் பல நிகழச்சியிலும் வழக்கமாக ஒரு கேள்வியை கேட்பார்.
”பில்லி சூனியம் பற்றி புத்தகம் எழுதிய பீ.ஜே 95ல் நபிகளாருக்கு சூனியம் வைக்கப்ட்டது என்ற கருத்தையும் அதற்கு பின் வந்த புத்தகத்தில் சூனியம் வைக்கப்படவில்லை என்ற கருத்தையும் சொல்லியிருக்கிறார். தனது முந்தைய நிலை வாபஸ் வாங்காமல் சொல்லியிருக்கிறார். இது மோசடி! அநியாயம்! அக்கிரம்” என்றெல்லாம் கொக்கரித்தார். இப்போது இதுவும் பூமராங்காக மாறிவிட்டது
2006 இல் சஹீஹ் என்று எழுதியதை 2013 இல் ளயீப் என்றும் அர்த்தம் தவறு என்றும் எழுதியிருக்கிறார். தான் முன்னர் சரி கண்டது தவறு என்று வாபஸ் வாங்கவில்லை! டிக்லேர் செய்யவில்லை! இது அநியாயமில்லையா? அக்கிரமம் இல்லையா? மோசடி இல்லயைா?”
இது மட்டுமா? இது போன்ற வண்டவாளங்கள் வண்டி வண்டியாக இருக்கிறது.
இதுபோன்ற பதில் சொல்லவே அறவே தகுதியில்லாத பேமன்ட் கடை பஜாரியை விட கேவலமாக நடாத்திய அந்த நிகழ்ச்சிகளை பார்த்துவிட்டு அவரது பக்தர்களும் அன்டி பீ.ஜே மத்ஹபினரும் வேண்டுமானால் சந்தோசப்பட்டுக் கொள்ளலாம்.
சிந்திக்கும் சகோதரர்கள் இவரது மாயவலையிலிருந்து கட்டவிழ்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
சத்தியத்தை தேடும் சகோதரர்கள் இவர் குறித்து விழிப்பாக இருக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக