ராஜபக்சேவை அழைத்த காரணத்தால் நான் புறக்கணிக்கிறேன் என்று கூறுவதும் அரசியல் நாடகம்,
அதை கேட்டு கோபப்படுவது போன்று பாஜக கண்டனம் தெரிவிப்பதும் அரசியல் நாடகம்.
ஆஹா.. அம்மா புறக்கணித்து விட்டார், கேப்டன் புறக்கணித்து விட்டார், புரட்சிப் புயல் புறக்கணித்து விட்டார், எங்கள் தமிழ் மானத்தை காப்பாற்றி விட்டார்கள் என்றெல்லாம் கை தட்டி ஒரு தமிழன் பாராட்டினான் என்றால் அரசியல் நாடகம் வெற்றி பெற்றது என்று பொருள் !
இதற்கு கை தட்டி ஆர்பரிப்பதை விட்டு விட்டு, என் இனத்தை அழித்த ராஜபக்சேவை விருந்தாளியாக அழைத்த காரணத்தால் இனி எந்த காலத்திலும் பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று மேற்படி சுயமரியாதைக்காரர்களை அறிக்கை விட சொன்னால், தமிழன் ஏமாளி தான், ஆனால் தன்மானமில்லாதவனில்லை என்கிற ஒன்றாவது நிரூபணமாகியிருக்கும் !
அரசியல் என்பது நாடக மேடை, தலைவர்கள் தான் அதன் கலைஞர்கள் !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக