மிர்சா சாஹிப் subject- 2 31/05/2014
அன்புள்ள nashid, உன் தொடர்-4 பாகம்-1 ல் மிர்சா சாஹிப் தொடர்பாக 7 ஆட்சேபனைகளை வைத்துள்ளாய். அவற்றில் 5 க்கு முந்திய தொடரில் பதில் தந்துள்ளேன்.
உனது 6 ஆவது ஆட்சேபனை:
மிர்சா சாஹிப் கூறுகிறார்கள் “ நான் மர்யமின் மகன் ஆவேன். நான் தான் மர்யமாகவும் இருந்தேன். நான் கர்ப்பமுற்றேன். நானே ஈசாவை பெற்றெடுத்தேன். நானே ஈசாவானேன்” இவ்வாறு கூறியுள்ள ஒருவர் சுய நினைவுள்ள சராசரி மனிதராக இருக்கும் தகுதியையாவது கொண்டிருக்கிறாரா?.
பதில்:
1) உனது ஆட்சேபனைகளை எடுத்து வைப்பதை விட்டு விட்டு நபிமார்களை மறுப் பவர்களை போன்றே ‘இவர் சுய நினைவுள்ள மனிதரா’ என்று கேட்கிறாய்.
எல்லா நபிமார்களையும் பைத்தியக்காரர்கள் என்று கூறியதை போன்றே நீயும் மிர்சா சாகிபின் நூலை சொந்தமாக படிக்காமல் ஆலிம்களை போன்று தூற்றுகிறாய்.
முதல் பதில் என்னவென்றால் மிர்சா சாஹிப் அவர்கள் அதே கிஷ்தி நூஹ் என்னும் நூலில் கூறுகிறார்கள்,
“ இஸ்லாமிய உலமாக்களே! என்னை பொய்யனாக்குவதற்கு நீங்கள் அவசரப்படாதீர்கள்!
அநேக இரகசியங்கள் மனிதன் எளிதில் அறிய முடியாததாக இருக்கின்றன. அதனால் ஒன்றை கேட்ட மாத்திரத்திலேயே அதனை மறுக்க முன் வராதீர்கள். அப்படி செய்வது தக்வாவின்- இறை பக்தியின் வழியல்ல... ”
2) மிர்சா சாஹிப் கூறியதாக நீ எழுதியிருப்பது உவமையான விஷயம் ஆகும். எனவே அதற்கு உவமையாக பொருள் கொள்ளவேண்டுமே அல்லாமல் நேரடி பொருள் கொடுக்கக்கூடாது.
3) மிர்சா சாகிபின் கூற்றில் 4 விஷயங்கள் உள்ளன. A) நான் மர்யமின் மகன் ஆவேன். (ஈஸப்னு மர்யம் ) B) மர்யமாக இருந்தேன். C) நான் கர்ப்பமுற்று ஈசாவை பெற்றெடுத்தேன். d) நானே ஈஸா ஆவேன்.
4) முதல் விஷயமான “நான் மர்யமின் மகன் ஆவேன்” ( ஈசப்னு மர்யம் ) என்பதற்கு என்ன பொருள் என்பதை பார்ப்போம். அதாவது, இந்த உவமை மிர்சா சாகிபுக்கு பொருந்துகிறதா என்பதை பார்ப்போம்.
5) பனூ இஸ்ராயீல் சமுதாயத்திற்கு வந்த ஈஸா அலை உவமையாக பேசுவார் என்று தவ்றாத்தில் குறிப்பிட்டுள்ள படியும், மேலும் ஈஸா அலை அவர்கள் அதிகமாக உவமையாக பேசியுள்ளார்கள் என்று நியூ testament லிருந்தும் புரிந்து கொள்ள முடிகிறது.
அது மட்டுமல்ல, குரானில் ஈசாவை பற்றி சொல்லும் இடங்களில் எல்லாம் அல்லாஹு உவமையாக த்தான் கூறுகிறான்.
மேலும் நபி ஸல் அவர்களும் வரக்கூடிய ஈசாவை பற்றி உவமையாகவே கூறி உள்ளார்கள்.
6) ( குரான் 3:8 ) “ இந்த வேதத்தில் சில வசனங்கள் உறுதியானவை. இவையே நூலின் அடிப்படை. மற்றவை உவமை வடிவிலானவை. எனவே கோணலான உள்ளத்தை உடையோர் குழப்பத்தை நோக்கமாக கொண்டும், (இந்நூலுக்கு) மாற்றமான பொருள் கொள்ளும் நோக்கிலும் உவமை வடிவிலான வசனங்களை பின் தொடர்வார். ஆனால் அதன் விளக்கத்தை அல்லாஹுவும், இறை ஞானத்தில் முழுமை பெற்றவர்களுமேயன்றி, வேறு எவரும் அறியமாட்டார்கள். ... ”
உவமை வடிவிலான வசனங்களின் விளக்கத்தை அல்லாஹுவும், இறை ஞானத்தில் முழுமை பெற்றவர்களுமேயன்றி, வேறு எவரும் அறியமாட்டார்கள் என்று கூறுவதிலிருந்து, அல்லாஹுவால் அனுப்பப்பட்ட தூதர் மூலம் தான் உவமையான வசனத்திற்கு உரிய பொருளை புரிய முடியும் என்று புரிந்து கொள்ளலாம்.
இந்த வசனத்தின் அடிப்படையில் குரானில் உவமையாக சொல்லப்பட்டுள்ள வசனங்களை பற்றிப்பிடித்துக் கொண்டு நீங்கள் தவறான வழியில் இருக்கிறீர்கள் என்பது தெள்ளத்தெளிவாக புரிய முடிகிறது.
அதாவது ஈஸா நபி இறந்து விட்டார்கள் என்று தெளிவாக குரானில் கூறியிருக்க, மேலும் இயற்கை சட்டத்தின் அடிப்படையில், எல்லோரையும் போன்று இறந்தே ஆகவேண்டும் என்பது அடிப்படையான சட்டமாக இருக்க, நீங்களோ ஈசாவை வானத்தில் உயிரோடு வைத்துள்ளீர்கள் என்பதற்கு ஒரு காரணம், நீங்கள் உவமையாக கூறி உள்ள வசனத்தை அப்படியே நம்புவாதல் தான்.
7) ஈஸா நபி இறந்துவிட்டார்கள் என்று நான் பலவசனங்களை காட்டி நிரூபித்துள்ளேன்.
இப்போது நபி ஸல் அவர்கள் முன்னறிவித்த ஒருவரை பற்றி பார்க்கவேண்டும். அதாவது அவர் இப்னு மர்யம் என்றும், ஈஸா என்றும், அவர் நபியுல்லாஹ் என்றும் நபி ஸல் அவர்கள் முன்னறிவித்துளர்கள்.
இதற்கு, வரக்கூடியவர் நபியாக இருப்பார், மேலும் அவர் பண்பிலும் ஆற்றலிலும் (மரணித்து போன) ஈசாவை ஒத்திருப்பார் என்பதே பொருளாகும்.
8) ஆனால் நீங்களோ ஈஸா நபி மரணித்துவிட்டார்கள் என்ற அடிப்படையான கருத்தை ஏற்றுக்கொள்ளாமல், இப்னு மர்யம் வருவார்கள் என்று உவமையாக கூறப்பட்டதற்கு, முன்னர் வந்த அதே ஈஸா தான் வருவார் என்று தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்.
9) ஈஸா நபி இறந்து விட்டார்கள் என்று குரானின் அடிப்படையான கருத்தை புரிந்து விட்டால், இப்னு மர்யம் வருவார் என்று உவமையாக கூறபட்டவையும் புரிந்து விடும். .
எனவே, நபி ஸல் அவர்கள் ‘இப்னு மர்யம்’ என்று முன்னறிவித்தபடி தோன்றிய நபி, ஹஸ்ரத் அஹ்மத் அலை அவர்கள் என்பது நிரூபணமாகிறது.
10. நீங்களோ, ஈஸா வஃபாத்தை பற்றி பேச வேண்டாம், மிர்சா சாகிபை பற்றி பேசுவோம் என்று கூறுகிறீர்கள். ஆனால் நாங்கள் அடிப்படையான கருத்தாகிய ஈசாவின் வஃபாத்தை முதலில் பேசவேண்டும் என்று கூறுகிறோம்.
ஏனென்றால் அடிப்படை கருத்தை நீங்கள் புரிந்தால் தான் இப்னு மர்யம் என்று உவமையாக கூறப்பட்டதை உங்களால் புரியமுடியும்.
அதாவது குரான் 3:8-ன் அடிப்படையில் ‘ஈஸா வபாத்தாக்கிவிட்டார் என்பது அடிப்படை வசனமாகும்.’ எனவே இதை ஏற்றுக்கொண்டு விட்டால், குரானில் மறைமுகமாக இப்னு மர்யத்தை பற்றி கூறப்பட்டிருப்பதும், நபி ஸல் அவர்கள் இப்னு மர்யம் வருவார் என்று கூறியிருப்பதும் உவமையானது தான் என்று எளிதில் புரிந்து கொள்ளலாம்.
11. ஏன் இப்னு மர்யம் என்று வரக்கூடிய நபியை பற்றி நபி ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள் என்பதற்கு எண்ணற்ற காரணங்கள் உண்டு என்றாலும் ஒரே ஒரு காரணத்தை மட்டும் இப்போது கூறுகிறேன்.
எப்படி உண்மையான மர்யமின் மகனாகிய ஈஸா நபி எதிரிகளால், யூதர்களால் தூற்றப்பட்டார்களோ, அதே போன்று இப்னுமர்யம் என்று உவமையாக கூறப்பட்டுள்ள மிர்சா சாஹிப் அவர்களும் தூற்றப்படுவார்கள்.
இப்போது நீங்கள் மிர்சா சாகிபை தூற்றுவதன் மூலம், மிர்சா சாஹிப் உண்மையாளர் என்றும், அவர் நபி ஸல் அவர்களால் முன்னறிவிக்கப்பட்ட இப்னுமர்யம் ஆவர்கள் என்றும் நிரூபணம் ஆகிவிடுகிறது.
12. நீ வைத்துள்ள ஆட்சேபனையின் முதல் விஷயமான ‘நான் மர்யமின் மகன் ஆவேன்’ என்பதற்கு விளக்கம் கூறிவிட்டேன்.
அடுத்து அவர்கள் கூறி உள்ளது, ‘நான் மர்யமாக இருந்தேன், பின்னர் நான் கர்ப்பமுற்று ஈசாவை பெற்றெடுத்தேன். நானே ஈஸா ஆவேன்’ என்பதற்கான விளக்கத்தை பார்ப்போம்.
13. குரானில் அல்லாஹு கூறுகின்றான் 66:12,13
“பிர் அவுனின் மனைவியை நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இறைவன் விளக்குகின்றான்..............
மேலும் இம்ரானின் மகள் மர்யமையும் ( நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இறைவன் விளக்குகின்றான் )
அவள் தனது கற்புடைமையை காப்பாற்றிக்கொண்டாள். எனவே நாம் அவளுக்கு எமது வசனத்தை வழங்கினோம் ( ரூஹை ஊதினோம்) . அவள் தனது இறைவனின் வசனங்களையும், அவனுடைய வேதங்களையும் உண்மைப் படுத்தி கட்டுப்பட்டு நடப்பவர்களை சேர்ந்தவர்களாக விளங்கினாள். (இவ்வசனத்தின் அசல் விளக்கத்தை கடைசியில் குறிப்பிட்டுள்ளேன்.)
14. எனது கேள்வி என்னவென்றால், இவ்வசனத்தில் நம்பிக்கையாளர்களுக்கு 2 பெண்களை எடுத்துக்காட்டாக அல்லாஹு கூறுகின்றானே, இதன் கருத்து என்ன?
நபி ஸல் அவர்கள் முழு உலக மக்களுக்கும், குறிப்பாக நம்பிக்கையாளர்களுக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள் என்று குரானும் ஹதீஸும் தெளிவாக கூறியிருக்க, மேல்சொன்ன வசனத்தில் 2 பெண்களை எடுத்துக்காட்டாக கூறவேண்டியதன் நோக்கம் என்ன?
15. இரண்டு பெண்களை, மூமின்களான ஆண்களுக்கு உதாரணமாக கூறியிருக்கிறான் என்பது கவனிக்கத்தக்கது, பெண்களுக்கு அல்ல. ஏன்?
16. முஸ்லிம் உம்மத்திலே நபி ஸல் அவர்களின் மிகவும் நேசத்திற்குரிய ஹஸ்ரத் கதீஜா, ஆயிஷா ரலி, பாத்திமா ரலி, மற்றும் இறையடியர்களான பல பெண்கள் இருக்க, யூத சமுதாயத்தை சார்ந்த 2 பெண்களை எடுத்துக்காட்டாக அல்லாஹு கூற வேண்டியதன் நோக்கம் என்ன?
17. நீ உனது முந்திய தொடரில், கண்மூடித்தனமாக பின்பற்றக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தாய். மேலும் afala thahqiloon, சிந்தியுங்கள், சிந்தியுங்கள் என்று அல்லாஹு கூறியிருக்கும்போது, மேலே சொன்ன வசனத்திற்கு என்ன பொருள் என்பதை சிந்திக்க கடமைபட்டிருக்கிறோம்.
18. மேலே எழுதியிருப்பது என்னுடைய கேள்வியாகும்.
இப்போது ஒரு யூத கிறிஸ்தவனின் பார்வையில் சில சந்தேகங்களும், ஆட்சேபனைகளும் உள்ளதை பார்ப்போம்.
ஒரு யூதன் கேட்கிறான்.
முஹம்மத் அவர்களே, உங்களை நான் நபி என்று ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால் மூஸாவிற்கு பிறகு நபி இல்லை என்பதே எங்கள் கொள்கை.
நீங்களோ எங்களுக்கு தாவா செய்கிறீர்கள்,
நீங்கள் ஒருபுறம் நபி என்றும் மேலும் உங்களையே எடுத்துக்காட்டாக ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றும் கூறிகிறீர்கள். ஆனால் மறுபுறம் மர்யமை நம்பிக்கையாளர்களுக்கு எடுத்துக்காட்டாக கூறியிருக்கிறீர்களே?
இது என்ன பைத்தியக்காரத்தனம்?
ஒரு பெண்ணை போய், ஆண்களாகிய நம்பிக்கையாளர்களுக்கு எடுத்துக்காட்டாக சொல்லியிருப்பது என்ன மடத்தனமாக தெரியவில்லையா?
அப்படி என்றால் என்ன தத்துவம் என்று தான் சொல்லுங்களேன் பார்ப்போம்?
அது மட்டுமா? மர்யமை விட்டால் வேறு ஒரு சிறந்த பெண்மணி உங்களுக்கு இல்லையா?
மர்யம் யார் தெரியுமா? எல்லா யூத மக்களும் மர்யமை வேஷி , விபச்சாரீ என்று தூற்றியது உங்களுக்கு தெரியாதா?
அப்படிபட்ட பெண்மணியை போய் குரானில் எழுதி வைத்துள்ளீர்கள் என்றால் அதை நாங்கள் நம்ப வேண்டுமா?
நீங்கள் நபி வாதம் செய்கிறீர்களா or சுய நினைவில்லாமல் பேசுகிறீர்களா?
எங்கள் மூதாதையர்களால் இழிவுபடுத்தப்பட்ட அந்த பெண்மணியை போன்று நாங்களும் ஆகவேண்டுமா?
நபி என்று கூறும் நீங்கள் ஒரு தீய பெண்மணியை உதாரணம் காட்டுகிறீர்களே .
இவ்வாறு ஒரு யூதன், நபி ஸல் அவர்களையும் குரானையும் ஆட்சேபிக்கமுடியும், இது குறைந்தபட்ச ஆட்சேபம் தான்.
நீங்கள் மிர்சா சாகிபை பொய்யின் மூலதனமாக கொண்டவர் என்று கூறுவது போல் தான், யூதர்களும் முஹம்மத் நபியை பொய்யின் மூலதனமாக கொண்டவர் என்று நம்பியுள்ளார்கள்.
19.. நீங்கள் மிர்சா சாகிபை மறுக்கவேண்டும் என்று, அன்னாரின் நூலையும் படிக்காமல், எதிரிகளின் நூலை வைத்துக்கொண்டு தூற்றுகிறீர்களே! இதே போன்று ஒரு யூதனும் நபி ஸல் அவர்களை தூற்ற முடியும் என்பதை சிந்தித்து பாருங்கள்.
எனவே குரான் வசனங்களின் ஆழிய ஞானத்தை புரிந்து கொள்ளாமல் ஒரு யூதன் தூற்றுவதை போன்று நீங்களும் மிர்சா சாகிபின் ஆழிய கருத்துக்களை புரியாமல் தூற்றுகிறீர்கள்.
எனவே நீயும் ஆலிம்களின் நூலை படித்துவிட்டு, அதை உண்மை என நம்பி எழுதுகிறாய். அல்லாஹு உன்னை மன்னிப்பானக.
20. இப்போது ஒரு கிறிஸ்தவன் கேட்கிறான், முஹம்மத் அவர்களே எங்களின் ஆத்மீக அன்னையான ஹஸ்ரத் மர்யமை, மூமின்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு என்று நீங்கள் உங்கள் குரானில் எழுதி உள்ளீர்கள்.
மறுபுறம் நீங்கள் நபி என வாதம் செய்கிறீர்கள். இது முரண்பாடாக தெரிய வில்லையா?
எனவே நாங்கள் உம்மை பொய்யாரகவே காண்கிறோம். நீங்கள் முதலில் எழுதி இருப்பது தான் சரி. அதாவது மர்யம் தான் மூமின்களுக்கு எடுத்துக்காட்டு ஆவார்.
( குறிப்பு: ஹஸ்ரத் நபி ஸல் அவர்களையும், மர்யம் அலை அவர்களையும் ஒரு யூத கிறிஸ்தவனுடைய பார்வையில் மேலே எழுதியிருக்கிறேனே அல்லாமல், அந்த கருத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை சொல்லிக்கொள்கிறேன். நவூதூபில்லாஹ்., நவூதூபில்லாஹ். நவூதூபில்லாஹ். )
21. இப்போது அந்த வசனத்திற்கு உண்மையான பொருளை பார்ப்போம். ( குரான் 66:12,13 ) “ பிர்அவுனின் மனைவியை நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இறைவன் விளக்குகின்றான்..............
மேலும் இம்ரானின் மகள் மர்யமையும் ( நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இறைவன் விளக்குகின்றான் )
அவள் தனது கர்ப்புடைமையை காப்பாற்றிக்கொண்டாள். எனவே நாம் அவளுக்கு எமது வசனத்தை வழங்கினோம் (ரூகை ஊதினோம் ). அவள் தனது இறைவனின் வசனங்களையும், அவனுடைய வேதங்களையும் உண்மை படுத்தி கட்டுப்பட்டு நடப்பவர்களை சேர்ந்தவர்களாக விளங்கினாள்”
இவ்வசனத்தில் அல்லாஹு மர்யமையும், பிர்அவுனின் மனைவியையும் நம்பிக்கை கொண்டவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளக்குகின்றான்.
இவ்வசனத்திலிருந்து புரிந்து கொள்வது என்னவென்றால், நபி ஸல் அவர்களை ஏற்றுக்கொண்ட ஒரு மூமின், இந்த 2 பெண்களுடைய ஏதாவது ஒரு பண்பை பெற்றவராகவே விளங்க முடியும் என்பதாகும்.
மேலும் இவ்வசனத்தில் fa nafahna feehi min roohina ( நாம் அவளுக்கு ரூகை ஊதினோம் ) என்ற சொல்லில், ஆண்பால் சொல்லை, அதாவது பீஹி என்ற வார்த்தையை அல்லாஹு பயன்படுத்தி உள்ளான் என்பது சிந்திக்கத்தக்கது. அதாவது நாம் அவருக்கு ( அவள் என்று இல்லை ) ரூகை ஊதினோம் என்று கூறுகின்றான்.
மர்யம், தன் கற்பை காத்துக்கொண்டாள் என்று கூறிவிட்டு, அவருக்கு ரூகை ஊதினோம் என்று ஆண்பால் சொல்லை அல்லாஹு பயன்படுத்தி உள்ளான் என்பது மிகவும் சிந்திக்கத்தக்க ஒன்றாகும்.
அவளுக்கு என்பதற்கு feeha என்று வரவேண்டும். அதற்கு மாறாக feehi (அவருக்கு) என்ற ஆண்பாலை அல்லாஹு கூறுகின்றான்.
தொடர்ந்து மர்யமை பற்றி, அவள் இறைவனின் வசனத்தையும், வேதங்களையும் உண்மை படுத்தினாள் என்றும், கட்டுப்பட்டு நடப்பவளாக விளங்கினாள் என்றும் அல்லாஹு கூறுகின்றான்.
எனவே ஹஸ்ரத் அஹ்மத் அலை அவர்கள் சிறு வயதிலிருந்தே அல்லாகுவின் மீதும் நபி ஸல் அவர்கள் மீதும் மிகவும் நேசம் உடையவர்களாகவும், உண்மையாளர்களாகவும், கட்டுப்பட்டவர்களாகவும் விளங்கினார்கள். அதனடிப்படையில் அவர்கள் மர்யமின் சிஃபத்தை கொண்டவர்களாக விளங்கினார்கள். இதனடிப்படையில் என்னை மர்யமே என்று அல்லாஹு அழைத்ததாக அவர்கள் கூறுகின்றார்கள்.
இவ்வாறு மர்யமின் சிஃபத்தை கொண்ட ஒருவர் இறை வழியில் முன்னேறுகின்ற போது, அவர்களின் ஆன்மா வளர்ச்சி அடைகிறது. எப்படி கருவில் சிசு வளர்ச்சியடைகிறதோ, அதே போன்று ஆத்மா கொஞ்சம் கொஞ்சமாக இறைவன் பக்கம் வளர்ச்சி அடைந்து கொண்டே சென்று, கடைசியில் ஒரு புது மனிதனாக, ஈசாவின் சிஃபத்தை கொண்ட மாமனிதராக, அதாவது ஒரு நபியாக ஆகிவிடுகிறார்.
இதுவே மிர்சா சாகிப் கூறியதன் தத்துவமாகும். அவர்கள், “நான் மர்யமின் மகன்” ஆவேன் என்று கூறி உள்ளது நபி ஸல் அவர்கள் அன்னாருக்கு வைத்த பெயராகும்.
நபி ஸல் அவர்கள், ஈஸப்னு மர்யம் என்று பெயர் வைத்ததின் நோக்கம் என்ன? அதற்குத் தான் மிர்சா சாஹிப் கூறுகிறார்கள். முதலில் என்னை அல்லாஹு மர்யம் என்று அழைத்தான் என்று. தொடர்ந்து கூறுகிறார்கள் நான்
மர்யமாக இருந்தேன் நான் கர்ப்பமுற்று ஈசாவை பெற்றெடுத்தேன். நானே ஈஸா ஆவேன்” என்று.
நீ கூறி உள்ளாய். மிர்சா சாஹிப் தத்துவ மழை பொழிந்துள்ளார் என்று. உண்மையில் இது தத்துவ மழை தான்.
ஆனால் யாருக்கு புரியும் என்றால், அந்த வசனத்தில் அல்லாஹு கூறியதனடிப்படையில் ஓரளவுக்காவது, கற்புடன் வாழ்ந்து. உண்மையுடனும், கட்டுப்பாட்டுடனும் வாழ்பவருக்குத் தான்.
ஆனால் இன்றய ஆலிம்களோ உலகையே நோக்கமாக கொண்டு, ஏசியும் பேசியும் அவதூறு கூறியும் ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.. இவர்களுக்கு புரியுமா 66.13 வசனத்தின் ஞானம்?
நீ எழுதி உள்ளதை போல் மிர்சா சாகிபுக்கு சராசரி மனிதருக்கு உரிய தகுதி இல்லை தான்.
ஆனால் மிர்சா சாஹிப் அவர்கள் மர்யம் siddeeqa என்ற நிலயையும் தாண்டி ஈஸா நபி என்ற அந்த்ஸ்த்தில் உயர்ந்து நிற்கிறார்கள் ( ரஃபஅ ஆகிவிட்டார்கள் )
மிர்சா சாஹிப் அவர்கள் அதே கிஷ்தி நூஹ் என்னும் நூலில் கூறுகிறார்கள்,
“ இஸ்லாமிய உலமாக்களே! என்னை பொய்யனாக்குவதற்கு நீங்கள் அவசரப்படாதீர்கள்!
அநேக இரகசியங்கள் மனிதன் எளிதில் அறிய முடியாததாக இருக்கின்றன. அதனால் ஒன்றை கேட்டமாத்திரத்திலேயே அதனை மறுக்க முன்வராதீர்கள். அப்படி செய்வது தக்வாவின்- இறை பக்தியின் வழியல்ல... ”
============================================================
உனது 7 ஆவது ஆட்சேபனை:
மிர்சா சாஹிப் ஒருவரின் மீது 1000 சாபங்கள் உண்டாகட்டும் என்று சொல்லியதோடு அதை பேப்பரிலும் தனித்தனியாக எழுதீயுள்ளார் என்பதாகும்.
பதில்: 1. முதன் முதலில் மிர்சா சாஹிப் யாருக்கு இந்த சாபத்தை செய்தார்கள் என்பதை பார்க்கவேண்டும். நபி ஸல் அவர்கள் மீது கிறிஸ்தவர்கள் பல கோணங்களிலும் தாக்குதல்கள் நடத்தினார்கள். எந்தளவுக்கு என்றால் வார்த்தையால் கூற முடியாத அளவுக்கு மிகவும் கீழ்த் தரமாகவும் இழிவாகவும் கிறிஸ்தவர்கள் நபி ஸல் அவர்களை பேசவும் ஏசவும் செய்தார்கள்.
எல்லா வகையிலும் மிர்சா சாஹிப் அவர்கள் கிறிஸ்தவர்களுக்கு பதில் கொடுத்தார்கள். பைபிளின் அடிப்படையிலும், குரானின் அடிப்படையிலும் அவர்களுக்கு பதில் கொடுத்தபின்னரும் கிறிஸ்தவர்கள் மேலும் மேலும் நபிசல் அவர்களை இழிவுபடுத்துவதையே அன்றாட வேலையாகக் கொண்டார்கள். எச்சரித்தும் விட்டார்கள். ஆனால் எந்த மாற்றமும் இல்லாத நிலையில் தான் மிர்சா சாஹிப் அவர்கள் கடைசியாக இந்த துஆ வை செய்ய ஆரம்பித்தார்கள்.
2. தந்தயை பற்றி மிகவும் அவதூறாக ஒருவன் கூறுகிறான் என்றால் எந்த மகன் தான் பொறுத்துக்கொள்வான்?
மகனோ, தன் தந்தை எந்த தவறும் செய்யவில்லை என்பதை பலவழியிலும் எடுத்து சொல்லியும், எதிரியானவன் அதை கண்டு கொள்ளாமல் மேலும் மேலும் தந்தையை இழிவு படுத்துகிறான். இதை சகிக்க முடியாமல், தந்தை எந்த குற்றமும் செய்யாதவராக இருந்தும் மிக அசிங்கமாக இழிவுப்படுத்துகிறார்களே என்ற வேதனையில், சாபம் உண்டாவதாக என்ற துஆ வை செய்ய ஆரம்பிக்கிறான்.
ஒரு தடவை துஆ செய்துவிட்டு ஒரு மகனால் நிம்மதியாக இருந்து விட முடியுமா?
தந்தை உண்மையாளர் என்பதை நிரூபிப்பதற்காக, பல முறை துஆ விலே மூழ்குகிறான் மகன்.
தந்தையின் மீது மகன் எந்தளவுக்கு பாசம் வைத்துள்ளான், என்பதை, கண்ட கண்ட மக்களுக்கு எல்லாம் புரிந்து விடுமா?
3. ஹஸ்ரத் அஹ்மத் அலை அவர்கள் தீய கிறிஸ்தவர்களுக்கு எதிராக செய்த துஆ தான் இது. நான் ஒவ்வொரு தடவை இந்த துஆவை சொல்லும்போதும், மேலும் நான் தனித்தனியாக எழுதியுள்ள இந்த துஆ வை நீங்கள் படிக்கும்போதும் தனித்தனியாக ஆமீன் சொல்லவேண்டும் என்று மக்களை கேட்டுக்கொண்டார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது?
இந்த ஆலிம்களுக்கு, தனது தந்தயை பற்றி, யாராவது லேசாக சொன்னாலே ரோஷம் பொத்துக்கொண்டு வருமே,
ஆனால் ரசூலுல்லாஹ்வை பற்றி கிறிஸ்தவர்கள் இழிவாக பேசியும், எழுதியும் வந்தார்கள். ஆனால் இன்றும் அன்றும் கொக்கரித்துக் கொண்டிருக்கும் தீய ஆலிம்களுக்கு எந்த ரோசமும் வரவில்லையே? ஏன்.
ரசூலுல்லாஹ்வை இழிவாக பேசிய கிறிஸ்தவர்களுக்கு எதிராக த்தான் மிர்சா சாஹிப் துஆ செய்கிறார் என்று நினைத்தாவது இந்த ஆலிம்கள் மிர்சா சாகிபுக்கு support செய்திருக்க வேண்டும்.
அவ்வாறு செய்யாமல் மிர்சா சாஹிப் மீது கொக்கரித்து க்கொண்டிருக்கும் இந்த ஆலிம்கள் நபி ஸல் அவர்கள் முன்னறிவித்தபடி ( புகாரி ஹதீஸ் 3456) யூத கிறிஸ்தவர்களாக மாறிவிட்டார்கள் என்பதில் எந்த அய்யமும் இல்லை.
4. உனது கேள்வியில், ஒரு தடவை துஆ அதாவது சாபம் என்று சொன்னால் போதாதா, ஏன் தனித் தனியாக சொல்லவேண்டும் என்று கேட்கிறாய்.
குரானில் soora ஆர்ரஹ்மானில் “ fabi அய்யி ஆலாஹி ரப்பிக்குமாத்து kazziban” என்று அல்லாஹு திரும்ப திரும்ப கூறுகிறானே ஏன்? எல்லா விஷயங்களையும் கூறி விட்டு “fabi அய்யி ஆலாஹி ரப்பிக்குமாத்து kazziban” என்று ஒரு தடவை சொன்னால் போதாதா?
எனவே நீங்கள் கிண்டல் செய்வது, குரானை கிண்டல் பண்ணுவதை போன்றது தான்.
6. நாம் ஒவ்வொரு தொழுகை முடிந்தவுடன் subuhanallah, அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர் ஆகிய மூன்றையும் 33 தடவை தனித்தனியாக ஓதவேண்டும் என்பது நாம் எல்லோருக்கும் தெரியும்.
ஏன் 33 தடவை தனித்தனியாக எண்ணி எண்ணி ஓதவேண்டும்?. ஒரே ஒரு முறை ‘subuhanallah 33 தடவை’ என்று ஓதி விட்டு எழுந்துவிடவேண்டியது தானே.
7. குரான் 2: 160 & 162 “ நாம் இறக்கிய தெளிவான அடையாளங்களையும் நேர்வழியினையும் கொண்ட இந்த வேதத்தை அதில் நாம் மக்களுக்கு மிகவும் தெளிவாக விளக்கியதன் பின்னர் மறைக்கின்றவர்களை அல்லாஹுவும் சபிக்கின்றான், சபிக்கின்றவர்களும் சபிக்கின்றனர். ............
“எவர்கள் நிராகரித்து விட்டு நிராகரித்த நிலையிலேயே மரணம் அடைந்து விட்டார்களோ அத்தகையவர்களின் மீது அல்லாஹு, வானவர்கள், மக்கள் ஆகிய எல்லோருடைய சாபமும் நிச்சயமாக உண்டாகின்றது.”
மேற்சொன்ன வசனங்களில் அல்லாஹு சபிக்கின்றான் என்று கூறினாலே போதுமானது தான். ஆனால் அல்லாஹு தனித்தனியாக அல்லாஹு, வானவர்கள், மக்கள் என்று தனித்தனியாக ஏன் கூறவேண்டும்?
எனவே மிர்சா சாகிபின் நூலிலிருந்து முன் பின் கருத்துக்களை விட்டு விட்டு, எதிரான கருத்தை மட்டும் கூறி மிர்சா சாஹிப் மீது அவதூறு கூறுகிறார்கள். யூத கிறிஸ்தவர்கள் இவ்வாறே குரானின் வசனங்களின் மீது ஆட்சேபனைகளை வைத்துள்ளார்கள். இதற்கு ஒரு காரணம் மிர்சா சாஹிப் குரானின் அடிப்படையில் எழுதியுள்ள கருத்துக்களை புரியாதது அகும்.
நீ கடைசியாக, இவர் இருக்கவேண்டிய இடம் எங்கே என்று கேட்டுள்ளாய்.
பதில் : நபி ஸல் அவர்களையும். நீ கேட்டது போன்றே காஃபிர்கள் கேட்டார்கள். பதிலாக அல்லாஹு சொல்கிறான் குரான் 7:185
“அவர்களின் தோழருக்கு (நபி ஸல் அவர்கள்) எவ்வித பைத்தியமும் இல்லை. அவர் மிக தெளிவான ஓர் எச்சரிக்கையாளரே அன்றி வேறில்லை. இதை அவர்கள் சிந்திப்பதில்லையா?”
உனது 4ஆவது தொடரின் முதல் பாகத்தில் வைத்துள்ள 7 ஆட்சேபனைகளுக்கும் பதில் கூறிவிட்டேன். முதலில் இவைகளை பேசி முடித்த பிறகு, உனது அடுத்த தொடரில் நீ வைத்துள்ள 6 ஆட்சேபனைகளுக்கு பதில் தருவேன். ஏனெனில் அதற்கு ஒரு நூலையே எழுதவேண்டும். இன்ஷா அல்லாஹு. எனது பதில்கள் அனைத்தும் முடிந்து விட்டதால், உன்னுடைய பதிலை எதிர்பார்க்கிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக