ஞாயிறு, 1 ஜூன், 2014

அஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 6 (E)


அன்புள்ள nashid , (உனது 12.5.14 தொடர்-3 பாகம்-2 க்கு பதில் )

நான் ஆரம்பத்தில், april 30-ல், 

“குர்ஆன் (35:::20,21,22,23) உயிருள்ளவர்களும் இறந்தவர்களும் சமமானவர் அல்லர்.” என்ற ஆயத்தின்படி 
ஒரு கிறிஸ்தவ சகோதரன், ஒரு கேள்வி கேட்கிறார் என்று நான் எழுதியிருந்தேன். 

அதை மீண்டும் விளக்குகிறேன்.

அதாவது, nashid அவர்களே, நீங்கள் எங்களுக்கு தாவா செய்கிறீர்கள், ok, இப்போது என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.

நீங்கள் ஒருவரை நபி என்று கூறுகிறீர்களே, அவர் பெரிய உண்மையாளர் என்றும் கூறுகிறீர்களே, எதோ அருட்கொடையாளர் என்றும் கூறுகிறீர்களே, அந்த நபி முஹம்மத் , 63 வயது வரை வாழ்ந்து மரணித்து விட்டாரே.

ஆனால் எங்கள் சமுதாயத்திற்கு வந்த நபி ஈஸா, கடவுளால் உயர்த்தபட்டு 2000 வருடமாக உண்ணாமல், குடிக்காமல் உயிருடன் வாழ்ந்து வருகிறார்களே.

இப்போது சொல்லுங்கள் யார் உயர்ந்தவர்? எங்கள் நபி ஈசாவா? Or உங்களின் நபி முகம்மதா?

அந்த கிறிஸ்தவ சகோதரன், மேலும் கேட்கிறான், நீங்கள் மிர்சா சாகிபை பொய்யின் மூலதனமாக கொண்டவர் என்று நம்புவதை போல் தான், நாங்களும் முகம்மதை பொய்யின் மூலதனமாக கொண்டவர் என்று நம்புகிறோம்.

நீங்கள் உங்கள் நபியை பெரிய அருட்கொடையாளர் என்றெல்லாம் கூறி எங்களை ஏமாற்ற வேண்டாம்.

எனவே உயிரோடு இருக்கும் எங்கள் நபி ஈஸா சிறந்தவரா? Or 63 வயதில் மரணித்து போன உங்கள் முஹம்மத் சிறந்தவரா? என்ற கேள்விக்கு உங்களில் பதிலை கூறுமாறு வேண்டுகிறேன்.

அது மட்டுமல்ல, எங்கள் நபி ஈஸா இதோ வர இருக்கிறார்; இதோ வர இருக்கிறார், இதோ வர இருக்கிறார்; வந்து உங்களையும் சீர்திருத்துவார்.

இப்போது சொல்லுங்கள் யார் சிறந்தவர்?

இந்த கேள்வியை ஒரு கிறிஸ்தவ சகோதரன் கேட்டால் உன்னால் பதில் சொல்ல முடியாது.

ஏனென்றால் நீங்களும் கிறிஸ்தவர்களை போல, ஈஸா 2000 வருடமாக உயிரோடு இருப்பதாக நம்புகிறீர்கள்.

இந்த கேள்வியை தான் நான் கேட்டிருந்தேன்.

நீ, கிறிஸ்தவனுடைய கேள்விக்கு தெளிவான பதிலை தருவதை விட்டு விட்டு, எடக்கு, எக்குத்தப்பு, அபத்தம் என்றெல்லாம் ஏதேதோ எழுதி, அழகான முறையில், குட்டிக்காரணம் அடித்து விளையாடி உள்ளாய்.

==========================================================

என்னுடைய பதில் என்னவென்றால்,

ஈஸா மட்டுமல்ல, எல்லா நபிமார்களை விடவும் நபி ஸல் அவர்கள் தான் உலகிலேயே தலை சிறந்தவர்கள் , ஏனென்றால் அவர்கள் அகிலங்களுக்கெலாம் அருட்கொடை என்று அல்லாஹு கூறுகின்றான் .

ஆனால் ஈசாவை சொல்லும்போது அவர் பனூ இஸ்ராயீல் சமுதாயத்திற்கு மட்டுமே அனுப்பி உள்ளதாக சொல்லுகிறான்.

இதன் மூலம் ஈசாவை விட நபி ஸல் அவர்கள் தான் சிறந்தவர்கள் என்பதை நீ ஒப்புக்கொள்கிறாயா? இல்லையா?

மேலும் நீ எழுதிஉள்ளாய்:

“இரு தன்மைகளை சொல்லி இரண்டும் சமமில்லை என்று அல்லாஹ் சொன்னால் சமமில்லை என்று புரிவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

சிறந்தது எது என்கிற ஆராய்ச்சியில் இறங்கக்கூடாது.. இறங்கினால் இப்படி தான் எக்குதப்பாய் மாட்டிக் கொள்ள நேரிடும்.” என்று எழுதிஉள்ளாய்.

என் பதில்:

எக்குதப்பாய் மாட்டிக் கொண்டது யார்?

நீ கிறிஸ்தவனுடைய கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மாட்டிகொண்டாய்.

யார் சிறந்தவர் என்று ஒரு கிறிஸ்தவன் கேட்டால்,
சிறந்தது எது என்கிற ஆராய்ச்சியில் இறங்கக்கூடாது என்று நீ கூறுகிறாய். இது தான் அபத்தமான பதில்.

குரானில் அல்லாஹு சொல்வதை நீயும் நானும் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியும், ஆராய்ச்சியில் இறங்க வேண்டிய தேவை இல்லை தான்.

ஆனால் கிறிஸ்தவனுடைய கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். அதற்கு பதில் சொல்ல உன்னால் முடியவே முடியாது.

ஏனென்றால் குரானில் ஈஸா இறந்துவிட்டார் என்று தெளிவாக சொல்லியிருக்க, நீங்களோ கிறிஸ்தவர்களை போல் ஈசாவை 2000 வருடமாக உயிரோடு வைத்துள்ளீர்கள்.

எனவே இந்த ஷிற்கிலிருந்து நீங்கள் எல்லோரும் வெளியே வந்தால் தான்,

நபி ஸல் அவர்கள் அகிலங்களுக்கான அருட்கொடை என்றும் எனவே அவர்கள் தான் மிக சிறந்தவர்கள் என்பதும் உங்களுக்கு புரியும்.

==========================================================

நீ எழுதி உள்ளாய்:

“டூத் பேஸ்டும் டூத் பிரஷும் சமமில்லை என்கிறேன் நான். இரண்டும் சமமில்லை என்று சொல்லி விட்ட காரணத்தால் இரண்டில் எது சிறந்தது என்று சொல் என்று இதற்கு கேள்வி கேட்கக் கூடாது.”

என் பதில்:

காந்தியை (1947) இழுத்து கடைசியில் பால்தாக்கரே வரை கதை அளந்த நீ, இப்போது டூத் பேஸ்ட் க்கு வந்திருக்கிறாய்.

டூத் பேஸ்டும் டூத் பிரஷும் சமமா என்பது கேள்வியின் நோக்கம் அல்ல.
கேள்வி கேட்டவர் டூத் பேஸ்டையும், டூத் பிரஷையும் பற்றி கேட்கவில்லை.

என்ன கேட்கிறார் என்றால், expiry ஆகிவிட்ட tooth paste-ஐயும், expiry ஆகாத tooth paste-ஐயும் பற்றி தான்.

அதாவது இரண்டுமே paste தான். ஒன்று இறந்துவிட்டது, அதாவது பயனற்றது, மற்றொன்றோ fresh ஆக உயிருடன் உள்ளது, எப்போதும் பயன் தரக்கூடியது.

இது தான் அந்த கிறிஸ்தவ சகோதரனின் கேள்வி.

அதாவது இறந்துவிட்ட முகம்மதும், உயிருடன் இருக்கும் ஈசாவும் சமமில்லை, எனவே ஈஸா தான் உயர்ந்தவர் என்பது தான் கிறிஸ்தவ சகோதரனின் கேள்வி.

இதை புரிந்துகொள்ளாமல், தடுமாற்றமே தடுமாற்றம் தான் உனது எல்லா பதிலும்.

==========================================================

.நீ எழுதுகிறாய்:

இன்று நிசார், நேற்று மிர்சா சாஹிப் , அதற்கு முன் முஹம்மத் ,அதற்கு முன்னர் மூஸா ,இப்படி ஆதம் நபி வரை சென்று யார் சிறந்தவர் என்றெல்லாம் உளறி கொட்டி உள்ளாய். (ஆனால் முகம்மதுக்கு முன்னர் ஈஸா என்று நீ எழுதாதன் காரணம் என்ன?)

இதற்கு முன்னர் வந்த எந்த நபிமார்களும் 2000 வருடம் வாழ்ந்ததாக எந்த வரலாறும் இல்லை.

கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை போன்று நீங்கள் ஈசாவை 2000 வருடமாக வாழ்கிறார் என்றும்,

மீண்டும் அவரே வந்து உலகத்தை (மேலும் முஹம்மதிய உம்மத்தையும்) சீர்திருத்துவார் என்றும், குரானுடைய வசனத்திற்கு எதிராக ஷிர்க் வைப்பதால் தான் இந்த கேள்வியே எழுகிறது.

குரானுடைய, எக்காலமும் பொருந்தக்கூடிய அடிப்படை வசனங்களின் கருத்தை,
அதன் தத்துவத்தையும், ஞானத்தையும் புரிந்து கொள்ள முயற்சி செய்வதை விட்டு விட்டு,
இன்று உயிரோடு இருப்பவர் , நேற்று மரணித்தவர், நாளை மரணிப்பவர் என்றெல்லாம் பொருள் கொடுத்து குழப்பி உள்ளாய்.

இவ்வாறு குரானுடையை கருத்தை மறுத்து மறுத்து, கடைசியில் அதை ஒன்றும் அற்ற நூலாக ஆக்குவது யூதர்களின் நடைமுறையாகும்.

எனவே நீ இவ்வாறு சிதறி சிதறி கருத்துக்களை எழுதியிருப்பது பெருமை படக்கூடிய விஷயம் அல்ல.

==========================================================

உனது அடுத்த குட்டிக்கரணம் :

நீ ஏற்கனவே எழுதியிருந்தாய்,

“ நிசார் முஹம்மது அவர்கள் இறக்கவில்லை, நபி (சல்) அவர்கள் இறந்து விட்டார்கள். உங்கள் கேள்வியை உங்கமிடமே கேட்கிறேன், இருவரில் யார் சிறந்தவர் என்று இப்போது நீங்கள் பதில் சொல்லுங்கள், பார்ப்போம். ”

என் பதில்:

நிசார் முஹம்மது நபி என்று வாதம் செய்தாரா? என்று பதில் கூறியிருந்தேன். . ஆனால் இந்த பதிலை புரியாமல் எக்குத்தப்பாய், மீண்டும் எழுதுகிறாய்.

எனது பதில் என்னவென்றால்,

அல்லாஹு “உயிருள்ளவர்களும் இறந்தவர்களும் சமமானவர் அல்லர்.” என்று கூறுகின்றான்.

இதை வைத்துக்கொண்டு யார் உயந்தவர் ( ஈஸா நபியா or முஹம்மத் நபியா) என்று ஒரு கிறிஸ்தவன் கேள்வி கேட்கிறான்.

ஆனால் நீயோ நிசார் முகம்மதையும், நபி ஸல் அவர்களையும் ஒப்புமை படுத்தி யார் சிறந்தவர் என்று கேட்கிறாய். இந்த கேள்வி அபத்தமாக தெரியவில்லையா?

உலகில் கூட, 10th படிக்கிற 2 student ஐ compare பண்ணுவோம். Or phd படிக்கிற 2 student ஐ compare பண்ணுவோம். ஆனால் எந்த ஒரு பைத்தியக்காரனாவது, 10th படிக்கிற மாணவனையும், phd படிக்கிற மாணவனையும், compare செய்து, இருவரும் சமமா? என்று கேட்பானா?

என்னையும், முஹம்மத் நபியையும் compare செய்திருப்பது உன்னுடைய “உலகிலேயே No.1” அறிவீனத்தை காட்டுகிறது.

கிறிஸ்தவனுடைய கேள்வி என்னவென்றால், இருவர், 1. ஹஸ்ரத் முஹம்மத் ஸல் 2. ஹஸ்ரத் ஈஸா.
இருவரும் நபி என்று வாதித்தவர்கள். ஒருவர் 63 வயதில் மரணித்துவிட்டவர்கள்.

மற்றொருவர், உண்ணாமல் குடிக்காமல் 2000 வருடமாக உயிரோடு இருப்பவர். இருவரும் சமமா? யார் சிறந்தவர்?

==========================================================

இப்போது உனது கடைசி தொடரில்,

நீ எழுதி உள்ளாய்:

“நிசார் அவர்கள் இறக்கவில்லை, நிசார் அவர்களது வாப்பா இறந்து விட்டார்கள்.
நான் பேசுவது உயிருடன் இருக்கும் நிசார் அவர்களுக்கு கேட்கும், இறந்து விட்ட அவர்களது வாப்பாவுக்கு கேட்காது. இப்போது சொல்லுங்கள், நீங்கள் சிறந்தவரா உங்கள் வாப்பா சிறந்தவர்களா?”

என் பதில்:

உனது இந்த கேள்வியே தவறு.

நிசாரும், நிசாருடைய வப்பாவும் இயற்கை விதிக்கு உட்பட்டவர்களே. எங்கள் இருவரையுமே 2000 வருடமாக வாழ்வதாக யாருமே சொல்லவில்லை

. எனவே எங்கள் இருவரிலும் யார் சிறந்தவர் என்று கேட்பது, என்னுடைய கேள்விக்கு எதிரானது.

மீண்டும் கூறுகிறேன்,

எனது கேள்வி என்னவென்றால், இயர்க்கைக்கு உட்பட்டு வாழ்ந்து, மரணித்த நபி ஸல் அவர்களா OR இயற்கை விதிக்கு எதிராக, உண்ணாமல் குடிக்காமல் 2000 வருடமாக உயிருடன் வாழும் ஈஸா நபியா?

மீண்டும் உன் கேள்விக்கு வருகிறேன்.

அதாவது நீ கேட்டுள்ளாய், நிசார் சிறந்தவரா or நிசாருடைய வாப்பா சிறந்தவர்களா.

எனது பதில்: .

நிசார் ஆகிய நான் இயற்கை விதிக்கு உட்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நிசாருடைய வாப்பா இயற்கையாக மரணித்து விட்டார் என்று நான் நம்பிக்கொண்டிருக்கிறேன். நாங்கள் இருவருமே இயர்க்கைக்கு உட்பட்டவர்களே. கேள்வி, இயர்க்கைக்கு உட்பட்ட நிசாரோ, நிசாருடைய வப்பாவோ அல்ல.
கேள்வி, இயர்க்கைக்கு உட்பட்டு வாழ்ந்து மரணித்த ஒருவரையும், இயற்க்கை விதிக்கு எதிராக, உண்ணாமல் குடிக்காமல் உயிருடன் வாழும் ஒருவரை பற்றிதான்.

நன்றாக புரிந்து கொள்.

ஆனால் நீ , இப்படியும் சிந்தித்து பார், அதாவது உண்ணாமல் குடிக்காமல் 2000 வருடமாக உன் திருவிதாங்கோடு உப்பா உயிரோடு இருக்கிறார் என்றும், மேலும் ,

அந்த உப்பாவே மீண்டும் உயிரோடு வந்து உனது பேரப் பிள்ளைகளை புத்தி சொல்லி திருத்துவார் என்றும் நீ நம்பினால் அது தவறா சரியா?

இந்த கேள்விக்கு முதலில் பதில் சொல்லு.

2000 வருடமாக உயிரோடு இருப்பதாக நினைக்கும் உன்னுடைய திருவிதாங்கோடு உப்பா (grand father) சிறந்தவர்களா? OR உயிரோடு வாழ்ந்து வரும் nashid ஆகிய நீ சிறந்தவரா?

புரிகிறதா?.

B) உண்டு, குடித்து, இயற்கையாய் வாழ்ந்து வரும் nashid சிறந்தவரா? Or உண்ணாமல் குடிக்காமல் 2000 வருடமாக உயிரோடு இருக்கும் nashid –ன் திருவிதாங்கோடு உப்பா சிறந்தவர்களா?

கேள்வி புரிந்ததா?
==========================================================

குரான் அல்லாகுவின் வசனம். அதை பற்றி புரிந்து கொள்வதில் பிரச்சினை ஏற்பட்டால், குரானின் இன்னொரு பகுதி விளக்கம் அளிக்கும் என்பது எல்லா விரிவுரையாளர்களின் கருத்து.

எனவே உலக ஆட்களை, எல்லா தொடரிலும் நீ ஆதாரம் காட்டியிருக்கிறாய் என்றால், உனக்கு குரானிலிருந்து ஆதாரம் காட்டி விளக்குவதற்கு எதுவுமே இல்லை என்று தான் பொருள். அதாவது உனது நம்பிக்கையே தவறானது.

தொடரும், இன்ஷா அல்லாஹ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக