மிஹ்ராஜ் எனும் சம்பவம் முஃமினை காபிர்களை விட்டும் பிரித்துக்காட்டக்கூடிய, அதன் மூலம் மனிதர்களுக்கு அல்லாஹ் தரக்கூடிய சோதனையாக கருதப்பட வேண்டும். இதை அல்லாஹ் தன் திருமறையில் (17 :60 ) கூறுகிறான்.
அதனடிப்படையில், மிஹ்ராஜ் எனும் விண்ணுலகப்பயணம் நடைபெற்றது என்பதை முழுமையாக நம்வுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.
அதே சமயம்,
மிஹ்ராஜ் சம்பவத்தை நினைவு கூரும் பொருட்டு சிறப்பு வழிபாடுகளோ நோன்புகளை அனுஷ்டிக்குமாறு மார்க்கம் நமக்கு சொல்லவில்லை.
இவர்கள் கூறுவது போன்று ரஜப் 27 அன்று தான் அந்த பயணம் நிகழ்ந்தது என்பதற்கு கூட மார்க்கத்தில் எந்த ஆதாரமும் கிடையாது.
இந்த தினத்தில் தான் மிஹ்ராஜ் சம்பவம் நிகழ்ந்தது என்று அல்லாஹ்வே நமக்கு சொல்லி தரவில்லை எனும் போது, நாமாக ஒரு தினத்தை முடிவு செய்து கொண்டு, அன்றைய தினத்தில் நோன்பு வைப்பதும், தொழுவதும், இபாதத் என்று நாமாக எண்ணிக் கொண்டு இன்னபிற காரியங்களை செய்வதும் மிகப்பெரிய வழிகேடு என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
குறிப்பிட்ட தினம் தான் என்று தெளிவாக அறியக்கூடிய ஒன்றுக்கு கூட , மார்க்கம் சொல்லாத நோன்பையும் தொழுகையையும் செய்வது பித்அத் என்று சொல்கிற ஒரு மார்க்கத்தில்,
எந்த நாள் என்கிற ஆதாரமே இல்லாத ஒரு நாளை தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டு அதில் இபாதத்துகள் செய்வது நம்மை நரகிற்கு இழுத்து செல்லும்!
ஏனெனில், மார்க்கம் நபி (சல்) அவர்களோடு முழுமைப்பெற்று விட்டது.
அவர்களுக்கு பிறகு மார்க்கம் என்கிற பெயரில் செய்யப்படும் அனைத்துமே வழிகேடு,
அனைத்து வழிகேடுக்கும் இறுதி முடிவு நரகமே !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக