ஞாயிறு, 1 ஜூன், 2014

அஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 6 (G)


29/05/2014 Mirsa Sahib சப்ஜெக்ட்-1 (13.05.14 தொடர்-4 பாகம்-1 க்கான பதில்)
அன்புள்ள nashid

நீ மிர்சா சாஹிப் பற்றி உன் ஆட்சேபனைகளை எடுத்து வைப்பாய், அதற்கு பதில் தரவேண்டும் என்று நினைத்தேன்.
ஆனால் மிர்சா சாஹிப் பற்றி விவாதம் நடத்துவதற்கு முன்பே, அவர்களை பற்றி விமர்சனம் செய்கிறாய் என்றால், சும்மா கேலிகிண்டல் செய்து காலத்தை ஓட்டலாம் என்று தான் நினைக்கிறாய் போலும். நபிமார்களை பொய்படுத்தும் நிராகரிப்பாளர்களை போன்று நீ ஆகிவிடாதே.

1) முதன் முதலில் உனது தொடர்-1 பாகம்-1 ல் “உங்கள் கொள்கையை சவக்குழிக்குள் தள்ளாமல் நாம் ஓய மாட்டோம்” என்று எழுதி உள்ளாய். நான் ஏற்கனவே பதில் சொல்லி உள்ளேன் என்றாலும், மீண்டும் நான் எச்சரிக்கிறேன், நபிமார்களை எதிர்த்தவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதை குரானில் பல இடங்களில் அல்லாஹு கூறி உள்ளதை படித்து சிந்திப்பாயாக.

2) “நபிக்கு பிறகு இன்னொரு நபி வரலாம் என்பது குஃப்ர்.” என்று எழுதுகிறாய். குரான் அறிவு கொஞ்சமாவது இருந்தால் நீ இவ்வாறு எழுதமாட்டாய். நபிக்கு பிறகு இன்னொரு நபி வந்தால் குஃப்ர் என்று எழுதியிருக்கிறாயே, என்ன ஆதாரம்?

மூஸா நபியை ஏற்றுக்கொண்டவர்கள் ஈஸா நபியை மறுத்து பொய்யராக்கினார்கள். ஈஸா நபியை ஏற்றுக்கொண்டவர்கள் முஹம்மத் நபியை மறுத்து பொய்யராக்கினார்கள். முஹம்மத் நபியை ஏற்றுக்கொண்டவர்கள் அஹ்மத் நபியை மறுத்து பொய்யராக்குக்கிறீர் கள்.

இவ்வாறு நபிமார்களை பொய் படுத்துபவர்களை அல்லாஹு நிராகரிப்பாளர்கள் என்று கூறி உள்ளதால், அந்த நிராகரிப்பாளர்களின் பட்டியலில் நீங்களும் ஆகிவிடவேண்டாம்.

3) மிர்சா சாகிபுக்கு தனி வேதநூல் உள்ளது என்றும் அதையே நாங்கள் பின்பற்றுகிறோம் என்றும் எழுதி உள்ளாய்.

பதில்:
இவ்வாறு எழுத உனக்கு கற்று தந்தது யார்? மிர்சா சாகிபின் எதிரிகளின் நூலை வைத்து தப்பு தப்பாக பாடம் பயின்றுள்ளாய.

இப்போது கூறுகிறேன் கேள், நான் மட்டுமல்ல உலகில் உள்ள எல்லா அஹ்மதிகளும் குரானையே வேதநூலாக நம்புகிறோம். மேலும் நபி ஸல் அவர்களை எல்லா நபிமார்களை விட சிறந்த நபி என்றும் நம்புகிறோம். எனவே மெய்பொருள் காண்பது அறிவு. இவ்வாறு அபாண்டமாக பொய் சொன்னதற்கு அல்லாஹுவிடம் பாவமன்னிப்பு கேள். மிர்சா சாகிபின் நூல் தான் எங்களின் வேத நூல் என்று எந்த அஹ்மதியாவது உன்னிடம் சொன்னாரா? எதன் அடிப்படையில் நீ இவ்வாறு எழுதினாய்.
-------------------------------------------------------------------------------------------------------------------------எனவே நீ வைத்த முதல் குற்றச்சாட்டே தவறு. அபாண்டமாக, அநியாயமாக பழி சுமத்தி உள்ளாய் என்பது நிரூபணம் ஆகிவிட்டது. எனவே மிர்சா சாகிபை பற்றி நீ வைக்கின்ற ஆட்சேபனைகள் ஆதாரம் அற்றது என்பது இதிலிருந்தே புலனாகிறது. அல்லாஹு உனது “இட்டுக்கட்டி பழிசுமத்தும் பாவத்திலிருந்து” உன்னை பாதுகாத்து மன்னித்தருளுவானாக.
------------------------------------------------------------------------------------------------------------------------4) மிர்சா சாஹிபுக்கும் அவர்களை ஏற்றுக்கொண்டவர்களுக்கும் தண்டனை கிடைக்கும் என்று சில வசனங்களை ஆதாரம் காட்டி உள்ளாய்.

நீ காட்டிய ஆதாரம்: "நமது தெளிவான வசனங்கள் அவர் களுக்குக் கூறப்பட்டால் (நம்மை) மறுப்போரின் முகங்களில் வெறுப்பைக் காண்கிறீர். நமது வசனங்களை அவர்களிடம் கூறுவோரைத் தாக்கவும் முற்படுவர். 'இதை விட கெட்டதை உங்களுக்கு நான் கூறட்டுமா?' என (முஹம்மதே!) கேட்பீராக! அது தான் நரகம். மறுத்தோருக்கு அதையே அல்லாஹ் வாக்களித்துள்ளான். அது சென்றடையும் இடங்களில் மிகவும் கெட்டது."22:72

பதில்: மேற்சொன்ன வசனத்தில் பொய்யாக நபி என வாதித்தவருக்கு தண்டனை கிடைக்கும் என்று இல்லை. மாறாக ஒரு நபி, வசனங்களை எடுத்து கூறினால் அதனை மறுப்பவருக்கு தண்டனை கிடைக்கும் என்று தான் கூறுகிறது.

5) உனது ஆதாரம்: “நமது வசனங்களை அவர்கள் மறுத்ததாலும், 'நாங்கள் எலும்பாகி மக்கிப் போகும் போது புதுப் படைப்பாக மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவோமா?' என்று கூறிய தாலும் இதுவே அவர்களுக்குரிய தண்டனை. (17:98)”

இதுவும் அல்லாகுவின் வசனங்களை மறுப்பவரை பற்றி த்தான். இப்போதும் மிர்சா சாஹிப், ஈஸா நபி பற்றிய உண்மையை, அல்லாஹு எனக்கு அறிவித்தான் என்று கூறுகிறார்கள். ஆனால் நீங்கள் நம்பாமல் மறுக்கிறீர்கள். இதை போன்று மறுப்பவருக்குத்தான் தண்டனை கிடைக்குமே அல்லாமல், பொய்யாக நபி என ஒருவர் வாதிட்டார், எனவே, அவருக்கு தண்டனை கிடைக்கும் என்று மேல் சொன்ன வசனத்தில் கூறவில்லை.

6) நீ எழுதி உள்ளது: “அல்லாஹ் குர் ஆனில் 6:93 இல் கீழ்கண்டவாறு சொல்கிறான்.
அல்லாஹ்வின் பெயரால் பொய்யை இட்டுக்கட்டுபவன், தனக்கு (இறைவனிட மிருந்து) எதுவும் அறிவிக்கப்படாதிருந்தும் எனக்கு அறிவிக்கப்படுகிறது' எனக் கூறுபவன், அல்லாஹ் அருளியதைப் போல் நானும் இறக்குவேன்' என்று கூறுபவன் ஆகியோரை விட மிகவும் அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் மரணத்தின் வேதனைகளில் இருக்கும் போது நீர் பார்ப்பீராயின் வானவர்கள் அவர்களை நோக்கித் தமது கைகளை விரிப்பார்கள். 'உங்கள் உயிர்களை நீங்களே வெளியேற்றுங்கள்! அல்லாஹ்வின் பெயரால் உண்மையல்லாத வற்றை நீங்கள் கூறியதாலும், அவனது வசனங்களை நீங்கள் நிராகரித்ததாலும் இன்று இழிவு தரும் வேதனைக்கு ”

பதில்: அல்லாகுவின் பெயரால் பொய்யை இட்டுக்கட்டுபவர் களுக்குத்தான் தண்டனையை பற்றி கூறப்பட்டுள்ளது. மிர்சா சாஹிப் எதையும் இட்டுக்கட்டவில்லை.

இவ்வசனத்தில் “தனக்கு (இறைவனிட மிருந்து) எதுவும் அறிவிக்கப்படாதிருந்தும் எனக்கு அறிவிக்கப்படுகிறது' எனக் கூறுபவன்,” என்பது சிந்திக்கதக்கது.

மிர்சா சாஹிப், வஹீயாக தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதை தான் கூறினார் .
“அறிவிக்கப்படாதிருந்தும் எனக்கு அறிவிக்கப்படுகிறது' என்று இருப்பதால் இறைவன் அறிவிப்பதை, அறிவிக்கலாம் என்ற பொருள் இதில் இருக்கிறது.

எனவே நபி ஸல் அவர்களுக்கு பிறகு அல்லாஹு பேசுவான் என்பதற்கு இந்த வசனம் ஒரு சான்றாகும்.

“அல்லாஹ் அருளியதைப் போல் நானும் இறக்குவேன்' என்று மிர்சா சாஹிப் எதையும் கூறவில்லை. அதாவது குரான் ஹதீசுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட மிர்சா சாஹிப் கூறவில்லை.

எனவே நீ இந்த வசனங்களை காட்டி மிர்சா சாகிபுக்கு தண்டனை கிடைக்கும் என்று கூறிய அனைத்தும் தவறு.

ஆனால் மேற்சொன்ன வசனத்தின் அடிப்படையில் தண்டனை யாருக்கு கிடைக்கும் என்றால் “அல்லாஹ்வின் பெயரால் உண்மையல்லாத வற்றை நீங்கள் கூறியதாலும்,”

அதாவது கூரானுக்கு எதிராக ஈஸா உயிரோடு இருக்கிறார் என்று நீங்கள் கூறுகிறீர்களே அப்படி கூறும் உங்களுக்கும்,

“அவனது வசனங்களை நீங்கள் நிராகரித்ததாலும் இன்று இழிவு தரும் வேதனைக்கு உட்படுத்தப்படுகிறீர்கள்!' (எனக் கூறுவார்கள்).” என்ற வசனத்தின் அடிப்படையில்,

அல்லாஹு ஒரு நபியை அனுப்பி குரனுக்கு தரும் விளக்கங்களை நீங்கள் நிராகரிப்பதாலும் உங்களுக்கு தண்டனை உண்டு என்றே அல்லாஹு அந்த வசனத்தில் கூறுகின்றான்.

7) நீ எழுதி உள்ளாய்: “பொய் நபியை உலகிலேயே தண்டிக்க வேண்டும் என்கிற நிர்பந்தமொன்றும் அல்லாஹ்வுக்கு இல்லை. அவனை யாரும் நிர்பந்திக்க முடியாது.”

இது உன் சொந்த கருத்து.

நபி ஸல் அவர்கள் அறிவித்தபடி 30 பொய் நபிமார்கள் தோன்றி அவர்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிட்டார்கள் என்பது மார்க்க வரலாறு.

நபி ஸல் அவர்கள் நபித்துவ வாதம் செய்த பிறகு 23 ஆண்டுகள் (63 வயது வரை ) வாழ்ந்தார்கள. மிர்சா சாஹிப் அவர்கள் 73 வயது வரை வாழ்ந்தார்கள். நபி ஸல் அவர்களை பின்பற்றி வந்த,மிர்சா சாஹிபும் உண்மையாளர் என்பதால் தான் அவருக்கு அல்லாஹு நீண்ட வாழ்க்கையை, அதாவது வாதம் செய்த பிறகு 33 ஆண்டுகாலம் வாழச்செய்தான்.

ஆனால் எல்லா பொய் நபியையும் அல்லாஹு உடனேயே அழித்துவிட்டான்.

69:45 அவர் எந்த சொல்லேனும் பொய்யான வெளிப்பாடாக எம்மீது சுமத்தி இருந்தால் நிச்சயமாக நாம் அவரை எம் வலக்கைய்யால் பிடித்திருப்போம். பின்னர் நிச்சயமாக நாம் அவருடைய பெரு நரம்புக்குழாயை தூண்டித்திருப்போம். உங்களுள் எவராலும் அவரை (என்னுடைய தண்டனையிலிருந்து) காப்பாற்ற இயலாது.

மேல் சொன்ன வசனத்தின் படி பொய் நபியை அல்லாஹு உடனே அழித்து விடுகிறான்.

8) நீ எழுதி உள்ளது : நான் தான் கடவுள் என்று சொன்ன சாய்பாபா இவ்வுலகில் தண்டிக்கப்படவில்லை என்பதால் அவர் பொய் கடவுள் இல்லை என்று ஆகி விடும்.

என் பதில்: இங்கு சாய்பாபாவை இழுத்துள்ளாய்.
ஒருவர் நபி என்பதற்கும் ஒருவர் கடவுள் என்பதற்கும் வேறுபாடு இல்லையா?
ஒருவர் உண்டு குடித்து வாழ்கிறார். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு நபி என வதிக்கிறார்.
வித்தியாசம் என்ன என்றால் அவருக்கு வஹீ வருகிறது என்பது மட்டும் தான்.
வஹீ வருவதற்கு வேறு வெளிப்படையான சான்றுகள் கிடையாது என்பதால் தான், நபியை ஏற்றுக்கொள்ள வேண்டியது மக்களுடைய கடமை என்றும், ஆனால், அவர் பொய்யாக வாதம் செய்தால், அவரை அள்ளாகுவே அழித்து விடுவான் என்றும் கூறுகின்றான்.

ஆனால் சாய்பாபா, அவர் தன்னை கடவுள் என்று அல்லாஹ் அறிவித்ததாக கூறினாரா?

ஒரு மனிதர் கடவுள் என்று சொன்னால் அதற்கு ஆதாரம் தேவை இல்லை. ஏனென்றால் அந்த வாதமே பொய் என்று பட்டவர்த்தனமாக தெரியக்கூடியது.

உண்டு குடித்து உறங்கி வாழும் சாய்பாபாவை கடவுள் என எவருடைய மன சாட்சியும் ஏற்றுக்கொள்வதில்லை.

ஆனால் ஒரு நபியை ஏற்றுக்கொள்பவரை, இவ்வுலகமே தூற்றுகிறது. அவருக்கு இங்கேயே சோதனை ஆரம்பித்து விடுகிறது. ஆனாலும் அல்லாஹூக்காக நபியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான் அல்லாகுவின் கட்டளை.

ஆனால் உலக காரியங்களுக்காக சாய்பாபாவை ஏற்று கொள்பவர்களை யாரும் இழிவாக பார்ப்பதில்லை.

எனவே மேல் சொன்ன வசனம் பொய் நபியை தண்டிப்பேன் என்பதாகும். எனவே பொய் நபியையும், சாய்பாபாவையும் போட்டு குழப்பதே.
-------------------------------------------------------------------------------------------------
உனது தொடர்-1 பாகம் 2-ல்

9) நீ எழுதி உள்ளது:

“தெருவில் போகிற ஒருவரை சுட்டிக்காட்டி, அதோ போகிறாரே அவர் அல்லாஹ்வின் நபியாக்கும் என்றால், எவராக இருந்தாலும் ஆதாரத்தை தான் கேட்பார்”.

பதில்: தெருவில் போகிற யாரோ ஒருவரை இவர் தான் நபி என்று யாரும் சொல்லமாட்டார்கள். அப்படி ஒரு மடையன் உன்னை பார்த்து சொல்லிவிட்டான் என்று வைத்துக் கொண்டால் கூட நீ நபிப் பொறுப்பை ஏற்று கொண்டுவிடுவாயா?

அரசியலில் வேண்டுமானால் உனக்கு சாத்தியமாகலாம். எனவே அரசியலில் விளையாடும் நீ நுபூவத்தையும் சாதாரணமாக எடை போட்டுவிட்டாய்.
அல்லாஹ் உன்னை மன்னிப்பானாக

10) நீ எழுதுகிறாய்: மிர்சா சாஹிப் முஹம்மது நபியை பின்பற்றவில்லை, ஷைத்தானை தான் பின்பற்றினார்

பதில்: a) முதலில் நான் கூறுவது என்னவென்றால், நீ அல்லாஹுக்கு அஞ்சிக்கொள் என்பதாகும். அத்துடன் இஸ்திக்பார் செய். விவாதத்தின் ஆரம்பத்திலேயே, தீய ஆலிம்களை பின்பற்றி இவ்வாறு எழுதுவதை தவிர்.

B) ஒரு நபி வருகிறார் என்றால், அந்த நபியை எதிர்ப்பவர் தான் ஷைத்தான்களும், அவன் தலைவனாகிய இப்லீசும். எனவே அபூஜாகில் மற்றும் பிர்அவுன் ஆகிய ஆலிம்களின் கூட்டங்களுக்கு ஒரு நபியை பற்றி பேசவே தகுதி இல்லை.
-------------------------------------------------------------------------------------------------------------------------
C) ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அலை கூறுகிறார்கள் அரேபியா பாலைவனத்தில் ஓர் அற்புதம் நிகழ்ந்ததே. அதாவது இலட்சக்கணக்கான இறந்தவர்கள் சில நாட்களில் உயிர் பெற்றனர். பல தலைமுறைகளாக கெட்டுப் போயிருந்தவர்கள் இறை பண்புகளை பெற்றனர். குருடர்கள் கண்ணொழி பெற்றனர். ஊமைகளின் நாவில் இறைஞானம் பெருக்கெடுத்தது. எக்கண்ணும் கண்டிராத, எக்காதும் கேட்டிராத அத்தகு புரட்சி உலகில் மலர்ந்தது. அது என்ன என்று உணர்ந்தீர்களா?

அது இறைவனில் தன்னை மாய்த்துக் கொண்ட ஒருவர் இருள் நிறைந்த இரவுகளில் செய்திட்ட துஆக்களின் பயன்களே! அவை (அந்த துஆக்கள்) உலகில் ஒரு பேரொலியை எழுப்பியது. மேலும் அந்த கல்லாத, இயலாத அம்மானிதரால் செய்ய முடியாதது என்று காணப்பட்ட அற்புதங்களை செய்து காட்டின.

அல்லாஹுவே! அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினர்க்கும் அவர்கள் இந்த (முஸ்லிம்) சமுதாயத்தின் பேரில் கொண்டிருந்த பரிவு, பற்று, கவலைக்கு ஏற்ப அருட்கொடையையும், சாந்தியையும் வழங்குவாயாக. மேலும் உன் கருணையின் ஒளிகளை என்றென்றும் அவர்கள் மீது இறக்குவாயாக!
(roohani khazayin part 6; பேஜ் 10 barakkaththu துஆ பேஜ்10)
-------------------------------------------------------------------------------------------------------------------------
11) நீ எழுதி உள்ளாய்: அல்லாஹ்வும் நபியை உரசிப்பார்த்து பின்பற்றுமாறு தான் சொல்கிறான்

பதில்: முதலில் அல்லாஹு, ஒரு நபியை எப்படி உரசிப்பார்க்கவேண்டும் என்று சொல்கிறான் என்பதை ஆதாரபூர்வம் தெரிவி .

அதனடிப்படையில் விவாதிப்போம். அதை விட்டு விட்டு நபிமார்களை தூற்றுபவனில் ஒருவனாக ஆகிவிடாதே.
-------------------------------------------------------------------------------------------------------------------------

12) இப்போது, தொடர்-4 பாகம்-1 இல்

மிர்சா சாகிபை பற்றி ஆட்சேபனைகளை வைத்துள்ளாய்.

அதற்கு முன்னர் நீங்கள் இஸ்லாத்தை சரியான முறையில் பின்பற்றுவதால் வேறு ஒரு வழிகாட்டுதல் தேவை இல்லை என்ற கருத்தை வைத்துள்ளாய். அதை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

14) மிர்சா சாஹிபிடம் நபிக்குரிய தகுதி தென்படுகிறதா என்ற தலைப்புடன் ஆரம்பித்துள்ளாய்.
எனவே, அபுஜாகிலுக்கு நபியின் தகுதி தென்பட்டதா? என்ற என் கேள்விக்கு உன் பதில் என்ன?

15) தினம் தோறும் அரசியலை பற்றி கட்டுரை எழுதியும், பேசியும் வரும் உனக்கு மிர்சா சாகிபின் தகுதியை பற்றி பேச என்ன தகுதி உள்ளது?

16) நான் உன் அரசியல் வாழ்க்கையை விமர்சிக்க வில்லை. ஆனால் மிர்சா சாஹிப் உண்மையாளரா இல்லையா என்பது ஒரு தலைப்பாக இருக்க, மிர்சா சாஹிப் பற்றிய ஆட்சேபனைகளை எடுத்து வைக்கவேண்டும். நான் அதற்கு பதில் அளிப்பேன். இவ்வாறு இருவரின் விவாதமே, உண்மை எது என வெளிப்படுத்தும். அதை விடுத்து ஆரம்பத்திலேயே தகுதியை பற்றி மனம்போன போக்கில் பேசுவதற்கு, அரசியல் nashid-க்கு எந்த உரிமையும் இல்லை.

17) 200 நாடுகளில் உள்ள 20 கோடி மக்கள் மிர்சா சாகிபை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். எனவே மிர்சா சாகிபின் தகுதி முழு உலகிலும் நிரூபணம் ஆகிக்கொண்டே வருகிறது. எனவே கண்ணியமான முறையில் விவாதம் செய்யாமல், தகுதியை பற்றி பேசி நீங்கள் கிணற்று தவளைகள் என்று உங்களையே நிரூபிக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

18) “தமீ...ழகத்து தர்காக்களை பார்த்து வருஓ...ம்” என்பவர்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று, தமிழகத்தில் மட்டும் தவ்ஹீது பேசும் நீங்கள், ரோட்டில் போகிற ஒருவரை நபி என நம்பவேண்டுமா என கேட்பதில் ஆச்சரியம் இல்லை தான்.

19) நீ எழுதிஉள்ளாய்: முஹம்மது நபியை என்ன, அல்லாஹ்வை நாம் நம்புவது கூட சான்றுகளின் அடிப்படையில் தான். அல்லாஹ் தந்த வேதமான குர் ஆனை நம்புவதும் சான்றுகளின் அடிப்படையில் தான். அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்”

பதில்: அப்படியா! ஆனால் எதன் அடிப்படையில் நீங்கள் அரசியலை பின் பற்றி செல்கிறீர்கள்? அரசியல் என்பது பெரும்பான்மை மக்களால் பின்பற்றப்படும் மார்க்கம். சிறந்த அரசியல் தலைவர்கள் கூட அரசியலை அசிங்கமாகத்தான் பார்த்தார்கள்.

பெரும்பான்மை மக்கள் வழிகேட்டில் இருக்கிறார்கள் என்று குரான் கூறவில்லையா?

தவ்ஹீது பேசும் மக்களுக்கு, அரசியல் கலாச்சாரம் முக்கிய கொள்கையாக மாறிவிட்டது எதன் அடிப்படையில்?

20) நீ விடுகிறாய் : பாட்டன், முப்பாட்டன்மார்கள் சொல்லி விட்டார்கள் என்பதற்காகவெல்லாம் இஸ்லாத்தை நாம் கடைபிடிக்கவில்லை .

ஓஹோ! ஈஸா நபி உயிரோடு இருக்கிறார்கள் என்ற கொள்கையும், நபிக்கு பின் நபி இல்லை என்ற கொள்கையும் உன் முப்பாட்டன்மார்களுடைய ( யூத, கிறிஸ்தவர்கள் ) கொள்கை அல்லாமல் வேறு என்ன?

21) நீ எழுதிஉள்ளாய் : “இன்றைய விஞ்ஞானிகளால் கூட கண்டறிந்து விட முடியாத பல நுணுக்கமான அறிவியல் தகவல்களை குர்ஆன் சர்வசாதாரணமாக பேசுகிறது. குர்ஆன் கூறுகிற விஞ்ஞான உண்மைகளைக் கண்டு உலகம் இன்று வியப்பில் ஸ்தம்பித்து நிற்கின்றது

அட டா! நீ எழுதி இருப்பதில் மாற்று கருத்தில்லை தான் . ஆனால் குரானில் கூறும் science ஐ கொண்டே அஹ்மதிகள் புதிய வானம் படைக்க இருக்கிறார்கள் என்பது உனக்கு தெரியாது. (கிண்டல் பண்ணுவதாக இருந்தால் பண்ணிக்கோ)

22) நீ எழுதிஉள்ளாய்: “அவர்கள் ( நபி ஸல்) கொண்டு வந்த சித்தாந்த்ததில் பொய், புரட்டு, கப்சாக்கள் இல்லை, அதன் மூலம் அவர்கள் உண்மைப்படுத்தப்படுகிறார்கள்.
அவர்களது கொள்கை கோட்பாடுகளில் முரண்பாடுகள் இல்லை, அதன் மூலம் உண்மைப்படுத்தப்படுகிறார்கள் “

பதில்: உனமையிலும் உண்மை!!! ஆனால் நீங்கள் குரானில் நிறைய கப்சாகளை வைக்கவில்லையா? நிறைய முரண்பாடுகள் வைக்க வில்லையா?

23) நீ எழுதிஉள்ளாய் ஏராளமான முறைகளில் சரி பார்த்து, உண்மையாளர் தான் என உளமாற நம்பி தான் ஒவ்வொரு முஸ்லிமும் அவர்களை தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறோம், அப்படி தான் ஏற்கவும் வேண்டும் !

பதில்: ஏராளமான முறைகளில் சரி பார்த்து, உண்மையாளர் தான் என உளமாற நம்பி உள்ளீர்கள் என்றால், உங்களுக்கு இடையே ஒருவருக்கொருவர், காஃபிர், பொய்யன் என்றெல்லாம் ஏன் கூறுகிறீர்கள்.

இதற்கு நீங்கள் ஒருவருக்கொருவர் “கொஞ்சுகிறீர்கள்” என்று அர்த்தம் கொடுக்கவா?

24) நீ எழுதிஉள்ளாய் : “எந்த காஃபிர் வந்து கேட்டாலும், இவர் அல்லாஹ்வின் தூதர் தான் என்பதை எந்த முஸ்லிமாலும் நிரூபிக்க முடியும்.”

பதில்: எப்படி? ஒரு கூட்டம் கூறுகிறது, தொழும்போது கையை நெஞ்சில் கட்டினால் தான் அல்லாகுவின் தூதரை ஏற்றுக்கொள்வேன் என்று.

மற்றொரு கூட்டமோ கையை வயிற்றின் மேல் கட்டினால் தான் அல்லாகுவின் தூதரை ஏற்றுக்கொள்வேன் என்று.

கடைசியில் நீயா நானா என்று, கையை அவிழ்த்து குத்து சண்டையில் இறங்கி…. ஆனால், எப்படியாவது தூதரை உண்மையாளர் என நிரூபித்து விடுவீர்கள்!!!!

25) யாரோ ஒருவர் தன்னை நபியென்று சொல்லி விட்டால் உடனே கண்ணை மூடி நம்பி விட வேண்டும் என்கிற போக்கு எத்தனை ஆபத்தானது? நானும் கூட சொல்வேனே, நீங்களும் கூட சொல்லலாமே...

பதில்: வெளியூரிலிருந்து ஹஸ்ரத் அபூபக்கர் ரலி அவர்கள் வந்து கொண்டிருந்தார்கள். அப்போது கேள்விப்பட்டார்கள், இன்னார் (முஹம்மத்) நபி வாதம் செய்கிறார் என்று. அப்போது அபூபக்கர் அவர்கள் , யாரோ என்று ஏன் இருக்கவில்லை?

நபி ஸல் அவர்களின் வாழ்க்கையை பற்றி அடிப்படையை கூட சிந்திக்காமல் பேசுகிறாயே!

எனவே அபூபக்கர்-ஐ போன்ற இயல்புள்ளவர்களும் ஏற்றுக்கொண்டார்கள், உமர் ரலியை போன்று ஆரம்பத்தில் எதிர்த்து பின் ஏற்றுக்கொள்பவர்களும் உண்டு.

எனவே எப்படியாவது எழுதி, விமர்சனம் செய்யவேண்டும் என்று நினைக்காதே.

26) நீ எழுதிஉள்ளாய் : ஒன்று, அவர் நபி தான் என்பதற்கு நீங்கள் ஆதாரம் தாருங்கள். அல்லது, அவர் நபியில்லை என்பதை நிரூபிக்க எனக்கு அவகாசம் தாருங்கள்.

பதில்: a) முதன் முதலாக ஈஸா நபி இறந்துவிட்டார் என்பதை குரானின் அடிப்படையில் நீங்கள் நம்பவேண்டும்.
ஏனென்றால் வரக்கூடியவர் நபியாக இருப்பார் என்றும், மேலும் அவர் இப்னு மர்யம் என்றும் நபி ஸல் அவர்கள் கூறி உள்ளார்கள்.

இப்னு மர்யம் என்று உவமையாக கூறி உள்ளதை அப்படியே நம்புவது தான் மிகவும் அபத்தமானது ஆகும்.

குரானில், 2 விதமான வசனங்கள், அதாவது 1, அடிப்படையான வசனங்கள், 2,உவமை வடிவிலான வசனங்கள் உண்டு என்றும அல்லாஹு சொல்கிறான்.

எனவே வரக்கூடிய நபி, ஈசாவை பல காரணங்களால் ஒத்து இருப்பார் என்பதற்கே ‘இப்னு மர்யம்’ என்று, வரக்கூடிய நபியை பற்றி நபி ஸல் அவர்கள் முனறிவிப்பு செய்துள்ளார்கள்.

ஆனால் எல்லா காலத்து நிராகரிப்பாளர்களும் நபியை மறுத்ததை போன்றே, மிர்சா சாகிபை மறுப்பதற்காக, ஈசாவை வானத்தில் உயிரோடு வைத்துள்ளார்கள்.

அது மட்டுமல்ல, கிறிஸ்தவர்கள் ஈசாவை உயிரோடு வைத்து, குரானிலும் அந்த பொருளை நுழைத்தார்கள். முஸ்லிம் ஆலிம்கள் கிறிஸ்தவர்களாக மாறியும், பாதிரிகள் முஸ்லிம் ஆலிம்களை போன்று நடித்தும், ஈஸா உயிரோடு இருப்பதான கொள்கையை ஸ்தாபித்து விட்டார்கள்.

எந்தளவுக்கு என்றால் 100 வருடங்கள் முன்பு வரையிலும் ஈஸா உயிருடன் இருக்கிறார் என்ற நம்பிக்கை முஸ்லிம்களின் ரத்தத்தில் கூட ஊறிப்போயிருந்தது.

எனவே “ஈஸா ஓர் இறை மகன்” என்ற கொள்கையுடன் முழு உலகையும் கிறிஸ்தவர்கள் வெற்றி கொண்டு விடுவார்கள் என்பதால், இந்த கொள்கையை முறியடிக்க ஒரு நபி வருவார், அவர் இப்னு மர்யமாக இருப்பார், என்று உவமையாக நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

100 வருடங்கள் முன்பு “ சிலுவையை கஹ்பாவில் நாட்டும் காலம் வெகு தூரத்தில் இல்லை” என்று கிறிஸ்தவ அரசாங்கங்கள் முழக்கமிட்ட காலகட்டத்தில் தான் மிர்சா சாஹிப் நபி வாதம் செய்ததுடன், கிறிஸ்தவர்களின் சிலுவையை முறித்துக்காட்டினார்கள்.

B) நபிக்கு பின் நபி வரமாட்டார்கள் என்பது நிராகரிப்பாளர்களின் கொள்கை. எனவே நபிக்கு பின் நபி வரமாட்டார்கள் என்று குரான் சொல்கிறது என்றால்,
அதன் பிறகு நபியை பற்றி பேசுவதே அர்த்தம் அற்ற ஒன்று. எனவே இந்த கொள்கையை 2 ஆவதாக பேச வேண்டும்.

ஆனால் நீங்களோ நபி வரமாட்டார் என்று ஒரு பக்கம் கூறுகிறீர்கள், மறுபக்கம் ஈஸா நபி வருவார் என்ற கற்பனையில் இருக்கிறீர்கள்.
எனவே ஈஸா நபியை பற்றிய கற்பனையிலிருந்து முதலில் வெளியே வாருங்கள்.

C) அடுத்து குரானின் அடிப்படையில் ஒரு உண்மையான நபிக்கு என்னென்ன அளவுகோலை அல்லாஹு கூறுகிறான் என்பதை அறிய வேண்டும்.

அதே போன்று குரானின் அடிப்படையில் ஒரு பொய்யான நபிக்கு என்னென்ன அளவுகோலை அல்லாஹு கூறுகிறான் என்பதை அறிய வேண்டும்.

இப்போது எந்த அளவுகோல் Mirsa சாஹிபுக்கு பொருந்துகிறது என்பதை பார்க்க வேண்டும்.

நபி ஸல் அவர்கள், தான் ஒரு நபி என்பதற்கு என்னென்ன ஆதாரங்கள் வைத்தார்கள் என்பதையும், மேலும் நபியவர்களை மறுத்தவர்கள் எது எதை கொண்டு அவர்களை மறுத்தார்கள் என்பதையும் பார்க்க வேண்டும்.

ஏனென்றால் ஒவ்வொரு நபியை பற்றியும் அதற்கு முன்னர் வந்த வேதத்தில் முன்னறிவிக்க பட்டிருந்தும், மக்கள் அதற்கு முன்னர் வந்த வேதத்தை முதுகின் பின் தூக்கி எறிந்து விட்டு, அந்த முன்னறிவிப்புகளையும், உதாசீனம் செய்தார்கள் என்பது தெரிந்த விஷயம்.

அதே போன்று இக்காலத்திலும் கூரானை முதுகுக்கு பின் தூக்கி எறிந்துவிடுவார்கள் என்று கூரானே கூறுகிறது என்றால், ஒரு நபியின் தேவையை புரிந்து கொள்ளலாம்.

16) நீ எழுதி உள்ளாய்: உங்களால் சான்றுகளை காட்ட முடியாது என்றால், ஒருவரை நபியென நான் எப்படி நம்புவேன் என்பதை மேலே சொல்லியிருக்கிறேனே, அந்த அளவுகோல்கள் ஒவ்வொன்றாக எடுத்து நீங்கள் சொல்லும் மிர்சா சாஹிபோடு பொருத்திப் பார்த்து, அவர் நபியில்லை என்பதை நானாவது நிரூபிக்கீறேன்..

பதில்: mirsa சாஹிப் ஐ பற்றி நீ சில ஆட்சேபனைகளை வைத்துள்ளாய்
மேலும் இந்த ஆட்சேபனைகளை மிர்ஸா சாஹிபுக்கு பொருத்திபார்க்கவேண்டும் என்கிறாய்.

இது தவறு. ஏனென்றால் நபி ஸல் அவர்களை, அவர்களின் 40 வயதுக்கு முன்பு வரை மக்கத்து மக்கள் என்ன கூறினார்கள்? முஹம்மத் உண்மையாளர், நேர்மையாளர் என்று.

ஆனால் நபி ஸல் அவர்கள், தான் நபி என்று வாதம் செய்த உடனே, அதே மக்கத்து மக்கள் என்ன கூறினார்கள்? இவர் பொய்யர 
இவர் பைத்தியம் பிடித்து விட்டது.... 
40 வயதுக்கு முன்னர், அதாவது நபி வாதம் செய்வதற்கு முன்னர், உண்மையாளர் என்று certificate வாங்கிய ஒருவர், நபி வாதம் செய்த உடனேயே, பொய்யர் என்று எப்படி ஆகமுடியும்? ஏன் அவ்வாறு சர்டிபிகேட் கொடுத்தார்கள். ஏன்?
இதனை தான் பல தடவை கேட்டேன். அதாவது நீ மக்காவில் பிறந்திருந்தால் நபி ஸல் அவர்களை எதன் அடிப்படையில் நம்புவாய் என்று.
நபி ஸல் அவர்களுக்கு அல்லாஹுவிடமிருந்து வஹீ வந்ததை தவிர, நபி அவர்கள் வேறு ஏதாவது தவறு செய்தார்களா?
நேற்று வரை உண்மையாளர், நேர்மையாளர் என்று புகழ்ந்த மக்கள், இன்று பொய்யர், பைத்தியக்காரர் என்று இகழ்ந்ததன் காரணம் என்ன?
Quraan 10:17 “ நீர் கூறுவீராக: (வேறு ஏதாவது போதிக்க) அல்லாஹு நாடியிருந்தால், நான் இதனை உங்கள் முன் ஓதிக்காட்டியிருக்க மாட்டேன். அவன் இதனை உங்களுக்கு அறிவித்திருக்கவும் மாட்டான்.
நான் இதற்கு முன்னர் உங்களிடையே ஒரு நீண்ட வாழ்நாளை கழித்திருக்கின்றேன்; இதன் பிறகும் நீங்கள் ஏன் உணர்வதில்லை?”
இது ஒரு அளவு கோல் ஆகும் . இப்போது நீ புரிந்திருப்பாய் என நினைக்கிறேன்.
அதாவது நபி வாதம் செய்வதற்கு முன்னர் எப்படி வாழ்ந்தார் என்பதை ஒரு அளவுகோலாக பார்க்கவேண்டும் என்று குராணிலிருந்து புரிய முடிகிறது.
மக்கத்து மக்கள் மட்டுமல்ல இன்று வரையிலும் உள்ள மறுப்பாளர்கள், குரான் மீது 1000 க்கணக்கான ஆட்சேபனைகளை வைத்துள்ளார்கள்.
அது மட்டுமல்ல, மக்கள் முழு குரானையும் படித்து, குரானின் அடிப்படையிலா நபிசல் அவர்களை ஏற்றுக்கொண்டார்கள்?
சிந்தித்து பார்க்க வேண்டும்.
நபி ஸல் அவர்கள் மிகவும் நல்லவர் என்று ஏற்றுக்கொள்ளும் பல சான்றோர்கள் கூட குரானின் ஆழிய கருத்துக்களையும், ஞானங்களையும் புரியாமல் தான், இன்று வரையிலும் நபி ஸல் அவர்கள் மீதும், இஸ்லாத்தின் மீதும் அவதூறுகளை கூறிவருகிறார்கள்.
எனவே ஒருவர் உண்மையாளரா என்பதை அறிய அவர்களின் கடந்தகாலத்தில் அவர் பொய் பேசினாரா, நேர்மையாக வாழ்ந்தாரா என்று பார்க்க வேண்டும்.
உலக கரியங்களுக்காக வாழ்நாளின் பெரும்பகுதி பொய் பேசாத ஒருவர், இறைவன் விஷயத்தில் பொய் பேச தேவை என்ன?
இது குரான் எடுத்து வைக்கும் ஒரு அளவுகோல் ஆகும்.
===============================================================

இப்போது மிர்சா சாஹிப் தொடர்பாக நீ நேரடியாக வைத்துள்ள ஆட்சேபனைகளை பார்ப்போம்.
1) நீ எழுதி உள்ளது: "ஈசா நபி வருவார் என்று சொல்வது ஷிர்க் ஆகும்" ‍ ஆயினே கமாலாத் இஸ்லாம், பக்கம் 44. ஆனால், கேள்வி இதுவல்ல. அதே நூலின் 409 ஆம் பக்கத்தில் "ஈசா நபி வானில் இருந்து இறங்கி வருவார்கள் என்று மக்கள் நம்பியாக வேண்டும், ஏன் நம்பாமல் இருக்கிறீர்கள்?" என்று கேட்டு தமக்கு தாமே முரண்பட்டது ஏன்?
பதில்: நீ எழுதி உள்ளது போல் "ஈசா நபி வானில் இருந்து இறங்கி வருவார்கள் என்று மக்கள் நம்பியாக வேண்டும், ஏன் நம்பாமல் இருக்கிறீர்கள்?" என்று இல்லை.

மிர்சா சாஹிப் கூறுகிறார்கள், ஆயினே கமாலாத் இஸ்லாம், பக்கம் 43 இல்,
“thawaffa என்பதன் பொருள் ரூஹை கைப்பற்றுதல் தான். ஹஸ்ரத் இப்னு மர்யம் அவர்களுக்காக உயிரோடு உயர்த்துதல் என்பது பொருள் என்றால், இந்த வழிமுறை ஷிர்க்கிற்கு துணை போவதை தவிர வேறு என்ன?”..........
காழ்ப்புணர்ச்சி கொண்ட கிறிஸ்தவர்களோ நபி ஸல் அவர்களை ஏசுகிறார்கள். ஹஸ்ரத் ஈஸா வானத்தில் உயிரோடு இருக்கிறார் என்றும், நமது ரசூல் ஸல் அவர்கள் பூமிக்கடியில் மரணித்துவிட்டார் என்றும் கிறிஸ்தவர்கள் காழ்புணர்ச்சி யுடன் ஏசும்போது, நமது ஆலிம்களே கிறிஸ்தவர்களின் இந்த ஷிற்கான கொள்கையை ஒப்புக்கொண்டு , அவர்களின் வாதத்திற்கு வலு சேர்க்கிறார்கள்............”
பிறகு 408 ஆம் பக்கத்தில் ஆலிம்கள், மிர்சா சாகிபை மிகவும் மோசமாக பேசுவதை எடுத்துரைகின்றார்கள்.........
மேலும் கூறுகின்றார்கள், “இந்த ஆலிம்கள் என்னை காஃபிர் என்றும் கஸ்ஸாப் என்றும் ஏசுகின்றனர், இவர்களின் உள்ளங்களில் அல்லாஹு முத்திரை இட்டு விட்டான் ....... “
தொடர்ந்து கூறுகின்றார்கள்,
“இவர்கள் மீது அந்தோ பரிதாபம். மசீஹ் வானத்திலிருந்து எல்லா ஞானங்களுடன் இறங்குவார் என்பதை இவர்கள் அறியமாட்டார்களா? பூமியிலிருந்து அவர் எதனையும் ஏற்றுக்கொள்ளமாட்டார் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்களா? இறைவனிடமிருந்து யார் அனுப்பப்படுகிறார்களோ அவர்களுக்கு வேறு எவருடைய தேவையும் இல்லை. அவர்களுக்கு இறைவனே தன்னிடமிருந்து ஞானத்தை வழங்குகின்றான். அல்லாஹுவிடமிருந்து அவர்கள் கற்றுக்கொள்கின்றார் . அவனிடமிருந்தே எல்லா இல்மையும் பெறுகின்றார்” .
இதை படித்து பார்த்தால் என்ன புரிகிறது?
தன்னை பற்றித்தான், “மசீஹ் வானத்திலிருந்து எல்லா ஞானங்களுடன் இறங்குவார் என்பதை இவர்கள் அறியமாட்டார்களா?” என்று மிர்சா சாஹிப் கூறுகிறார்கள் என்பதை புத்தகத்தை நேரடியாக படிப்பவர்கள் எளிதில் புரிந்து கொள்வார்.
நீ எழுதி உள்ளது போல் "ஈசா நபி வானில் இருந்து இறங்கி வருவார்கள் என்று மக்கள் நம்பியாக வேண்டும், ஏன் நம்பாமல் இருக்கிறீர்கள்?" என்று இல்லை.
இப்போது பதில் சொல். இதில் என்ன முரண்பாடு? மிர்சா சாஹிபின் எதிரிகள் அன்னாரின் நூலிலிருந்து முன் பின் கருத்துக்களை மறைத்து விட்டு, ‘எதிரான கருத்துக்களை எடுத்து மிர்சா சாஹிப் அவர்களை பற்றி மிகப்பெரும் பித்னாவை உண்டாக்கியிருக்கிறார்கள்.
பித்துனா உண்டு பண்ணுபவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா?
நீ நடுநிலைமையுடனும், தக்வாவுடனும் சிந்தித்து பார்த்தால் எல்லா உண்மைகளும் புரிந்து விடும். ஒரு நபி என வாதம் செய்தவரை பற்றி ஏன் இல்லாததை எழுதி வைத்துள்ளார்கள்?
எனவே நீ நடுநிலைமையுடன், குறைந்த பட்சம் விவாதம் முடியும் வரை பொறுமையுடன், அவசரப்படாமல் படிப்பாய் என்றால் உண்மை புரியும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
2) உன் ஆட்சேபனை:
"என்னை யாராவது நபி என்று ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், அவர் முஸ்லிம் தான்" என்று திர்யாகுல் குலூப் என்கிற நூல் பக்கம் 432 இல் கூறியுல்ள மிர்சா சாஹிப், "ஹகீகத்துல் வஹீ, பக்கம் 167 இல், என்னை நபியாக ஏற்றுக்கொள்ளாதவன் காபிர்" என்று சொல்லி, தனக்கு தானே முரண்பட்டது ஏன்?
பதில்: "என்னை யாராவது நபி என்று ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், அவர் முஸ்லிம் தான்" என்ற கருத்திற்கு மாற்றமாக எதுவும் கூறவில்லை.
"ஹகீகத்துல் வஹீ, பக்கம் 167 இல் ஒரு சகோதரருடைய கேள்விக்கு இவ்வாறு பதில் கூறுகிறார்கள்.
“ தாங்கள் காஃபிர் என்று சொல்ல கூடியவர் மற்றும் ஏற்றுக் கொள்ளாதவர்களை இரண்டு வகையான மனிதனாக கருதுகிறீர்கள் என்பது வியக்கதக்கதாக இருக்கிறது. இறைவன் பார்வையில் ஒரே வகைதான்.
ஏனென்றால், எவர் ஒருவர் என்னை ஏற்க மாட்டாரோ அவர் என்னை பொய்யர் என்ற ஒரே காரணத்தினால் தான் ஏற்க மாட்டேன் என்கிறார். ஆனால் அல்லாஹ் கூறுகின்றான், இறைவன் மீது இட்டு கட்டுபவன் அனைத்து காஃபிர்களை விடவும் மிகப்பெரிய காஃபிராக இருக்கிறான்.
உதாரணமாக கூறுகின்றான், (அல் அஃராஃப் : 38) அதாவது மிகப்பெரிய காஃபிர் இருவரே, ஒருவர் இறைவன் மீது இட்டு கட்டுபவன். (குறிப்பு)
மற்றொருவர் இறை வேதத்தை பொய்யாக்குபவன். ஆகவே நான் பொய்யரின் ( என்னை பொய்ப்படுத்துபவர்களின் பார்வையில் ) பார்வையில் இறைவன் மீது இட்டுக் கட்டியுள்ளேன். இந்த அடிப்படையில் நான் காஃபிர் மட்டும் அல்ல மாறாக மிகப்பெரிய காஃபிர் ஆகிவிடுகின்றேன்.
நான் இட்டுக்கட்டுபவன் இல்லை என்றால், சந்தேகமில்லாமல் அந்த குஃப்ர் திருப்பி அவர் பக்கமே திரும்பும்.
( மேலே சொல்லபட்ட குறிப்பு பற்றி எழுதுகிறார்கள்)
குறிப்பு: (அதாவது 7:38 வசனத்தின் படி) கொடுமையாளன் என்பது இந்த இடத்தில் காஃபிர் ஆவார். இதில் இட்டுக்கட்டுபவனுக்கு எதிராக அல்லாஹ்வின் வேதத்தை பொய்யாகுபவனை கொடுமையாளனாக கூறுகிறான். மேலும் சந்தேகத்திற்கு இடமின்றி, எவரொருவர் இறை வார்த்தையை பொய்படுத்துகிறாரோ அவர் காஃபிர் ஆவார். ஆக எவரொருவர் என்னை ஏற்பதில்லையோ அவர் என்னை இட்டுக்கட்டுபவராக ஆக்கி என்னை காஃபிர் ஆக்குகிறார். இதன் காரணமாகவே என்னை காஃபிர் என்று கூறியதானால் தானாகவே காஃபிர் ஆகிவிடுகிறார்.”
மேலே சொன்ன மிர்சா சாகிபின் கூற்றிலிருந்து தன்னை நபியாக ஏற்றுக்கொள்ளாதவன் காபிர் என்று கூறவே இல்லை என்பது தெளிவாக உள்ளது.
அதாவது நான் இறைவன் பேரால் இட்டுக்கட்டி எதுவும் கூறவில்லை. நான் உண்மையாளனாக உள்ளேன். எனவே என்னை காஃபிர் என்று நீங்கள் கூறினீர்கள் என்றால், நபி ஸல் அவர்களின் ஹதீசுக்கு இணங்க, கூறுபவர் காபிராகிவிடுகிறார் என்ற பொருளில் தான் மிர்சா சாஹிப் கூறி உள்ளார்.
ஆனால் மிர்சா சாகிபின் எதிரிகளாகிய ஆலிம்கள் வேண்டும் என்றே தவறான பித்துனாவை கூறி, தங்களை இறை தண்டனைக்கு ஆளாக்கி கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.
தயவு செய்து, நீ ஆலிம்களின் பின்னால் செல்லாமல் நடு நிலை நின்று மிர்சா சாகிபின் நூல்களை படிக்க முன்வருவாயானால், அல்லாஹு உனக்கு நேர்வழி காட்டுவான்.
’=========================================================================3) உன் குற்றச்சாட்டு: “நூருல் ஹக் இத்மாமுல் ஹுஜ்ஜா என்கிற நூல், பக்கம் 296 இல், ஈசா நபியின் கபுர் பாலஸ்தீனில் உள்ளது என்று சொன்ன இந்த மிர்சா குலாம், கிஸ்தி நூஹ், பக்கம் 25 இல், ஈசா நபியின் கபுர் காஷ்மீரில் உள்ளது என்று சொல்லியுள்ளார்.
இப்படி முரண்பட்டு பேசியவர் நபியா ? ”
பதில்: ஈஸா நபிக்கு 2 கபர் உள்ளது என்று எழுதி உள்ளது சரியே. அதை தொடந்து முன்பின் எழுதியதை படித்தால் தான் உண்மை வெளி வரும்.
யூதர்கள் ஈசாவை கொல்ல முயற்சித்தபோது அல்லாஹு அவர்களை காப்பாற்றினான். அவர்கள் உடலில் பல காயங்களுடன், இறந்துவிட்டார் என எண்ணி, பலஸ்த்தீனத்தில் ஒரு கபரில் வைக்கபட்டது.
கவனிக்க வேண்டியது என்னவென்றால், அக்காலத்து வழக்கப்படி மண்ணில் அடக்கம் செய்வது கிடையாது, மாறாக கபர் என்பது ஒரு அறை போன்று இருக்கும், அதில் body ஐ வைத்து மேல் பகுதியை பெரிய கற்களால் மூடிவிடுவார்கள்.
இன்றும் கிறிஸ்தவ மக்கள் அந்த கல்லறையில் ஈஸா நபி அடங்கப்பட்டிருக்கிறார் என்று எண்ணி, தரிசனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அல்லாஹு ஈஸா நபியை காப்பாற்றினான். பிறகு அங்கிருந்து ஈஸா நபி வெளியேறினார்கள். கடைசியாக காஷ்மீர் வந்து அங்கு இயற்கை மரணம் அடைந்தார்கள்.
எனவே 2 கல்லறையை பற்றி மிர்சா சாஹிப் கூறி உள்ளதில் எந்த முரண்படும் இல்லை.
======================================================================
அஹ்மதிகளுடைய கலிமா வேறு, கிப்லா வேறு, 3 வக்த்து தான் தொழுவார்கள், என்றெல்லாம் இந்த ஆலிம்கள் எங்களை பற்றி பித்துனா உண்டாக்கினார்கள். ஆனால் அந்த ஆலிம்கள் இப்போது வாயடைத்து போயிருக்கிறார்கள், ஏன்?
இந்த ஆலிம்களிடத்தில் எந்த உண்மையும் இல்லை என்பது இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.
சத்தியத்தின் உதவி கொண்டு, ஆதாரங்களை வைப்பதை விட்டு விட்டு எங்கள் மீது வெறும் பொய்யையும், அவதூறுகளையும் கூறுவது ஏன்?
எனவே பொய்யர்கள் மீது சாபம் உண்டாவதாக என்ற குரான் வசனத்தின் மீது ஆலிம்களுக்கு நம்பிக்கை உண்டா இல்லையா?
==================================================================
4) உனது ஆட்சேபனை: “மூஸா நபி அல்லாஹ்வால் தேர்வு செய்யப்பட்ட இளைஞர், அவர் இன்று வரை உயிருடன் இருக்கிறார் என்று அல்லாஹ்வே சொல்லியிருக்கிறான் என்று நூருல் ஹக் பக்கம் 68 இல் சொல்லியுள்ளார். இவ்வாறு அல்லாஹ் எங்கே சொல்லியுள்ளான் என்பதை எடுத்துக் காட்டுங்கள்.”
பதில்: மிர்சா சாஹிப் எழுதுகிறார்கள்,
“இது அதே மூஸா தான். இவரை பற்றி குரானில், உயிருள்ளவர் என சைகையாக கூறப்பட்டுள்ளது. நாம் அவர் மீது ஈமான் கொள்ளவேண்டும். நாம் அவரை வானத்தில் உயிரோடு இருக்கின்றார் என்றும் மரணித்தவர்களை சார்ந்தவர் அல்ல என்றும் ஈமான் கொள்ளுதல் கடமையாகும். இவர் அல்லாகுவின் இளைஞர் மூஸா ஆவார். இவர் உயிருள்ளவர் என்று அல்லாஹு தன் வேதத்தில் சைகையாக குறிப்பிட்டுள்ளான்.
ஈஸா அலை வானத்திலிருந்து இறங்குவார் என்ற விஷயம் அபத்தமானது என்பதை நமது நூலாகிய ஹமாமத்துல் புஷ்ரா என்ற நூலில் மிக தெளிவாக நிரூபித்துக்காட்டியுள்ளோம். சுருக்கமாக திரு குரானில் ஹஸ்ரத் ஈசாவுடைய மரணத்தை தவிர வேறு எந்த குறிப்பையும் காணவில்லை. ஹஸ்ரத் ஈசாவுடைய வஃபாத்தை பற்றிய குறிப்பு ஓரிடத்தில் அல்ல, மாறாக பல இடங்களில் காணப்படுகின்றன.......”
மிர்சா சாஹிப் அவர்கள் குரான் 32:24 வசனத்தை காட்டி எதிரியாகிய, அதாவது நபி ஸல் அவர்களை மிகவும் இழிவாக பேசிய இமாமுதீன் என்ற பெயருடைய ஒரு கிறிஸ்தவனுக்கு கொடுத்த பதிலில்,
எதிரியின் வாயடைக்கும் நோக்கில், அதாவது ஈஸா நபி உயிரோடு இருக்கிறார் என்பதற்கு மறைவாக கூட ஒரு வசனமும் இல்லை என்றும், அப்படி உயிரோடு இருக்கிறார் என்று கூறுவதாக இருந்தால் 32.24 வசனத்தின் படி மூஸா நபியை கூறலாம் என்றும் கூறுகிறார்கள்.
இதில் மூஸா உயிரோடு இருக்கிறார் என்று தான் நம்புவதாக கூறவில்லை.
ஆனால் அடுத்த பக்கத்தில் ஈஸா நபி மட்டுமல்ல, நபி ஸல் அவர்களுக்கு முன்னர் தோன்றிய எல்லா நபிமார்களும் இறந்து விட்டார்கள் என்று தனது சொந்த கருத்தை தெளிவாக எழுதி உள்ளார்கள்.
இமாமுதீன் என்கிற ஒரு முஸ்லிம் ஆலிம் கிறிஸ்தவனாக மாறியதோடு நில்லாமல், குரானையும், நபி ஸல் அவர்களையும் மிகவும் இழிவாக எழுதி tanzimul aqwal என்ற நூலை வெளியிட்டிருந்தார். அந்த நூலுக்கு பதிலாகத்தான் மிர்சா சாஹிப் அவர்கள் நூருல் ஹக் என்ற நூலை எழுதி வெளியிட்டார்கள்.
மிர்சா சாஹிப் அவர்கள் கிறிஸ்தவ மதத்தை தழுவிய தீய முஸ்லிம் ஆகிய இமாமுத்தீன் க்கு எழுதிய பதிலில், இஸ்லாத்தின் பல சான்றுகளை எடுத்து வைத்ததோடு நில்லாமல், ஈஸா இறந்துவிட்டார்கள் என்பதை தெளிவாக ஸ்தாபித்து உள்ளார்கள். அத்துடன் குரானில், ஒருவர் உயிரோடு இருக்கிறார் என்று கூறுவதாக இருந்தாலும், மூஸா உயிரோடு இருக்கிறார் என்று கூறலாமே ஒழிய, ஈஸா உயிரோடு இருக்கிறார் என்பதற்கு ஒரு வசனமும் மறைவான பொருளுடன் கூட இல்லை என்ற கருத்தில் தான் கூறி உள்ளார்கள்.
மேலும் மூஸா நபியை பற்றி கூறிய இடத்தில் கூட குரானில் சைகையாக சொல்லபட்டிருக்கிறது என்று தான் கூறி உள்ளார்கள்.
ஆனால் மிர்சா சாகிபின் எதிரிகளாகிய ஆலிம்கள், நூருல் ஹக் என்ற நூலின் அடிப்படை கருத்து என்ன என்பதை பற்றி எல்லாம் பொருட்படுத்தாமல், மிர்சா சாகிபை அவதூறு சுமத்தவேண்டும் என்ற நோக்கில் தான் இவ்வாறு எல்லாம் எழுதுகிறார்கள்.
கிறிஸ்தவனாக மாறிய இமாமுத்தீன் என்பவர் நபி ஸல் ஐ பற்றி மிகவும் இழிந்த சொற்களை கூறி எழுதியிருப்பதை பற்றி கவலையே இந்த ஆலிம்களுக்கு இல்லை. உண்மையில் ஆலிம்களுக்கு கவலை இருந்திருந்தால் மிர்சா சாஹிப், அந்த கிறிஸ்தவனுக்கு எழுதிதை பற்றி எவ்வகையில் ஆட்சேபனை கூற முடியும்? ==========================================================================
5) உனது ஆட்சேபனை:
“மசீஹ் வரும் போது வானிலிருந்து "ஹாதா கலிஃஃபத்துல்லாஹில் மஹதி" என்று ஒரு சத்தம் வரும் என்று புஹாரியில் உள்ளது என்று ஷாஹாதத்துல் குரான் பக்கம் 41 இல் சொல்லியிருக்கிறார்.
அப்படி சத்தம் வருமா., வந்த சத்தம் யாருக்கு கேட்டது, கேட்டது என்பதற்கு என்ன ஆதாரம்?
என்கிற கேள்வியெல்லாம் ஒருப் உறமிருக்க, அப்படி புஹாரியில் இருப்பதாக சொல்லியிருக்கிறாரே, அந்த ஹதீஸ் எது?>
புஹாரியின் எந்த பாகம், எந்த வாலியூமில் அந்த செய்தி உள்ளது? என்பதை சொல்லவும் ”
என் பதில் : மேலே குறிப்பிட்டுள்ளது, நபி ஸல் அவர்கள் கூறிய ஹதீஸ் இப்னு மஜாவில் இடம் பெற்றுள்ளது.
ஆனால் புகாரியில் உள்ளதாக மறதியாகவோ தவறுதலாகவோ குறிப்பிட்டுள்ளார்கள்.
ஒருவர் 80 க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்க , அதுவும் எல்லா மதங்களை சேர்ந்தவர்களுக்கு ஆட்செபனைகளுக்கு பதில் கொடுத்திருக்க, எல்லா மதங்களை விட இஸ்லாமே உயர்ந்தது என்றும், அதே போன்று குரானே உயர்ந்தது என்றும், நபி ஸல் அவர்களே மிகவும் மேலானவர்கள் என்றும் நிரூபித்து காட்டியிருக்க,
இப்னுமாஜாவுக்கு பதிலாக புகாரி என்று தவறுதலாக எழுதியிருப்பதை எடுத்து வைத்து இந்த ஆலிம்கள் ஆட்சேபனை தெரிவிக்கிறார்கள் என்றால் இது ஆலிம்களின் தீய நோக்கத்தை தான் காட்டுகிறது .
மேலும் நீ கேட்கிறாய்: அப்படி சத்தம் வருமா., வந்த சத்தம் யாருக்கு கேட்டது, கேட்டது என்பதற்கு என்ன ஆதாரம்?
பதில்: மேலும் சத்தம் வருமா என்று கேட்கிறாய். நபி ஸல் அவர்களே கூறி இருக்கிறாராகள் என்றால்,ஏன் வராது என்பதற்கு நீ தான் பதில் சொல்ல வேண்டும்.
யாருக்கு என்று கேட்கிறாய். மிர்சா சாஹிப் அவார்கள் தனக்கு வஹீ வருகிறது என பல தடவை அறிவித்துள்ளார்கள்.
சத்தம் வந்ததற்கு ஆதாரம் என்ன? என்று கேட்கிறாய்.
என்ன ஆதாரம்…. ஆடியோ or வீடியோ?
-----------------------------------------------------------------------------------------------------------
மிர்சா சாஹிப் அவர்கள் எழுதிய நூல்களை நேரடியாக படிக்காமல், எதிரிகள் எழுதி வைத்துள்ள ஆட்சேபனைகளை மட்டுமே பிடித்துக்கொண்டு நீ எழுதுவது மிகவும் வருந்தத்தக்க விஷயம்.
எத்தனையோ நூல்களை படிக்கும் உனக்கு நபி என்ற வாதம் செய்தவரை பற்றி படிப்பதில் என்ன தவறு உள்ளது. என்ன தடை உள்ளது?
இஸ்லாத்தின் எதிரிகள் இப்போதும் குரானை ஆட்சேபித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள், ஏன்., நபி ஸல் அவர்கள் காலத்தில் முழு குரானையும் படித்தா மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள்?
ஆயினும் நீ வைத்துள்ள எல்லா ஆட்செபனைகளுக்கும் இன்ஷா அல்லாஹு பதில் தருவேன். இந்த தொடரில் 5 ஆட்செபனைகளுக்கு பதில் கூறி உள்ளேன்.
தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக