வியாழன், 17 ஜூலை, 2014

ஊடகங்களுக்கு ஓர் வேண்டுகோள்


பட்டப்பகலில் ஓடும் பேருந்தில் பெண்ணை மானபங்கப்படுத்தி வெளியே தூக்கி வீசி கொடூரமாக கொலை செய்யக்கூடிய நாட்டில் நாம் வாழ்கிறோம் என்பதை ஊடகம் நினைவில் கொள்ள வேண்டும்.

தனது ஆசைக்கு அடிபணிய மறுக்கும் பெண்கள் முகத்தில் ஆசிட் வீசி மிருகத்தனம் காட்டுகிற இந்தியாவில் நாம் வசிக்கிறோம்.

வேலியே பயிரை மேய்ந்த கதையாய், நாட்டை பாதுகாக்க வேண்டிய ராணுவமே வீடு புகுந்து பெண்களை கற்பழித்த கொடுமைகள் நிறைந்த நாடு நம் நாடு.

குடித்து விட்டு, தாய் யார், மகள் யார், சகோதரி யார் என்கிற பாகுபாடு கூட தெரியாத காம வெறியர்களைக் கொண்ட நாடு நம் பாரத நாடு !
தமது காமப்பசிக்கு செத்த பிணங்களைக் கூட விட்டு வைக்காத மனித மிருகங்கள் நிறைந்திருக்கும் நாட்டில் தான் நாம் வசிக்கிறோம்.

பச்சிளங் குழந்தையை கற்பழித்து கொலை செய்யும் மாபாதக செயல்கள் நிரம்பப் பெற்ற தேசம் இந்த பாரத தேசம்.

பெண்கள் என்றால் அவர்களும் மனிதர்கள், ஆண்களைப் போன்ற உணர்வுள்ளவர்கள் என்கிற நிலையை கடந்து பெண்களையும் ஒரு சந்தைப் பொருளாக பார்க்கும் வக்கிரப் புத்தி நிரம்பப் பெற்ற நாடு இந்திய நாடு.

தொழிலாக செய்தால் தான் தவறு, அதையே விரும்பி செய்தால் தவறில்லை என்று விபச்சாரத்திற்கு பச்சைக் கொடி காட்டும் அரசு இந்திய அரசு !

தாங்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற நிலையில் கூட, தங்கள் விரல் நகம் கூட படா வண்ணம், நம் பெண்களை பத்திரமாக அனுப்பி வைத்தவர்களை விமர்சனம் செய்து பிழைப்பு நடத்துவதை ஒதுக்கி வைத்து விட்டு,

இந்திய நாட்டில் பெண்களுக்கு எதிராக நொடிக்கொரு பொழுது நடைபெறும் கொடுமைகளை கண்டித்து, அதன் பின்புலத்தில் இருப்பவர்கள் அனைவரையும் தோலுரித்து, ஊடகத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டும் வேலையை செய்யுங்கள் என்று இந்திய ஊடகத்தை கேட்டுக் கொள்கிறோம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக