வியாழன், 17 ஜூலை, 2014

ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணல்


ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணல் என்கிற சொல்லுக்கேற்ப, சூனியத்தால் எதையும் செய்யலாம் என்று இத்தனை நாள் முழங்கியவர்களை நோக்கி, நீ எதை சொல்லிக் கொண்டு திரிகிறாயோ அதை என் முன்னே வந்து செய்து காட்டு, என்று சவால் விட்டதும், பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடுகிறது ஒரு கூட்டம்.

அதற்கு அவர்கள் சொல்லும் சால்ஜாப்பானது, சூனியத்தை ஒரு முஸ்லிம் செய்தால் அவன் காஃபிராகி விடுவான், எனவே எந்த முஸ்லிமும் செய்து காட்ட மாட்டானாம்.

சூனியத்தை நம்பி நரகத்திற்கு முன்பதிவு செய்திருக்கும் இந்த கூட்டத்தின் அறியாமையும் தற்போது இத்தகைய மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற சமாளிப்பு நமக்கு தெளிவாக்குகிறது.

சூனியத்தை ஒரு முஸ்லிம் செய்து காட்டினால் அவன் காஃபிராகி விடுவான் என்று அல்லாஹ் சொல்லவில்லை.
சூனியத்தை யார் கற்கிறார்களோ அவர்கள் காஃபிர்கள் என்று தான் அல்லாஹ் சொல்கிறான்.
சூனியம் உண்மை என்று யார் நம்புகிறார்களோ அவர்கள் காஃபிர்கள் என்கிறான் அல்லாஹ்.

நமது நம்பிக்கைப்படி சூனியத்தை கற்பது என்றால், இல்லாத அற்புதத்தை இருப்பதாக காட்டும் வித்தையை கற்பது.

இந்த சூனியப்பிரியர்களின் நம்பிக்கையோ, அற்புதக் கலையை கற்பது.

இவர்கள் கருத்துப்படி, இவர்கள் முன்வைக்கும் இறை வசனப்படி, எந்த நிமிடம், அந்த அற்புதத்தை ஒரு முஸ்லிம் கற்றானோ அந்த நொடியே அவன் காஃபிராகி விட்டான்.

எனவே ஏற்கனவே கற்று காஃபிராகி போன முன்னாள் முஸ்லிமைப் பார்த்து தான் இதை எனக்கு செய்து காட்டு என்கிறோம்.

எனவே, இதை செய்து காட்டி காஃபிராகி போவோம், எனவே செய்து காட்ட மாட்டோம் என்கிற கூற்றே முதலில் கேலிகுரியது.

எங்கள் நம்பிக்கைப்படி, எந்த நிமிடம் சூனியம் உண்மை என்று ஒரு முஸ்லிம் நம்பினானோ அந்த நொடியே அவன் காஃபிராகி விட்டான். நிரந்தர நரகில் தள்ளும் ஷிர்க்கை செய்தவனாகி விட்டான்.

மறுபக்கம், இவர்கள் நம்பிக்கைப்படி, சூனியத்தை கற்று காஃபிராகி விடாதீர்கள் என்று தான் 2:102 வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான்.

சூனியத்தை செய்து காட்டுவதற்கும் முந்தைய படி, அதை கற்றுக் கொள்வது.
அதை கற்றுக் கொண்ட முஸ்லிமானவன் காஃபிராகி விட்ட பிறகு, அந்த காஃபிரை நோக்கி தான் சகோ. பிஜே சவால் விடுகிறார்.

சிலைகளுக்கு சக்தி இருக்கிறது என்று சொல்கிறீர்களே, முடிந்தால் எனக்கெதிராக அவைகளை சூழ்ச்சி செய்ய வையுங்கள் பார்க்கலாம் என்று நபிகள் நாயகம் (சல்) அவர்கள் மக்கத்து முஷ்ரிக்குகளை நோக்கி சவால் தான் விடுகிறார்கள்.

சிலைக்கு சக்தி இருக்கிறது என்று நம்புவது ஷிர்க் தான். அவை ஒரு மனிதனுக்கு எதிராக தீங்கு செய்யும் என்று நம்புவது ஷிர்க் தான்.

அத்தகைய‌ ஷிர்க்கை நம்பிய கூட்டத்தாரை நோக்கி தான், அப்படியா? அப்படியானால் நிரூபித்துக் காட்டு என்கிறார்கள் பெருமானார் (சல்) அவர்கள்.

அதெப்படி? சிலையை கொண்டு தீங்கு செய்ய முனைவதும் ஒருவனை குஃப்ரில் தள்ளும் காரியமல்லவா? அத்தகைய காரியத்தையா நபி (சல்) அவர்கள் சவாலாக விடுவார்கள்?
அப்படி சவால் விடுவதில் அர்த்தம் இருக்குமா?

என்று எவனாவது கேட்டால் அவன் தான் அறியாமையில் சுழல்கிறான் என்று பொருளாகும்.

அல்லாமல், எதை ஒருவன் நம்புகிறானோ, எதை நேருக்கு நேராக நிரூபிக்கும் சாத்தியங்கள் இருக்கின்றனவோ, அவற்றையெல்லாம் நிரூபிக்கும்படி தான் கேட்க வேண்டும்.
குர் ஆனின் ஒட்டு மொத்த நடையே இது தான்!

இன்னும் சொல்லப்போனால், இந்த சூனியப்பிரியர்களுக்கு தான் இதை நிரூபிக்கும் கூடுதல் கடமையும் இருக்கிறது.

இந்த சூனியத்தை நம்ப முடியாது என்று கூறி பல ஹதீஸ்களை மறுப்பது நாம் தான்.

இவர்கள் பார்வையில் நாம் ஹதீஸ்கள் சிலவற்றை மறுப்பது மிகப்பெரிய வழிகேடு என்றால், சூனியத்தை கண்ணுக்கு நேராக வந்து நிரூபித்து, வழிகேட்டிலிருந்து அனைவரையும் மீட்கும் கடமை இவர்களுக்கு இருக்கிறது.

அதை செய்யாமல், இருக்கு ஆனா செய்ய மாட்டோம்.. படித்திருக்கிறோம், ஆனால் அதை செய்து காட்டினால் குஃப்ர்.. என்றெல்லாம் சால்ஜாப்பு சொல்வது என்பது, திருடன் திருடன் என்று திருடனே சத்தமிட்டுக் கொண்டு ஓடுவதற்கு சமமானது !

மேலும், சகோ. பிஜே ஒன்றும் முஸ்லிம்கள் என்று குறிப்பிட்டு சவால் விடவில்லை. ஒட்டு மொத்த உலகிற்கும் தான் இந்த சவால்.

முஸ்லிம்கள் சூனியத்தை நம்புவது போல, அதை விடவும் பல மடங்கு அதிகமாக ஹிந்து, கிறித்தவர்கள் நம்புகிறார்கள்.
"இங்கு பில்லி சூனியம் எடுக்கப்படும்" என்று போர்ட் மாட்டி வைத்து பிழைப்பு நடத்தும் அளவிற்கு சூனியம் என்பது மாற்று மத்தத்தவர்களிடமும் பிரசித்தம்.

இவர்கள் வாதப்படி சூனியத்தை முஸ்லிம்கள் தானே செய்யக்கூடாது, காஃபிர்கள் செய்யலாம் தானே, அப்படியானால், இவ்வாறு போர்ட் மாட்டி சூனியத்தையே தொழிலாக செய்யக்கூடிய எவனையாவது இவர்கள் அழைத்து வரட்டுமே. அதை செய்யவாவது இவர்களுக்கு திராணி உண்டா?

அல்லது, அத்தகைய உலக மகா சூனியக்காரனின் முகவரி, தொலைப்பேசி இலக்கத்தை அதிகாரப்பூர்வமாக தந்து, போய் சரி பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிற திராணியாவது உண்டா?

மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போது அரிவாளை கொண்டு வந்து வெட்டுவது இவர்களை குஃபுரில் தள்ளாதாம்,
வெளிநாடுகளில் தாஃவாவிற்கு செல்லும் போது ஏதேனும் பொய் வழக்குகள் இட்டு சிறையில் அடைக்கும் மொள்ளமாறித்தனங்களை செய்வதெல்லாம் இவர்களை வழிகேட்டில் தள்ளாதாம்,
சூனியம் செய்து அவருக்கு பாதிப்பை உருவாக்கு பார்ப்போம் என்று சொல்கிற போது தான், குஃப்ர், வழிகேடு, மறுமை, சொர்க்கம் என்பதெல்லாம் இவர்கள் கண்களுக்கு தென்படுமாம்..

என்றால் இது எதை காட்டுகிறது?

எதை செய்ய இயலுமோ அதை செய்ய இவர்கள் தயங்க மாட்டார்கள், அதன் மூலம் பிஜேவை கொலை செய்ய முடிந்தால் கூட செய்து விடுவார்கள்.
அதற்கு மார்க்கம், மறுமைபயம் என எதுவும் கண் முன் வராது, அதற்கெல்லாம் எந்த பாவ புண்ணியங்களையும் பார்க்க மாட்டார்கள்.

அதுவே செய்து காட்ட துப்பு கெட்ட நிலையை அடைகிற போது மட்டும், ஆஹ் இதை செய்வது வழிகேடு, இதை செய்தால் அல்லாஹ் தண்டிப்பான் எனவே செய்து காட்ட மாட்டோம் என்று ஓட்டமெடுப்பர்.

இந்த நயவஞ்சகப் பிழைப்பு பிழைப்பதற்கு பேசாமல், நாங்கள் காஃபிர்கள் தான் என்று வெளிப்படையாக அறிவித்து விட்டு போகலாம் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக