வியாழன், 17 ஜூலை, 2014

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (M)


நம்பிக்கை கொள்ளும் வேதக்காரர்கள்

"ஈஸா நபி மரணிக்கவில்லை" (பாகம் 13)
-------------------------------------------------------------

ஈஸா நபியை அல்லாஹ் உடலோடு உயர்த்தினான் என்பதை முந்தைய தொடர்களில் விளக்கமாக பார்த்தோம்.

உயர்த்திய ஈஸா நபியை இவ்வுலகில் மீண்டும் அனுப்புவான் என்பதற்கு ஹதீஸ்களில் பல்வேறு சான்றுகள் இருந்தாலும், குர் ஆன் மட்டும் போதும், ஹதீஸ்களையெல்லாம் நம்ப மாட்டோம் என்று எந்த காதியானி மதத்தவராவது சொல்வாரானால், அவருக்காக, குர் ஆன் கூறும் சான்றையும் ஒவ்வொன்றாக பார்த்து வருகிறோம்.

அந்த வரிசையில், கியாமத் நாள் வருகிறது என்பதை அறிவிக்கக்கூடிய வகையில், அதற்கான அடையாளமாக ஈஸா நபி இருக்கிறார் என்று அல்லாஹ் சொல்கிற வசனத்தை பார்த்தோம்.

அடுத்து, ஈஸா நபி மரணிக்கவில்லை என்பதையும், மீண்டும் இவ்வுலகில் வரவிருக்கிறார் என்பதையும் மற்றுமொரு வசனம் வாயிலாகவும் அல்லாஹ் தெள்ளத்தெளிவாக விளக்குகிறான்.

வேதமுடையோரில் ஒவ்வொரு வரும் அவர் (ஈஸா, மீண்டும் வந்து) மரணிப் பதற்கு முன் அவரை நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள். கியாமத் நாளில் அவர்களுக்கு சாட்சியாக அவர் இருப்பார். (4:159)

வேதம் கொடுக்கப்பட்டவர்களில் ஈஸா நபியை கொல்ல முயன்றவர்களும் இருக்கின்றனர், அவரை இறை மகனாய் புகழ்ந்தவர்களும் இருக்கின்றனர்.

அத்தகைய வேதமுடையவர்கள் அனைவருமே, ஈஸா நபியின் மரணத்திற்கு முன்பாக ஈஸா நபியை ஈமான் கொண்டு விடுவார்கள் என்று அல்லாஹ் இங்கே சொல்வதன் மூலம், ஈஸா நபி இனிமேல் தான் மரணிக்க இருக்கிறார்கள் என்பது புலனாகிறது.

ஈஸா நபி ஏற்கனவே மரணித்திருந்தால், அவரது மரணத்திற்கு முன் நம்பிக்கை கொள்வார்கள் என்று வருங்கால வினையாக அல்லாஹ் இங்கே சொல்லியிருக்க மாட்டான்.

இனி மரணிப்பதாக இருந்தால் மட்டும் தான் இதை அல்லாஹ் இங்கே சொல்ல முடியும்.

அவரை எதிரியாகவும், கடவுளாகவும் கருதி வந்தவர்கள், அவர் மீண்டும் இவ்வுலகில் வருவதை காணும் போது, குர் ஆனின் கூற்று மெய்யாகி விட்டதை எண்ணி அவரை நபியென ஈமான் கொண்டு விடுவார்கள். இதை தான் இந்த வசனம் சொல்கிறது.

ஹதீஸ்களிலும், அவரது மீள்வருகைப் பற்றி சொல்லும் போது, ஈஸா நபி இவ்வுலகில் நாற்பது ஆண்டு காலம் ஆட்சி புரிவார்கள் எனவும், ஜிஸ்யா வரியை ஒழிப்பார்கள் எனவும் நபி (சல்) அவர்கள் சொல்லியுள்ளதும் இதையே உறுதிப்படுத்துவதாய் இருக்கிறது.

அவரை கடவுளாக கருதி வந்த வேதக்காரர்கள் எல்லாம் அவரை நபியென ஈமான் கொண்டு உண்மை முஸ்லிம்களாக மாறி விடும் போது ஜிஸா வரி தானாய் விலகி விடும்.

ஆக, ஈஸா நபி இதுவரை மரணிக்கவில்லை என்பதையும், மீண்டும் இவ்வுலகில் வருவார்கள் என்பதையும், வந்த பின் மரணிப்பார்கள் என்பதையும் ரத்தின சுருக்கமாக அல்லாஹ் இந்த வசனத்தின் மூலமாக எடுத்துரைக்கிறான்.

பல்வேறு சால்ஜாப்புகளை சொல்லி இந்த மொழியாக்கத்திற்கும் இந்த காதியானிகள் திரிபு அர்த்தம் கொடுக்க முயல்வர்.

அவர்கள் எவற்றையெல்லாம் எடுத்து வைப்பார்கள் என்பதை நாம் முன்கூட்டியே அறிந்திருப்பதால், அவற்றை தெளிவான முறையில் அறிந்து கொள்வோம்.

முதலில், வேதக்காரர்கள் என்றால், ஈஸா நபி மீண்டும் வருகின்ற போது இருக்கிற வேதக்காரர்கள் என்று எப்படி பொருள் கொடுக்க முடியும்? என்பது இவர்கள் எழுப்பும் ஒரு வகையான கேள்வி.

அந்த வசனமே அதை தான் சொல்கிறது எனும் போது, இந்த கேள்வியே அர்த்தமற்றது.

வேதக்காரர்கள் என்பது ஈஸா நபி காலந்தொட்டு, கியாமத் நாள் வரை இருக்கிறார்கள்.

அத்தகைய கூட்டத்தாரைப் பற்றி அல்லாஹ் சொல்லும் போது, ஈஸா நபியின் மரணத்திற்கு முன் அவர்கள் நம்பிக்கை கொள்வார்கள் என்றால், அவர் மரணிப்பதற்கு முன் உயிருடன் இருப்பவர்கள் நம்பிக்கை கொள்வார்கள் என்று தான் பொருள்.

நான் அடுத்த வருடம் ஊருக்கு வருவதற்கு முன் இந்த ஊர் மக்கள் அனைவரும் என்னை நம்புவார்கள் என்று எனது ஊர் மக்களைப் பார்த்து பேசுகிறேன் என்று வைப்போம்.ை

அதே போன்று அடுத்த வருடம், நான் வருவதற்கு முன் என்ைன எல்லாரும் நம்பி விட்டார்கள். ஆனால், நான் இவ்வாறு அறிவிப்பு செய்து, நான் மறுபடியும் ஊருக்கு வருகிற இந்த இடைப்பட்ட காலத்தில் எனது ஊர் மக்களில் பலர் இறந்து போயிருப்பார்கள், அவர்கள் என்னை நம்பாமல் தான் இறந்தார்கள்.

இருந்தாலும், எனது வாசகத்திற்கு அப்போதும் பொருள் சிதைவு எதுவும் ஏற்படவில்ல.
இப்பாது எனது ஊர் மக்கள் அனைவரை நாக்கி தான் நான் பசுகிேறன் என்றாலும்,
அடுத்த வருடம் நான் ஊருக்கு திரும்புவதற்கு முன் என்
ன குறித்து நம்புவதற்கு
உங்களுக்கு சில காரணங்கள் கிடைக்கும், அந்த காரணம் கிடைக்கும் போது யாரெல்லாம் இந்த ஊரில் இருக்கிறார்களோ அல்லது உயிருடன் இருக்கிறார்களோ, அவர்களெல்லாம் என்னை நம்புவார்கள் என்பது
தான் எனது அறிவிப்பில் ஒளிந்துள்ள வாசகம் !

அதெப்படி? நீ அறிவிப்பு செய்து, திரும்ப வருவதற்கிடையில் பலர் இறந்து விட்டார்களே, நீ எப்படி இந்த ஊரில் உள்ளவர்கள் அனைவரும் என்னை நம்புவீர்கள் என்று பொதுவாய் சொன்னாய்?

என்று கேள்வியெழுப்புவது அறிவீனம்.

அது போல தான், முஹம்மது நபி காலத்தில் அல்லாஹ் சொல்லும் போது, வேதக்காரர்கள் அனைவரும் நம்பிக்கை கொள்வார்கள் என்கிறான்.

அவர் மரணிப்பதற்கு முன் நம்பிக்கை கொள்வார்கள் என்கிறான் எனும் போது, அவர் மரணிப்பதற்கு முன்பாக ஏதேனும் ஒரு சம்பவம் அவர்களை அவ்வாறு நம்பிக்கை கொள்ள வைக்க்ம்.
அந்த நாளில் எவரெல்லாம் உயிருடன் இருக்கிறாரோ, எவரெல்லாம் அந்த சம்பவத்தை உணர்கிறாரோ, அவர்கள் அனைவருமே நம்பிக்கை கொள்வார்கள்.

ஆக, இந்த வாதம் தவறானது.

இவர்கள் வைக்கும் மற்றுமொரு வாதம், இங்கே ஈஸா நபியின் மரணத்திற்கு முன்..என்று மொழியாக்கம் செய்வது தவறு, மாறாக வேதக்காரர்கள், தங்கள் மரணத்திற்கு முன்.. என்று மொழியாக்கம் செய்ய வேண்டும்..

இந்த வாதமும் அறிவுக்கு பொருத்தமில்லாத வாதமாகும்.

வேதக்காரர்கள் அனைவரும் தங்கள் மரணத்திற்கு முன் ஈஸா நபியை ஈமான் கொள்வார்கள் என்பது தான் சரியான மொழியாக்கம் என்றால் அப்படி இன்று உலகில் நடைபெறுகிறதா?
இன்று இறக்கக்கூடிய யூதர்கள் எல்லாம் ஈஸா நபியை நபியென்று நம்பித் தான் இறக்கிறார்காளா?

இன்று மரணிக்கும் வேதம் கொடுக்கப்பட்ட நசாராக்கள் அவ்வாறு தான் நம்பிக் கொண்டு இறக்கிறார்களா? இல்லை என்பதற்கு நிதர்சன நடப்புகளே சான்று.

ஈஸா நபியை ஈமான் கொள்வார்கள் என்றால் முஸ்லிம்களாக ஆவார்கள் என்று பொருள்.

அப்படியானால், மரணிக்கின்ற ஒவ்வொரு வேதக்காரனும் முஸ்லிமாக மாறித் தான் மரணிக்கிறான் என்று பொருள் செய்ய வேண்டி வரும்.
இது அர்த்தமில்லாத பொருள்.

சரி, ஈஸா நபியை நம்பிக்கை கொள்வதைப் பற்றி இந்த வசனம் சொல்லவில்லை, மாறாக, ஈஸா நபி சிலுவையில் இறந்தார் என்பதை நம்புவார்கள் என்று தான் அந்த வச்னம் சொல்கிறது.. என்று எவராவது பொருல் செய்வாரானால், அந்த வாதமும் தவறு.

அப்படியானால், மரணிக்கும் எல்லா வேதக்காரனும் அவ்வாறு நம்புவதில்லை. இன்று எத்தனையோ யூத நசாராக்கள் இஸ்லாத்தை தழுவிய நிலையில் மரணிக்கிறார்கள்.
அப்படி முஸ்லிம்களாக மாறி விட்ட வேதக்காரர்கள் இதில் விதிவிலக்கு பெற்றவர்கள் என்று அந்த வசனமும் சொல்லவில்லை. பொதுவாய் எல்லா வேதக்காரர்கள் என்று தான் சொல்கிறான்.
அப்படிப் பார்க்கையில், இந்த வசனம் பொய்ப்பிக்கபடுவதாக ஆகி விடும். எனவே அந்த மொழியாக்கமும் தவறு.

அவ்வாறு சிலுவை மரணத்தை நம்பிய வேதக்காரர்களை தான் இது சொல்கிறது என்றால், தொடர்ந்து மறுமை நாளில் அவர்களுக்கு சாட்சியாக ஈஸா நபி நிற்பார்கள் என்று அல்லாஹ் எப்படி சொல்வான்?

சிலுவையில் மரணித்தார்கள் என்று நம்பி, அதனடிப்படையிலேயே இறந்து போன ஒருவருக்கு ஈஸா நபி எப்படி சாட்சி சொல்வார்???

ஆக, அந்த வகையிலும் இது தவறான அர்த்தமாகி விடுகிறது.

யவ்மல் கியாமத்தி வகூனு அலைஹி ஷஹீதா.. என்கிற அரபிப் பதத்திற்கு சிலர், மறுமை நாளில் "எதிர்" சாட்சியாக இருப்பார் என்றே மொழியாக்கம் செய்திருக்கின்றனர்.

இந்த மொழியாக்கம் தவறு. "எதிர்" என்று பொருள் செய்யத்தக்க எந்த அரபு வாசகமும் அங்கே இல்லை.

அலைஹி என்றால் அவர்களுக்கு. ஷஹீதா என்றால் சாட்சி..

அவர்களுக்கு சாட்சியாக இருப்பார் என்று தான் பொருள் செய்ய வேண்டும். அது தான் நேரடி மொழியாக்கம்.
இதையும் இங்கே பதிய வைக்கிறேன்.

இது தவிர, இந்த வசனம் இலக்கண ரீதியாகக் கூட, ஈஸா நபியின் மரணத்திற்கு முன் வேதக்காரர்கள் நம்பிக்கை கொள்வார்கள் என்கிற மொழியாக்கம் தான் சரியானது என்கிற முடிவுக்கு வர முடியும்.

அதைப் பற்றியும், தொடர்ந்து இவர்கள் எழுப்பும் வேறு சில வாதங்கள் பற்றியும் அடுத்தடுத்து பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்.

தொடரும்..
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக