வியாழன், 17 ஜூலை, 2014

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (Q)


காதியானிகளின் மடமை வாதங்கள்

ஈஸா நபி இறக்கவில்லை (பாகம் 17)
----------------------------------------------------

ஈஸா நபி இறந்து விட்டார் என்று கூறுகிற கூட்டம், ஹதீஸில் மர்யமின் மகன் ஈசா மீண்டும் வருவார் என்று சொல்லப்படுபவைகளுக்கு திரிபு அர்த்தம் கொடுத்து, ஈஸா என்றால் மிர்சா என்றும் ஈஸாவின் தாய் மர்யம் என்றாலும் மிர்சா தான் என்றும் சொல்லி உலக மகா கேலிகூத்தினை நடத்துகின்றனர்.

இவ்வாறு திரிபு அர்த்தம் கொடுப்பது எந்த அளவிற்கு அபத்தமானது, இதன் காரணமாக கியாமத் நாளுக்கு சமீபமாக ஈஸா நபி இவ்வுலகில் செய்யக் கூடிய காரியங்களாக ஹதீஸ்கள் சொல்லும் எல்லா சம்பவங்களும் பொருளற்றவைகளாக மாறி விடுகின்றன என்பதையெல்லாம் முந்தைய பாகத்தில் விளக்கமாக பார்த்தோம்.

ஈஸா தான் மிர்சா என்பது உளரல் தான் என்பது எந்த பாமரனும் படித்து தெரிந்து கொள்வான்.

ஆதாரங்களும் உதாரணங்களும் உதவாமல் போகும் போது சில வரட்டு வாதங்களை முன் வைத்து தங்கள் கொள்கையை நிலைனிறுத்த பார்க்கிறது இந்த மிர்சாவின் சிஷ்யக்கூட்டம்.

ஈஸாவை உதாரணமாக எடுத்து சொல்வதாக அல்லாஹ் குர் ஆனில் சொல்கிறான்.
இதற்கு அர்த்தம், ஈஸா நபியை முஃமீன்களுக்கு உதாரணமாக கூறுகிறான் என்பது தானே தவிர, இன்னொரு மனிதரை ஈஸாவுக்கு பகரமாக அல்லாஹ் சொல்கிறான் என்று அர்த்தம் வைப்பது அபத்தம்.

அவ்வாறு அபத்தமான அர்த்தத்தை வைத்து, இங்கே அல்லாஹ் உதாரணம் என்று சொல்வது இவர்களது குருனாதர் மிர்சா சாஹிபை தான் என்று கொஞ்சவும் கூச்சமோ வெட்கமோயின்றி சொல்கின்றனர்.

ஈஸாவை உதாரணத்திற்கு சொல்லும் போது அவர்கள் கேலி செய்வார்கள் என்று அல்லாஹ் சொல்லி விட்டானாம்.
இதோ எங்கள் மிர்சாவை இவர்கள் கேலி செய்கிறார்கள், எனவே அல்லாஹ் சொல்வது நிரூபிக்கப்பட்டு விட்டது என்று..

மடமையான வாதமொன்றை எழுப்பி சிரிப்பு மூட்டுகின்றனர்.

மிர்சாவை ஈஸாவுக்கு உதாரணமாக அல்லாஹ் கூறுவது ஹதீஸ்களில் மட்டும் தானோ?

ஏன், குர் ஆனில் ஈஸா, ஈஸா என்று வரக்கூடிய பல வசனங்களுக்கும், இந்த இடத்தில் ஈஸா என்று அல்லாஹ் சொல்வது கிபி 1750 ல் எங்கள் ஊரில் வாழுந்து மறைந்த முஸ்தஃபா என்பவரை தான் என்று ஒரு கூட்டம் சொல்லும்.

ஈஸா பறவைக்கு ரூஹை ஊதினார் என்று அல்லாஹ் சொல்கிறான். இங்கே ஈஸா என்று யாரை அல்லாஹ் சொல்கிறான் தெரியுமா? கிபி 1250 இல் ஹைதரபாதில் வாழ்ந்த சலாஹுதீனை தான் அல்லாஹ் இங்கே சொல்கிறான் என்று ஆந்திராவிலிருந்து ஒரு கூட்டம் இதே போன்று கிளம்பும்.

இப்படியே ஈஸா ஈஸா என்று வரக்கூடிய இடங்களிலெல்லாம் அவரவர் அவரவருக்கு வசடிப்பட்ட நபர்களை சேர்த்து வைத்து தனி மதத்தை உருவாக்குவர்.

தப்பித் தவறிக் கூட அந்த நபர்களையெல்லாம் யாரும் விமர்சித்து விடக் கூடாது. அப்படி விமர்சித்தால், ஈஸாவை உதாரணத்திற்கு கூறும் போது உன் சமுதாயம் கேலி செய்வர் என்று அல்லாஹ்வே சொல்லி விட்டான் என்று கூறி எல்லா கூட்டமும் அந்த வசனத்தையே தூக்கிக் கொண்டு வரும்.

நல்லா இருக்குதுங்க உங்க கூத்து !

சரி அதுவும் போகட்டும்.

டமாஸ்கஸ் நகரில் ஈஸா இறங்குவார் என்று சொல்லும் போது, இங்கே ஈஸா என்றால் மிர்சா என்று பொருள் செய்ய வேண்டும் என்கிறீர்கள். சரி.

அதற்கு என்ன காரணம் என்று கேட்டால், குர் ஆனில் ஈஸாவை நாம் உதாரணத்திற்கு கூறும் போது.. என்கிற பொருத்தமேயில்லாத வசனத்தை தூக்கிக் காட்டுகிறீர்கள்.

சரி போகட்டும்..

அந்த உதாரணமெல்லாம் ஹதீஸில் மட்டும் தான் பொருந்துமோ? ஏன், குர் ஆனில் ஈஸா ஈஸா என்று வரக்கூடிய இடங்களிலும் மிர்சா மிர்சா என்று பொருத்துங்களேன்.

அப்படி செய்தால் பிழைப்பு சிரிப்பா சிரிக்கும் என்பதால் தான், தங்களுக்கு சாதகமான இடங்களில் மட்டும் மிர்சா என்பர்.
பாதகமான இடங்களில் ஈஸா என்றால் ஈஸா தான் என்று அந்தர் பல்டி அடிப்பர்.

வேதக்காரர்கள் அனைவரும் அவரை நம்பிக்கை கொள்வார்கள், அவர்களுக்கு மறுமையில் சாட்சியாக ஈஸா இருப்பார் என்று 4:159 வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான்.
இங்கே ஈசா என்றால் மிர்சாவாக்கும் என்று சொல்லுங்களேன் பார்போம்

'மர்யமின் மகன் ஈஸாவே! 'அல்லாஹ் வையன்றி என்னையும், என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்!' என நீர் தான் மக்களுக்குக் கூறினீரா?'' 459 என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்பதாக 5:116 வசனத்தில் சொல்கிறான்.

இங்கே மர்யம் என்றால் மிர்சா.. மர்யம் பெற்ற அவரது மகன் என்றாலும் மிர்சா.. எனவே ஈஸா என்றாலும் மிர்சா என்கிற நோபல் பரிசுத் தத்துவத்தை உதிர்த்து, அல்லாஹ் மறுமையில் இவ்வாறு கேட்பது ஈஸா நபியிடமல்ல, அவருக்கு உவமையாக்கப்பட்ட மிர்சாவிடம் தான் என்று சொல்லுங்களேன்.

இது போன்று ஈஸா என்று குர் ஆனில் வரக்கூடிய இடங்களிலெல்லாம் மிர்சா என்று சொல்லிப்பாருங்கள். உங்கள் ஞானபீடங்கள் சந்தி சிரிக்கும் என்பதை உணர்வீர்கள்.

இங்கெல்லாம் மிர்சா மிர்சா என்று பொருள் செய்தால் ஏற்படும் விபரீதத்தை உணர்ந்து, எங்கெல்லாம் மிர்சா என்று பொருள் செய்தால் மிர்சாவின் புகழை ஓங்க செய்து, மீண்டும் வருவார் என்று நிலைனாட்ட முடியுமோ அங்கெல்லாம் ஈஸாவுக்கு பதில் மிர்சா என்று பொருள் செய்கிறீர்கள்.

இதை விட கேலிக்குரிய காரியம் வேறில்லை.

அடுத்ததாக

ஈஸா நபியை உடலோடு அல்லாஹ் உயர்த்தினான் என்கிற சான்றுக்கு பதில் என்கிற பெயரில் ஒரு அர்தமற்ற வாதமொன்றை முன்வைத்திருக்கிறீர்கள்.

அதாவது, இது போன்று முஹம்மது நபியும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டார்கள். எதிரிகள் அவர்களை சூழ்ந்தார்கள். அப்போது கூட ஈஸா நபியை உயர்த்தியது போல் முஹம்மது நபியை அல்லாஹ் ஏன் உயர்த்தவில்லை?
அப்படி இயற்கைக்கு மாற்றமாக அல்லாஹ் எதையும் செய்யவில்லையே, ஈசா நபிக்கு மட்டும் அப்படி செய்வானா?

என்கிற கேள்வியொன்றினை எழுப்பியுள்ளீர்கள்.

சிந்தித்து வைத்த வாதம் தானா இது?

முஹம்மது நபியை அவ்வாறு உடலோடு உயர்த்தவில்லை தான். அதனால் ஈஸா நபி உடலோடு உயர்த்தியதும் நம்ப தேவையில்லை என்பது அர்த்தமுள்ள வாதம் தானா?

சரி நான் கேட்கிறேன், ஃபிர் அவ்னின் கூட்டம் துரத்திய போது கடல்கள் பிளக்க மூசா நபியை அல்லாஹ் காப்பாற்றினானே, அது மட்டும் என்ன இயற்கையான நிகழ்வு தானோ?

காதியானி மதத்தவர் ஈஸா நபி குறித்து கேட்பது போல் ஒரு ஹிந்து நாளை உங்களிடம் வந்து,

என்னது? மூசாவை கடல் பிளந்து அல்லாஹ் காப்பாற்றினானா? என்ன கதை விடுறீங்க?

உங்க முஹம்மது நபிக்கு இப்படியொரு இக்கட்ட்டான நிலை வந்த போது இப்படி ஏதும் அற்புதம் செய்து அல்லாஹ் அவரை காப்பாற்றினானா? அல்லது இயற்கையான முறையில் காப்பாற்றினானா?

என்று கேள்வி வைப்பான். அப்போது திரு திரு என முழிப்பீர்களா? அல்லது,

அட கூறு கெட்டவனே, ஒருவரை அற்புதம் கொண்டு காப்பாறீனான் என்பதற்காக எல்லாரையும் எப்போதும் அற்புதம் கொண்டே காப்பாற்ற வேண்டும் என்று அல்லாஹ்வுக்கு எந்த அவசியமும் இல்லை என்பீர்களா?

சிந்திக்கவும்.

இப்படியெல்லாம் வாதம் வைக்க வேண்டிய அளவிக்கு உங்கள் நிலை தரைமட்டமானது பற்றி சிந்தித்து பாருங்கள்.

அடுத்ததாக ,

///குரானில் நீ காட்டிய ஆயத்தில் ரஃபஅ என்ற சொல்லுக்கு உடலோடு உயர்த்துதல் என்று பொருள் உள்ளதாக ஒரு ஆதாரமும் காட்ட முடியாது.////

என்று ஒரு இடத்தில் எழுதியிருக்கிறீர்கள்.

வண்டி வண்டியாக, அடுக்கடுக்கான ஆதாரங்களை ஏற்கனவே தந்திருக்கிறேன்.

தூர் மலையை உங்கள் மீது உயர்த்தி உடன்படிக்கை எடுத்தோம் என்று அல்லாஹ் சொல்கிறான். அதற்கு அந்த மலையையே (உடலோடு) உயர்த்துதல் என்று தான் பொருள். அல்லாமல், மலையின் அந்தஸ்த்தை உயர்த்தினோம் என்று பொருள்.

தொழுகையில் கைகளை உயர்த்துதல் பற்றி வரும் இடத்திலும் இதே ரஃபஅ என்கிற சொல் தான் உள்ளது. கையையே உயர்த்துதல் என்று தான் அர்த்தமேயொழிய கையின் செல்வாக்கை உயர்த்துதல் என்று பொருள் இல்லை.

இன்னும் பல சான்றுகளை ஏற்கனவே இந்த தொடரின் துவக்க பாகங்களில் வைத்திருக்கிறேன்.

எதையுமே சிந்திக்காமல், ரஃபஅ என்றால் உடலோடு உயர்த்துதல் என்று எந்த ஆதாரமுமே கிடையாது என்று அப்பட்டமாக பேசுகிறீர்கள்.

ஈஸா நபி இறந்து விட்டார் என்கிற உங்கள் நம்பிக்கையை எப்படியாவது நியாயப்படுத்த வேண்டுமே என்பதற்காக குர் ஆனிலிருந்து ஐந்து ஆதாரங்களை சொல்லிப் பார்த்தீர்கள்.

அவையாவும் முந்தைய நபிமார்கள் இறந்து விட்டதையும், மனிதன் பூமியில் தான் வாழ்வான், மனிதர்கள் யாரும் நிரந்தரமாக வாழ மாட்டார்கள் என பொதுவாக அல்லாஹ்வின் வரைவிலக்கணங்களையும் பற்றி பேசுகிற வசனங்கள்.

எதுவுமே ஈஸா நபி இறந்து விட்டார் என்பதை நேரடியாகவோ மறைமுகமாகவோ சொல்லவேயில்லை என்பதை விளக்கமாக பார்த்தோம்.

தொடர்ந்து, ஈஸா நபி இறக்கவில்லை, உயிருடன் மீண்டும் இவ்வுலகில் அல்லாஹ்வால் அனுப்பப்படுவார்கள், என்று குர் ஆன் கூறும் ஆறு சான்றுகளை தெளிவான முறையில் அறிந்து கொண்டோம்.

அடுத்து, மீண்டும் ஈசா நபி இந்த உலகிற்கு வருவார்கள் என்று நபி (சல்) அவர்கள் சொல்லும் ஹதீஸ்களை அடுக்கடுக்காக கண்டோம்.

ஒரு வாதத்திற்கு ஈஸா நபி இறந்து விட்டார் என்கிற உங்கள் நம்பிக்கை தான் சரி என்று ஒப்புக் கொண்டால் கூட, அதனால் அவர் திரும்ப இவ்வுலகிற்கு வருவார் என்கிற ஹதீஸின் கூற்றினை மறுக்க தேவையில்லை என்பதையும் விளக்கினோம்.

மர்யம் என்றால் மிர்சா, மர்யம் கற்பமானார், அவர் ஈஸாவை பெற்றெடுத்தார்,
மர்யமை மிர்சாவோடு முதலில் உவமைப்படுத்தி விட்டதால், இப்போது அந்த மர்யம் பெற்ற ஈஸாவும் மிர்சா தான்.
எனவே ஹதீஸ்களில் மர்யமின் மகன் ஈஸா.. என்று வரும் இடங்களில் எல்லாம் மிர்சா என்று பொருள் செய்ய வேண்டும் என்கிற கேலிக்குத்தினை தான் உங்களால் அரங்கேற்ற முடியுமே தவிர, கியாமத் நாள் ஆனாலும் எமது ஆக்கப்பூர்வமான எந்த கேள்விகளுக்கும் விடை சொல்ல இயலாது !

ஈஸா நபி தொடர் இத்துடன் நிறைவடைகிறது.

நபிக்கு பிறகு இன்னொரு நபி வர இயலுமா? என்கிற தலைப்பின் கீழ் நீங்கள் எழுதியுள்ள பல வேடிக்கைகளையும் நகைச்சுவை துணுக்குகளையும் அடுத்தடுத்து பார்க்கலாம்.

தொடரும், இன்ஷா அல்லாஹ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக