ஞாயிறு, 15 ஜூலை, 2012

பிறை குறித்து பலருக்கும் எழும் ஒரு சந்தேகம்..

இந்த ஆக்கம் தொடர்பாக  சிலர் மறுப்பு சொல்லியுள்ளார்கள். அவர்களது கேள்விகளையும் அதற்கான விளக்கங்களையும்  இறுதியில் இணைத்துள்ளேன்.


---------------------------------------------------------------------------------------------------------
நம்மூரில் நோன்பு வைத்து விட்டு வெளிநாடு சென்றால் அந்த நாட்டு கணக்கிற்கு பெருநாள் எடுப்பதா? நாம் நோன்பு வைத்த (நம்மூர்) கணக்கிற்கு பெருநாள் எடுப்பதா?அஸ்ஸலாமு அலைக்கும்..

இது நல்லதொரு, குழப்பமான நிலை தான் !!!

குழப்பமில்லாமல் இதை சரி செய்ய, நீங்கள் ஒரு ஊரில் நோன்பு கணக்கை துவக்கி, இடையில் வேறு ஊருக்கு வந்தாலும், உங்கள் கணக்கு அல்லது எண்ணிக்கை, நீங்கள் எங்கே துவங்கினீர்களோ அதை அடிப்படையாக வைத்து தானே தவிர, புதிதாக வந்த ஊரில் என்ன கணக்கு என்று பார்க்க கூடாது.

மூன்றாம் தேதி ஊரிலிருந்து வளைகுடாவிற்கு வந்தீர்களென்றால், இங்கு மூன்றாவது நோன்பாகவும் ஊர் கணக்குப்படி நீங்கள் வைத்திருப்பது இரண்டாம் நோன்பாகவும் இருக்கும். 
நீங்கள் வைத்திருக்ககூடிய இரண்டாவது நோன்பு என்கிற அடிப்படையில் தான் நீங்கள் count செய்ய வேண்டும்.

இங்கு 21 ஆம் நோன்பாக இருக்கும் போது உங்களுக்கு 20 தான் ஆகியிருக்கும். இங்குள்ளவர்களுக்கு அன்று லைலதுல் கதரின் நாள், உங்களுக்கு இல்லை..

இது தான் நிலை!

நீங்கள் வைத்துள்ளவற்றுக்கு அல்லாஹ் கூலி தருவான் என்கிற அடிப்படையே பிரதானம்!

விளக்கமாக புரிய.. 

நான் வெள்ளிக்கிழமை அபுதாபியில் தலைப்பிறை பார்த்து விட்டேன், பார்த்து விட்டு மாத இறுதியில் சென்னை செல்கிறேன். அங்குள்ளவர்கள் சனிக்கிழமை தான் பிறை பார்த்துள்ளார்கள்.

இப்போது, சென்னைவாசிகளுக்கு 28 முடிந்திருக்கும் போது எனக்கு 29 முடிந்திருக்கும். 

எனக்கு யவ்முஷ் ஷக்குடைய நாள். நான் பிறை பார்க்க வேண்டும். ஆக, நான் அப்போது சென்னை வானில் பிறை பார்க்க வேண்டும்.
பிறை அநேகமாக தெரியாது! ஆகவே எனது மாதத்தை நான் 30 ஆக பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

30 ஆக பூர்த்தி செய்து கொண்டால் automatic ஆக மறுநாள் ஷவ்வால் 1 ஆகி விடுகிறது. 

நான் 30 ஆக பூர்த்தி செய்யும் போது சென்னைவாசிகள் 29 பூர்த்தி செய்திருப்பார்கள். அவர்களுக்கு இப்போது யவ்முஷ் ஷக்குடைய நாள்.
அவர்கள் இப்போது பிறை பார்ப்பார்கள்.
பிறை தென்பட்டு விட்டால், எனக்கு எந்த பிரச்னையும் இல்லை, அவர்களோடு சேர்ந்து நானும் பெருநாள் கொண்டாடி விடுவேன் !
தென்படா விட்டால், சென்னைவாசிகள் 30 ஆக பூர்த்தி செய்வார்கள்.

இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? என்றால், இரண்டு வழிகள் உள்ளன.

ஒன்று, நான் தனியாக பெருநாள் தொழுகை தொழுது கொள்ளலாம்.. அல்லது, ஒரு நாளை நான் வெறுமனே விட்டு விட்டு அதற்கடுத்த நாளில் ஊரோடு சேர்ந்து பெருநாள் கொண்டாடலாம்.

இந்த இரண்டில், ஒரு நாளை வெறுமனே விட்டு விட்டு அதற்கடுத்த நாளில் ஊரோடு சேர்ந்து பெருநாள் கொண்டாடுவதை தான் நான் சரி காண்கிறேன். 

நீங்கள் என்றைக்கு நோன்பு பெருநாள், ஹஜ்ஜு பெருநாள் என்று முடிவு செய்கிறீர்களோ, அன்றைக்கு தான் உங்களுக்கு நோன்பு பெருநாள், மற்றும் 

ஹஜ்ஜு பெருநாள் என்கிற ஹதீஸை நான் ஆதாரமாக இங்கு கொள்ளலாம் என்பது எனது கருத்து.

பெருநாள் தொழுகையை ஜமாத்துடன் தொழ வேண்டும் என்கிற நபியின் வழிக்காட்டுதல் இருப்பதால், இதன் காரணமாகவும் நான் இந்த முடிவை எடுக்கலாம்.


இதில் இன்னொரு வகை, நான் சனிக்கிழமை சென்னையில் பிறை பார்க்கிறேன், பார்த்து விட்டு மாத இறுதியில் அபுதாபிக்கு வருகிறேன் என்று வைப்போம்.
அபுதாபியில் வெள்ளிக்கிழமை அன்றே பிறை பார்த்து விட்டார்கள்.
இப்போது அபுதாபி வாசிகளுக்கு 29 முடியும் போது எனக்கு 28 தான் முடியும். அவர்களுக்கு யவ்முஷ் ஷக்குடைய நாள் !

அவர்கள் பிறை பார்க்கிறார்கள், பிறை தென்ப்பட்டு விட்டது. இப்போது அபுதாபிவாசிகளுக்கு பெருநாள் தினம் துவங்கி விட்டது!
நான் அப்போது 28 நோன்பை தான் முடித்திருப்பேன்.

இந்நிலையில் நான் என்ன செய்வது என்றால், மறுநாள் , எல்லாரோடும் சேர்ந்து பெருநாள் கொண்டாடி விட வேண்டும். கொண்டாடி விட்டு, ஒரு நோன்பை நான் களா செய்ய வேண்டும்.

இது தான் நான் அறிந்தவரை, இருப்பதில் எளிதான ஒரு தீர்வு !

இதை தெளிவாக்கக்கூடிய வகையில் எந்த ஹதீஸ்களும் இல்லை என்பதால் நாமாக இதை தீர்மானித்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம். !

மாற்றுக்கருத்திருந்தால் தெரியப்படுத்துங்கள். அல்லாஹ் போதுமானவன் !!இதையும் பார்க்கவும்..http://nashidahmed.blogspot.com/2012/07/blog-post_4541.html--------------------------------------------------------------------------------------------------------


28 நோன்புடன் நிறுத்திக்கொள்ளும் நாம், பெருநாள் கொண்டாடி விட்டு ஒரு நோன்பை களா செய்ய வேண்டும் என்கிற எனது கருத்துக்கு மறுப்பாக , நாம் தான் ரமலான் மாதத்தில் எந்த நோன்பையும் விடவில்லையே, பிறகு ஏன் ஒரு நோன்பை களா செய்ய வேண்டும் என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

ஆனால், இந்த கேள்வியில் எந்த அர்த்தமும் இல்லை. காரணம், நோன்பு வைப்பது குறித்தோ நோன்பு விடுவதோ குறித்து நபி (ஸல்) அவர்கள் சொல்லும் பொது பிறை பார்த்து முடிவெடுக்க சொன்னது போலவே, ஒரு மாதத்திற்கு 29 நாட்கள் குறைந்த பட்சம் இருக்க வேண்டும் என்பதையும் சேர்த்தே சொல்லி விட்டார்கள். இரண்டு நிபந்தனைகள் சொல்லப்பட்டுள்ளன.

இவர்களது கேள்வி, முதல் நிபந்தனையை மட்டும் தான் கருத்தில் கொள்கிறதே தவிர இரண்டாவது நிபந்தனை கருத்தில் கொள்ளப்படவில்லை.

பிறை தென்பட்டு விட்டால் மாதம் முடிந்து விடும் என்பது மார்க்கம் சட்டம் தான் என்பது போல 29 நாட்கள் இல்லாமல் மாதம் முடியாது என்பதும் மார்க்க சட்டம் தான். இதை தான் இவர்கள் புரியவில்லை.

சவுதியில் இருந்து சென்னை சென்று அங்கு பிறை பார்த்தால் அங்கே பெருநாள் கொண்டாடப்படும் அதே நாள் எனக்கு 28 நோன்புகள் தான் முடிந்திருக்கும்.

பிறை பார்த்து விட்ட காரணத்தால் ரமலான் மாதம் முடிந்து விட்டது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், எந்த மாதமும் 29 நாட்களுக்கு குறைவாக இருக்க கூடாது என்கிற சட்டத்தையும் நாம் பேண வேண்டும் என்கிற அடிப்படையில், 28 நோன்பு வைத்துள்ள நான் ரமளானின் ஒரு நோன்பை தெரிந்தோ தெரியாமலோ விட்டு விட்டேன் என்று தான் பொருள் செய்ய வேண்டும்.
அந்த அடிப்படையில் ஒரு நாளை களா செய்ய வேண்டும் என்று நான் சொன்னதில் எந்த தவறும் இல்லை.

ஆக, பிறை டு பிறை என்கிற இவர்கள் வாதம் அர்த்தமில்லாதது.

அடுத்து, இதே அடிப்படையில் சவுதியில் ஹஜ்ஜுக்காக சென்று, அங்கே துல்ஹாஜ் 10 ஆம் பிறை பார்க்கப்படும் பொது உங்களுக்கு 9 தான் ஆகியுள்ளது என்றால் என்ன செய்வர்கள் என்கிற கேள்வியை எழுப்புகிறார்கள்.

இந்த கேள்வியும் பொருத்தமானது இல்லை.

துபையில் பிறை பார்த்து விட்டு சென்னைக்கு சென்று, அங்கே மறு பிறை தென்பட்டதும் நான் மாதத்தை முடித்துக்கொண்டு அங்குள்ளவர்களுடன் சேர்ந்து பெருநாள் கொண்டாடியது போல, ஊரில் பிறை பார்த்து சவுதிக்கு ஹஜ் சென்று அங்கே ஒரு நாள் வேறுபாட்டுடன் துல் ஹஜ் 10 வந்தாலும், அங்குள்ளவர்கள் என்றைக்கு அரபா என்றும் துல் ஹஜ் என்றும் கருதுகிறார்களோ அவர்களுடன் சேர்த்து தான் நாமும் ஹஜ் செய்ய வேண்டும். 
எந்த ஊரில் நாம் இருக்கிறோமோ அதை கணக்கில் கொண்டு தான் தேதியை நாம் கணக்கிட முடியும். என்றாலும் அதே சமயம், மாதம் முடிந்து விடும் நிலை வரும் போது நாம் கணக்கிட்டது மார்க்கம் அனுமதித்துள்ள அளவிலான எண்ணிக்கை கொண்ட நாட்கள் தானா என்பதை கவனித்து, அதை விட குறைவாக இருந்தால் ஒரு நாளை கலா செய்ய தான் வேண்டும் என்பதையும் சேர்த்தே தான் பேண வேண்டும்.


சர்வதேச தேதி கோட்டை கடந்து விட்டால் இது போன்ற பிரச்சனை வராது, அருகருகே இருக்கும் ஊர்களில் கூட இரண்டு வெவேறு நாட்கள் வரும்.அல்லது, ஒரு நாள் தவறி வெள்ளிக்கிழமை என்பதே இல்லாத நிலை கூட வரும் என்று ஒரு வாதத்தை வைக்கிறார்கள்.


அடிப்படை விஷயம், சர்வதேச தேதி கோடு என்பது மார்க்கம் சொன்ன கோடு இல்லை. நாமாக ஒரு தேதி கோட்டை வரைந்து விட்டு இதன் காரணமாக எனக்கு ஒரு நாள் தவறி விட்டது என்று சொல்வதை ஏற்க முடியாது. அப்படி ஒருவர் தேதிக்கொட்டுக்கு கிழக்கே இருந்து மேற்க பயணம் செய்த காரணத்தால் ஒரு நாள் தவறி விடும் என்றால் அவர் அந்த நாளையும் கணக்கிட்டு ஜும்மா தொழுகை தொழ தான் வேண்டும். எப்படி  சூரியனே தெரியாத காலங்களில் நபி (ஸல்) அவர்கள் கணித்து தொழுதார்களோ அது போல. இன்றைக்கும் எப்படி குளிர் பிரதேசங்களில் , நார்வே போன்ற நாடுகளில் சூரியனே தென்படாத ஆறு மாத காலத்தில் கணித்து தொழுகிறார்களோ அதே போல செய்ய வேண்டும்.
வெள்ளிக்கிழமை அன்று ஜும்மா தொழ வேண்டும் என்பது தான் இறுதி இலக்கு. எனக்கு அந்த நாள் கிடைக்கவில்லை என்றால் கணித்து கொள், அது தான் பதில். 

மேலும், இப்போது இங்குள்ள பிரச்சனை இந்த சர்வதேச தேதி கோட்டை கடப்பது குறித்த கேள்வியுமல்ல. அது தான் இவர்கள் பிரச்சனை என்றால் தேதி கோட்டினை கடக்காத இரண்டு ஊர்களை எடுத்துக்கொண்டு இவர்கள் மறுப்பு சொல்ல வேண்டும்.
பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நான் செல்லும் போது எனது 28 நோன்புகள் முடிந்த நிலையில் திருவனந்தபுரத்தில் ஷவ்வால் பிறையை பார்த்து விடுகிறேன். இப்போது ரமலான் முடிந்து விட்ட காரணத்தால் நான் பெருநாள் கொண்டாட வேண்டும், எனினும் ரமளானில் எனக்கு 28 நாட்கள் தான் ஆகியுள்ளது என்கிற வகையில் ஒரு நாளை களா செய்ய வேண்டும்.
இங்கே எந்த தேதி கோடும் குறுக்கே வரவில்லை. ஆக, இதை மறுப்பதற்கு தேதி கோட்டை பற்றி பேசுவதும் பொருத்தமில்லாதது.


அடுத்து, அப்படியானால், நோன்பு காலங்களில் விமானத்தில் ஐந்து மணி நேரம் பயணம் செய்து இன்னொரு ஊருக்கு வந்தால் காலையில் அவன் நோன்பு வைத்த கணக்குப்படி அவன் நோன்பு திறக்க வேண்டிய நேரம் வராமல் இருந்தும் கூட, இரண்டரை மணி நேரம் முன்னதாகவே நோன்பு திறந்து விடுகிறான் (வந்தடைந்த ஊரின் கணக்க்ப்படி)
அப்படியானால், இந்த இரண்டரை மணி நேரத்தை மீண்டும் களா செய்ய வேண்டும் என்று சொல்வீர்களா? என்று கேள்வி வைக்கிறார்கள்.

அப்படி களா செய்ய சொல்ல மாட்டோம், ஏன் சொல்ல மாட்டோம் என்றால் இந்த நோன்பு திறக்கும் கணக்கிற்கும் நான் ஏற்கனவே சொன்ன மாதத்திற்கான நாள் கணக்கிற்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உள்ளது.

ஒரு மாதம் முடிந்து விட்டது என்பதை தீர்மானிக்க இரண்டு அளவுகோல்களை நபி அவர்கள் சொல்லியுள்ளார்கள்.

- ஒன்று, பிறை பார்க்க வேண்டும்.
- இரண்டு, குறைந்த பட்சம் 29 நாட்கள் முடிய வேண்டும்.

மேலே உள்ள இரண்டு நிபந்தனையில் இரண்டுமே நிறைவேறினால் தான் மாதம் முடியும்!!!!

ஆனால், ஒரு நாளில் நோன்பு முடியும் நேரம் என்பதற்கு மேலே உள்ளது போல இரண்டு நிபந்தனை இல்லை.

சூரியன் மறைய வேண்டும் என்கிற ஒரு நிபந்தனை தான் உள்ளது.

நாம் எந்த ஊரில் இருக்கிறோமோ, அந்த ஊரில் எப்போது சூரியன் மறைகிறதோ , அப்போதே அந்த நிபந்தனை நிறைவேறி விடுகிறது, ஆகவே அப்போது நாம் வைத்துள்ள நோன்பை விட்டு விடலாம்.

இவர்கள் கேட்கும் கேள்வி எப்போது பொருத்தமாக இருக்கும் என்றால், சூரியன் மறைய வேண்டும் என்கிற ஒரு நிபந்தனையுடன் சேர்த்து, நோன்பு என்பதை குறைந்த பட்சம் 14 மணி நேரம் வைக்க வேண்டும் என்று ஏதேனும் ஹதீஸ்கள் இருக்க வேண்டும். 
மாதம் என்பது 29 நாட்கள் தான் என்று மாதத்திற்கு சொன்னது போல நோன்பு வைக்கும் நேரம் என்பது 14 மணி நேரம் அல்லது 13 மணி நேரம் என்று எதாவது அறிவிப்பை நபி (ஸல்) அவர்கள் செய்திருக்க வேண்டும்.
அப்படி நோன்புக்கான குறைந்த பட்ச அளவை நபி அவர்கள் சொல்லியிருந்தால், அப்போது இவர்கள் கேட்கும் கேள்வியில் அர்த்தம் உள்ளது, 
அப்படி ஒரு நிலை இருந்தால் , அந்த இரண்டரை மணி நேரத்தை களா செய்ய வேண்டும் என்று தான் அப்போதும் சொல்லியிருப்போம்.

வஸ்ஸலாம் 

6 கருத்துகள்:

 1. /////நான் தனியாக பெருநாள் தொழுகை தொழுது கொள்ளலாம்..////-----குத்பா இணைந்த ஒரு தொழுகையை, குத்பா இல்லாமல்... தனியாக எப்படி தொழுவது...?

  பதிலளிநீக்கு
 2. ////ஒரு நாளை நான் வெறுமனே விட்டு விட்டு அதற்கடுத்த நாளில் ஊரோடு சேர்ந்து பெருநாள் கொண்டாடலாம்.////

  -----பிறையை காணமால் நோன்பை விடக்கூடாது...! பிறையை கண்டபிறகுதான் நோன்பை விடவேண்டும் என்று ஆதாரபூர்வ கட்டளை இருக்கும்போது....அதெப்படி.... நீங்கள் ஷவ்வாலை அடையாமலேயே... ரமளானில் இருந்து கொண்டே நோன்பை விடுவீர்கள்..?

  பதிலளிநீக்கு
 3. ////ஒரு நோன்பை நான் களா செய்ய வேண்டும்.////----என் களா செய்யவேண்டும்...? ரமளாநில்தான் எந்த நோன்பையும் நீங்கள் விடவில்லையே...? பிறை டு பிறை எல்லா நோன்பையும் வைத்தீர்களே...?

  பதிலளிநீக்கு
 4. ////நீங்கள் எங்கே துவங்கினீர்களோ அதை அடிப்படையாக வைத்து தானே தவிர, புதிதாக வந்த ஊரில் என்ன கணக்கு என்று பார்க்க கூடாது.////

  -----இப்படியும் சொல்லிவிட்டு....

  எப்படி....

  /////அவர்களோடு சேர்ந்து நானும் பெருநாள் கொண்டாடி விடுவேன் !/////

  -----இப்படியும் சொல்கிறீர்கள்...???

  முரணாக தெரியவில்லையா...?

  பதிலளிநீக்கு
 5. ////மாற்றுக்கருத்திருந்தால் தெரியப்படுத்துங்கள். அல்லாஹ் போதுமானவன் !!///----இந்த வரியை பார்த்ததால் தான் பின்னூட்டமே போட்டேன்..! நன்றி..!

  பதிலளிநீக்கு
 6. Mohamed Ashik

  //சவூதியை காட்டிலும் ஒரு கிழமை தாமதமாக துல்ஹஜ் பிறையை பார்த்துவிட்டு... இந்தியாவிலிருந்து சவூதிக்கு ஹஜ்ஜுக்கு செல்வோர்.... தனது சொந்த ஊரின் பிறை கணக்கில்தான் சவூதியில் ஹஜ் செய்ய வேண்டுமா...? //

  (உ.ம்) உங்களுக்கு டிரைன் 5.00 மணிக்கு என்றால் 5.30 என் செல்லுகிறிர்கள் சகோ. 4.30 போனால் என்ன பிரச்சனை. அப்படி நீங்கள் நேர தளர்த்தி செல்லவதால் அதற்கு உண்ட இழப்பை நீங்கள் சந்தித்து தான் ஆகவேண்டும் சகோ. இது தான் நீதி.

  பதிலளிநீக்கு