ஞாயிறு, 15 ஜூலை, 2012

பராஅத் இரவு பற்றி மத்ஹப் நூல்கள்

ரஜப் மாதத்தில் முதல் ஜும்ஆ இரவில் மஃரிபுக்கும் இஷாவிற்கும் இடையில் 12 ரக்அத் கொண்டதொழுகையும், ஷஅபான் மாதத்தில் நடுப்பகுதி 15ஆவது இரவில் தொழும் 100 ரக்அத்கள் கொண்டதொழுகையும் இழிவாக்கப்பட்ட அனாச்சாரங்களாகும். இதை செய்யக் கூடியவர் பாவியாவார். இதை(தொழுகையை) தடுப்பது பொறுப்பாளர்கள் மீது கட்டாயமாகும்.
(ஷாபி மத்ஹபின் "இஆனதுல் தாலிபீன்' - முதல் பாகம் 27ம் பக்கம்)

மக்களிடம் அறிமுகமான ஷஃபான் பிறை 15ல் (இவர்களால் உருவாக்கப்பட்ட 100 ரக்அத்கள்) தொழும்தொழுகையும் ஆஷுரா தினமன்று தொழும் தொழுகையும் மோசமான அனாச்சாரங்களாகும். இதுசம்பந்தமாக வரும் அனைத்து ஹதீஸ்களும் இட்டுக்கட்டப் பட்டவைகளாகும்.
(ஷாஃபி மத்ஹபின் பத்ஹுத் முயின், முதல் பாகம் -  27ம்  பக்கம் ) 
பராஅத் இரவன்று பள்ளி வாசல்களிலும் வீதிகளிலும் கடை வீதிகளிலும் மின் விளக்குகளை வைப்பது(பித்அத்) அனாச்சாரமாகும் 
(ஹனஃபி மத்ஹபின் "பஹ்ருர் ராஹிக்' - 5ஆம் பாகம்  232ஆம் பக்கம்.)


குர் ஆன் ஹதீஸ் மட்டும் போதாது, மத்ஹபும் வேண்டும் என்று சொல்பவர்கள், குர் ஆனையும் பின்பற்றுவதில்லை, ஹதீசையும் பின்பற்றுவதில்லை, மத்ஹபையும் பின்பற்றுவதில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக