செவ்வாய், 17 ஜூலை, 2012

பதில் சொல்லப்படாத கேள்விகள்



சஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்று சொல்கிற எவருமே எனக்கு தெரிந்து இது நாள் வரை முழுமையாக கீழ்காணும் நம் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தது கிடையாது.

  • சஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்றால் அதன் பொருள் என்ன?
  • குர் ஆன் ஹதீசுக்கு உட்பட்ட விஷயங்களில் மட்டும் பின்பற்ற வேண்டுமா?
  • குர் ஆன் ஹதீசுக்கு முரணாக சஹாபாக்கள் எதுவுமே சொன்னதில்லையா?
  • சொல்லியிருந்தால் அதையும் (குர் ஆன் ஹதீசுக்கு முரணாக இருந்தாலும்) பின்பற்ற வேண்டுமா?
  • அல்லது, அவர்கள் முரணாக சொல்லியிருந்தாலும், எதையெல்லாம் குர் ஆன் ஹதீசுக்கு முரணில்லாமல் சொல்லியிருக்கிறார்களோ அதை மட்டும் பின்பற்ற வேண்டுமா?
  • அல்லது, குர் ஆன் ஹதீஸ் அனுமதிக்கவோ தடுக்கவோ செய்யாத அவர்களது தனிப்பட்ட சாதாரண உலக வாழ்க்கையையும் சுன்னத் என்று பின்பற்ற வேண்டுமா?
  • குர் ஆனுக்கு முரணில்லாத விஷயங்களில் மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்றால், உங்களை நான் பின்பற்றலாம், என்னை நீங்கள் பின்பற்றலாமே? யாரும் யாரையும் பின்பற்றலாமே? யாரை பின்பற்றினாலும் பினற்றுவதில் குர் ஆன், ஹதீஸில் ஆதாரம் இருக்கிறதா என்று பார்ப்பது மட்டும் தானே நம் வேலை? அப்படியிருக்க, சஹாபாக்கள் என்று அவர்களை மட்டும் தனியாக சொல்ல காரணம் என்ன? குர் ஆன், ஹதீஸ் அடிப்படையில் என்னை சுல்தான் பின்பற்றுவார், சுல்தானை நான் பின்பற்றுவேன், இதில் தவறில்லையே !

மேற்கண்ட மிக சாதாரண சந்தேகங்களுக்கு இதுவரை என் அறிவுக்கு எட்டியவரை, எவருமே விளக்கம் அளித்ததில்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக