ஞாயிறு, 15 ஜூலை, 2012

அல்லாஹ் சுட்டிக்காட்டும் பொய்யர்கள்


தீங்கிழைப்பதற்காவும், (ஏக இறைவனை) மறுப்பதற்காகவும் நம்பிக்கை கொண்டவர்களிடையே பிரிவை ஏற்படுத்திடவும் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராக போர் செய்தோருக்கு புகலிடம் அளிப்பதற்காகவும் பள்ளிவாசல்களை ஏற்படுத்தியோர், நாங்கள் நல்லதை தவிர வேறு எதையும் நடவில்லை என்று சத்தியம் செய்கின்றனர். அவர்கள் பொய்யர்கள் என்று அல்லாஹ் சாட்சி சொல்கிறான். அதில் (முஹம்மதே) நீர் ஒரு போதும் வணங்காதீர். இறை அச்சத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பள்ளிவாசலே வணங்குவதற்கு தகுதியானது !
திருக்குர் ஆன் 9 :107 , 108

மேலே உள்ள இறை வசனத்தின் அடிப்படையில், 

மவ்லூத் ஓதப்படுகிற, அதை அங்கீகரிக்கிற, கபுர் வணக்கத்தை பிரசாரம் செய்கிற எந்த பள்ளியும் தொழ தகுதியானது இல்லை.
தொப்பி போடாதவன் வராதே, விரல் அசைப்பவன் வராதே என்று போர்டு போட்டுக்கொண்டு செயல்படும் எந்த பள்ளிவாசல்களும் தொழ தகுதியானது இல்லை.
பள்ளிவாசல் ஜமாஅத் என்று வைத்துக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்தும், ஏழைகளுக்கு ஒரு நீதி பணக்காரர்களுக்கு ஒரு நீதி என்று பாகுபாடுகளுடன் நடந்து வரும் பள்ளிகளும், மேலும் தொழ வருபவனை தடுக்கும் பள்ளிவாசல்களும், இத்தகையோருக்கெல்லாம்    தலைவர், செயலாளர் அந்தஸ்து கொடுத்து புகலிடம் தரும் பளிவாசல்களும் அல்லாஹ்வின் பார்வையில் பள்ளிவாசல்கள் இல்லை !
அல்லாஹ் அங்கீகரிக்காத பள்ளிவாசல்களில் தொழுவது பாவமான காரியமாகும்!

அத்தகைய அல்லாஹ் அங்கீகரிக்காத பள்ளிவாசல் ஒன்றை தங்களுக்கு தாங்களே அடையாளப்படுத்திக் காட்டுகிற பொய்யர்களின் வெட்கங்கெட்ட செயலை இணைப்பில் காணலாம். 

வஸ்ஸலாம்.


Anti- Islamic masjid.jpg

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக