ஞாயிறு, 15 ஜூலை, 2012

ஏர்வாடி சிராஜும் எழுத்து விவாதமும்


அஸ்ஸலாமு அலைக்கும்.

ஏர்வாடி சிராஜின் அனேக எழுத்துக்களுக்கு மறுப்பு தெரிவிக்காமலேயே செல்வது நமது சிந்தனையை பேணிக்கொள்ள வேண்டும் என்கிற நோக்கில் தான், எப்படி ஒரு பைத்தியக்காரனுடன் அவனுக்கு சரி சமமாக சண்டை போடுவது நமக்கு தான் இழிவை தருமோ அதே போன்று தான் இந்த ஏர்வாடி சிராஜுடன் பேசுவதும், என்பதை முதலில் ஆணித்தரமாக சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 
இதன் காரணமாக, வேறொரு ஆக்கத்தில் இவர் நமக்கு எதிராக உளறிக்கொட்டியத்தை கூட கண்டு கொள்ளாமல் விட்டு இருந்தேன். 

எழுத்து விவாதம், எழுத்து விவாதம் என்று மேற்படியார் காமடி செய்வதினுடேய் நோக்கம் என்ன என்பதை அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காக, அந்த தலைப்பில் இவர் மழுப்பியவைகளை இங்கு சுட்டிக்காட்டுவது அவசியமாகிறது.
இதன் மூலம், எழுத்து விவாதத்தின் மீது இவர் கொண்டுள்ள அதீத மோகதிற்கான காரணத்தை அனைவரும் அறிந்து கொள்ளலாம்.

அதாவது, அல்லாஹ்வின் வசனங்களை மறுத்து பேசுபவர்கள் காபிர் என்கிற கருத்துப்பட நான் அந்த ஆக்கத்தில் சொல்லியிருந்தேன். மொட்டை தாத்தா குட்டையில் விழுந்தான் என்பது போல் சொல்லாமல், ஆதாரத்துடனே சொல்லியிருந்தேன்.

அல்லாஹ் திருமறையில், அல்லாஹ்வின் வசனங்களை பொய்ய்யாக்கியவர்களுக்கு நிரந்தர நரகம் என்று சொல்கிறான். ஹதீஸ்களில், நிரந்தர நரகம் என்பது காபிர்களுக்கும் முஷ்ரிக்குகளுக்கும் உரியதாகும் என்று சொல்லப்பட்டுள்ளது. இரண்டையும் இணைத்து பார்க்கிற போது, அல்லாஹ்வின் வார்த்தைகளை பொய்யென கூறி மறுப்பவர் முஷ்ரிக் அல்லது காபிர்களின் பட்டியலில் தான் சேருவார் !!!

இதை அவசர அவசரமாக மறுப்பதற்கு முன்வந்தவர் மேற்ப்படி ஏர்வாடி சிராஜாகும்.


அதாவது, இது தொடர்பாக என்னுடன் எழுத்து விவாதம் செய்ய முன்வந்தார். !!

இதை மறுத்து பேசுபவராக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? மேலே நான் சொன்னதற்கு மறுப்பு சொல்ல வேண்டும். அதை செய்யாமல், இவராக இன்னொரு வசனத்தை காட்டி ஏதேதோ பேசினார். 
அதாவது, 

அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம்; அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்;. அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான்;. தவிர மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்;. இன்னும், ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு உதவி செய்தோம்;. அல்லாஹ் நாடியிருந்தால், தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும், அத்தூதுவர்களுக்குப்பின் வந்த மக்கள் (தங்களுக்குள்) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்;. ஆனால் அவர்கள் வேறுபாடுகள் கொண்டனர்;. அவர்களில் நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர்;. அவர்களில் நிராகரித்தோரும் (காஃபிரானோரும்) உள்ளனர்;. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் (இவ்வாறு) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்;. ஆனால் அல்லாஹ் தான் நாடியவற்றைச் செய்கின்றான். (2:253) - ஏர்வாடி சிராஜ்.
என்று சொன்னார். இதன் மூலம் இவர் சொல்ல வரும் கருத்து, கருத்து வேறுபாடுகள் வரத்தான் செய்யும். அவ்வாறு கருத்து வேறுபாடுகள் வந்தால் கூட, கருத்து வேறுபாடுகள் கொண்டவர்களை அல்லாஹ் இறை மறுப்பாளன் என்று சொல்லவில்லை.. சிலர் நம்பிக்கையாளன், சிலர் மறுப்பாளன் என்று தான் அல்லாஹ் சொல்கிறான், ஆகவே நாஷித் காபிர் என்று சொன்னது தவறு என்பது இவர் சொல்ல வரும் கருத்து.
இந்த கருத்தை சொல்வதாக இருந்தால் அதற்கு முன், நான் முதலில் சுட்டிக்காட்டிய ஆதாரத்தை மறுகக் வேண்டுமா இல்லையா? மறுத்தாரா? அந்த ஆதாரத்தை குறித்து வாயையாவது திறந்தாரா? இல்லை. 
நேரடியாக விவாதம் செய்திருந்தால் நான் சொல்லும் ஆதாரத்திற்கு மறுப்பை சொல்லாமல் இவரால் நழுவியிருக்க முடியுமா? முடியாது!! எழுத்து விவாதம் என்று வந்த போது, நீண்ட நெடிய கட்டுரைகளையும் வண்ண வண்ண எழுத்துக்களையும் போட்டு ஜொலிக்க வைத்து விட்டால் போதும், எதிர் தரப்பு வைக்கும் ஆதாரத்திற்கு பதிலே பேசாமல் கூட, நான் அறிவாளி, விவாதத்தில் நான் வெற்றி பெற்று விட்டேன் என்று பேச முடியும், என்பதை நிரூபித்திருக்கிறார் இந்த ஏர்வாடி. எழுத்து விவாதம் மீது இவர் கொண்ட அதி தீவிர காதல் வெறிக்கு இது தான் காரணம் !!

சரி அது போகட்டும். இவர் காட்டிய ஆதாரத்திற்கு நான் என்ன மறுப்பு சொன்னேன்? 

நீங்கள் சொல்லும் அந்த வசனத்தில் அல்லாஹ் , அல்லாஹ் நாடியிருந்தால், தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும், அத்தூதுவர்களுக்குப்பின் வந்த மக்கள் (தங்களுக்குள்) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்;.
என்கிறான். தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும் என்பது அல்லாஹ்வின் வேதத்தை தான் சொல்கிறது. ஆக, அல்லாஹ்வின் வேதத்தை மறுப்பவர்களில் நம்பிக்கையாளர்களும் இருந்தனர், மறுப்பாளர்களும் இருந்தனர்.
இது ஒரு வசனம்.
வேறு வசனங்களில் அல்லாஹ், அல்லாஹ்வின் வசனங்களை மறுத்தால் அவனுக்கு நிரந்தர நரகம் என்று எச்சரிக்கிறான்.
மேலே உள்ள இரண்டு வசனத்தையும் இணைத்து பொருள் செய்வது எப்படி?
ஈசா நபி விஷயமாக , அல்லாஹ்வின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாத அந்த கூட்டத்தாரில் நம்பிக்கை கொண்டவர்களும் இருந்தனர், அந்த நம்பிக்கை கொண்ட மக்களும் நிரந்தர நரகத்திற்கு தான் செல்வார்கள்!!!

இப்படி தானே புரிய வேண்டும்? என்று கேட்டேன்.


நேரடி விவாதம் என்றால், இதற்கு என்னய்யா பதில்? என்று கேட்டு இவரிடம் பதில் வாங்கலாம். இதற்கு பதில் சொல்லி விட்டு அடுத்த தலைப்பு போ, என்று நிர்பந்தப்படுதியிருக்கலாம். எழுத்து விவாதம் என்பதால், மேலே நான் சொன்னது போல, ஜொலிக்கும் வகையில் ஏதாவது உளறல்களை எழுதி பக்கங்களை நிரப்பி விட்டால் போதும், சம்மந்தப்பட்ட கேள்விக்கு பதில் சொல்லா விட்டாலும் தப்பித்து விடலாம் என்கிற அசாத்திய திறமை மேர்ப்படியாருக்கு உண்டு. வேண்டுமென்றால் தேடிப்பாருங்கள், மேலே நான் கேட்ட கேள்விக்கு இவரது ஜொலிக்கும் மெயிலில்பதிலே இருக்காது.
இருப்பினும், வெற்றி வெற்றி என்று ஜமாலி ரேஞ்சுக்கு துள்ளுவார் !!


சரி இதுவும் போகட்டும்.. இதற்கு பதில் சொல்லாதவர், இதற்கு சொன்ன ஒரே மறுப்பு என்ன தெரியுமா? அல்லாஹ்வின் வசனங்களை மறுத்தவர்கள், என்று நாஷித் அந்த வசனத்திற்கு மொழியாக்கம் செய்து விட்டார், அந்த அரபி வாசகத்தை காட்ட வேண்டும் , என்றார்.



அட கூறு கேட்டவரே, அல்லாஹ்வின் அத்தாட்சிகள் வந்த பின்னரும் சண்டையிட்டனர், என்று சொல்வதும், அல்லாஹ்வின் வசனங்களை மறுத்தார்கள் என்று சொல்வதும் வார்த்தைகளில் வேறுபாடு இருந்தாலும், கருத்து ஒன்று தான். 
நான் இறை வசனங்களை மொழியாக்கம் செய்ய போகிறேன் என்று சொல்லி இதை எழுதவில்லை, அந்த வசனத்தை எடுத்து விளக்குகிறேன் அவ்வளவு தான். உதாரணமாக, ""அவர்களை அல்லாஹ் நரகத்தில் போடுவான்"", என்று ஒரு வசனத்தை நான் எடுத்து பேசும் போது, அல்லாஹ் நரகத்திற்குள் தள்ளுவான், என்று கூட சொல்வோம். தள்ளுவான் என்பதற்கு என்ன அரபி வார்த்தை அங்குள்ளது? பாருங்கள், இவர் அல்லாஹ் வசனத்தில் விளையாடுகிறார் என்று மூளையுள்ள எவனும் சொல்ல மாட்டான்.

ஆக, இதுவெல்லாம் கேட்கப்படும் கேள்விக்கு பதில் இல்லாததால், அதற்கு பகரமாக எதையுயாவது சப்பை கட்டி, நானும் பதில் எழுதுகிறேன், என்னாலும் பக்கங்களை நிரப்ப முடியும், என்னாலும் ஜொலிக்கும் வண்ணத்தில் கலர் கலராக font கலர் கொடுக்க முடியும் என்பதை காட்டுவதற்கு இவர் செய்யும் தரை மட்டமான செயல்கள் தான் என்பது தெளிவு.
இவர் விரும்பும் எழுத்து விவாதத்தில் தான் இதுவெல்லாம் சாத்தியம் ! நேரடியாக முகத்திற்கு நேர் கேள்வி கேட்டால், இப்படி எல்லாம் சமாளிக்க முடியாது, வேர்த்து வடிந்து வேட்டி நனைவது தான் மிச்சமாகும் என்பதை தெளிவாக உணர்ந்துள்ள அபார அறிவுள்ளவர் தான் மேற்படி ஏர்வாடியார்.

இன்னும் சொல்கிறேன் கேளுங்கள்.


இதற்கும் பதில் சொல்லாமல், இவர் தொடர்ந்து சொன்னது என்ன தெரியுமா? அது தான் உச்சகட்ட வேடிக்கை !! 
அல்லாஹ் மீது ஆணையாக, நான் மிகைப்படுத்தியே சொல்லவில்லை, உண்மையை அறிய வேண்டும், நடுநிலையாக சிந்திக்க வேண்டும், அறிவுப்பூர்வமாக வாதிக்க வேண்டும் என்கிற எண்ணமுடைய எந்த அடிமட்ட நபரும் இவரை போல எழுத மாட்டார்கள், அந்த அளவிற்கு உளறிக்கொட்டியிருக்கிறார். 
அது என்ன என்று கேட்கிறீர்களா?

மேலும் படியுங்கள்..


நாஷிதின் முதல் வாசகம் :

அல்லாஹ்வின் அத்தாட்சியை ஏற்காமல் சண்டையிட்டார்கள் என்று கூறுவதும், அல்லாஹ்வின் வசனங்களை மறுத்தார்கள் என்று கூறுவதும் பொருள் அடிப்படையில் ஒன்று தான், வார்த்தையில் தான் வேறுபாடு! என்று நான் சொல்லியிருந்தேன்.


நாஷிதின் இரண்டாம் வாசகம் :

 
 தெளிவான அத்தாட்சிகள் என்பது அல்லாஹ்வின் வேதங்களை, அல்லாஹ்வின் வசனங்களை தான் குறிக்கும்.
அவர்கள் வேறுபாடு கொண்டார்கள் என்பது, அந்த தெளிவான ஆதாரங்களை மறுத்தார்கள் என்கிற கருத்தை தான் தரும்./


என்று கூறியிருந்தேன்,


மேலே உள்ள எனது இரண்டு வாசகத்தையும் எடுத்துக்கொண்டார்


இரண்டு வாசகங்களிலும் ""வேறுபாடு"" என்கிற வாசகம் வருகிறதல்லவா? இந்த வாசகத்தை வைத்துக்கொண்டு இவர் பேசும் உலக மகா வாதத்தை பாருங்கள்.


நாஷிதின் இரண்டாம் வாசகத்தில், அவர்கள் வேறுபாடு கொண்டார்கள் என்பது, அல்லாஹ்வின் ஆதாரங்களை மறுத்தார்கள், அதன் மூலம் அல்லாஹ்வை நிராகரித்தவர்களாகி விட்டார்கள் என்று நாஷித் சொன்னார்.

அதே சமயம், நாஷிதின் முதல் வாசகத்தில்,  இரண்டு வகையில் சொன்னாலும் பொருள் ஒன்று தான், வார்த்தையில் தான் வேறுபாடு உள்ளது, என்கிறார்.


ஆக, பொருள் ஒன்று என்றாலும் வார்த்தையில் வேறுபாடு வந்தால் அது இறை நிராகரிப்பு என்று நாஷித் ஒப்புக்கொண்டுள்ளார்.!!!!!???@#$%!!#@^@#$ !!


எப்படி வேறுபாடு என்கிற வார்த்தையை வைத்து தொங்கோட்டம் ஓடினார் பார்த்தீர்களா? இது தான் ஏர்வாடிசிராஜ். இதற்கு தான் மேற்ப்படியார் எழுத்து விவாதம் எழுத்து விவாதம் என்று துள்ளுகிறார் .


அட கூறு கேட்டவரே, வேறுபாடு என்று இரண்டு வாசகங்களில் நாம் சொல்லி விட்டால் இரண்டு வாசகங்களில் வந்த வேறுபாடு என்கிற வார்த்தைக்கும் ஒரே அர்த்தத்தை கொடுப்பது கிறுக்கன் செய்யும் மொழியாக்கம், புரிகிறதா?


அல்லாஹ்வின் கட்டளையில் வேறுபாடுடன் நடந்தால் அவனுக்கு சொர்க்கம் கிடைக்காது என்று சொல்வோம். இதில் வேறுபாடு கொண்டதற்கு சொர்க்கம் கிடைக்காது என்று சொல்வதால், ""வார்த்தைகளில் வேறுபாடு வந்தாலும் பொருள் ஒன்று தான்"" என்று சொல்வதற்கும் சொர்க்கம் கிடைக்காது என்று சொல்வது கீழக்கரை ஏர்வாடியில் கட்டிப்போடப்பட்டவன் கூட பேசாத ஒரு வாதம்.
எழுத்து விவாதம் என்பதால் இப்படியும் பேசுவார். 

எப்படி இருக்கிறது என்றால்,

ஒருவன் சொல்கிறான், நான் எனது மனைவியை மிகவும் நேசிக்கிறேன். அந்த நேசிப்பின் அடையாளம் தான் , எனக்கு மூன்று குழந்தைகள் !!


அவனே இன்னொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறான், இந்தியாவை நான் மிகவும் நேசிக்கிறேன் !!



இதை படித்த ஏர்வாடி சிராஜ் போன்ற ஒரு அறிவு சுரங்கம் என்ன சொல்வான் தெரியுமா? அப்படியானால், இவன் இந்தியா மூலம் மூன்று குழந்தை பெற்றுக்கொண்டதை ஒப்புக்கொண்டு விட்டான் !!!! ஏன்? நேசிக்கிறேன் என்று இரண்டு இடங்களிலும் வந்து விட்டதல்லவா? !!!!!@$#%# 


இவனது இந்த பேச்சுக்கு என்ன மதிப்போ, அதே மதிப்பை சற்றும் குறைக்காமல் ஏர்வாடி சிராஜுக்கும் கொடுங்கள்.! நமது கொஞ்ச நஞ்ச சிந்தனையும் பறி போய் விடும், இந்த ஏர்வாடி சிராஜுடன் பேசினால்.. இதில் எந்த மிகையுமில்லை !!


சம்மந்தப்பட்ட அந்த விவாதத்தில், இவர் மொத்தமாக பேசியது இவ்வளவு தான். நான் கேட்ட எந்த கேள்விக்காவது இவர் பதில் சொல்லியுள்ளாரா என்பதை சகோதரர்கள் உளவுப்படையை விட்டு தேடிப்பார்க்க சொன்னாலும் கிடைக்காது !



வேடிக்கை இன்னும் முடியவில்லை.. இவரது எழுத்து விவாதத்தின் அசாத்திய திறமையை கண்டு நான் வியந்ததை இன்னும் சொல்கிறேன் கேளுங்கள் .


தமிழாக்கத்தை பற்றி பேசும் போது, இந்த வார்த்தைக்கு என்ன மொழியாக்கம் என்று என்னை நோக்கி இவர் கேள்வி கேட்டிருந்தார்.
அதற்கு நான் சொன்ன பதில், இதில் வேடிக்கை என்ன வென்றால், இந்த வசனத்தில், நான் கூறியவாறு தமிழாக்கம் உள்ளது என்று முதன் முதலாக சொன்னதே இவர் தான். // Nashid Ahmed


இவர் சொனதற்கு என்னிடம் ஆதாரம் கேட்கிறாரே, இதை விட வேடிக்கை ஒன்று உண்டா? என்பது எனது கேள்வி..


இதற்கு இவர் சொன்ன பதிலை பாருங்கள், 



குர்ஆன் வசனத்தை சொல்வதில் என்னப்பா வேடிக்கை!!!  நாம் குர்ஆன் வசனத்தை படித்தாலோ, கேட்டாலோ இவை அல்லாஹ்வின் வேதம் என்ற நம்பிக்கையும், அல்லாஹ்வின் வார்த்தைகள் என்ற பயமும் தான் முதலில் தோன்றும். எனக்கு நாஷித் போல் குர்ஆன் வசனம் வேடிக்கையாக தோன்றாது.  மேலும் குர்ஆன் வசனங்கள் மூலம் அல்லாஹ்வுடைய  அத்தாட்சிகளை விவரிப்பது தான் நம் எண்ணத்தில் தோன்றும்.  நாஷித் கூட்டத்திற்கு குர்ஆனே வேடிக்கையாம்!  நாம் அல்லாஹ்வை தவிர இந்த வேடிக்கையாளர்களை பற்றி  யாரிடம் முறையிட முடியும்.  
- ஏர்வாடி சிராஜ் 



அதாவது, இவரது கேள்வி வேடிக்கையாக இருக்கிறதே, என்று நான் கேட்டதற்கு, அல்லாஹ்வின் வசனம் வேடிக்கையாக இருக்கிறது என்று நான் சொன்னதாக திரிக்கிறார். எவ்வளவு நெஞ்சழுத்தம் பாருங்கள் !

படிப்பவர்கள் எல்லாரும் கேனப்பயல்கள் என்று எண்ணுகிறார். என்ன உளறினாலும் தலையாட்டி, ஆஹா சூப்பர், பிரமாதமாக எழுதுகிறாரே ஏர்வாடி, என்னே இவரது திறமை, என்னே இவரது சிந்தனை !! என்று நோபல் பரிசு தராத குறையாக பாராட்டுவார்கள் என்ற எண்ணமோ என்னவோ இவருக்கு.


எதற்கு இதையெல்லாம் நான் சொல்கிறேன் என்றால், இப்படி எல்லாம் பிரமாதமாக வாதம் வைக்க எழுத்து விவாதம் மூலம் தானே முடியும்? நேரடி விவாதத்தில் இப்படி எல்லாம் பேசினால், காரி துப்பி வெளியே போய்யா என்று விரட்டி அனுப்புவார்கள் என்கிற அச்சம் தான், எழுத்து விவாதத்தில் இவர் காட்டும் அபரிமிதமான அன்புக்கு காரணம் !


முன்னர் ஒரு முறை, சாகிர் நாயக் மத்ஹபுக்கு ஆதரவாக பேசுவதை நாம் சுட்டிக்காட்டிய போது, பிஜேவுக்கு எதிரி அல்லவா சாகிர் நாயக், ஆகவே எனக்கு அவர் நண்பன் என்கிற கழிசடை கொள்கையின் வெளிப்பாடாக, சாகிர் நாயக் வேண்டுமென்றே அப்படி சொல்லவில்லை, நிர்பந்தத்தின் காரணமாக தான் அப்படி சொன்னார், ஆகவே அவரை விமர்சனம் செய்ய கூடாது என்று, இஸ்லாத்திற்கு எதிரான ஒரு கொள்கைக்கு கூட முட்டுக்கொடுத்து பேசியவர் தான் இந்த ஏர்வாடி சிராஜ். இவருக்கு, இஸ்லாத்திற்கு எதிரான கொள்கையா இல்லையா என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல, பிஜேவுக்கு எதிரானவரா ஆதரவானவரா? என்கிற ஒன்று தான் ஒரே குறிக்கோள்.! இதை பல முறை சுட்டிக்காட்டிய பின்னரும், 

இல்லை, நான் இப்படி சொல்லவில்லை என்றோ, ஆம், நான் தவறாக இப்படி சொல்லி விட்டேன், மன்னித்து விடுங்கள் என்றோ இவர் எங்காவது சொன்னாரா? அது யாருக்காவது தெரியுமா? தெரியாது. ஏனென்றால், இது எழுத்து விவாதம் ! 
நேரடி விவாதத்தில் இப்படி ஏதாவது பேசி விட்டு மானத்துடன் இவரால் வீடு போய் சென்றிருக்க முடியாது , இதற்கு பதில் சொல்லுமய்யா, சொல்லி விட்டு அடுத்த தலைப்பை பேசு, என்று அங்கே சட்டையை பிடிப்போம் என்பதை அறிந்துள்ள இவர், எழுத்து விவாதத்தில் இப்படி எல்லாம் எது வேண்டுமானாலும் எழுதி விடலாம், பதில் கேட்டால் பதில் சொல்ல தேவையில்லை, அதற்கு பதில் வேறொரு கிறுக்குத்தனமான கேள்வி ஒன்றை கேட்கலாம்,  அந்த கேள்வி கிறுக்குத்தனம் என்று நிரூபணம் ஆனால், அதற்கு மறுப்பு சொல்லாமல், வேறு எதையாவது எழுதலாம்.. கடைசியில் நான் கேட்ட எந்த கேள்விக்கும் அவர்களால் பதில் எழுதவே முடியவில்லை, மாஷா அல்லாஹ், அல்ஹ்மதுளில்லாஹ் என்று இவரது அதிமேதாவித்தனத்திற்கு அல்லாஹ்வின் பெயரை பயன்படுத்திக்கொள்ளலாம்.

அறிந்து கொள்ளுங்கள் இவர் தான் ஏர்வாடி சிராஜ் ! இது தான் இவரது எழுத்து விவாத மோகத்திற்கான உண்மை காரணம் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக