ஞாயிறு, 15 ஜூலை, 2012

அனைத்து இயக்கங்களுக்கும் ஒரு அழைப்பு


அஸ்ஸலாமு அலைக்கும்..

கிறிஸ்தவர்களுடன் தவ்ஹீத் ஜமாஅத் விவாதம் செய்ததை, தங்களுக்கு வக்கில்லாததை இவர்கள் செய்தார்கள் என்று பாராட்ட வேண்டியவர்கள் அதை செய்யாமல் இருந்திருந்தாலாவது பிரச்சனையில்லை, ஆனால்,அதை விமர்சனம் செய்ய இறங்கியிருக்கிறார்கள். தவ்ஹீத் ஜமாதிற்காக இவர்கள் கிறிஸ்தவ மக்களிடம் மன்னிப்பு கேட்கிறார்களாம். இதுவே நம் இஸ்லாமிய சமூகத்தின் வெட்கக்கேடான நிலைக்கு உதாரணம் ! 
இப்ராஹீம் நபி, அந்த சிலைகளை உடைத்தெறிந்து ஏகத்துவ விதையை நட்டார்களே, அன்றைக்கு நல்ல வேளை இந்த கூட்டம் இல்லை. இருந்தால், இப்ராஹீம் செய்த தவறுக்காக நாங்கள் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறோம் என்று கூறியிருப்பார்கள்.

இந்நிலையில், இதற்கு விளக்கம் கேட்டால், அதற்கு பதில் சொல்ல இயலாத இந்த பேடிகள், தவ்ஹீத் ஜமாத்தும் தானே SDPI இயக்கத்தை தடை செய்ய சொல்லி போஸ்டர் அடித்தார்கள் என்று கூறுகிறார்கள். இதை மிகப்பெரிய பதிலடியாகவும் நினைத்து பேசிக்கொண்டும் இருக்கிறார்கள், வெட்கமில்லாமல்.
இது போன்ற உளறல் பேர்வழிகள் தங்கள் வாதங்களில் உண்மையாளர்கள் என்றால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? பகிரங்கமான விவாதத்திற்கு வர வேண்டும்.
இது வரை தமிழக இஸ்லாமிய வரலாற்றில் என்றைக்கும் இந்த இயக்கம் தான் பெரியது, அந்த இயக்கம் தான் பெரியது என்கிற குழாயடி சண்டைகள் தான் வருகின்றனவே தவிர, இதற்கு ஒரு தீர்வை தேடிய எந்த பயணமும் யாரும் மேற்கொள்ளவில்லை.

தனித்தனியாக, நான் தான் பெரியது, நான் தான் சிறந்தவன் என்று பேசுவதற்கு யாருக்கும் சங்கடம் இருக்காது, அதே சமயம், அவ்வாறு பேசியவற்றை நிரூபிப்பது என்று வரும் போது யார் அதற்கும் தயாராகி வருகிறார்கள் அல்லது யார் ஒளிகிறார்கள் என்கிற அளவுகோல், உண்மையாளர்களை கண்டறிவதற்கு உதவுகிற கருவியாகும்!

இந்த அடிப்படையில், தமிழ் பேசும் முஸ்லிம் இயக்கங்கள், முஸ்லிம் பெயர்தாங்கி இயக்கங்கள் என அனைவருக்கும் நாம் விடுக்கும் அழைப்பு, 
  • தமிழகத்தில் எந்த இயக்கம் சரியான இஸ்லாமிய கொள்கையை கொண்டுள்ளது என்கிற விஷயத்தில் விவாதிக்க முன் வாருங்கள். 
  • அந்த கொள்கையின் படி இயன்றவரை சரியாக பின்பற்றி ஒழுகும் இயக்கம் எது?
  • மார்க்க அடிப்படையில் இருந்தும் விலகி சுய இச்சைகளுடன் இயக்கம் நடத்துபவர்கள் யார்?
  • சமுதாய மக்களுக்கு அதிகம் நன்மையாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் இயக்கம் எது?
  • இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு அதிக துரோகம் செய்தது யார்?

என்பன போன்ற தலைப்புகளில் இயக்கங்களே முன் வந்து தங்களுக்குள் விவாதிக்க வேண்டும். 

நடுநிலையாளன் என்கிற நிலையில் இல்லாமல், தவ்ஹீத் ஜமாத்தின் ஆதரவாளன் என்கிற நிலையில் இருந்தே இந்த அழைப்பை நான் விடுக்கிறேன்.

எந்த விவாதத்திற்கும் எப்போதும் தயார் என்று தவ்ஹீத் ஜமாஅத் பல முறை கூறி விட்ட போதும், மேற்கண்ட இந்த அழைப்பு சம்மந்தமாக எந்த இயக்கம் முன் வந்தாலும், தவ்ஹீத் ஜமாத்திடம் பிரத்யேக ஒப்புதலை பெற்று தர நான் முயற்சி செய்கிறேன் , இன்ஷா அல்லாஹ்.

மற்ற இயக்கங்கள் தயாரா? மற்ற மற்ற இயக்கங்களின் பிரதிநிதிகள், லட்டர் பேட் இயக்கங்களின் தலைவர்களும் செயலாளர்களும் இந்த குழுமங்களில் இருந்தால் இதை பரிசீலிக்கவோ, தங்கள் மேலிடத்திற்கு எடுத்து சென்று அனுமதி பெறவோ செய்யட்டும்.

யார் நேர்மையாளன் என்பதை பகிரங்கமாக பேசி நிரூபிப்பதற்கு தயக்கம் காட்டி விட்டு, நான் நேர்மையாளன் நான் நேர்மையாளன் என்று வெறுமனே அறிவிப்பு மட்டும் செய்வது பகலில் ஒளிந்து விட்டு ,இரவு நேரத்தில் மட்டும் ஓலமிடும் நாய்க்கு சமம் !!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக