ஞாயிறு, 22 ஜூலை, 2012

தவப்பைதனி என்பதற்கு என்ன பொருள்?



அஸ்ஸலாமு அலைக்கும்.

தவப்பைதனி என்கிற வார்த்தை ஈசா நபி சம்மந்தமாக குர் ஆனில் சொல்லப்படும் வசனத்தில் (5 :117 -118 ) பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்த்தையின் பொருளாக வேறு பெரும்பான்மையான இடங்களில் "மரணம்" என்பதையே நாம் கொள்வதால், இந்த வசனத்திலும் தவப்பைதனி என்பதற்கு மரணம் என்று பொருள் வைத்து, அதன் மூலம் ஈசா நபி மரணித்து விட்டார்கள் என்றும் சிலர் வாதம் வைக்கின்றனர்.

தவப்பைதனி என்பதற்கான அகராதி பொருள் மரணம் என்பதல்ல. அதன் நேரடி பொருள் கைப்பற்றுதல் அல்லது எடுத்துக்கொள்ளுதல் என்பதாகும்.
நேரடி பொருள் எங்கெல்லாம் பொருந்துமோ, அங்கெல்லாம் நேரடி பொருளை தான் கொடுக்க வேண்டும் என்கிற சாதாரண விதியின் படி, இந்த இறை வசனத்திற்கும் முதலில் நேரடி பொருளை தான் கொடுக்க வேண்டும். நேரடி பொருள் பொருந்தும் பட்சத்தில் அதையே தான் உறுதி செய்ய வேண்டும். பொருந்தாத பட்சத்தில் மட்டும் தன் வேறு பொருளுக்கு செல்ல வேண்டும்.

அந்த அடிப்படையில், ஈசா நபி கைப்பற்றப்பட்டார் என்று பொருள் கொள்ளும் போது, ஈசா நபி மறுமையின் அத்தாட்சியாக இருப்பார் என்கிற இறை வசனமும், அவர் இறப்பதற்கு முன் அவரை மக்கள் நம்புவார்கள் என்கிற இறை வசனமும் கச்சிதமாக பொருந்துகிறது. மேலும், ஈசா நபி மரணிக்கவில்லை , அவர் மீண்டும் வருவார் என்று சொல்லப்படுகிற ஏராளமான ஹதீஸ்களும் பொருளுள்ளதாகிறது
.
அதே சமயம், அங்கே வருகிற தவப்பைதனி என்கிற வார்த்தைக்கு மரணித்தல் என்று பொருள் வைத்தால், மேலே நான் சுட்டிக்காட்டிய அனைத்து வசனங்களும் ஹதீஸ்களும் பொருளற்றதாகி விடும்.
ஆகவே, தவப்பைதனி என்பதற்கு நேரடியான அர்த்தமான கைப்பற்றுதல் என்பதே சரியான பொருள் !!


தவப்பைதனி என்பதற்கு மரணம் என்று தான் அதிகமான இடங்களில் பொருள் என்றாலும், நேரடி பொருளான கைப்பற்றுதல் என்கிற அர்த்தத்தில் குர் ஆனிலோ ஹதீஸிலோ வேறு ஏதேனும் செய்திகளை காட்ட முடியுமா என்று சிலர் கேள்வி எழுப்புவார்கள். அவர்களுக்காக கீழ்காணும் ஆதாரம்..


ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடன் ஒரு பயணத்தில் -("அறப்போர் வீரனாகஎன்றும் கூறினார்கள் என்றே எண்ணுகிறேன்)- கலந்துகொண்டேன். மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ள தைப் போன்றே இடம்பெற்றுள்ளன. மேலும்பின்வருமாறு கூடுதலாகவும் இடம்பெற் றுள்ளது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஜாபிர்! (ஒட்டகத்தின்) விலை முழுவதையும் பெற்றுக் கொண்டாயா?'என்று கேட்டார்கள். நான் "ஆம்என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "விலையும் உனக்கே உரியதுஒட்டகமும் உனக்கே உரியது. விலையும் உனக்கே உரியதுஒட்டகமும் உனக்கே உரியது''என்றார்கள்

நூல் : முஸ்லிம் 3266


இங்கே , ஒட்டகத்தின் விலையை முழுமையாக பெற்று விட்டாயா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்கும் இடத்தில் தவப்பைதனி என்கிற வார்த்தையை தான் பயன்படுதியுள்ளார்கள் !

வஸ்ஸலாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக