செவ்வாய், 17 ஜூலை, 2012

லைலதுல் கதர்லைலதுல் கதர் இரவானது ஆயிரம் மாதங்களை விடவும் சிறந்தது. 
அல் குர் ஆன் 97 : 1  

லைலதுல் கதர் இரவை ரமளானின் கடைசி பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் தேடிக்கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி - 2020 

இவையல்லாமல், லைலதுல் கதர் 21 இல் இருக்கலாம் என்றும் 23 இல் இருக்கலாம் என்றும் 25 இல் இருக்கலாம் என்றும் 27 இல் இருக்கலாம் என்றும் 29 இல் இருக்கலாம் என்றும் தனி தனி ஹதீஸ்கள் ரசூல் (ஸல்) அவர்கள் அறிவித்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

புஹாரி - 49 , 2023 , 6049   (இன்னும் பல..)

லைலதுல் கதர் இரவு என்பது குறிப்பிட்டு 27 ஆம் இரவு தான் என்று முடிவு செய்வதற்கு எந்த ஆதாரமும் இல்லாததால், 27 ஆம் இரவை மட்டும் தனியாக தேர்ந்தெடுத்து இபாதத்களை செய்வது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டி தராத பித்'அத் ஆகும்.
மேலும், இ'திகாப் எனும் அமலை தவிர, லைலதுல் கத்ருக்கென்று எந்த சிறப்பு வணக்கங்களும் மார்க்கத்தில் சொல்லப்படவில்லை.

( இரவு தொழுகை தவிர ) அவரவர் விரும்பியவாறு  நபிலான தொழுகைகளையும், பிரார்த்தனைகளையும் அதிகமதிகம் செய்து கொள்ளலாமே தவிர, ஜமாத்தாக இணைந்து நின்று செய்யும்  விதமாக மார்க்கத்தில் வேறு  எந்த இபாதத்தும் ரசூல் (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படவில்லை என்பதை கவனத்தில் கொண்டு செயல்படுவோம்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக