திங்கள், 23 ஜூலை, 2012

ரமளானுக்கென்று சிறப்பு தொழுகை உண்டா?

அஸ்ஸலாமு அலைக்கும்

ரமளானுக்கென்று தஹஜ்ஜத் அல்லாத வேறு சிறப்பு தொழுகைகள் உள்ளன  என்கிற தவறான வாதங்களுக்கு இங்கு தக்க மறுப்புகள் தரப்பட்டுள்ளன. மின்னஞ்சல் மூலமாக நடந்த இந்த கருத்து மோதல் இயன்ற வரை முழுமையாக தொகுக்கப்பட்டுள்ளது.


2010/9/14 Nashid Ahmed 


எனில், இரவுத் தொழுகை ஃபர்ளுத் தொழுகைகளைவிட மேன்மையானதா? ஏனெனில், நபிகளார் (ஸல்) அவர்கள் ஃபர்ளுத் தொழுகைகளைப் பற்றி இந்த ஹதீதில் கூறவில்லை

இரவு தொழுகையை தொழுதால் பாவங்கள் மன்னிக்கப்படும் என்பது எனது கூற்றல்ல!, ரசூல் (ஸல்) அவர்களின் கூற்று. அது பர்ளு தொழுகையை விட மேலானதா என்பது என்னை நோக்கிய கேள்வியா அல்லது ரசூலை நோக்கியா?

ஒரு வாதத்திற்கு, ரமலான் இரவுக்கென்று சிறப்பு தொழுகைகள் உள்ளன என்றே வைத்துக்கொள்வோம்.மற்ற நாட்களில் இல்லாத பிரத்தியேகமான தொழுகையை தான் ரசூல் அவர்கள் பாவங்களை போக்கக்கூடியது என்று சொல்கிறார்கள் என்றும் வைத்துக்கொள்வோம்.
அப்படியானால், அது மட்டும் பர்ளு தொழுகையை விட சிறப்பானதாகி விடுமா?

என்னை நோக்கி கேள்வி எழுப்புவதாக நினைத்து உங்கள் நிலைப்பாட்டுக்கு எதிராகவே நீங்கள் கேள்வி எழுப்புகிறீர்கள்.

உங்கள் வாதப்படி, ஒன்று பாவங்கள் மன்னிக்கப்படும் என்ற ஹதீஸை மறுக்கிறீர்கள், அல்லது, பர்ளான தொழுகையை விட, ரமளானில் இரவு தொழுகை மேலானது என்று கூறவருகிறீர்கள்.
இரண்டில் எதை சரி என்று சொல்ல வருகிறீர்கள்?


ரமளான் இரவுகளில் நின்று வணங்குமாறு நபிகளார் (ஸல்) சிறப்பாகக் கூறவேண்டிய அவசியம் என்ன?


அது ரமலான் என்பதால்!
ரமளானில், பார்ளு தொழுகைக்கு கூட அதிகப்படியான நன்மைகள் கிடைக்குமே! மற்ற மாதங்களில் நாம் தொழும் தொழுகையானாலும், இன்ன பிற திக்ருகள், வணக்கங்கள், துஆக்கள் ஆனாலும் சரி, மற்ற நாட்களை விடவும் அதிகமான முக்கியத்துவம் கொடுத்து ரமளானில் செய்வது அதிக நன்மையை ஈட்டு தரும். அந்த வகையில், இரவு தொழுகையையும், ரமளானில் பேணுதலோடு தொழுதால், மற்ற நாட்களில் அல்லாஹ் தரும் அருளை, ரஹ்மத்தை விட அதிக ரஹ்மத்தை ரமளானில் இறக்குவான், என்பது தான் அதன் பொருளே தவிர, மற்ற நாட்களில் இல்லாத வித்தியாசமான தொழுகையை தொழ வேண்டும் என்பது அதன் அர்த்தம் அல்ல!.


மற்ற நாள்களில் தொழாவிட்டாலும் பரவாயில்லை. ரமளானில் மட்டுமேனும் தொழுது கொள்ளுங்கள் என்று நபித்தோழர்களுக்கு நபிகளார் (ஸல்) அவர்கள் சலுகை அளித்தார்களா? அல்லது மற்ற நாள்களில் தொழும் தொழுகை தவிர மேலும் அதிகமாகத் தொழுது கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்களா?


மேலும் அதிகமாக தொழுமாறு சொல்லப்படவில்லை.

ரமளானிலும், ரமலான் அல்லாத நாட்களிலும் ஒரே மாதரியான தொழுகையை தான் ரசூல் அவர்கள் தொழுதுள்ளார்கள், என்பது ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்.

(இதற்கு இதுவரை தங்களால் எந்த மறுப்பும் சொல்ல இயலவில்லை !)

நான் ஆதாரமாகக் குறிப்பிட்ட ஹதீதில் இருந்து ரமளான் இரவுகளில் கூடுதலாகத் தொழ வேண்டும். அதாவது சிறப்புத் தொழுகை உண்டு என்றே நான் புரிந்து கொண்டுள்ளேன்.

கூடுதலாக தொழுவதற்கு அதில் இருக்கும் ஆதாரத்தை காட்டுங்கள்.!எனது கேள்வி இரண்டு இன்னும் மிச்சமாகவே உள்ளது.

1 . ஆயிஷா அவர்களது ஹதீஸை குறித்த உங்கள் பதில் என்ன?

2 . சுன்னத்தான இரவு தொழுகையை ரமளானில் தொழுவதற்கும் மற்ற நாட்களில் தொழுவதற்கும், (தொழுகை முறையிலோ, ரக்காத்களிலோ..) என்ன வேறுபாடு?


----------------------------------------------------------------------------------------------------2010/9/14 இப்னு அலிய் 

அன்புச் சகோ. நாஷித்,

அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்லாஹ்வின் தூதரை நோக்கி கேள்வி கேட்பது போலவா எனது வாக்கிய அமைப்பு இருந்தது? அவ்வாறு இருக்கவில்லை என்பதற்கு அல்லாஹ்வும் இக்குழுமமும் சாட்சியாக உள்ளனர். அவ்வாறுதான் இருக்கிறது என்று நீங்கள் உறுதியாக நினைப்பீர்களாயின் அந்த வரிகளை நான் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். வாதம் திசைமாறிவிடக் கூடாது. கைர்.

ரமளான் மாதத்தில் சிறப்பாக ஒரு தொழுகையை தொழுது கொள்ளுங்கள் என்று நபிகளார் கூறுவதாகவே அந்த ஹதீதில் இருந்து நான் புரிந்த கொண்டுள்ளேன். நான் புரிந்து கொண்டுள்ளது போன்றே ஹதீதுக் கலை இமாம்களும் புரிந்து கொண்டுள்ளார்கள் என்ற குறிப்பையும் தந்துள்ளேன்.

அன்னை ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவிக்கும் ஹதீது குறித்து....

இந்த ஹதீதை நான் மறுக்கவில்லை.

இந்த ஹதீது தஹஜ்ஜுத் மற்றும் வித்ரு சம்பந்தமானது என்பதே எனது நிலைப்பாடு.

அன்னை ஆயிஷா (ரளி) அவர்களிடம் கேள்வி கேட்பவர் எந்தத் தொழுகை குறித்து கேள்வி கேட்கிறார் என்ற குறிப்பு இல்லை. ஆயிஷா (ரளி) அவர்களின் பதில் மூலமாகவே கேள்வி கேட்டவர் தஹஜ்ஜுத் மற்றும் வித்ரு தொழுகை குறித்து கேட்டிருக்கிறார் என்பதை அறிந்து கொள்கிறோம். மாறாக, ஆயிஷா (ரளி) அவர்களின் பதிலை விட்டுவிட்டு, கேள்வி கேட்டவர் எந்தத் தொழுகை குறித்து கேள்வி கேட்டார் என்று உங்களால் உறுதியாகக் கூற முடியுமா?எனது இரண்டு கேள்விகள் இன்னும் மிச்சமாகவே உள்ளன, என்பதை உங்கள் நினைவுக்கு தருகிறேன்.


1 . ஆயிஷா அவர்களது ஹதீஸை குறித்த உங்கள் பதில் என்ன?

இதற்கு கடந்த மடலில் நான் பதில் அளித்துவிட்டேன். இது தஹஜ்ஜுத் மற்றும் வித்ரு தொழுகை பற்றிய ஹதீது. இதனை நீங்களும் உங்களின் கடைசி மடலில் ஒப்புக் கொண்டீர்கள்.

2 . சுன்னத்தான இரவு தொழுகையை ரமளானில் தொழுவதற்கும் மற்ற நாட்களில் தொழுவதற்கும், (தொழுகை முறையிலோ, ரக்காத்களிலோ..) என்ன வேறுபாடு?

இதற்கும் ஏற்கனவே பதில் அளித்துள்ளேன். தஹஜ்ஜுதுக்கும் ரமளான் சிறப்புத்தொழுகைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிந்து கொள்வதற்கு முன் ரமளானில் சிறப்புத் தொழுகை உண்டா இல்லையா என்பதில் முடிவு எட்டப்பட வேண்டும்.

சிறப்புத் தொழுகை உண்டு என்பதற்கு என் தரப்பில் ஹதீதைத் தந்துவிட்டேன்.

நபிகளார் (ஸல்) அவர்கள் அதிகமாகத் தொழவில்லை என்ற குறிப்பை நீங்கள் தருகின்றீர்கள்.

நபிகளார் (ஸல்) அவர்கள் செய்தது மட்டுமே நபிவழியன்று; அவர்கள் செய்தவை, சொன்னவை மற்றும் அங்கீகரித்தவை ஆகியவையும் நபிவழியே. இதனை நீங்களும் ஏற்றுக் கொள்வீர்கள்.

நான் ஆதாரமாகத் தந்த ஹதீதில் நபிகளார் ரமளானில் சிறப்பாகத் தொழுமாறு கூறியுள்ளார்கள். இதனை ஆதாரமாக நான் தந்தால், நபிகளார் தொழுதிருக்கிறார்களா? என்று கேள்வி கேட்டால் என்னவென்று சொல்வது?

நபிகளார் (ஸல்) கூறியதை நபிவழி என்று நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? இல்லையா?


அன்னை ஆயிஷா (ரளி) அவர்களிடம் கேள்வி கேட்பவர் எந்தத் தொழுகை குறித்து கேள்வி கேட்கிறார் என்ற குறிப்பு இல்லை.


ரமளானில் ரசூல் (ஸல் ) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது என்பது கேள்வி. (எந்த தொழுகை? என்ற குறிப்பு கேள்வியில் இல்லைஎன்றாலும், ஆயிஷா (ரலி) அவர்களின் பதிலிலிருந்து, கேள்வி கேட்டவர் எந்த தொழுகையை குறித்து கேட்டார் என்று புரிந்து கொள்ளலாம்.

ஆயிஷா (ரலி) அவர்களின் பதில் :
"ரமளானிலும் ரமலான் அல்லாத நாட்களிலும் பதினோரு ரக்காத்கள் தொழுவார்கள்."

இந்த பதிலின் மூலம், கேள்வி கேட்டவர், தஹஜ்ஜத் மற்றும் வித்ரை குறித்து தான் கேட்டார் என்பது தெள்ள தெளிவாக புரிகிறது.

நீங்களும் அதை ஒப்புக்கொண்டுள்ளீர்கள்.
மாறாக, ஆயிஷா (ரளி) அவர்களின் பதிலை விட்டுவிட்டு, கேள்வி கேட்டவர் எந்தத் தொழுகை குறித்து கேள்வி கேட்டார் என்று உங்களால் உறுதியாகக் கூற முடியுமா?ஆயிஷா (ரலி) அவர்களது பதிலின் மூலம், கேள்வி கேட்டவர் எதை குறித்து கேட்டார் என்பது தெள்ள தெளிவாக உள்ளது!

இப்போது நீங்கள் பதில் கூற வேண்டியது, ஆயிஷா அம்மா அவர்களின் அந்த பதிலை பற்றி தான். கேள்வி கேட்டவரது கேள்வியை குறித்து நீங்கள் சிந்திக்க தேவையில்லை.             --------------------------------------------------------------------------------------------------------------

2010/9/15 Nashid Ahmed 


வீண் விவாதமாக நீங்கள் இதை மாற்ற முயற்சிப்பதாக தெரிகிறது.

ஆயிஷா அவர்களிடம், ரமளானில் ரசூல் (ஸல்) அவர்களின் தஹஜ்ஜத் தொழுகையை பற்றி கேட்கப்படுகிறது.
அதற்கு அவர்கள், ரமளானிலும் ரமலான் அல்லாத நாட்களிலும் பதினோரு ரக்காத்கள் தொழுதாகள் என்று பதில் அளிக்கிறார்கள்."
இந்த ஹதீஸ் உங்களுக்கு சொல்வது என்ன என்பது தான் நான் கேட்க்கும் கேள்வி.
இதற்கு பதில் தராமல் காலம் கடத்துவது ஏன்?
பதில் கேட்டால்,
இது தஹஜ்ஜுத் மற்றும் வித்ரு தொழுகை பற்றிய ஹதீது.

இதை ஆதாரமாக கொண்டு, ரசூல் (ஸல்) அவர்கள் எல்லா மாதங்களிலும் பதினோரு ரக்காத்கள் தான் தொழுதார்கள், ராமலானுக்கென்று எந்த விசேஷ தொழுகையையும் அவர்கள் தொழவில்லை, என்று நான் கூறினேன்.

இல்லை, வேறு விசேஷ தொழுகை உண்டு என்றால் அது என்ன தொழுகை என்று கூறுங்கள், என்பது தான் நான் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

சிறப்பான தொழுகை ரசூல் தொழுமாறு சொல்லியிருக்கிறார்கள், செய்தும் காட்டியிருக்கிறார்கள். ரமளானில், தஹஜ்ஜத் (11 ரக்காத்) அல்லாத வேறு தொழுகையை ரசூல் தொழவில்லை!


தொழுதார்கள் என்று சொல்லக்கூடிய நீங்கள் தான் ஆதாரம் காட்ட வேண்டும்.

            ------------------------------------------------------------------------
2010/9/15 இப்னு அலிய் 


சகோ. நாஷித்,

அஸ்ஸலாமு அலைக்கும்.

என்னைவிடவும் உங்களைவிடவும் அறிந்தவர்கள் இடையேவும் ரமளான் சிறப்புத் தொழுகை தொடர்பாக கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றது. நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்காக வீண் விவாதமாக மாற்ற முயல்வதாகக் குற்றம் சாட்டாதீர்கள்.

இந்த ஹதீதை நான் புரிந்து கொண்டுள்ளது போன்றுதான், இந்த ஹதீதை உங்களுக்கும் எனக்கும் அறிவித்துத் தரும் ஹதீதுக் கலை இமாம்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது வரை எனது பக்க விவாதத்தை வைத்துவிட்டேன்.

நீங்களோ அன்னை ஆயிஷா (ரளி) அவர்களின் அறிவிப்பை மட்டும் வைத்து வாதித்து வருகிறீர்கள்.

உங்களிடம் ஒரே ஒரு கேள்வி.

அன்னை ஆயிஷா (ரளி) அவர்களின் கருத்தை மார்க்கத்தின் ஆதாரமாக நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?


              --------------------------------------------------------------------------


2010/9/15 Nashid Ahmed 
உங்களிடம் ஒரே ஒரு கேள்வி.

அன்னை ஆயிஷா (ரளி) அவர்களின் கருத்தை மார்க்கத்தின் ஆதாரமாக நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா


ஆயிஷா (ரலி) அவர்களின் சொந்த கருத்து மார்க்கமாகாது.
நாம் எடுத்துக்காட்டிய ஹதீஸ், அவரது சொந்த கருத்தல்ல!.. ரசூல் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்தார்கள் என்ற அவரது அறிவிப்பு பின்பற்ற வேண்டிய ஹதீஸாகும்!

என்னுடைய இரண்டு கேள்விகள் இன்னும் பதிலளிக்கப்படாமலேயே தான் உள்ளன.

இந்த ஹதீசுக்கு தங்கள் விளக்கம்.

ரசூல் (ஸல்) அவர்கள் ரமளானில், தஹஜ்ஜத் தொழுகை அல்லாத வேறு தொழுகை தொழுததற்கான ஆதாரம்..

இரண்டையும் இன்னும் நீங்கள் செய்யவில்லை!


              ------------------------------------------------------------------------


2010/9/15 இப்னு அலிய் சகோ. நாஷித்,

அஸ்ஸலாமு அலைக்கும்.

கீழே உள்ள ஹதீது நீங்கள் உங்கள் தரப்பு ஆதாரமாகத் தந்தது....


" ரமலான் மாதத்தில் நபி (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?", என்று ஆயிஷா (ரலி) அவர்களிடத்தில் கேட்டேன். அதற்க்கு அவர்கள், ரமலான் மாதத்திலும் மற்ற மாதங்களிலும் நபி (ஸல்) அவர்கள் 11 ரக்காத்களுக்கு மேல் அதிகமாக்கியதில்லை.
நான்கு ரக்காத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி கேட்க்காதே.
பின்னர் நான்கு ரக்காத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி கேட்க்காதே. பின்னர் மூன்று ரக்காத்கள் தொழுவார்கள், என்று விளக்கினார்கள்.
அறிவிப்பாளர் : அபு சலமா (ரலி)
நூல்: புஹாரி

-----------------------
கீழே உள்ளவை இந்த இழையின் உங்கள் தொடக்க கருத்தாக வைத்தவை...

12 ரக்காத்களுக்கு பிறகு விதர் தொழுதல். - புஹாரி 1198 , 992

வித்ரையும் சேர்த்து 13 ரக்காத்கள் - முஸ்லிம் 1284

10 + 1 = 11 ரக்காத்கள் - முஸ்லிம் 1222

8 + 5 = 13 ரக்காத்கள் - முஸ்லிம் 1217


மேலே நாம் சுட்டிக்காட்டிய எண்ணிக்கையிலான ஹதீஸ்களை தவிர வேறு வேறு எண்ணிக்கையில் ரசூல்(ஸல்) அவர்கள் தொழுததாக அறிவிக்கப்படும் ஹதீஸ்கள் எதுவும் ஆதாரப்பூர்வமானது கிடையாது.

---------

இனி என் கேள்வி.

நபி (ஸல்) அவர்கள் 13 ரக்அத்துகள் தொழுததாகவும் ஆதாரப்பூர்வமான அறிவிப்புகள் இருப்பதாக நீங்களே ஒப்புக் கொண்டீர்கள். ஆனால் அன்னை ஆயிஷா (ரளி) அவர்களோ 11 ரக்அத்துகளுக்கு மேல் தொழுததில்லை என்கிறார்கள். இந்த கருத்து அன்னை ஆயிஷா (ரளி) அவர்களின் சொந்தக் கருத்தா? இல்லையா?

நினைவில் கொள்ளுங்கள் நபி (ஸல்) அவர்கள் இரவில் அன்னை ஆயிஷா (ரளி) அவர்களுடன் மட்டுமே தங்கியிருக்கவில்லை. மற்ற மனைவியருடனும் தங்கியுள்ளனர். அத்தகைய சந்தர்ப்பங்களில் நபிகளார் (ஸல்) அவர்கள் எத்தனை ரக்அத்துகள் தொழுதார்கள் என்று அன்னை ஆயிஷா (ரளி) அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.                     --------------------------------------------------------------------------
2010/9/16 Nashid Ahmed வ அலைக்குமுஸ்ஸலாம்.

நீங்கள் மீண்டும் மீண்டும் எழுப்பும் கேள்வி, உங்கள் தரப்பு வாதத்தை மேலும் பலகீனம் தான் ஆக்குகிறது.
அதை அறிவதற்கு முன்..

ஆயிஷா (ரலி) அவர்கள், ரசூல் (ஸல்) அவர்கள் பதினோரு ரக்காத்களுக்கு மேல் தொழுததில்லை என்று கூறியிருக்கிறார்கள் . . வேறு சில அறிவிப்புகளில் பதிமூன்று ரக்காத்கள் தொழுததாகவும் வருகிறது என்றால், உடனே ஆயிஷா (ரலி) அவர்களுடைய ஹதீஸை புறம் தள்ளி விடலாம் என்று கூறி விடுவதா???.

அதிகமான அறிவிப்புகளில், பதினறு ராக்கத்களும், அதை விட குறைவான ராக்கத்கலுமே ரசூல் அவர்கள் தொழுதுள்ளார்கள் என்று வருகிறது,
ஒரு சில ஹதீஸ்களில் மட்டும் பதிமூன்று ரக்காத்கள் தொழுதார்கள் என்று வருகிறது என்றால் நாம் புரிந்து கொள்ள வேண்டிய விதம் என்னவெனில், அதிகமான நாட்களில் ரசூல் (ஸல்) அவர்கள் பதினோரோ, அதை விட குறைவாகவுமே தொழுதுள்ளார்கள் என்றும் ஒரு சில முறை அதற்கு மேல், பதினோராகவும் தொழுதுள்ளார்கள் என்றும் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
ஏனெனில், இரண்டுமே பலமான ஹதீஸ்கள் தான்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்..

  • அனைத்துமே அறிவிப்புகளுமே , அந்த தொழுகையை தஹஜ்ஜத் தொழுகை என்று தான் குறிப்பிடுகின்றன

  • ஆயிஷா (ரலி) அவர்களுடைய அறிவிப்பும் கூட, தஹஜ்சத்தை பற்றியது தான்.

  • எந்த அறிவிப்பிலும், இந்த ரக்காத்கள் கொண்ட தொழுகையை இந்த மாதத்தில் தொழுதார்கள் என்ற குறிப்பு இல்லை.
அதாவது, ஒரு சமயத்தில் பதினோரு ரக்காத்கள் தொழுதார்கள் என்றால் அது ராமலானா, மற்ற நாட்களா என்ற விளக்கம் இல்லை. அதிகமாக பதினோரு ரக்காத்கள் தொழுதார்கள் என்றால், அது ராமலானா, மற்ற மாதமா என்ற விளக்கம் இல்லை.
அப்படியிருக்கும் போது, நாம் புரிந்து கொள்ள வேண்டியது, இவ்வாறு தொழுவதற்கும் மாதத்திற்கும் சம்மந்தம் இல்லை.
நாம் விரும்பினால், ஏழோ, ஒன்பதோ, பதினொன்றோ, பதிமூன்றோ தொழுது கொள்ளலாம்.

  • ஆனால், ரமளானில் எத்தனை ரக்காத்கள் தொழுதார்கள் என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா? என்றால், இருக்கிறது.
இங்கே தான் உங்கள் வாதம் பலகீனம் அடைகிறது.
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கக்கூடிய ஹதீஸில், ரமளானில் பதினோரு ரக்காத்களை (அல்லது, அதற்கு குறைவாக..) ரசூல் (ஸல்) அவர்கள் தொழுதார்கள் என்று தான் அறிவிக்கிறார்கள்.

அது தஹஜ்ஜத் மற்றும் விதுர் தான் என்பதை நீங்களே ஒப்புக்கொண்டு விட்டீர்கள்.

ஆக , ரமளானில் சிறப்பு தொழுகையாக ரசூல் (ஸல்) அவர்கள் தொழுதது இந்த பதினோரு ரக்காத்கள் தான் !

என்னுடைய இரண்டு கேள்விக்கு இன்னும் நீங்கள் பதில் தரவில்லை.

ஆயிஷா (ரலி) அவர்களின் ஹதீஸை வைத்து என்னிடம் மட்டும் கேள்வி கேட்க்கிறீர்களே, அந்த ஹதீஸை நீங்கள் எவ்வாறு நம்புகிறீர்கள்? எவ்வாறு செயல்படுத்துவீர்கள்? அல்லது அது ஹதீஸ் இல்லை என்று புறந்தள்ளி விடுவீர்களா?
இதற்கு பதில் இதுவரை சொல்லவில்லை

இரண்டாவது, ரமளானில், ரசூல் (ஸல்) எத்தனை என்ன தொழுகையை சிறப்பு தொழுகையாக தொழுவார்கள், ராக்கத்கள் தொழுவார்கள் என்பதற்கு நான் ஆதாரம் காட்டி விட்டேன்.
இவை அல்லாத வேறு சிறப்பு தொழுகைகளை அவர்கள் தொழுதுள்ளார்கள் என்று இன்னும் நீங்கள் நம்புவதாக இருந்தால், என்ன தொழுகை என்பதை ஆதாரத்துடன் கூற வேண்டும்.

இந்த இரண்டையும் இன்னும் நீங்கள் செய்யவில்லை!!


                 -----------------------------------------------------------------------
From: இப்னு அலிய்
Sent: Thu, 16 September, 2010 12:55:31


அன்புச் சகோ. நாஷித்,

அஸ்ஸலாமு அலைக்கும்.

என்னுடைய கேள்வியை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? இல்லை எனக்குச் சரியாகக் கேட்கத் தெரியவில்லையா? மீண்டும் என் கேள்வி....

நபிகளார் (ஸல்) அவர்கள் ரமளானிலும் ரமளான் அல்லாத நாள்களிலும் 11 ரக்அத்கள் தொழுதார்கள் - என்பதற்கும்

நபிகளார் (ஸல்) அவர்கள் ரமளானிலும் ரமளான் அல்லாத நாள்களிலும் 11 ரக்அத்துகளுக்கு மேல் தொழுததில்லை - என்பதற்கு வித்தியாசம் இருக்கிறதா? இல்லையா?

நபிகளார் (ஸல்) 11 ரக்அத்துகளுக்கும் அதிகமாகத் தொழுதுள்ளார்கள் என்ற ஆதாரப்பூர்வமான அறிவிப்புகளும் இருப்பதாக நீங்களே தகவல் தந்துள்ளீர்கள்.

எனில், 11 ரக்அத்துகளை விட அதிகமாக தொழுததில்லை என்று அன்னை ஆயிஷா (ரளி) அவர்கள் கூறுவதில் விட அதிகமாக என்பது அவர்களின் சொந்தக் கருத்துதானே?

சொந்தக் கருத்தில்லை. நபிகளார் இவ்வாறுதான் செய்தார்கள் என்றால் 13 ரக்அத்துகள் குறித்து தங்களின் நிலை என்ன?


----------------------------------------------------------------------------------------------

From: Nashid Ahmed
Date: 2010/9/17அன்புச்சகோ. இப்னு அலி,


ரசூல் (ஸல்) அவர்களின் சொல் ஒன்று இருக்கும் போது, செயலை எதற்கு ஆதாரமாக கேட்க வேண்டும், சொல் ஒன்றே போதுமே, என்ற ரீதியில் வாதம் வைக்கிறீர்கள்.

சொல்லை வைத்து அமலை விளக்கமாக அறிந்து கொள்ள இயலுமென்றால் சொல் மட்டும் போதும்.

சொல்லில் முழு விளக்கம் இல்லைஎன்றால் சொன்னதை எவ்வாறு செயல்படுத்தினார்கள் என்று பார்க்க வேண்டும்.

இங்கே ரமளானில், சிறப்பு தொழுகை தொழ வேண்டும் என்று நபிகளார் சொல்லியிருக்கிறார்கள்.

வெறும் சொல்லை மட்டும் வைத்து எவ்வாறு இந்த அமலை செய்ய முடியும்?

உங்கள் வாதப்படி, தஹஜ்ஜத் தொழுமாறும் "வேறு" ஹதீஸ்களில் ரசூல் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள் தானே?,
"இரவில் நின்று வணங்குங்கள்", என்று. அதைமட்டும் வைத்து நம்மால் தஹஜ்ஜத் தொழ முடியாது என்பதால் அவர்கள் எவ்வாறு தொழுது காட்டினார்கள் என்பதையும் சேர்த்தே பார்க்கிறோம்.
அவர்களது செயலையும் நாம் பார்த்ததினால் தான் இன்று நம்மால் தஹஜ்ஜத் தொழ முடிகிறது.

அமல்களை செய்வதை பொறுத்தவரை, ரசூல் (ஸல்) அவர்களின் சொல்லோடு செயலும் அவசியம் என்பதற்கு இன்னும் ஏராளமான சான்றுகள் தர முடியும்.

ஆக, தஹஜ்ஜத் அல்லாத வேறு சிறப்பான தொழுகை உண்டு என்றால், அதை எப்படி தொழ வேண்டும்? எத்தனை ரக்காத்கள் தொழ வேண்டும்? இது தெரியாமல், அல்லது இதை அறிவிக்காமல் ரசூல் (ஸல்) விட்டிருப்பார்களா?

மார்க்கம் முழுமைபெற்று விட்டது என்று அல்லாஹ் கூறி விட்டானே, அது ரமலான் சிறப்பு தொழுகையை எவ்வாறு தொழ வேண்டும் என்பதையும் சேர்த்தே தானே?

அல்லது, அந்த சிறப்பு தொழுகையை நாம் தொழ வேண்டியதில்லை, அது நபிகளாருக்கும் சஹாபாக்களுக்கும் உண்டான தொழுகை தான், என்று வாதிடப்போகிரீர்களா?

மார்க்கம் ஒன்றை செய்ய சொல்கிறதென்றால், அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதையும் சேர்த்தே தான் சொல்லும்.

அடுத்து, அந்த ஹதீஸில், நபி (ஸல்) அவர்களும் தொழவில்லை என்பது போல் அர்த்தம் கொடுக்கிறீர்கள்.

நான் அரபி மூலத்தை பார்க்கவில்லை. நீங்கள் தந்த தமிழாக்கத்தின் படியே வாதம் செய்கிறேன்.
அதில், "நாங்கள் ரசூலுடன் நோன்பு வைத்தோம்", என்று ரசூலை 3rd பெர்சன் ஆக வைத்து தான் அறிவிப்பு துவங்குகிறது.

நாங்கள் ரசூலுடன் இதை செய்தோம், என்று துவங்கி, நாங்கள் தொழுதோம், நாங்கள் தொழவில்லை, என்று கூறினால், அதற்கு என்ன அர்த்தம்?
"நாங்கள்" செய்தோம் என்று தான் அர்த்தம். இந்த "நாங்களில்", ரசூல் (ஸல்) அவர்கள் சேர மாட்டார்கள்.

இதை முதல் முறை படிக்கும் போதே தெளிவாக புரிகிறதே!

இன்னும் சொல்லப்போனால், உங்கள் வாதப்படி, ரசூல் (ஸல்) அவர்கள் அந்த சிறப்பு தொழுகையை 23 , 25 மற்றும் 27 ஆகிய மூன்று இரவுகளில் மட்டும் தான் தொழுதுள்ளார்கள், மற்ற இரவுகளில் தொழவேயில்லை.

ரமலான் சிறப்பு தொழுகை என்பது இந்த மூன்று நாட்களுக்கு மட்டும் தானா? அது தான் உங்கள் வாதமாக ஆரம்பம் முதல் இருந்து வந்ததா?

லைலதுல் கதர் இரவாக நினைத்து இவ்வாறு சிறப்பு தொழுகை தொழுதிருக்கிறார்கள் என்று எண்ணுவதற்கும் வழியிலை.


ஏனென்றால், 21 , மற்றும் 29 இல் இதை தொழவில்லை (ரசூலும் தொழவில்லை) என்று தான் உங்கள் வாதப்படி அந்த சஹாபி கூறுகிறார்.

இது போன்ற பல அபத்தங்கள் உங்கள் வாதங்களினால் ஏற்ப்படும்.

இவைகளுக்கெல்லாம் பதில் சொல்லி, சிறப்பு தொழுகையை எவ்வாறு தொழ வேண்டும், எத்தனை ரக்காத்கள் தொழ வேண்டும், என்பதையும் ஆதாரத்துடன் கூறினால் மட்டுமே, உங்கள் வாதம் நிலை பெறும் .

இல்லை என்றால் மார்க்கம் முழுமையாகவில்லை என்ற கருத்து வந்து விடும்!


-----------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக