ஞாயிறு, 15 ஜூலை, 2012

தினத்தந்தியை முழுமையாக புறக்கணிப்போம் !!


அஸ்ஸலாமு அலைக்கும்.

இஸ்லாமிய சமூகத்திற்கு எதிராகவும், ஹிந்துக்கள் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் இறங்கும் வகையில் அவர்களை தூண்டி விடும் வகையிலும் தினத்தந்தி பத்திரிக்கை சமீபத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. இதை கண்டித்து மன்னிப்பு கேட்குமாறு கோரியும் கூட, அவற்றை கண்டுகொள்ளாமல், நாங்கள் அப்படி தான் எழுதுவோம் என்கிற வகையில் திமிராக பதில் அளித்துள்ளது.

இதை கருத்தில் கொண்டு, நம் சமுதாய மக்கள் அனைவருமே இந்த தினத்தந்தி பத்திரிக்கையை முழுமையான முறையில் புறக்கணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நமது வீடுகளிலோ கடைகளிலோ, தொழில் நிறுவனங்களிலோ தினத்தந்தி பத்திரிக்கையை வாங்கி வருகிறோம் என்றால் அதை இன்றுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

அவசர கால நடவடிக்கையாக இந்த செய்தியை நமது சகோதரர்கள் அனைவருக்கும் எத்தி வைக்கும் கடமையும் நமக்கு உள்ளது. பத்திரிக்கையை வாங்குவதை நிறுத்திக்கொள்ளும் ஒரு சாதாரண செயல் மூலம் நம் சமூகத்திற்கே பெரும் நன்மையை செய்தவர்களாக நாம் ஆவோம் !!

அல்லாஹ் போதுமானவன்.!

குறிப்பு : தினத்தந்தி வெளியிட்ட சம்மந்தப்பட்ட அந்த செய்தியை கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதியிட்ட அதன் தலையங்கத்தில் காணலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக