செவ்வாய், 17 ஜூலை, 2012

ரசூல் - நபி இரண்டும் ஒன்று தான்
அஸ்ஸலாமு அலைக்கும்.

முஹம்மதே உம்மை அவர்கள் பொய்யரென கருதினால், உமக்கு முன் பல தூதர்கள் பொய்யென கருதப்பட்டனர். அவர்கள் தெளிவான சான்றுகளையும் ஏடுகளையும் ஒளி வீசும் வேதங்களையும் கொண்டு வந்தனர். (3 :184 )


அவரது வழிதோன்றல்களில் நபி எனும் அந்தஸ்தையும் வேதத்தையும் கொடுத்தோம்.  (29 :27 )


மேலே உள்ள இரு வசனங்களின் மூலமாக அல்லாஹ் நமக்கு சொல்வது, ரசூல் என்றாலும், நபி என்றாலும் இரண்டும் ஒன்று தான்.
நபிக்கும் வேதத்தை கொடுத்துள்ளான், ரசூலுக்கும் வேதத்தை கொடுத்துள்ளான்.

இறைவனிடமிருந்து செய்தியை பெறுகிறவரை அரபி மொழியில் ரசூல் எனவும், தன்னிடமுள்ள செய்தியை பிறருக்கு எடுத்து சொல்பவரை நபி எனவும் குறிப்பிடுகிறோம். இது தான் வேறுபாடே தவிர, இரண்டும் வெவ்வேறு நபர்களை பற்றி சொல்லப்படுவது இல்லை.
எல்லா தூதர்களும் நபியாகவும் இருந்தனர், ரசூலாகவும் இருந்தனர் !!

கூடுதல் விபரங்களுக்கு இதை கேட்கவும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக