மார்க்க ஆதாரங்கள் குர் ஆனும் ஹதீஸும் மட்டும் தான் என்பதை தெளிவான முறையில் நம்பிப் பின்பற்றாத காரணத்தால் தான், மக்காவில் இரவுத் தொழுகை 20 ரக்காஅத் தானே தொழுகிறார்கள்? அவர்களுக்கு ஏன் அது தவறென்று தெரியவில்லை?
என்று சிலர் கேள்வியெழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.
இதையே தனது நிலைக்கு வலிமையான சான்றாக வேறு காட்டும் விதத்தில் பேசுகிறார்கள் என்றால் இவர்கள் எந்த அளவிற்கு அறியாமையில் மூழ்கித் திளைக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள இதுவே போதுமாக இருக்கிறது.
தங்களுக்கு எதுவெல்லாம் சாதகமோ அதற்கெல்லாம் சவுதியையும் பெரும்பான்மையையும் சான்றாக எடுத்துக் கொள்வார்களாம்.
சரி நான் கேட்கிறேன், இந்த வாதத்தை முன் வைக்கும் நபர் தர்காவில் மூழ்கி திளைப்பவர் மத்ஹப் தான் வாழ்க்கை என்று நம்பி இருப்பவர்.
சவுதியில் தர்கா இருக்கிறதா? சவுதியில் மத்ஹப் பின்பற்றப்படுகிறதா? இருபது ரக்காஅத் தொழுவது தவறு என்று எந்த அறிஞருக்கும் ஏன் தெரியவில்லை? என்று இவர் கேட்கும் கேள்வியை நாம் இவரிடமே திருப்பிக் கேட்கிறோம்.
தர்கா கட்டுவது தவறில்லை என்று எந்த அறிஞருக்கும் ஏன் தெரியவில்லை?
மத்ஹபின் படி தான் வாழ வேண்டும் என்று எந்த அறிஞருக்கும் ஏன் புரியவில்லை?
குர் ஆனையும் ஹதீஸையும் மட்டுமே வாழ்க்கை நெறியாக கொண்டவர்களுக்கு சவுதியென்ன, அமெரிக்கா என்ன, ஒட்டு மொத்த உலகமே திரண்டு மாற்றான ஒரு கருத்தை சொன்னாலும், தவறு தவறு தான் !
குர் ஆனையும் ஹதீஸையும் பின்பற்றும் நபர் உலகில் ஒருவர் மட்டுமே மிஞ்சினால் கூட, அவரிடம் மட்டும் தான் சத்தியம் இருக்கிறது என்று பொருள் !
அதிகமான மக்கள் நன்றி செலுத்தாதவர்கள் தான் (திருக் குர் ஆன் 12:38)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக