வியாழன், 17 ஜூலை, 2014

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (N)


அவரது மரணத்திற்கு முன்..

"ஈஸா நபி மரணிக்கவில்லை" (பாகம் 14)
------------------------------------------------------------

வேதக்காரர்கள் அவரது மரணத்திற்கு முன் அவரை நம்பிக்கை கொள்வார்கள் என்கிற மொழியாக்கம் தான் சரி என்பதையும், இதற்கு மாற்றமாக என்ன மொழியாக்கம் செய்து பார்த்தாலும் அவை அனைத்துமே அர்த்தமற்றதாகவே இருக்கும் என்பதையும் முன்னர் பார்த்தோம்.

இங்கே அவரை நம்பிக்கை கொள்வார்கள் என்பதற்கு பதிலாக, ஈஸா நபி சிலுவை மரணத்தை நம்பிக்கை கொள்வார்கள் என்று பொருள் கொள்ள இடமிருக்கிறதா? என்று பார்த்தால் அதுவும் தவறான மொழியாக்கமே.

காரணம், அதை நம்புவார்கள், என்று சொன்னால், அதை என்பதற்கு, அதற்கு முன்பாக எதைப் பற்றி அல்லாஹ் சொன்னானோ அதை.. என்று தான் பொருள்.

அல்லாமல், ஏழு வசனங்களுக்கு முன்பு சொல்லப்பட்ட்தை நம்புவார்கள் என்று சொல்வது அர்த்தமில்லாதது.

இங்கும் அது தான் நிகழ்க்கிறது.

சிலுவையில் அவரை நாங்கள் தான் கொன்றோம் என்று அவர்கள் நம்பினார்கள், ஆனால் அவர் சிலுவையில் கொல்லப்படவில்லை என்று அல்லாஹ் சொல்லி விட்டு,
இதில் அவர்கள் எப்போதும் சந்தேகத்திலேயே இருக்கிறார்கள், நிச்சயமாக அவரை சிலுவையில் அவர்கள் கொல்லவில்லை என்று மீண்டும் சொல்கிறான்.
சொல்லி விட்டு, அவரை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான்.
அவர் மரணிப்பதற்கு முன்பாக இதை நம்பாமல் இருக்க மாட்டார்கள்.

இது தான் அந்த வசனம்.

இங்கே இதை நம்பாமல் இருக்க மாட்டார்கள் என்றால் எதை? என்பது சிறு குழந்தையும் சொல்லும்.

அவர் கொல்லப்படவில்லை என்பதை நம்பாமல் இருக்க மாட்டார்கள்
அவர் சிலுவையில் இறக்கவில்லை என்பதை நம்பாமல் இருக்க மாட்டார்கள்
அவர் அல்லாஹ்வால் உயர்த்தப்பட்டார் என்பதை நம்பாமல் இருக்க மாட்டார்கள் !

இது தான் அந்த கான்டக்ஸ்டின் படியும் பொருந்துகிறது, இலக்கண ரீதியாகவும் இது தான் பொருத்தமானது.

பிஹி என்பதற்கு அவரை, என்று தான் மொழியாக்கம் செய்ய வேண்டும்
என்று நான் சொன்ன‌தற்கு சுயமான‌ காரணத்தை சொல்லவில்லை.
அந்த contஎக்ஷ்ட் அதை தான் சொல்கிறது.

ஈசா நபியை அவர்கள் கொல்லவில்லை, ஈசா நபியை தன்னளவில்
அல்லாஹ் உயர்த்திக் கொண்டான், வேதக்காரர்கள் அனைவரும்
---------------- நம்புவார்கள் - இந்த இடத்தில் அதை என்பது
வருமா அவரை என்பது வருமா?

அவைர என்பது தான் சரி என்று நான் சுயமாக கூறாமல், அந்த
கான்டக்ஸ்டையே ஆதாரமாக காட்டுகிேறன்.

ஒரு வாதத்திற்கு, அதை என்று பொருள் வைப்பதாக இருந்தால் கூட, அப்போதும் அதை என்றால்,

அவர் உயர்த்தப்பட்டதை, என்று தான் சொல்ல வேண்டும் ‍ முந்தைய‌
வசனம் அதை தான் சொன்னது.

அவரை ----> ஈசா நபியை நம்புவார்கள் என்று சொன்னாலும்
அதை -------> அவர் உயர்த்தப்பட்டதை நம்புவார்கள் என்று சொன்னாலும்,

இரண்டுமே ஒரே பொருள் தான் - இரண்டின் மூலமாக கிடைப்பது ஒரே
result தாேன.

ஈசா நபியை அவர்கள் கொல்லவில்லை, அவரை தன்னளவில்
அல்லாஹ் உயர்த்திக்கொண்டான், வேத‌க்காரர்கள் அனைவரும் ---------------- நம்புவார்கள் - இந்த இடத்தில் அதை என்று மொழியாக்கம் செய்தால் கூட, அதை என்பது ஈசா நபி உயர்த்தப்பட்டதை தான் குறிக்கும் என்று சிறு குழந்தை கூட சொல்லும், புறக்காரணங்கள் எதுவுமே தேவையில்லை!!!

அது போல, தங்களின் மரணத்திற்கு முன்னால்.. என்கிற மொழியாக்கம் பல காரணங்களால் தவறு.

முதல் காரணம், தங்களின் மரணத்திற்கு முன்னால் சிலுவை மரணத்தை நம்பியவர்கள் என்றால் பலர் அவ்வாறில்லாமல் இறுதியில் இஸ்லாத்தை தழுவிய நிலையில் கூட மரணிக்கிறார்களே? வெதக்காரர்கள் அனைவருமே சிலுவை மரணத்தை நம்பிய நிலையில் மரணிப்பார்கள் என்பது பொய்ப்பிக்கப்படும்.

இதற்கு பதில் என்கிற பெயரில், சிலுவை மரணத்தை நம்பியவராக இருந்து, பின்னர் இஸ்லாத்தை தழுவி மரணித்தாலும், அவர் மரணிக்காமல் உயிருடன் இருந்த காலத்தில் சிலுவை மரணத்தை நம்பியவர் தானே? எனவே இது பொருத்தம் தான் என்று இதற்கு சப்பை கட்டு ஒன்று கட்டப்படும்.

ஆனால், இதுவும் பொருளற்றது.

ஒரு காலத்தில் அவர்களுக்கு அந்த நம்பிக்கை இருந்தது என்பதை அல்லாஹ் இப்படியா சொல்வான்?

அல்லாஹ் அங்கே சொல்லும் வாசகம், வேதக்காரர்கள் அனைவரும் தங்கள் மரணத்திற்கு முன்னால் இதை நம்பிக்கை கொள்வார்கள்.

என்றால், வாழும் காலத்தில் நம்பிக்கை கொள்ளாதவர்கள் கூட மரணிப்பதற்கு முன் நம்பிக்கை கொண்டு விடுவார்கள் என்று தான் அர்த்தமாகிறது.

அல்லாமல், சிலுவை மரணத்தை நம்பியவர்களாக ஒரு காலத்தில் இருந்து, பின்னர் முஸ்லிமாக மாறி மரணிப்பவரை இந்த வசனம் குறிக்குமா? என்று நெஞ்சில் கை வைத்து சிந்திக்கும் எந்த நடுனிலை சிந்தனையாளருக்கும், இல்லை என்கிற பதில் எளிதில் கிடைக்கும்.

இன்னும் சொல்லப்போனால், வேதக்காரர்களில் பிறப்பு முதல் இறப்பு வரை சிலுவை மரணத்தை நம்பாதவர்கள் கூட இருந்தனர்.

வேதக்காரர்கள் அனைவரும் ஒரு காலத்தில் சிலுவை மரணத்தை நம்பியவர்கள் என்று சொன்னால், சிலுவை மரணத்தை நம்பாத எந்த மனிதருமே இருக்கவில்லை என்று ஆகிறது.

இதுவும் தவறு. காரணம், ஈஸா நபியை நபியாக நம்பிய முஸ்லிம்கள் சிலுவை மரணத்தை நம்பாதவர்கள். அப்படியும் மக்கள் வேதக்காரர்களில் இருக்கத் தான் செய்தனர் எனும் போது எல்லா வேதக்காரர்களும் சிலுவை மரணத்தை ஒரு காலத்தில் நம்பியவர்கள் தான் என்று அல்லாஹ் சொல்வானா?
அதில் பொருளிருக்குமா? என்று சிந்தித்தாலும் அந்த மொழியாக்கம் தவறு என்று புலப்படுகிறது.

தவிர, அவர்களுக்கெல்லாம் ஈஸா நபி மறுமையில் சாட்சியாக இருப்பார் என்று அல்லாஹ் சொல்கிறான்.

அன்றைய வேதக்காரர்கள் சிலுவை மரணத்தை நம்பினார்கள் என்று தான் என்பதை தான் அல்லாஹ்வே முந்தைய வசனத்தில் சொல்லி விட்டானே..

சொல்லி விட்டு தான், உண்மையில் அவர் சிலுவையில் மரணிக்கவில்லை என்கிறான். இதற்கு ஈஸா நபி சாட்சியாக இருக்க தேவையில்லை.

நடக்காத விஷயம் மாறுபட்டு நடக்கும் போது தான், இன்னார் சாட்சியாக இருப்பார் என்று சொல்வது பொருந்தும்.

எது இயற்கையிலேயே நடக்கிறதோ, எதைப் பற்றி சற்று முன்பு கூட அல்லாஹ் சொன்னானோ, அதை மீண்டும் சொல்லி விட்டு, இதற்கு ஈஸா மறுமையில் சாட்சியாக இருப்பார் என்று அல்லாஹ் சொல்வது பொருந்தவே பொருந்தாத விளக்கமாகும்.

இயற்கைக்கு மாற்றமாக ஒரு நிகழ்வு ஏற்படும் போது, அதை முன்கூட்டியே அல்லாஹ் சொல்லும் போது, அதற்கு ஈஸா சாட்சியாக இருப்பார் என்று சொல்வ்து தான் பொருத்தமானது.

அது என்ன இயற்கைக்கு மாற்றமான நிகழ்வு? அது தான் சிலுவை மரணத்தை நம்பிய வேதக்காரர்கள் எல்லாம் அவர் சிலுவையில் மரணிக்கவில்லை என்று நம்பி முஸ்லிமாக மாறுவது !

ஈஸா நபியை கடவுள் என்று நம்பியவர்கள் எல்லாம் அவர் கடவுள் இல்லை, நபி தான் என்று நம்புவது.

இந்த மாற்றம் என்பது வியப்பானது. கியாமத் நாள் வரையுள்ள பலலயிரக்கணக்கான வேதக்காரர்களும் ஈஸா நபியை கடவுள் என்று ஒரு பக்கமும், அவர் சிலுவையில் கொல்லப்பட்டு விட்டார் என்று மறு பக்கமும் நம்பிக் கொண்டிருக்கும் வேளையில், திடீரென அனைவருமே ஈஸா நபியை நபி என்று நம்பிக்கை கொள்வார்கள் என்றால், இது அற்புதம்.

இதற்கு ஈஸா நபி மறுமையில் சாட்சியாக இருப்பார்.

ஆக, தங்கள் மரணத்திற்கு முன் நம்புவார்கள் என்கிற மொழியாக்கம் அறிவுக்கும் பொருத்தமில்லை, தொடர்ந்து அல்லாஹ் பேசும் வசனங்களோடும் பொருந்தாமல் போகிறது.

இன்னும் சொல்லப் போனால், அந்த வசனத்தின் இலக்கணமும் கூட தங்கள் மரணத்திற்கு முன்.. என்று மொழியாக்கம் செய்ய தடையாகவே உள்ளது.

அந்த வசனத்தில் அல்லாஹ் பயன்படுத்தும் சொல் கப்ல மவ்திஹி.

மவ்திஹி என்பது ஒருமை, படர்க்கை வார்த்தையாகும் third person singular. வேதக்காரர்கள் தங்களது மரணத்திற்கு முன் நம்புவார்கள் என்று சொல்வது பன்மை.

அப்படி சொல்ல வேண்டுமானால் கப்ல மவ்திஹிம்.. என்று வந்திருக்க வேண்டும்.

மவ்திஹிம் என்பது தான் பன்மை. அல்லாமல், மவ்திஹி என்று சொல்வது ஒருமையை குறிக்கும் சொல்லாகும்.

எனவேஎ அவரது மரணத்திற்கு முன்.. என்று மொழியாக்கம் செய்வது தான் பொருத்தமானது.

அப்படியானால், "தங்கள் மரணத்திற்கு முன்" என்று மொழியாக்கம் வேண்டாம், வேதக்காரர்கள் ஒவ்வொருவரது மரணத்திற்கு முன்..

என்று சொல்லலாம் தானே? இப்போது ஒருமை தானே வருகிறது?

என்று எவராவது சிறு பிள்ளைத்தனமான வாதம் வைத்தால் அதுவும் அர்த்தமில்லாதது.

"ஒவ்வொருவரது" என்கிற சொல் அந்த வசனத்தில் இல்லை. மவ்திஹி.. என்று மட்டும் தான் உள்ளது. எனவே இல்லாத மொழியாக்கத்தை செய்வதாக தான் ஆகும்.

இன் மின் அஹ்லில் கிதாபி .. என்று துவங்கக்கூடிய வசனத்தில்,

இன் - நிச்சயமாக
மின் - தமிழில் துைண எழுத்தான "களிலிருந்து" (அதாவது ஆங்கிலத்தில்
from )
அல்ஹில் கிதாபி ‍ வேதம் கொடுக்கப்பட்டவர்கள்.

சேர்த்து வாசித்தால் - நிச்சயமாக வேதம் கொடுக்கப்பட்டவர்களில் இருந்து
!

இவ்வளவு தான் அரபி மூலத்தில் உள்ளது !

"வேதம் கொடுக்கப்பட்டவர்களில் இருந்து ஒவ்வொருவரும் /
எவரும்"" என்பது ,இதை புரிந்து கொள்ள நாமாக சேர்த்துக் கொள்ளும் துணையெழுத்து !!

அதன் பிறகு, இல்லா ல யுமினன்னா - நம்பிக்கை கொள்ளாமல் இருக்க
மாட்டார்கள்.
பிஹி ‍ அவரை
கப்ல மவ்திஹி - அவரது மரணத்திற்கு முன்னால் !

ஆக, வேதக்காரர்களிலிருந்து ஒவ்வொருவரது மரணத்திற்கு முன்,
என்று பொருளே இல்லாத மொழியாக்கத்தை தான் செய்ய வேண்டும்.

ஒவ்வொருவரும் என்பதற்கு ஹி - அரபிப்பதம் அல்ல. !

அல்லது, வேதக்காரர்களில் இருந்து நம்புவார்கள் அவர்களது
மரணத்திற்கு முன் என்று மொழியாக்கம் செய்ய வேண்டும் - இது அந்த
பொருளின் படி சரி, ஆனால், ஹி என்பதற்கு மறுபடியும் முரண். ஹி
என்பது ஒருமையை குறிக்கும் , ஆகேவ அவர்களது, என்று சொல்வது
தவறாகி விடுகிறது !

எந்த முரணும் அற்றது ‍ வேதக்காரர்களில் இருந்து அவரது மரணத்திற்கு
முன், என்கிற ஒரே ஒரு மொழியாக்கம் மட்டும் தான் !!!!

ஆக அந்த வகையில் பார்க்கையிலும் கூட, ஈஸா நபியின் மரணத்திற்கு முன் நம்பிக்கை கொள்வார்கள் என்பது தான் பொருந்தமான, சரியான மொழியாக்கம் என்பது உறுதியாகிறது.

இங்கு ஈசா நபியை பற்றி தான் பேசி வருகிறது. அவரை அல்லாஹ்
உயர்த்திகொண்டான் , என்று முந்தைய வசனத்திலும் பிஹி என்கிற வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்தி, ஈசா நபிைய பற்றி ேபசுகிறான்.

தொடர்ந்து பிஹி என்று சொன்னால், ஈசா நபியை தான் இங்கும் சொல்கிறது !
இதுவெல்லாம் சாதாரண மொழி அறிவு.

இந்த சாதாரண மொழியறிவை கூட, நாமாக சுயமாக சொல்லவில்லை.

குர் ஆன் விரிவுரையாளரும் , சஹாபிகளில் ஒருவருமான இப்னு அப்பாஸ் (ரலி)
அவர்கள் இதே கருத்தை தான் சொல்கிறார்கள்.

இது இப்னு ஜரீர் நூல் - பாகம் 4 , பக்கம் 14 இல் பதிவாகியுள்ளது.

ஈஸா நபி இறக்கவில்லை,
அவர்கள் கியாமத் நாளுக்கு சமீபமாக மீண்டும் இவ்வுலகில் வருவார்கள்,
அவர்கள் வரும் போது அவரை தவ்றாக நம்பியவர்கள் எல்லாருமே தங்கள் நம்பிக்கையை சரி செய்து கொள்வார்கள்
வந்த ஈஸா நபி மரணிப்பார்கள்,
மறுமையில், சரியாக நம்பியவர்களுக்கு சாட்சியாக இருப்பார்கள்.

இத்தனை செய்தியும் தெள்ளத்தெளிவாக இந்த வசனங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து, ஈஸா நபி மீண்டும் வருவார் என்பதாக ஹதீஸ்கள் கூறுபவற்றையும், இந்த காதியானி மதத்தவர்கள் அவைகளுக்கு கூறும் சப்பைக் கட்டுகளையும், உலக மகா உளறல்களையும் அடுத்தடுத்து பார்க்கலாம்.

தொடரும், இன்ஷா அல்லாஹ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக