வெள்ளி, 27 செப்டம்பர், 2013

தவ்ஹீத் என்கிற சொல் குர்ஆன், ஹதீஸில் உள்ளதா ?




ஒரே கடவுளை வணங்குமாறு தான் அவர்கள் கட்டளையிடப்பட்டனர். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் தூயவன். அல்குர்ஆன் (9 : 31) 

இந்த வசனத்தில் "ஒரே" என்பதன் அரபிப்பதமாக வாஹித் என்ற சொல் இடம்பெற்றுள்ளது. வஹ்த் என்ற சொல்லிருந்து பிரிந்து வந்தவை தான் வாஹித் தவ்ஹீத் என்ற வார்த்தைகள்.

ல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜில்) "லப்பைக். அல்லாஹும்ம லப்பைக். லப்பைக் லா ஷரீக்க லக்க லப்பைக். இன்னல் ஹம்த வந்நிஅமத்த லக். வல்முல்க லா ஷரீக்க லக் (இதோ, உன் அழைப்பேற்று வந்து விட்டேன் இறைவா! உன் அழைப்பேற்று வந்துவிட்டேன். உனக்கே நான் கீழ்ப்படிகி றேன். உனக்கு இணை யாருமில்லை. உனக்கே எல்லாப் புகழும். அருட்கொடையும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு இணையாளர் எவரு மில்லை)'' என்று தவ்ஹீதுடன் தல்பியாச் சொன்னார்கள்.
முஸ்லிம் (2334)

மேற்கண்ட ஹதீசில் தவ்ஹீத் என்கிற வார்த்தை நேரடியாகவே உள்ளது.


தவ்ஹீத்வாதிகளில் சிலர் (வேறு பாவங்கள் காரணமாக) நரகில் வேதனை செய்யப்படுவார்கள். அவர்கள் கரிக்கட்டை போல் ஆவார்கள். 

பின்னர் அவர்களுக்கு இறையருள் கிடைக்கும். நரகில் இருந்து வெளியேற்றப்பட்டு சொர்க்கத்தின் வாசலில் போடப்படுவார்கள். சொர்க்கவாசிகள் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றுவார்கள். இதனால் அவர்கள் கரையோரத்தில் புல் முளைப்பது போல் பசுமையாவர்கள். 

பின்னர் சொர்க்கத்தில் நுழைவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் 

அறிவிப்பவர் ஜாபிர் (ரலி) நூல் திர்மிதி 2522



நபி (ஸல்) அவர்கள் ஒரு சஹாபியை எமன் நாட்டுக்கு அனுப்புகிறார்கள். அவர் செல்லும் போது நபியவர்கள் அந்த சஹாபியிடம் "நீங்கள் வேதம் கொடுக்கப்பட்ட சமுதாயத்தினரிடம் செல்கிறீர்கள், முதலில் அவர்களிடம் தவ்ஹீதை சொல்லுங்கள் , என்று சொல்லி அனுப்புகிறார்கள். 

இந்த சம்பவம் புஹாரி 7372 இல் பதிவாகியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக