அறைகூவல் விடுவதும் சவால் விடுப்பதும் குர்ஆனின் அணுகுமுறை தான்.
என்னை போல இன்னொன்றை உங்களால் தயாரிக்க முடியுமா? மொத்த உலகமும் ஒன்று சேர்ந்தாவது என்னை போல இன்னொன்றை உங்களால் உருவாக்க முடியுமா? என்று ஒரு பக்கம்,
இதில் ஏதேனும் ஒரு தவறையாவது, ஒரேயொரு முரண்பாட்டினையாவது காட்டி விடுங்கள் பார்க்கலாம் என்று மற்றொரு பக்கம்
என, குர்ஆன் இறைவனின் வார்த்தை தான் என்பதை குர்ஆனே அறைகூவல்களின் மூலமும் சவால்களின் மூலம் தான் நிரூபிக்கிறது.
குர்ஆன் விடுத்துள்ள சவாலை எதிர்கொள்ள எதிரிகளால் இயலவில்லை என்பதே குர்ஆன் சத்தியத்தை போதிக்கின்றது என்பதற்கு சான்றாக திகழ்கிறது !
தவ்ஹீத் ஜமாஅத், விவாத சவால் விடுவதையும், எங்கள் கூற்றினை உங்களால் முறியடிக்க முடியுமா? என்று அறைகூவல் விடுவதையும் கூட சிலர் விமர்சனம் செய்வது அவர்களுக்கு குர்ஆனின் அணுகுமுறை தெரியவில்லை என்பதையே காட்டுகிறது என்பதற்காக இந்த ஒப்பீடு !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக