வெள்ளி, 27 செப்டம்பர், 2013

மனைவியை அடிக்க அனுமதியில்லையா?


மனைவியை அடிக்காதீர்கள் என அபூதாவூதில் வரக்கூடிய ஒரு செய்தியை மட்டும் வைத்துக் கொண்டு அடிக்கவே கூடாது என்கிற முடிவுக்கு வரக்கூடாது. 

காரணம், ஏராளமான இன்னபிற செய்திகளில் வலிமையாக அடிக்காதீர்கள், 
காயம் ஏற்படும் அளவுக்கு அளவுக்கு அடிக்காதீர்கள், முகத்தில் அடிக்காதீர்கள் என்றெல்லாம் 
கூறப்பட்டிருக்கும் போது அடிக்க அனுமதியுண்டு என்பதே பொதுவான விதி. அடிக்காதீர்கள் என்கிற இந்த செய்தி அவற்றிலிருந்து விதிவிலக்கு பெற்றது என்று தான் புரிய வேண்டும்.

நபியவர்கள் காயம் ஏற்படாத அளவிற்கு இலேசாக அடியுங்கள் என்று கூறி உள்ளார்கள் பார்க்க திர்மிதி 1083

அடிமையை அடிப்பது போன்று அடிக்க வேண்டாம் (புகாரி)

போன்ற ஹதீஸ்கள் இலேசாக அடிப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதற்கு ஆதாரம் ஆகும்

மேலும் விதிவிலக்குக்கு காரணம் இந்த ஹதீசிலிருந்து நமக்கு புலனாகிறது..

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ”அல்லாஹ்வின் அடியார்களான (பெண்களை) அடிக்காதீர்கள்” என்று கூறினார்கள். அப்போது ”உமர் (ரலி) அவர்கள் நபியவர்களிடம் வந்து ”பெண்கள் தங்கள் கணவன்மார்களிடம் வரம்பு மீறி நடந்து கொள்கிறார்கள்” என்று கூறினார்.
எனவே அவர்களை அடிப்பதற்கு நபியவர்கள் அனுமதி கொடுத்தார்கள்.

(இதன் பிறகு) அதிகமான பெண்கள் தங்கள் கணவன்மார்களை முறையிடுபவர்களாக நபியவர்களின் குடும்பத்தை சுற்றி வர ஆரம்பித்தார்கள்.
நபியவர்கள் கூறினார்கள் ” தங்களுடைய கணவன் மார்களைப் பற்றி முறையிடுவதற்காக அதிகமான பெண்கள் முஹம்மது டைய குடும்பத்தாரிடம் வருகிறார்கள். (அந்தக் கணவன்மார்கள்) உங்களில் சிறந்தவர்களாக இல்லை என்று கூறினார்கள். அறிவிப்பவர் அப்துல் பின் அபீதுபாப் (ரலி) நூல் அபூதாவூத் (1834)

மேற்கண்ட ஹதீஸில் அடிக்காதீர்கள் என்கிற பொதுவான கட்டளையை முதலில் நபியவர்கள் இட்டாலும் பின்னர் அதை அடிப்பதற்கு அனுமதி வழங்குகிறார்கள்.
பல வீடுகளில் இது மிகவும் சர்வ சாதாரணமாக ஆகி வருவதை அறிந்த பிறகு அவ்வாறு அடிக்கும் ஆண்கள் நல்ல கணவன்மார்கள் இல்லை என்கிறார்கள்.

ஆக அடிப்பதற்கு அனுமதி அறவே இல்லை என்று கூற முடியாது. ஒரு வரம்பு வரை அடிக்க கூடாது எனவும் வரம்பு மீறி செல்கின்ற போது அடிப்பது தவறில்லை என்றும் அதே சமயம் காயம் ஏற்படாதவாறும், முகத்தில் படாதவாறும் தான் அடிக்க வேண்டும், எப்போதும் சதா அடித்துக்கொண்டே இருக்கவும் கூடாது என இத்தனை நிபந்தனைகளையும் இஸ்லாம் சேர்த்தே தான் விதிக்கிறது என்பதை புரியலாம்.

குர்ஆன் 4:34 வசனமும் மனைவியை அடிப்பதற்குரிய அனுமதியை தான் தருகிறது.

லரப என்கிற அரபு சொல்லுக்கு அடித்தல் என்பது போல் வேறு பல அர்த்தங்களும் இருந்தாலும் இந்த இடத்தில் அடித்தல் என்பதே கூடுதல் நெருக்கமாக உள்ளது.

அடித்தல் தொடர்பாக குர்ஆன் பேசுகிற ஏனைய சில வசனங்களிலும் இதே லரப என்கிற வார்த்தை தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பார்க்க 'உமது கைத்தடியால் இப்பாறையில் அடிப்பீராக!' 7:160
அதன் (மாட்டின்) ஒரு பகுதியால் அவரை (கொல்லப்பட்டவரை) அடியுங்கள்!' என்று கூறினோம்
2:73

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக