வெள்ளி, 27 செப்டம்பர், 2013

பிஜே மட்டும் ஏன் பல சட்டங்களை மாற்றுகிறார் ?


""எல்லாம் சரி, பிஜே இதுவரை பல நிலைபாடுகளை மாற்றி விட்டாரே, ஏன் அவரிடம் ஒரு நிலையான தன்மை இல்லை?""
இன்று ஒருவர் இப்படி என்னிடம் கேட்டார்.

கீழ்கண்டவாறு அவருக்கு பதில் கொடுக்கப்பட்டது..

பிஜே என்றில்லை, நிலைபாட்டை மாற்றிக் கொள்ளாத மனிதர் உலகில் எவருமே இல்லை, மனிதனின் சிந்தனை பெருக பெருக தமது இருப்பை, தமது கொள்கைகளை மறு ஆய்வு செய்து, தான் கற்ற கல்விக்கு ஏற்றவாறு மெருகேற்றி கொள்பவர் தான் உண்மையில் தமக்கான சிந்தனையை சரி வர பயன்படுத்தினார் என்று ஆகும்.

விபச்சாரத்திலும் குடி போதையிலும் மூழ்கி கிடந்த அன்றைய அரபு சமுதாயம் நேர்வழி பெற்ற நன்மக்களாக மாறியது இந்த அடிப்படையில் தான்.

தவறு என்று தெரிந்த பிறகும் அதிலேயே நீடித்திருக்கும் நிலையை தான் நீங்கள் கண்டித்திருக்க வேண்டுமே தவிர தவறிலிருந்து மீழ்பவரை குறை சொல்வது எந்த வகையிலும் நியாயமில்லை.

இன்னும் சொல்லப்போனால், தவறுகளிலிருந்து வெளிப்படையாக மீழ்வதற்கு மிகுந்த மன உறுதி வேண்டும், அதிலும் மார்க்க விஷயம் என்று வருகின்ற போது, அந்த மன உறுதி என்பது இறை நம்பிக்கை என்கிற வடிவில் ஜொலிக்க வேண்டும்.
நீங்கள் குறை கூறும் அந்த நபர் இத்தகைய தகுதிகளை கொண்டிருக்கிறார்.

மேலும், இன்று சமகாலத்தில் வாழும் மற்ற கொள்கை கொண்ட அறிஞர்களிலும் பாமரர்களிலும் கணிசமானோர், தாங்கள் கொண்டிருக்கும் கொள்கை தான் சரியானது என்று நம்பிக்கை கொண்டெல்லாம் இருக்கவில்லை என்பது தான் கசப்பான உண்மை !

தர்கா கூடாது என்று தர்காவிற்கு செல்பவருக்கு தெரியும்,
மத்ஹ்ப் கூடாது என்று அதை நம்புகிறவர்களுக்கு தெரியும்,
தட்டு தகடு , தரீக்கா என்று மூழ்கிக் கிடப்பவர்களுக்கு அவை தவறான சித்தாந்தம் என்று நிச்சயம் தெரியும்,

ஆனால் அதிலிருந்து மீழ்ச்சி பெறுவதற்கு அவர்களது மனசாட்சி ஒப்புதல் அளிக்காது, சுற்றார் என்ன எண்ணுவர் என்கிற தயக்கம், சமூகம் கேலி செய்யுமே என்கிற பயம் அதனை விட்டும் மீண்டு வருவதற்கு தடைகற்களாய் நிற்கும்.

இது தான் இவர்களை நேர்வழியை விட்டும் தடுக்கிறது. பிஜேவுக்கோ தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கோ அந்த தயக்கம் இல்லை.

மற்றவர்கள் மாற்ற வேண்டிய கொள்கையை கொண்டிருந்தும் அதை சுயலாபத்திற்காக மாற்றாமல் இருக்கிறார்கள்..
தவ்ஹீத் ஜமாஅத்தோ, மாற்ற வேண்டிய கொள்கை தான் என்று தெரிய வருகையில் இறைவனுக்கு அஞ்சி அதை மாற்றிக் கொள்கிறது !

இதுவே வேறுபாடு ! (இந்த பதிலில் சமரசம் கொண்டார் கேள்வி கேட்டவர் !!)



அறிந்து கொண்டே அல்லாஹ்வின் பெயரால் பொய் கூறுகின்றனர். (3:78)

நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள், தமது பிள்ளைகளை அறிவது போல் இவரை அறிவார்கள். அவர்களில் ஒரு சாரார் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர். (2:146)

உண்மையை ஏன் பொய்யுடன் கலக்கின்றீர்கள்? அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கின்றீர்கள்? (3:71)

நம்பிக்கை கொண்டோரே! அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கும் இத் தூதருக்கும் மோசடி செய்யாதீர்கள்! (8:27)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக