சொத்து தகராறில் இந்தியாவில் ஒரு கிராமத்தில் ஏதேனும் ஒரு மூலையில் ஒருவர் இன்னொருவரை கொலை செய்தால்,
அந்த செய்தியை கூட படம் எடுக்க வேண்டிய விதத்தில் படம் எடுத்து, விளம்பரப்படுத்த வேண்டிய விதங்களில் விளம்பரங்கள் செய்து, இறந்தவரின் குடும்பத்தார் பேட்டி, ஊரார் பேசியது, கொலை செய்தவன் தீட்டிய திட்டங்கள், காலை செய்தி, மாலை செய்தி, அரை மணி நேர குறும்பபம் என பூதாகரமாக்கினால்..
அதுவும் நாட்டையே உலுக்கும் செய்தியாக ஆகத்தான் செய்யும்.
நாட்டையே உலுக்குவதற்காக ஒரு செய்தியை இவர்களே விளம்பரம் செய்து பூதாகரமாக்கி விட்டு, இது நாட்டையே உலுக்கிய செய்தி, இது நாட்டையே உலுக்கிய செய்தி என்று அவர்களே வரிக்கு வரி பில்ட் அப் கொடுப்பது ,ஊடகத்துறையின் ஒரு வகையான அரசியல் என்றால் அது மிகையல்ல !
அல்லாமல், நிமிடங்களுக்கு ஒரு பாலியல் வன்முறை நடைபெறும் ஒரு நாட்டில் டில்லியில் இறந்த ஒரு பெண்ணின் மரணம் மட்டும் "நாட்டையே உலுக்க" வேண்டிய எந்த அவசியமுமில்லை !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக