வெள்ளி, 13 செப்டம்பர், 2013

நாகர்கோவில் நகர சாலைகளின் கதி


நாகர்கோவில் நகராட்சியை உட்படுத்திய கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக திமுகவை சேர்ந்த ஹெலன் டேவிட்சன் உள்ளார்.
நாகர்கோவில் நகர சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அதிமுகவை சேர்ந்த முருகேசன் இருக்கிறார்.

MP யாக திமுக , MLA வாக அதிமுக.

இன்று நாகர்கோவில் நகர சாலைகளின் கதியை பார்த்தால் போர்க்களம் போல காட்சியளிக்கிறது. ஊரெங்கும் குண்டும் குழியுமாக, வாகனங்களில் செல்லவே அச்சப்படுகின்ற அளவிற்கு மத்திய / மாநில அரசுகளால் கேட்பாரற்று கிடக்கிறது.

பெருகி வரும் மக்கள் தொகையில் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்ட நிலையில், சாலைகள் இவ்வாறு கவனிப்பாரற்று கிடப்பது நாகர்கோவில் மக்களை மிகவும் சிரமத்திற்குள்ளாகுகிறது

இதை ஊடகங்கள் அதிகாரிகளின் காதுகளுக்கு எடுத்து செல்கின்றனவா?

தேர்தல் நெருங்கும் போது 5 லட்சம் திட்டத்தில் சாலை சீரமைப்பு என்று திட்டம் அறிவித்து அதில் முக்கால்வாசியை அதிகாரிகளின் வயிற்றில் நிரப்பி மிச்சத்தை கொண்டு நாகர்கோவில் மக்களின் உள்ளதை குளிர்வித்து ஒட்டு பொறுக்கி விடலாம் என்று இரு திராவிட கட்சிகளும் எதிர்பார்த்தால் இம்முறை ஊர் மக்கள் ஏமாற மாட்டார்கள் என்பதை நினைவூட்டுகிறோம் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக