வெள்ளி, 27 செப்டம்பர், 2013

முகநூல் பதிவுகள் : தமிழக அரசின் மத துவேஷம்


மத சார்பின்மை என்பது வெறும் வெளி வேஷம் தான் என்பதை ஒவ்வொரு அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டிருக்கும் சாமி படங்களும் வளாகத்தின் உள்ளேயே அமைக்கப்பட்டிருக்கும் பிள்ளையார் சிலையும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

மத சார்பின்மை பேசும் இந்திய நாட்டிலுள்ள ஒரு மாநிலம் தமது அரசாங்க முத்திரையாக, அரசாங்க சின்னமாக ஒரு குறிப்பிட்ட மதத்தின் வழிபாட்டு தலத்தை வைத்திருப்பதை காட்டிலும் ஒரு மத சார்பெண்ணம் வேறு இருக்க முடியுமா?

அரசு சார்பாக ஏதேனும் திட்டம் துவக்கப்பட்டால் கூட அதை மண் பூஜை செய்தோ குத்து விளக்கு ஏற்றியோ தான் துவக்குகிறார்கள் என்றால் தங்கள் மத சார்பு கொள்கை ஒரு அரசாங்கத்தாலேயே எவ்வளவு லாவகமாக இந்த சமூகத்தில் திணிக்கப்பட்டிருக்கிறது ??!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக