வெள்ளி, 13 செப்டம்பர், 2013

முகநூல் பதிவுகள் : தமிழக அரசின் மத துவேஷம்

ஹஜ் பெருநாளின் போது குர்பானியாக ஒட்டகத்தை அறுக்க தடை என்று சென்னை உயர்நீதிமன்றம் சில வருடங்களுக்கு முன் சட்டமியற்றியது. 

மறு நாள் TNTJ மாநில தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் ஜும்மா உரையில், அப்போதைய திமுக அரசையும் உயர்நீதி மன்றத்தையும் கடுமையாக கண்டித்ததோடு, எங்கள் மத நம்பிக்கையில் கை வைக்கும் போக்கை நாங்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் எனவும் இந்த சட்டத்தை அரசு திரும்பப் பெறவில்லையெனில் அரசு கண் முன்னே நாங்கள் ஒட்டகமொன்றை அறுப்போம், உன்னால் செய்ய முடிந்தது என்ன என்பதை பார்ப்போம் என்றும் முழங்கினார்.

அதன் விளைவு, அரசு அந்த சட்டத்தை அன்று மாலையே திரும்பப் பெற்றது !!

ஹிந்து பண்டிகைகளின் போது கறிக்கடைகளை மூட சொல்லும் சட்டமும் கிட்டதட்ட இது போன்ற மத துவேஷ சட்டமேயாகும்.

இது மத துவேஷமில்லை என்றால் இஸ்லாமியர்களின் நோன்பு மாதத்தின் போது எந்த உணவகத்தையும் பகல் நேரத்தில் திறக்க கூடாது என்று சட்டம் இயற்று பார்ப்போம்..



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக