வழமையாக இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிகளில் என்ன மாதிரியான கேள்விகளை மாற்று மதத்தவர்கள் நம்மை நோக்கி எழுப்புகிறார்களோ அது போன்ற கேள்விகளில் ஆறு கேள்விகளை பட்டியல் இட்டு விட்டு, இதன் மூலம் இஸ்லாத்தை மண்ணை கவ்வ செய்யப்போகிறோம், இதன் மூலம் இஸ்லாம் பொய்யானது என்று நிறுவப்போகிறோம் என்று வெற்று கூச்சல் இட்டு வந்தனர் பெங்களூருவை சேர்ந்த ஒரு ஹிந்து குழுவினர்.
இந்த ஆறு கேள்வியல்ல, இன்னும் எத்தனை கேள்விகளை வேண்டுமானாலும் கேளுங்கள், ஆனால் நீங்கள் தலை கீழாக நின்றாலும் இஸ்லாம் மண்ணை கவ்வாது. இறை மார்க்கமான இஸ்லாம், நீங்கள் கேட்கும் எத்தகைய கேள்விகளுக்கும் ஆணித்தரமான பதில்களை சொல்லும் என்று பதில் சொன்ன நாம், மின்னஞ்சல் மூலம் விவாதிக்க (ஆங்கிலத்தில்) அழைத்த அவர்களது அழைப்பை ஏற்றுக்கொண்டோம்.
ஏற்றுக்கொண்டதோடு நிறுத்தாமல், நீங்கள் எப்படி இஸ்லாத்தை நோக்கி ஆறு கேள்விகள் கேட்கிறீர்களோ அது போல உங்கள் சித்தாந்தம் குறித்து நாங்கள் ஒரு ஆறு கேள்விகள் கொண்ட பட்டியலை தருகிறோம், அதை குறித்து விவாதிக்க நீங்கள் முன் வர வேண்டும், விவாதத்தை சமமாக்குவோம் என்றும் நம் தரப்பில் நிபந்தனை விடுக்கப்பட்டு ஆறு கேள்விகள் கொண்ட பட்டியலும் அனுப்பப்பட்டது.
எங்களுக்கு எங்கள் மதத்திலேயே தீவிர நம்பிக்கையெல்லாம் கிடையாது, நாங்கள் இப்போது கடவுள் யார் என அறிந்து கொள்வதற்கான முயற்சியில் தான் இருக்கிறோம் என்றெல்லாம் துவக்கத்தில் அந்தர் பல்டி அடித்தவர்கள், அதன் பிறகு ஒப்புக்கொண்டு விவாதத்திற்கு தயாரானார்கள். முதலில் அவர்களது முதல் தலைப்பு, அடுத்து நமது முதல் தலைப்பு என alternative ஆக விவாதிக்கலாம் என்றும் கூறினர்.
விவாதம் இன்று துவங்குவதாக இருக்க, நேற்று இரவு மின்னஞ்சல் அனுப்பிய அவர்கள், உங்களிடம் கேள்வி கேட்டால் நீங்கள் அதற்கு பதில் தான் சொல்ல வேண்டும், வேறு மதங்களை எல்லாம் இழுக்க கூடாது என்று பல்டிக்கு ஒரு பல்டி அடித்து, தங்கள் கையாலாகா நிலையை இப்போது நிரூபித்திருக்கிறார்கள் !!
அல்ஹம்துலில்லாஹ் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக