ஞாயிறு, 15 ஜூலை, 2012

குர் ஆனுக்கு முரணில்லை என்றாலும் ஹதீஸ்கள் மறுக்கப்படும் !


அஸ்ஸலாமு அலைக்கும்.. 

குர் ஆனுக்கு முரணாக இருந்தால் மட்டும் தான் ஹதீஸை மறுக்க வேண்டும், வேறு காரணங்களுக்காக மறுக்க கூடாது என்று சிலர் புதிதாக பேசி வருகின்றனர்.
இவர்களுக்கு நாம் மறுப்பு கொடுக்க வேண்டியதில்லை, நபி (ஸல்) அவர்களே மறுப்பு சொல்லி விட்டார்கள்.

என் பெயரில் ஒரு செய்தியை நீங்கள் கேள்வி படும் போது, அந்த செய்தியை உங்கள் உள்ளங்கள் வெறுக்குமானால் , மேலும் உங்கள் தோல்களும் முடிகளும் (அதை விட்டும் வெருண்டு ஓடுமானால், மேலும் அது உங்கள் (வாழ்க்கைக்கு சாத்தியப்படுவதை விட்டும் ) தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால், உங்களில் நானே அதை விட்டும் (அத்தகைய செய்தியை விட்டும்) தூரமானவன்.
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் :அஹமத் 15478

ஆக, நமது வாழ்க்கைக்கு இது சாத்தியப்படாது என்று நம் உள்ளங்கள் மறுக்கும் எந்த விஷயமும் நபி (ஸல்) அவர்கள் கூறியது கிடையாது! அவை ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் தொடரை கொண்டிருந்தாலும் சரியே !! அது நபியின் பெயரால் சொல்லப்பட்டாலும் சரியே !!


பொய் என்று நம்பப்படும் ஒரு செய்தியை எனது பெயரால் யாராவது அறிவித்தால், அவரும் பொய்யரே !! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் :முஸ்லிம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக