அஸ்ஸலாமு அலைக்கும்
எனக்கும் ஏர்வாடி JAQH அமைப்பை (Hijra Committee of India ) சார்ந்த சிராஜ் என்பவருக்கும் இடையே இரண்டு மாதங்களுக்கும் மேலாக மின்னஞ்சல்கள் மூலமாக பிறை சம்மந்தமான விவாதம் நடைபெற்றது.
கிட்டத்தட்ட 250 க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் பதிவாகிய நிலையில், அனைத்தையும் இயன்ற அளவிற்கு வரிசையாக ஒருங்கிணைத்து மூன்று தலைப்புகளாக இங்கு தொகுத்து தந்துள்ளேன்.
முதல் தலைப்பு : ஹதீஸ்களும் மனமுரண்டுகளும்
நாம் வைத்த முக்கியமான இரண்டு ஹதீஸ்களை எதிர் தரப்பில் எந்த அளவிற்கு மனமுரண்டாக மறுக்கிறார்கள் என்பதையும், அதன் மூலம் தங்கள் கொள்கைக்காக ஹதீஸ்களை கூட வேண்டாம் என்று மறுக்கும் அவர்களின் சந்தர்ப்பவாத நிலை எந்த அளவிற்கு மட்டரகமாக உள்ளது என்பதையும் வெளிச்சம் போட்டு காட்டும் தலைப்பு இது.
இரண்டாம் தலைப்பு : அடுக்கடுக்கான ஆதாரங்களும் பதில் இல்லா கேள்விகளும்
தத்தமது ஊர்களில் பிறை பார்த்து தான் மாதங்களை முடிவு செய்ய வேண்டும் என்பதற்கு நாம் அடுக்கிய பலபல ஆதாரங்களையும், அதன் மூலம் நாம் எடுத்து வைத்த வாதங்களையும் கேள்விகளையும் இந்த தலைப்பில் காணலாம்.. கேள்விகள் ஒன்றுக்கு கூட எதிர் தரப்பில் முறையான பதில் இல்லை என்பதையும் இந்த தலைப்பில் அறிந்து கொள்ளலாம்..
மூன்றாம் தலைப்பு : திசை திருப்பல்களும் , இரட்டை வேடங்களும்
இதில், நாம் முன்னரே அடுக்கிய பல கேள்விகள் எதற்குமே முறையாக பதில் சொல்லாத எதிர் தரப்பினர், பதில் சொல்ல இயலாததால், தலைப்பை எந்த அளவிற்கு திசை திருப்பி உள்ளனர் என்பதையும், அவர்களது இரட்டை நிலைகளையும் இங்கு தெளிவாக அறிந்து கொள்ளலாம். முந்தைய தலைப்பில் நாம் வைத்த அனைத்து ஆதாரங்களும் இந்த தலைப்பில் மீண்டும் தொகுக்கப்பட்டு கேள்விகள் கேட்கப்பட்டன..
https://dl.dropbox.com/u/105651280/1st.pdf
https://dl.dropbox.com/u/105651280/2nd%20part.pdf
https://dl.dropbox.com/u/105651280/3rd%20part.pdf
https://dl.dropbox.com/u/105651280/3rd%20part.pdf
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக