சனி, 28 ஜூலை, 2012

காசிமிக்கு ஆதரவாக ஏன் குரல் கொடுக்கவில்லை?



சம்சுதீன் காசிமி தாக்கப்பட்டதற்கு தவ்ஹீத் ஜமாஅத் என கண்டனம் தெரிவிக்கவில்லை?

பதில் :

சம்சுதீன் காசிமி என்பவர் ஏகத்துவத்தை பிரசாரம் செய்பவராக இருந்து அவர் தாக்கப்பட்டிருந்தால் தான் நீங்கள் இது போன்ற கேள்விகளை கேட்பதில் நியாயம் இருக்கும். இவரே இணை வைப்பில் ஊறி திளைத்துக்கொண்டு, இன்னொரு சாரார் செய்யும் காரியத்தை விமர்சிப்பதனால் இவரை யோக்கியவான் என்று கருதி விட முடியாது. திக காரனுக்கும் சங்க பரிவாருக்கும் இடையே கூட கொள்கை ரீதியாக மோதல் வெடிக்கும், அதில் சங்க பரிவாரில் உள்ள ஒருவர் தாக்கப்பட்டு விட்டால், கடவுள் மறுப்புக்கு எதிராக இவர் பேசிய காரணத்தால் அல்லவா தாக்கப்பட்டிருக்கிறார், ஆகவே இவருக்கு ஆதரவாக நாம் குரல் கொடுக்க வேண்டும் என்று எவரும் எண்ண மாட்டோம், அதில் எள்ளளவும் அறிவு இல்லை. கடவுளை மறுப்பவனுக்கு எதிராக இவன் பேசியதால் மட்டுமே இவன் நியாயவான் ஆகி விட மாட்டான், கடவுளை மறுப்பது எப்படி தவறோ, அதே அளவிற்கு அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் குட்டி தெய்வங்களை வணங்குவதும் தவறு தான். இந்த தவறை செய்து விட்டு அந்த தவறை கண்டிக்கும் தார்மீக உரிமையை கூட இவர்கள் பெறவில்லை என்பது தான் இதற்கு நாம் சொல்ல வேண்டிய காரணமாக இருக்க வேண்டும்.

அதே போல, காசிமி என்பவர் தர்காவிற்கு செல்லக்கூடியவர்களை விமர்சித்து விட்ட காரணத்தால் அவரை வானளவிற்கு புகழ்ந்து தள்ளி, இவரை போல தவ்ஹீத்வாதி உண்டா? என்றெல்லாம் புகழ் மலை கொடுத்து எழுதி வருகிறது ஒரு அறிவிலி கூட்டம். 

தர்காவிற்கு செல்வது எப்படி பெரும் பாவமோ அதே போன்று மத்ஹப் தான் மார்க்க சட்டம் என்று கூறுவதும் பாவம் தான்.  மார்க்கத்தின் ஒரு சட்டத்தை அல்லாஹ் தந்தால் தான் ஏற்றுக்கொள்வேன் என்று நம்புவது தான் முழு தவ்ஹீத்வாதியின் குணம். இது அல்லாமல், மார்க்க சட்டத்தை எவன் தந்தாலும் ஏற்றுக்கொள்வேன், இமாம் பெயரை சொல்லி எந்த கிறுக்கன் எதை சொன்னாலும் அதுவும் மார்க்கம் தான் என்று சொல்லும் இவர், அந்த தர்காவிற்கு சென்று இணை வைப்பதை போன்றே இணை வைத்தவர் தான் என்பது தெள்ள தெளிவு.

இவர் மத்ஹபிற்கு ஆதரவாக குரல் கொடுப்பவர் என்பதை அறிய இவரது இந்த உரையை கேட்கவும்..

இன்னும், மார்க்க சட்டங்கள் தெரியாது என்றால் தெரியாது என்று சொல்வது தான் ஒருவனது அழகு. பயண தொழுகை குறித்து ஒருவர் கேட்கும் கேள்விக்கு இவர் அடிக்கும் அண்ட புளுகு, ஆகாசப்புளுகுகளை இந்த உரையில் பார்க்கவும். http://www.youtube.com/watch?v=53lfFrAxS2Y

இவர் சொல்லும் பதிலுக்குரிய ஆதாரங்களை இவரால் காட்ட முடியுமா என்றால் முடியாது !!
நான் எதை வேண்டுமானாலும் சொல்வேன், ஆதாரம் எல்லாம் காட்டவே மாட்டேன், நீங்கள் அதை பின்பற்ற வேண்டும் என்கிற புது மத்ஹபை உருவாக்குபவர் தான் மேற்ப்படி காசிமி என்பவர்.

மேலும், மார்க்க பத்வாக்களை கூட இவர் பல முறை இவர் தொலைகாட்சியின் மூலம் நடத்தும் காமடி கேள்வி பதில் நிகழ்ச்சி மூலமாக 
கேலி செய்து வருகிறார்.
கடந்த ரமளானின் போது இவரிடம் ஒருவர் இணை வைக்கும் இமாமை பின்பற்றலாமா என்று கேட்ட போது, அந்த கேள்வியையே கண்டித்து, மவ்லூத் ஓதினால்  இணை வைப்பவர் என்று சில அறிவில்லாதவர்கள் தான் சொல்கிறார்கள், என்று மவ்லூதை கூட நியாயப்படுத்தி பேசியவர் தான் இந்த காசிமி. 
மேலும் இன்னொரு கேள்வியில், மக்ரிப் தொழாமல் ஒருவர் இஷா தொழுகை ஜமாத்தில் சென்றால் முதலில் மக்ரிப் தொழ வேண்டுமா அல்லது இஷா தொழ வேண்டுமா என்று ஒருவர் கேட்ட போது, மக்ரிப் தொழுது விட்டு இஷா தொழ வேண்டும் என்று அபு ஹனீபா  இமாம் சொல்கிறார்கள்,  ஷாபி இமாமோ, அந்த ஜமாத்தில் சேர்ந்து இஷா தொழுவது சரி தான் என்கிறார்கள், என்று பதில் சொல்லி, இறுதியில் எது மார்க்க சட்டம், எது நபியின் வழிகாட்டுதல் என்பதையே சொல்லாமல் முடித்து கொண்டார் இந்த காசிமி.

ஆக, மத்ஹபை ஆதரிப்பதையே தமது அடிப்படை கொள்கையாக கொண்ட ஒருவரை பச்சை முஷ்ரிக் என்று தான் சொல்ல முடியுமே தவிர தவ்ஹீத்வாதி என்று ஒருகாலும் சொல்ல முடியாது. 

இரண்டு முஷ்ரிக்குகளுக்கிடையே சண்டை நடந்தால் யாருக்கு ஆதரவாகவும் நாம் குரல் கொடுக்க முடியாது !

வஸ்ஸலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக