செவ்வாய், 17 ஜூலை, 2012

மவ்லிதிற்கு வரிக்கு வரி பதில்


அஸ்ஸலாமு அலைக்கும்..

(((பைசல் என்கிற ஒரு சகோதரர் மட்டுமல்லாமல், இது போன்ற கொள்கைகளை கொண்டுள்ள எல்லா சகோதரர்களும் படித்து புரியும்  வண்ணம் இந்த ஆக்கம் என்னால் இயன்ற அளவிற்கு செம்மையாக தரப்பட்டுள்ளது..)))

சகோ. பைசல் அவர்களே, 
வரிக்கு வரி பதில் தரப்படும் என்று பகிரங்கமாக அறிவிப்பு செய்த நீங்கள்  , வரிக்கு வரி பதில் என்றால் இப்படி இல்லை, என்று நான் அதை மறுத்த பிறகு, வரிக்கு வரி பதில் குறித்து நீங்கள் கவலைப்பட தேவையில்லை என்கிறீர்கள்.
ஏதோ, வரிக்கு வரி பதில் என்பதை குறித்து நான் முதலில் கவலைப்பட்டது போல சொல்கிறீர்.
வரிக்கு வரி பதில் சொல்லி தோலை எல்லாம் உரிக்கிறேன் என்று சவடால் விட்டது நீங்கள் தானே தவிர நாம் இல்லை. வரிக்கு வரி பதில் குறித்து முதலில் கவலைப்பட்டது நீங்கள் தானே தவிர நாம் கிடையாது!
அதே சமயம்,  உங்களது வரிக்கு வரி பதில் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை நான் அளிக்கும் பதிலின் மூலம் தெளிவாக புரியலாம்.
நீங்களே ஒப்புக்கொண்டது போல, உங்களுக்கு புரியவில்லை என்றாலும் இதை படிக்கும் சகோதரர்கள் அனைவருக்கும் எளிதாக புரியும்!!

நாஷித் பதில் சொல்லாத கேள்விகள் என்று சில கேள்விகளை பட்டியலிட்டுள்ளீர்கள்.
படிக்கிறவர்கள், உண்மையில் இத்தனை கேள்விகளுக்கும் நாஷித் பதில் சொல்லவேயில்லையா? என்று எண்ணுகிற அளவுக்கு நீண்ட பட்டியல் தான் அது! பாராட்டுக்கள்!!
ஆனால், அந்த பட்டியலை முடித்து விட்டு, உங்கள் பதில்களுக்கு வரிக்கு வரி பதில் தரப்போகிறேன் என்று சொல்லி, மேலே என்னன்ன கேள்விகளுக்கு நாஷித் பதில் சொல்லவில்லை என்று பட்டியலிட்டீர்களோ, அவைகளுக்கெல்லாம் நாஷித் அளித்துள்ள பதிலை எடுத்து வைத்துக்கொண்டு மறுப்பு சொல்கிறீர் !!!??!!!!!!!
வேடிக்கையாக இருந்தாலும், விஷயம் இதுவல்ல..!

மவ்லூத் சம்மந்தமாக நாம் எழுப்பிய விமர்சனங்களுக்கு மறுப்பு என்கிற பெயரில் எனக்கு அளிக்கப்பட்டுள்ள பதிலில் உள்ள உளறல்களை  நாம் முழுமையாக அலசுவோம், இன்ஷா அல்லாஹ். எனக்கு நீங்கள் அளிக்கும் மறுப்பு அறிவுக்கும் மார்க்கத்திற்கும் உகந்ததாக உள்ளதா அல்லது உங்களுக்கு நான் அளிக்கும் மறுப்பு உகந்ததாக உள்ளதா என்பது இதை படிக்கிற பாமரரும் புரிந்து கொள்ளலாம்.
எனது மறுப்புக்கு செல்வதற்கு முன், உங்கள் ஆக்கத்தில் உள்ள வேறு சில உளறல்களை வெளிச்சம் போட்டுக்காட்ட வேண்டியுள்ளது.

விவாதம் என்றால் என்ன  தெரியுமா ? நான் ஒரு கருத்தை மறுப்பதற்காக ஒரு இறை வசனத்தை ஆதாரமாக எடுத்து வைத்தால், அந்த கருத்தை நியாயப்படுத்துபவரது கடமை, 
  • அந்த கருத்தை நியாயப்படுத்தும் ஆதாரத்தையும் தர வேண்டும், 
  • அதோடு, நான் அந்த கருத்துக்கு மறுப்பாக எடுத்து வைத்த குர் ஆன் வசனத்திற்குரிய பதிலையும் சொல்ல வேண்டும்.

உதாரணமாக, மவ்லூதில் இந்த வரி, இந்த இறை வசனத்துடன் மோதுகிறது என்று நான் சொன்னால், உங்கள் கடமை என்ன?
  • இல்லை, இந்த வரி, இந்த ஹதீசுடன் ஒத்துப்போகிறது என்று மட்டும் சொன்னால் போதாது,
  • கூடவே, ஒரு இறை வசனத்திற்கு முரணாக இருக்கிறது என்று நான் சுட்டிக்காட்டினேனே, அதையும் காரண காரியத்துடன் மறுத்து விளக்க வேண்டும்.

மவ்லூத் குப்பைகள் குறித்தானாலும் சரி, பரிந்துரை குறித்தானாலும் சரி, வஹீ மட்டும் தான் மார்க்கமா, சஹாபாக்களை பின்பற்றலாமா? என்பது குறித்தானாலும் சரி, நபி (ஸல்) அவர்களின் மறைவான ஞானம் குறித்தானாலும் சரி, இந்த இறை வசனத்திற்கு முரணாக இருக்கிறதே என்று நான் கேட்ட எதற்கும் விளக்கமளிக்காமல், இதோ இந்த ஹதீசுக்கு நெருக்கமாக இருக்கிறதே என்று வேறொரு ஹதீஸை தான் எடுத்து வைக்கிறீர்கள்.
இது முதல் தவறு!
இதை சொல்வதால், நீங்கள் எடுத்து வைத்த ஹதீஸ்களும், சொல்கிற மறுப்புகளையும் நான் ஒப்புக்கொண்டு விட்டேன் என்று எண்ணி, அல்ஹம்துலில்லாஹ்,நாஷித் ஒப்புக்கொண்டு விட்டார்" என்று கூப்பாடு போட்டு விடாதீர்.
நான் வைத்த ஒவ்வொரு வாதத்திற்கும் நீங்கள் தந்துள்ள மறுப்பு எந்த அளவிற்கு உளறலாக உள்ளது என்பதை  இதற்கு அடுத்து  விரிவாக  அலச  இருக்கிறேன் . அதை படிப்பதற்கு  முன், கூப்பாடு போட்டு விடாதீர்.
அதை விளக்குவதற்கு முன், இதை சொல்வதற்கு காரணம், விவாதம் எப்படி செய்ய வேண்டும் என்கிற அடிப்படை கூட நீங்கள் அறியவில்லை என்பதை சுட்டிக்காட்டுவதற்கு தான்.

மவ்லூதில் உள்ள அபத்தங்களிலிருந்து வருவோம்.. 

மெய்யாகவே எங்கள் காவல் நீங்கள் தான் என்று மவ்லூத் அழைக்கிறது.

இறை வசனமான 2 :107 , இதை நேரடியாக மறுக்கிறது. அல்லாஹ் மட்டும் தான் காவல் என்று சொல்கிறது.
இதற்கு விளக்கம் கேட்டால், இந்த வசனம் அல்லாஹ் மட்டும் காவல் என்று ஏன் சொல்கிறது தெரியுமா? என்று அதற்கு ஒரு விளக்கத்தை கூறி, அதன் பிறகு 5 :55 வசனத்தில் நபியையும் அல்லாஹ் காவல் என்று சொல்கிறான் என்று சொல்ல வேண்டும்.

அதை சொல்லாமல், உங்கள் வாதத்திற்கு நெருக்கமாக ஒரு இறை வசனம் இருப்பது போல உங்களுக்கு தோன்றுவதை வைத்து, இதோ ஆதாரம் என்று அதை கட்டுகிறீர். ஆனால், அதற்கு முரணாக, அதற்கு நேர் எதிரான கருத்தை தரக்கூடிய ஒரு வசனம் இருக்கிறதே, என்று சுட்டிக்காட்டும் போது அதற்கு பதில் இல்லை!!

இறை வசனங்களில் பல இடங்களில் அல்லாஹ் தான் அனைவருக்கும் பாதுகாவலன் என்றும், ஒரு சில இடங்களில் நபியையும் அந்த பட்டியலில் சேர்த்து கூறினால், இரண்டையும் ஒரே அந்தஸ்த்தில் புரியக்கூடாது என்பது, நீங்கள் அங்கீகரிக்ககூடிய மதரசாக்களிலேயே  பாடமாக சொல்லப்படும்  விதிகளில்  ஒன்றாகும் .
அனைத்திற்கும் பாதுகாவல் நான் தான் என்று சொல்லக்கூடிய இறைவன், அதிகாரத்தில் உமக்கு எந்த பங்கும் இல்லை என்று சொல்லக்கூடிய இறைவன், நபியை அவனது ஒரே அந்தஸ்தில் வைப்பானா? நிச்சயம் மாட்டான்! மாட்டான் என்று சொல்வது ஊகமா? இல்லை. எந்த வசனத்தை நீங்கள் ஆதாரமாக தந்தீர்களோ, அந்த வசனமே சொல்கிறது, பாதுகாப்பதில் அல்லாஹ்வும் நபியும் ஒன்று கிடையாது என்று!
அல்லாஹ்வும் நபியும் பாதுகாவலர்கள் என்று மட்டும் அந்த வசனம் சொல்லவில்லை, எல்லா முமின்களும் பாதுகாவலர்கள் என்று தான் அந்த வசனம் சொல்கிறது!

உங்கள் வாதப்படி, தமக்கு மட்டும் உள்ள அந்தஸ்தை நபிக்கு அல்லாஹ் கொடுத்திருப்பதை போல (நவூதுபில்லாஹ்!) எல்லா முமின்களுக்கும் அல்லாஹ் அதே வசனத்தின் மூலமாக கொடுத்துள்ளானே! எல்லாரும் எல்லாருக்கும் பாதுகாவலர்கள் என்று இதன் மூலம் சொல்லி விடலாமா?
எல்லாரும் எல்லாருக்கும் பாதுகாவலர்கள் என்று இந்த வசனத்தின் மூலம் புரிகிற நாம், அதற்கு என்ன வியாக்கானம் கொடுப்போமோ, அதே வியாக்கானத்தை தானே நபி குறித்து இந்த வசனம் சொல்வதற்கும் கொடுக்க வேண்டும்.?
அல்லாஹ் பாதுகாப்பான் என்றால் வேறு பொருள், நபியும் மற்ற முமின்களும் பாதுகாப்பார்கள் என்றால் வேறு பொருள்!!

அல்லாஹ்வின் காவலுக்கு எல்லையில்லை, அளவில்லை, நபியின் காவலுக்கோ, மற்ற முமின்களின் காவலுக்கோ அளவும் எல்லைகளும் உள்ளன, நபிக்கும் பலகீனங்கள் உள்ளன, முமின்களுக்கும் பலகீனங்கள் உள்ளன. அந்த பலகீனங்களுக்கு உட்பட்டு தங்களால் இயன்ற பாதுகாப்பை அவர்கள் தருவார்கள். தங்கள் பலகீனங்களுக்கு அப்பாற்ப்பட்ட காவலை நபியிடமும் எதிர்ப்பார்க்கக்கூடாது, வேறு எவரிடமும் எதிர்ப்பார்க்கக்கூடாது! பதர் போரின் போது  , தமக்கு ஏற்பட்ட வெட்டுக்காயத்தை தன்னாலேயே தடுத்துக்கொள்ள முடியாமல், தம்மை தாமே பாதுகாத்துக்கொள்ளாத பலகீனமான நிலையில் நபி (ஸல்) அவர்களும் இருந்தார்கள் எனும் போது, அகில உலகத்திற்கும், எல்லா படைப்பிற்கும் நீங்கள் தான் பாதுகாவல் என்று சொல்வது, எந்த பலகீனங்களும் இல்லாத, எந்த எல்லையும் அற்று உதவியும் காவலும் செய்கிற அல்லாஹ்வின் இடத்தில் நபியை தூக்கி அமர்த்துவது போல இல்லையா?

யூத நாசராக்கள் தங்கள் தலைவருக்காக எழுந்து நிர்ப்பது போல எனக்கு எழுந்து நின்று விடாதீர்கள் என்று எச்சரிக்கிற அளவிற்கு தம்மை யாரும் வணங்கி விடக்கூடாது என்பதிலும், அல்லாஹ்வுக்கு இணையாக தம்மை கருதி விடக்கூடாது என்பதிலும் அத்தனை சிரத்தை எடுத்த நபி (ஸல்) அவர்களை புகழ்கிறோம் என்கிற பெயரில் இவ்வாறு பாடுவதை உண்மையில் நபி (ஸல்) இன்று நம் அருகில் இருந்து கேட்டால் ஒப்புக்கொள்வார்களா? என்பதை ஒரு கணம் சிந்தியுங்கள்.
இன்னும் சொல்வதானால் , எல்லா படைப்புக்கும் நபி தான் காவல் என்றால் , பயணம் மேற்கொள்ளும் போது தவக்கல்து அலல்லாஹ் என்று சொல்லுமாறு ஏன் நபிகளார் சொன்னார்கள்? அனைத்தையும் தன்னாலேயே காத்துக்கொள்ள முடியுமென்றால், தன்னிடமே துஆ கேட்குமாறு தானே நபி சொல்லியிருக்க வேண்டும்? காவல் தாமில்லை, அல்லாஹ் தான் என்பதால் தானே பயணம் மேற்கொள்ளும் போது அல்லாஹ்விடம் பாதுகாப்பு கேட்க சொன்னார்கள் என்று சிந்தித்தாலும், இதிலுள்ள அபத்தம் தெளிவாக புரிகீறது..


அடுத்து, கவலைகளை போக்குபரே என்று சொல்வது ஷிர்க் இல்லையா என்று கேட்டால், அதற்கும் அதே போன்று இன்னொரு ஆதாரத்தை காட்டுகிறீர். நான் சொன்ன வசனத்திற்கு என்ன பதில்? மவ்லூதின் வரிக்கு இந்த வசனம் (6 :64 ) முரணாக இருக்கிறதே என்கிற கேள்விக்கு முதலில் பதிலை சொல்லி விட்டு, இன்னொரு ஹதீஸை காட்டுங்கள். அவ்வாறு சொல்லியிருந்தால் , உங்கள் வாதத்திற்கு உங்கள் விளக்கமே பதிலாய் அமைந்து விடும்!!

நீ கேட்டால் அல்லாஹ்விடமே கேள்! நீ உதவி தேடினால் அல்லாஹ்விடமே உதவி தேடு! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : திர்மிதீ 2440)
என்று நபி (ஸல்) சொல்லும் போது, கவலைகளை போக்குவதற்கு மட்டும் அந்த நபியிடமே கேட்கலாமா?


சரி, புஹாரி 4476 வசனம் என்று ஒரு ஹதீஸை காட்டி, (நீண்ட ஹதீஸின் இரத்தின கருத்து) என்று சொல்லி விட்டால் நீங்கள் சொல்வது உண்மையாகி விடுமா என்ன? சிந்திக்க வேண்டாமா?

இரத்தின கருத்து என்று நீங்கள் சொன்னாலும், ஹதீஸின் முழு தொகுப்பையும் யாரும் வாசிக்க மாட்டார்கள் என்ற எண்ணமா?

அந்த ஹதீஸில் என்ன வருகிறது? ஒவ்வொரு நபிமார்களும் பரிந்துரைக்காக கேட்கப்படும் போது, மறுத்து விடுவார்கள், இறுதியில் நான் பரிந்துரை செய்வேன் என்று நபி (அல்) சொல்கிறார்கள். சொல்லி விட்டு, தாம் பரிந்துரைக்கலாமா? என்று அல்லாஹ் விடம் கேட்கிறார்கள். அல்லாஹ் அனுமதிக்கிறான். பொதுவாக அனுமதிக்காமல் யாருக்கு பரிந்துரைக்கலாம், யாருக்கு பரிந்துரைக்க கூடாது என்று வரம்புகள் இட்டு, அதன் பிறகு அனுமதிக்கிறான்.
இதன் மூலம், நபி (ஸல்) அவர்கள் பரிந்துரைக்கிறார்கள் என்றாலும், அது கூட, அல்லாஹ்வின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு தானே தவிர, அவர்கள் விரும்பிய வகையில் இல்லை. இதில் நமது கவலையை போக்குவார்கள் என்று அந்த ஹதீஸில் எங்கே உள்ளது?
அதன் அரபி பதத்தை தந்து, கவலையை போக்குவார்கள் என்கிற வாசகம் இந்த ஹதீஸில் எங்கே உள்ளது என்பதையும் இங்கு சுட்டிக்காட்டுங்கள்.

தான் நாடிய விதங்களில்  அனைவருக்கும்  பரிந்துரை  செய்வார்கள் , என்றால் அவர்களே ஏன் அல்லாஹ்விடம்  நரகத்திலிருந்து பாதுகாவல் தேடினார்கள் (புஹாரி 1377 )

பரிந்துரை செய்வதால் மட்டுமே நபியை கவலைகளையெல்லாம் போக்ககூடியவர் என்று சொல்லலாம் என்றால், அதே போன்ற பரிந்துரைகளை எல்லா நல்லடியார்களும் செய்யலாம் என்று முஸ்லிம் 302 ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளதே , எல்லா நல்லடியார்களும் பிறரை நரகத்திலிருந்து காப்பார்களே, அவர்களையும் இதே போன்று தான் அழைப்பீர்களா ?


ஒரு வாதத்திற்கு, இவ்வாறான கட்டுப்பாடுகளுடன் கூடிய பரிந்துரை மூலம் சிலரை சொர்க்கம் செல்ல வழி செய்வார்கள் என்று சொன்னாலும், இதை வைத்து, 
 எனவே என் கவலையை அகற்றுவதன் மூலமாக என் ஆன்மாவை நிம்மதியுறச் செய்வீராக.
என்று அவர்களிடமே துஆ செய்வது, கவலைகளை போக்குபவன் அல்லாஹ் தான் என்று நான் சுட்டிக்காட்டிய இறை வசனத்துடன் மோதுகிறதே, இதற்கு என்ன பதில்?

சரி அதுவும் ஒரு பக்கம் இருக்கட்டும்..

நபியை புகழ்வதற்கு, இவ்வாறெல்லாம் செய்பவர் நீங்கள் என்று செய்திகளை சொன்னாலாவது பரவாயில்லை.. இவ்வாறு எங்களுக்கு செய்யுங்கள் என்று நேரடியாக கேட்கலாமா? நபி இறந்த பிறகு  சஹாபாக்கள் இவ்வாறு அழைத்தார்களா? இதற்குரிய ஆதாரத்தையும் நீங்கள் தர வேண்டும். எந்த சஹாபி, என்ன தேவைக்காக நபியை நோக்கி இவ்வாறு துஆ செய்தார்?
ஆதாரம் தரவும்.

அடுத்து,
நபியை நோக்கி சத்தியம் செய்கிறீர்களே, அதுவும் இறை வசனத்திற்கும் ஹதீஸுக்கும் முரணாக இருக்கிறதே என்று கேட்டேன்..

இதோ, நபி இவ்வாறு சத்தியம் செய்துள்ளார்கள் என்று ஆதாரம் தருகிறீர்கள்.
நான் சொன்ன இறை வசனத்திற்கு என்ன பதில்???? நான் சுட்டிக்காட்டிய ஹதீசுக்கு என்ன பதில்????

அல்லாஹ் அல்லாவதர்களைக் கொண்டு சத்தியம் செய்வர் இணைவைத்துவிட்டார்  (நூல் : அபூதாவூத் 2829)

என்று நபி (ஸல்) அவர்கள் சொல்கிறார்களே, இதற்கு என்ன பதில்??? இதை சொல்லி விட்டு தானே, இன்னொரு ஹதீஸில் நபி இப்படி சத்தியம் செய்துள்ளார்கள் என்று காட்ட வேண்டும்?

சத்தியம் செய்யக்கூடாது என்று ஒரு ஹதீஸ் இருக்கிறதே, என்று நான் ஒன்றை காட்டினால், இதோ செய்யலாம், என்று இன்னொரு ஹதீஸ் இருக்கிறதே, என்று இன்னொரு ஹதீஸை காட்டி, இதை வைத்து சத்தியம் செய்யலாம் என்று வாதிடுவது அறிவுக்கு பொருந்துகிறதா?

இதை வைத்து சத்தியம் செய்யலாம் என்று நீங்கள் சொல்வது போல, நான் சொன்ன ஹதீஸை வைத்து அவ்வாறு சத்தியம் செய்யக்கூடாது என்று இன்னொருவன் சொல்வானே, அவனுக்கு என்ன பதிலை சொல்கிறீர்கள் என்பதையும் சேர்த்தே அல்லவா இங்கு நீங்கள் சொல்ல வேண்டும்?

சரி, அப்படியானால், இவ்வாறு இரு முரணான ஹதீஸ்கள் இருக்கும் போது அதற்குரிய பதில் என்ன?

ஒரு யூதன் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நீங்கள் இணைக் கடவுள்களை ஏற்படுத்துகின்றீர்கள். நீங்கள் இணைகற்பிக்கின்றீர்கள். (அதாவது) நீங்கள் அல்லாஹ்வும் நீங்களும் நாடியது நடந்து (என்று இறைநாட்டத்திற்கு சமமாக மனித நாட்டத்தை இணைத்துக்) கூறுகின்றீர்கள். இன்னும் கஅபாவின் மீது சத்தியமாக என்றும் கூறுகின்றீர்கள் என்று கூறினார். உடனே நபியவர்கள் (ஸஹாபாக்களாகிய) அவர்களுக்கு சத்தியம் செய்யும் போது கஅபாவின் இரட்சகன் மீது சத்தியமாக என்று கூறவேண்டும் என்றும், அல்லாஹ் நாடினான் பிறகு நீங்கள் நாடியது நடந்தது என்றுகூறவேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள்.
நூல் : நஸாயீ (3713)

என்கிற ஹதீஸ், மேலே நான் சுட்டிக்காட்டிய கேள்விக்கு விடை தருகிறது!!

அல்லாஹ் அல்லாத வேறு அனைத்து பொருட்கள் மீதும் சத்தியம் செய்கிற வழக்கம் நபி (ஸல்) அவர்களிடத்தும், சஹாபாக்களிடமும் இருந்து வந்துள்ளது !!
ஒரு யூதன் அதை குறித்து கேள்வி எழுப்பிய போது, அது சரியான கேள்வியாக தெரிந்ததால் அதை ஒப்புக்கொண்டு, இனி முதல் அவ்வாறு செய்யாதீர்கள் என்று சஹாபாக்களுக்கு கட்டளையிடுகிறார்கள்!!
ஆக,இதற்கு முன், அல்லாஹ் அல்லாத பொருட்கள் மீது நபி (ஸல்) அவர்கள் சத்தியம் செய்திருக்கிறார்கள்.
நீங்கள் சுட்டிக்காட்டிய ஹதீஸ் அதற்கு ஒரு உதாரணம்!

மேலே நான் சொல்கிற ஹதீஸின் படி, அவ்வாறு செய்வது தவறு என்று நபிகளாரே ஒப்புக்கொள்கிறார்கள். இனிமேல் அவ்வாறு செய்யாதீர்கள் என்று சஹாபாக்களுக்கு கட்டளையும் பிறப்பிக்கிறார்கள்.

இப்போது அபூதாவூத் 2829 ஹதீஸை படித்தால் தெளிவாக புரியும்!!

எனது வாதம், நான் சொல்கிற ஹதீசையும், நீங்கள் சொல்கிற ஹதீசையும் அர்த்தமுள்ளதாக்குகிறது.
நீங்கள் வக்காலத்து வாங்குகிற மவ்லூத் வரியானது, ஒரு ஹதீஸை மறுத்து, நம்மை இணை வைப்பாளன் ஆக்குகிறது.
எது சரி??

சத்தியம் செய்பவர் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும்! இல்லையெனில் வாய்மூடி இருக்கட்டும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரி 2679)

என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வருகிற மற்றுமொரு ஹதீஸை கூடுதல் ஆதாரமாக இங்கு தருகிறேன்.

அடுத்து.. நோய்களை நீக்குபவரே, என்று அழைப்பது தவறில்லையா என்று கேட்டோம்.
இதற்கும், அதே நிலை தான்.
எந்த இறை வசனத்திற்கு முரண் என்று நான் சுட்டிக்காட்டினேனோ, அந்த வசனத்திற்கு இது தான் விளக்கம் என்று எந்த விளக்கத்தையும் நீங்கள் தரவில்லை.
தராமல், நபி (ஸல்) அவர்கள் துஆ செய்ததன் பேரில் தான் எனது நோய் குணமானது என்று சஹாபாக்கள் அறிவிக்கிற ஹதீஸை ஆதாரம் என்று கூறுகிறீர்கள்.

நபியின் பிரார்த்தனையின் மூலமாக சஹாபியின் நோய் குணமானது என்பதால் எங்கள் நோய்களை குணமாக்குபவரே என்று அழைக்கலாம் என்றால் நான் நோயுறும் போது அல்லாஹ்வே எனக்கு நிவாரணம் தருகிறான். (அல்குர்ஆன் 26:80)
என்கிற இறை வசனத்திற்கு என்ன பதில்? என்பது தான் எனது கேள்வி..

சரி, தருகிற ஹதீசாவது உருப்படியான ஆதாரமாக இருக்கிறதா? அதுவும் இல்லை.

நோய்களை குணமாக்குபவரே! என்று அழைப்பது ஏன் என்று கேட்டால், நோயாளிகளுக்காக பிரார்த்தனை செய்ததை ஆதாரமாக காட்டுவது அறிவுக்கு பொருந்துகிறதா?

நோய்களை அல்லாஹ் குணமாக்குகிறான் என்பதால் தான் அல்லாஹ்விடம் துஆ செய்கிறார்கள், நீங்கள் தந்த அந்த ஹதீஸின் படி, அல்லாஹ் தான் நோய்களை குணமாக்குகிறான் என்கிற கருத்து தெளிவாக தெரிகிறது.
சஹாபி பெண்மணிக்கு நோய், அந்த நோய் குணமாவதற்காக நபி (ஸல்) அவர்கள் துஆ செய்கிறார்கள், அல்லாஹ் அந்த நோயை குணமாக்குகிறான்.
இப்போது, நோயை குணமாக்கியது அல்லாஹ்வா? நபியா ? என்று மூன்றாம் வகுப்பு படிக்கிற சிறுவனிடம் கேட்டால் அவனும் சொல்வான், அல்லாஹ் தான் என்று!!

ஆனால், மவ்லூதை எழுதிய கழிசடை சொல்கிறான்..

اَلسَّلام عَلَيْكَ يَا مُبْرِى السَّقَامِ
நோய்களைக் குணமாக்குபவரே நும் மீது ஸலாம்.

கழிசடைக்கும் வக்காலத்து வாங்கிறீர்கள் நீங்கள்!! வக்காலத்து வாங்குவது பெரிதில்லை,, எடுத்து வைக்கும் ஆதாரங்கள் ஏற்புடையதாக இருக்க வேண்டும்.

ஆக, மவ்லூதின் அபத்தமான குப்பைகள் என்று சாம்பிளுக்கு நான் தந்த நான்கு வரிகளின் நிலை இது தான்.
அதை மறுக்கிறோம் என்கிற பெயரில் சகோ. பைசல் மறுத்த லட்சணம் இது தான்.

மவ்லூத் குப்பையில் மேலே உள்ள நான்கு குப்பைகள் மட்டும் இல்லை.  இன்னும் இருக்கிறது..

وَاعْطِفْ عَلَىَّ بِعَفْوِ مِنْكَ يَشْمَلُنِيْ                فَاِنَّنِيْ عَنْكَ يَا مَوْلاَيَ لَمْ اَحِدِ
என்னெஜமான் ஆனவரேஏற்றமிகு நுமைத்தவிர அன்னியரை நிச்சயமாய் ழையேனேஆத­னால் மன்னவரேதங்களுயர் மன்னிக்கும் அரிய பண்பால் என்னிடத்தில் கழிவிரக்கம் என்றென்றும் காட்டிடுவீர்.

الْكَرَمْ
وَلُذْ بِمَنْ حَلَّ الْحَرَمْ    وَنُوْرُهُ عَمَّ الْبِلاَدِ
பாவத்தில் நீடித்திருப்பவனே! குற்றம் இழைத்துவிட்டவனே! நீ பாவமன்னிப்புக் கேள்! உன் குற்றத்தை ஒப்புக் கொள்! நபியின் கொடைத்தன்மையை எதிர்பாத்துக் கொள்


என்று கூறும் மவ்லூத் வரியானது, நபி (ஸல்) அவர்கள் நம் பாவத்தை மன்னிப்பதாக கூறப்படுகிறது.
ஏராளமான இறை வசனங்கள், அல்லாஹ் தான் பாவங்களை மன்னிப்பவன் என்று சொல்லப்பட்டுள்ளது.
அவைகளுக்கு நேர் முரணாக உள்ளது, இந்த குப்பை!

அதோடு, அல்லாஹ் யாருக்கு சிரமம் தர எண்ணுகிறானோ, அவரகளுக்கு உதவி செய்ய நபியாலும் முடியாது என்று அல்லாஹ் 5 : 41 வசனத்தில் சொல்கிறான்.


عَالِمُ سِرٍّ وَأَخْفى
அகமிய ரகசியம் அறிபவரேஆழிய மர்மம் அறிபவரேஅகமுணர்ந் திரங்கும் இறைஞ்சல்களை அன்பாய் ஏற்றுக் கொள்பவரே.


என்று சொல்லப்படும் மவ்லூத் வரியானது, 

"வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்'' என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 27:65)

 
என்கிற இறை வசனத்துடன் நேரடியாக மோதுகிறது!

சாம்பிளுக்கு இரண்டு.. அவசியப்பட்டால் இன்னும் தொடரும்.. 
மவ்லூத் குப்பை குறித்த இத்தகைய கொள்கைவாதிகளின்(?) நிலை இது தான்.

தொடர்ந்து 

வஹீ அல்லாதவஈகள் மார்க்கமாகுமா? என்கிற தலைப்பில் பேசுகிற போது, வஹீ மட்டும் தான் மார்க்கம் என்பதற்கு ஆதாரம் என்ன என்று கேட்கிறீர்கள்.
நான் ஆதாரமாக தந்த இறை வசனங்கள் அனைத்துமே வஹீ மட்டும் தான் மார்க்கம் என்று தான் சொல்கிறது.

2 :170 வசனத்தில் அல்லாஹ் அருளியதை பின்பற்றுங்கள் என்று சொல்கிறான். அல்லாஹ் அருளாததை பின்பற்றாதீர்கள் என்பது இதனுடைய பொருள்!
அருளியதை மட்டும் பின்பற்றுங்கள் என்பது தான் இதன் முழுமையான கருத்து!

இதை விட தெளிவாக, 6 :106 வசனத்தில், இறைவனிடமிருந்து அருளப்பட்டதை மட்டும் பின்பற்றுவீராக, என்று அல்லாஹ் சொல்கிறான்.
நீங்கள் கேட்ட மட்டும் என்பது இந்த வசனத்தில் சேர்த்தே தான் சொல்லப்பட்டுள்ளது.

உங்கள் இறைவனிடமிருந்து அருளப்பட்டதையே பின்பற்றுங்கள் என்று 7 :3 வசனத்தில் அல்ல்லாஹ் சொல்கிறான்.
பின்பற்றுதல் என்றாலே அது அல்ல்லாஹ்விட்டம் இருந்து கிடைக்கும் செய்திகளை மட்டும் தான் என்பதற்குர் மேலே உள்ளவை ஆதாரங்கள்.
நாம் ஆதாரம் என்று ஒன்றை சொன்னால், அவற்றை மறுக்க வேண்டும். ஏற்கனவே நான் விளக்கியதை போல, இத்தகைய போக்கு உங்கள் வாதங்கள் எதிலும் காண முடியவில்லை!!

ஒரு வரலாறை ஒருவர் பதிவு செய்து நூல் ஒன்றை வெளியிடுகிறார் என்றால் அந்த நூலை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்பதன் மூலம் அந்த வரலாறை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்பது பொருள். 
அதே சமயம், மறுமை வெற்றிக்கு இன்னின்ன விஷயங்களை செய்யுங்கள் என்று ஒருவர் ஒரு நூலில் சுயமாக எழுதினால், அதை ஏற்றுக்கொள்கிற போது அந்த நபரை ஏற்றுக்கொள்கிறேன் என்பது தான் பொருள்.

புஹாரி இமாம் என்பவர், சுயமாக மறுமை வெற்றிக்குரிய வழிகள் என்று நூல் எதுவும் எழுதவில்லை, மாறாக, நபி (ஸல்) அவர்கள் காலத்தில் அவர்கள் பேசிய, செய்த, அப்போது நடந்த சம்பவங்கள் ஆகியவற்றை தொகுத்து தரும் ஒரு வரலாற்று தொகுப்பு பணியை தான் செய்து தந்துள்ளார்.
அந்த வகையில், புஹாரி இமாம் எழுதிய நூலை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்பதன் மூலம், அவர் தொகுத்த வரலாறுகளை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்பது தான் பொருள்.!!

அப்படியானால், அந்த நூலில் உள்ள அனைத்தையும் பின்பற்ற தயாரா? என்று கேட்கிறீர்கள். இறை வசனத்திற்கு முரணாக எந்த செய்தியாவது இருந்தால் அதை பின்பற்ற கூடாது.

ஆனால், இதை கேட்க உங்களுக்கு தகுதி இருக்கிறதா? 
இல்லை என்பதற்கு ஒரு உதாரணம் - பராத் இரவு என்கீற ஒன்றுக்கு, அதை பின்பற்றுகிற இணைவைப்பாளர்கள் தரும் ஆதாரம் - அன்னை ஆயிஷா அவர்கள் அறிவிக்கக்கூடிய திர்மிதி 670 ஹதீஸாகும்.
இந்த ஹதீசை பதிவு செய்துள்ள திர்மிதி இமாமே அந்த ஹதீசின் இறுதியில் இந்த செய்தி பலகீனமான செய்தி என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
இமாம் என்ன சொன்னாலும் பின்பற்ற வேண்டும் என்கிற கொள்கையை கொண்டுள்ளவர்கள், இதையும் சேர்த்தே பின்பற்ற வேண்டுமல்லவா? பின்பற்ற மாட்டார்கள்.
இதற்கு பதில் சொல்லாமல், நம்மை நோக்கி இமாமை பின்பற்றலாமா என்கிற கேள்வியை கேட்க உங்களுக்கு தகுதி உள்ளதா?
பதில் இந்த ஒரு ஹதீசுடன் நின்று விடுமா என்றால் அதுவும் இல்லை.. அடுக்கடுக்காக பல ஹதீஸ்களை இங்கு நாம் வைத்து, அனைத்து ஹதீஸ்களிலும் அதை பதிவு செய்த நூலின் ஆசிரியரே அதை பலகீனம் என்று சொன்னதை ஆதாரத்துடன் நிரூபிப்போம். அத்தகைய ஹதீஸ்களை இன்றைய கபுர் வணங்கிக்கூட்டம் பின்பற்றிக்கொண்டு தான் உள்ளது !! 

விஷயத்திற்கு வருவோம்..

சஹாபாக்களுக்கு வஹீ கிடைக்காது,  ஆகவே அவர்களை பின்பற்றக்கூடாது என்று நாம் சொல்லும் போது, சஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்று கூறி சில ஹதீஸை முன்வைக்கிறீர்கள். 

நண்பிகையளர்களே ! நீங்கள் அல்லாஹுவுக்கும், அவனது தூதருக்கும் கட்டுபடுங்கள் ,உங்கள் அதிபருக்கும் கட்டுபடுங்கள் (அல் குர்ஹான் - 4 :59 )

என்று அல்லாஹ் சொல்வதன் மூலம் சஹாபாக்களையும் பின்பற்ற வேண்டும் என்று சொல்கிறீர்கள்.

எந்த பாமரனுக்கும் புரியும், இந்த வசனம் மார்க்க விஷயங்களில் பின்பற்றுவது குறித்து சொல்லவில்லை என்பது.
மார்க்க விஷயங்களில் பின்பற்றுவதை தான் குறிக்கிறது என்றால் உங்கள் அதிபரையும் மார்க்க விஷயங்களில் பின்பற்ற வேண்டும். 
அதிபரை பின்பற்றுங்கள் என்கிற வசனம், சஹாபாக்களை பின்பற்றுவதற்கு ஆதாரமாக ஆகுமா?

ஆகும் என்றால் உங்கள் நாட்டு அதிபரை மார்க்க விஷயங்களில் பின்பற்ற வேண்டும் என்கிற சட்டத்தையும் அமுல்ப்படுத்த தயாரா? மார்க்கம் கேலிக்கூத்தாகி விடும்!!

அடுத்து 9:100 வசனத்தை காட்டுகிறீர்.

இதுவும் அரை வேக்காடு!!

ஹிஜ்ரத் என்கிற தியாகத்தை செய்த சஹாபாக்களை சிலாகித்து சொல்கிறான் அல்லாஹ். அவ்வாறு முதலில் ஹிஜ்ரத் செய்தவர்களை பின்தொடர்ந்து யாரெல்லாம் ஹிஜ்ரத் செய்தார்களோ, அவர்களை அல்லாஹ் போருந்திக்கொண்டான் என்பது அந்த வசனம் சொல்லும் விளக்கம்.

ஹிஜ்ரத்தை முதலில் செய்தவர்களை பின்பற்றி அடுத்து செய்தவர்களையும் அல்லாஹ் போருந்திக்கொண்டான் என்பதை வைத்து மார்க்க விஷயங்களில் எந்த சஹாபி என்ன சொன்னாலும் அதை கியாமத நாள் வரை எல்லாரும் பின்பற்ற வேண்டும் என்று சொல்வது எந்த அறிவுக்காவது எட்டுகிறதா?
திர்மிதியில் இருந்து ஒரு ஹதீஸை எடுத்து காட்டுகிறீர். ஹதீஸை முழுமையான அரபிப்பதம் இருந்தால் அதை வைத்து வார்த்தைகளை நிரூபிக்கவும்.
அந்த ஹதீஸில் சஹாபாக்களின் சுன்னத்தையும் பின்பற்றுங்கள் என்கிற வாசகம் இல்லை! எனது சஹாபாக்களை பின்பற்றுங்கள் என்று மொட்டையாக இருக்கிறதா அல்லது, அதனை தொடர்ந்து வேறு ஏதேனும் வாசகங்கள் சொள்ளப்பட்டுள்ளனவா என்பது அப்போது தெரியும். நீங்கள் தர மறுத்தால், அதன் பிறகு, நாம் இந்த ஹதீஸை முழுவதுமாக தருகிறோம்.

ஏற்கனவே நாம் சொன்னது போல, வஹீயை தவிர வேறு எதையும் பின்பற்றக்கூடாது என்கிற ஏராளமான  இறை வசனங்களுக்குரிய பதிலை சொல்லி, அவற்றை மறுத்து விட்டு அதன் பிறகு இது குறித்து பேச வேண்டுமே தவிர, நான் தருகிற எந்த ஆதாரத்தையும் குறித்தும் எதுவும் பேசாமல் இருப்பது, தன் பக்கம் உண்மை இல்லை என்பதையே காட்டும்!

இறை வசனங்கள் பலவற்றில் வஹீயை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளதே அவைகளுக்குரிய விளக்கம் என்ன?
நபி (ஸல்) அவர்கள் தங்கள் வாழ்க்கையையே வஹீ மற்றும் வஹீ அல்லாதது என்று இரண்டாக பிரித்து, வஹீயை அடிப்படையாக கொண்டவற்றை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்றும், வஹீ அல்லாமல் சுயமாக தான் செய்யும் எதுவும் கூட மார்க்கமாகாது என்றும் தரம் பிரித்திருக்கும் நிலையில், அறவே வஹீ கிடைக்காத மனிதர்களுடைய சொல் செயல்கள் எப்படி மார்க்கமாகும்? 
ரசூல் (ஸல்) அவர்கள் வஹீ அல்லாமல் ஒன்றை சொன்னால் அது மார்க்கமில்லை, அதுவே வேறு நபர்கள் வஹீ அல்லாமல் சொன்னால் அது மார்க்கம், என்று அறிவுள்ள யாராவது சொல்வார்களா? என்பதற்கும் நீங்கள் பதில் சொல்ல வேண்டும்.

அடுத்து, ஒழுவின்றி குர் ஆனை தொடக்கூடாது என்று கூறினீர்கள்.
இத்தகைய கூறுகெட்ட வாதத்தை சொல்கிறீர்களே, ஒரு முஸ்லிமல்லாதவர் வந்து கேட்டால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டதற்கு, மொழியாக்கத்தை கொடுப்போம் என்று பதில் சொல்கிறீர்.
இது அதை விடவும் கூறு கெட்டதனம்!!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரோமாபுரி மன்னருக்கு எழுதிய கடிதத்தில் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்  என்கிற இறை வசனத்தை கடிதத்தில் எழுதி அனுப்பியிருக்கிறார்கள்!
அதோடு, ஆல இம்ரான் அத்தியாயத்திலிருந்து ஒரு வசனத்தையும் எழுதி அனுப்பினார்கள் என்று புஹாரியில் பதிவு செய்யப்பட ஹதீஸ் சொல்கிறது!
அதை முஸ்லிமல்லாத ஒரு நபர் படிப்பதற்காக தான் அனுப்பியிருக்கிறார்கள். !!
அதோடு , அதை எடுத்துக்கொண்டு செல்பவர் பல நாட்கள் பிரயாணப்பட்டு தான் அந்த கடிதத்தை எடுத்து செல்வார்.
ஒவ்வொரு முறை அவருக்கு ஒளு நீங்கும் போது அந்த கடிதத்தை தரையில் வைத்து விட்டு, ஒளு எடுத்த பின்னர் மீண்டும் அதை கையால் தொடுவாரா? அப்படி தான் சொல்ல வருகிறீர்களா?
உங்கள் கைப்பேசியில் குர் ஆன் சாப்ட்வேர் உள்ளது, முஸ்லிமல்லாத நண்பர் உங்கள் மொபைலை கேட்டால் தர மாட்டீர்களா?
ஒளு முறிந்து விட்டால் மீண்டும் ஒளு செய்து கொள்ளாமல் உங்கள் மொபைலை தொட மாட்டீர்களா?
அடி முட்டாள்தனமான ஒரு காரியத்தை செய்து இஸ்லாத்தை கேலிக்கூதாக்குவதற்கு வெட்கமில்லையா உங்களுக்கு?
குர் ஆன் என்பது ஓசை தானே தவிர, எழுத்து வடிவிலானது கிடையாது என்கிற அடிப்படை கூட விளங்காமல் இவ்வாறு மார்க்கத்தை கேலி செய்வது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்!

எழுத்து வடிவிலான ஒரு புத்தகத்தை இவருக்கு கொடுத்தால் கூட இந்த காபிர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அல்லாஹ் தனது திருமறையில் சொல்வதிலிருந்து, குர் ஆனை ஓசையாக தான் அல்லாஹ் தந்துள்ளான் என்பது தெளிவாகிறது.
ஒளு இல்லாமல் குர் ஆனை ஓதக்கூடாது, ஒளு இல்லாதவர், குர் ஆன் வசனங்களை கேட்க கூடாது என்று சொன்னாலாவது, மேலே உள்ள கூறு கெட்டதனத்தை விட சற்று குறைவான உளறலாக இருந்திருக்கும்..

அடுத்து, மறைவான ஞானம் நபி (ஸல்) அவர்களுக்கு தெரியாது என்பதற்கு ஆதாரமாக ஒரு ஹதீஸை சுட்டிக்காட்டினோம்.
அதை முழுவதுமாக தர முடியுமா? அதை சுக்குநூறாக உடைக்கிறேன் என்று வீராவேசம் பொங்க முழங்கியவர், நமது வாதத்தை சுக்கு நூறாக்கிய லட்சணத்தை பார்ப்போம்..

சில சிறுமிகள், சஹாபா பெருமக்களை புகழ்ந்து பாடல்கள் பாடிக்கொண்டிருக்கும் போது அவ்வழியே வந்த நபியை பார்த்ததும் நாளை நடப்பவற்றை அறிகிறவர் இதோ வருகிறார், என்று பாடுகிறார்கள்.
உடனே இதை நிறுத்த சொன்ன நபி (ஸல்) அவர்கள் இதை சொல்லாதே, மற்ற பாடல்களை வேணடுமானால் பாடு, என்று சொல்கிறார்கள்.

இதன் மூலம், நாளை நடப்பதை அறிகின்ற ஆற்றல் தமக்கு இருக்கிறது என்பதை தெளிவாக மறுத்து, அல்லாஹ்வுக்கு இணையாக தம்மை யாரும் கருதி விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமுடன் செயல்பட்டு வந்துள்ளனர் நபிகளார்.

இதற்கு விளக்கம் சொல்கிறேன் என்ற பெயரில், ஏன் அவ்வாறு நிறுத்த சொன்னார்கள் தெரியுமா, சஹாபாக்களை புகழ்கிற சமயத்தில் தம்மை புகழ வேண்டாம் என்பதால் தான் என்கிறீர்கள்.
இது யார் கொடுத்துள்ள விளக்கம்?
சுயமாக உங்களுக்கு தோன்றுகிற காரணங்களையெல்லாம்  ஹதீசுக்கு விளக்கம் என்ற பெயரில் சொல்லி விட்டால் சரியாகி விடுமா? காரணத்தை ரசூல் (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்களா? இல்லை.
சரி, இது தான் காரணம் என்று வேறெந்த சஹாபியாவது சொல்லியிருக்கிறார்களா?
நீங்களாக யூகிதுகொண்டு ஒரு காரணத்தை சொன்னால், அது போன்று நாமும் பல காரணங்களை பல ஹதீஸ்களுக்கும் சொல்லலாமே.
நாளை நடப்பதை அறிகின்ற ஆற்றல் அவர்களுக்கு இல்லை என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கிறதே, அவைகளுக்கெல்லாம் உங்கள் பதிலை சொல்லி, அதன் பிறகல்லவா இதை சொல்ல வேண்டும்.
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கக்கூடிய ஹதீஸ் ஒன்றில், மூன்று விஷயங்களை யார் சொன்னாலும் அவர் பொய்யர்! அதில் ஒன்று நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான ஞானம் உள்ளது, என்று சொல்பவர்.. என்று சொல்கிறார்களே, 

இதற்கு என்ன பதில்?

எனக்கு மட்டும் மறைவானவை தெரிந்திருக்குமானால், அதிகமதிகமாக நன்மைகளை நான் செய்திருப்பேனே, எந்த தீங்கும் என்னை நேராதவாறு என்னை காத்துக்கொண்டிருப்பேனே, என்று நபி (ஸல்) அவர்கள் சொல்வதாக அல்லாஹ் (7:188 ) வசனத்தில் சொல்கிறானே, அதற்கு என்ன பொருள்?

சில மறைவான விஷயங்களை அவர்கள் அறிவித்திருக்கிறார்கள் என்றால், அல்லாஹ் சொல்லிக்கொடுத்தான் அடிப்படையில் அறிவித்திருக்கிறார்கள். சொல்லிக்கொடுக்கவில்லை என்றால் தெரியாது.
சிலவற்றை சொல்லிக்கொடுத்துள்ளான் என்பதை நாமும் மறுக்கவேயில்லை. அனைத்தையும் சொல்லிக்கொடுத்துள்ளானா என்பது தான் எனது கேள்வி.
அனைத்தையும் சொல்லிக்கொடுத்துள்ளான் என்றால் மேலே நான் குறிப்பிட்டுள்ள இறை வசனங்களுக்கும் ஹதீஸுக்கும் உரிய பதிலை நீங்கள் தர வேண்டும்.

மறைவான அனைத்து விஷயமும் அவர்களுக்கு தெரியும் என்றால் யுத்தத்தின் போது அவர்களுக்கு கடவாய்ப்பற்கள்  உடைக்கட்டிருக்குமா ?
உடைக்கப்பட்டிருக்காது. ! அப்படி தான் 7 :188 வசனத்தில் அவர்கள் சொல்கிறார்கள்!!

மறைவான அனைத்து விஷயமும் அவர்களுக்கு தெரியும் என்றால் தூரத்தில் ஏற்ப்பட்ட சத்தம் எதனால் ஏற்ப்பட்டது என்பதை அறிந்து கொள்வதற்காக இரவோடு இரவாக குதிரையில் பயணப்பட்டு நபி (ஸல்) அவர்கள் ஏன் சென்றார்கள்?

மறைவான அனைத்து விஷயமும் அவர்களுக்கு தெரியும் என்றால்  சஹாபாக்களை கொலை செய்யத்தான் அழைக்கிறார்கள் என்பதை அறியாமல் எதிரிகளுடனான உடன்படிக்கைக்கு சஹாபாக்களை ஏன் அனுப்பினார்கள்? தெரிந்தே தான் அனுப்பினார்கள் என்று சொல்ல வருகிறீரா?

மறைவான அனைத்து விஷயமும் அவர்களுக்கு தெரியும் என்றால் , ஆயிஷா அம்மா மீது அவதூறு சொல்லப்பட்ட போது, அதை நினைத்து அவர்கள் சொல்லனா மனவேதனையை ஏன் அடைய வேண்டும்?
இவ்வாறு அவதூறுகள் பரவும் என்பது முன்க்கூட்டிய அவர்களுக்கு தெரியும் எனும் போது, ஆயிஷா அம்மாவையும் தன்னுடனே அவர்கள் அழைத்துக்கொண்டே சென்றிருக்கலாமே?

மறைவான அனைத்து விஷயமும் அவர்களுக்கு தெரியும் என்றால் தன் மனைவி மீது அவதூறு கிளம்பியதும், அதை அறிவதற்காக ஆயிஷா அம்மாவின் பணிப் பெண்ணிடமேல்லாம் இதை குறித்து ஏன் விசாரிக்க வேண்டும்?

அனைத்து மறைவான விஷயங்களையும் அறிவித்து விட்டார்கள் என்கிற ஒரு ஹதீஸை இதற்கு ஆதாரமாக காட்டுகிறீர்கள். அது பலகீனமான் செய்தி என்பது ஒரு புறம் இருக்கட்டும்  .
ஒரு வாதத்திற்கு சரியான அறிவிப்பு என்றே வைப்போம், மறைவான, இனிமேல் நடக்கப்போகிற எல்லா விஷயங்களையும், நாளை நடக்கப்போகிற விஷயங்களையும் , கியாமத் நாள் வரை உள்ள சம்பவங்களையும் நபி (ஸல்) அவர்கள் ஒருவருக்கு சொல்ல வேணடுமானால், தமத்து வாழ்நாள் முழுவதும் சொல்லிக்கொண்டே தான் இருக்க வேண்டும். அவர்கள் காலத்தில், ஆப்ரிகா கண்டத்தில் வசிக்கக்கூடிய ஒரு எறும்பு இப்போது என்ன செய்துக்கொண்டிருக்கிறது தெரியுமா? என்று அதையும் அவர்கள் சொல்ல வேண்டும். 
சொர்கதிற்குரிய , நரகத்திற்குரிய ஒவ்வொரூ நபரையும் பெயர் குறிப்பிட்டு, இவர் நரகத்திற்கு செல்வார், இவர் சொர்கத்திற்கு செல்வார் என்று சொல்ல துவங்கினால், தமத்து நபித்துவ வாழ்வில் பெரும்பகுதியை இதை அறிவிப்பதற்கு தான் அவர்கள் செலவிடிருக்க வேண்டும். 
இதை மறுத்து, இல்லை, எல்லாவற்றையும் இல்லை, அவசியமான செய்திகளை மட்டும் சொன்னார்கள் என்று நீங்கள் பதில் சொல்வீர்கள் என்றால், அவசியமான சில செய்திகள் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது, மற்ற எதுவும் அவர்களுக்கு தெரியவில்லை என்பதை நீங்களே ஒப்புக்கொண்டவராவீர் !

ஆக, எந்த நிலையிலும் உங்கள் கொள்கை ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இல்லவே இல்லை. அல்லாஹ்வுக்கு இணை வைப்பதை பெரும் பாவமாக அவன் சொல்லும் போது, அதை கூட நியாயப்படுத்தி, விவாதமெல்லாம் செய்யாதீர்கள். அல்லாஹ் பார்த்துக்கொண்டிருக்கிறான்.
மவ்லூதை எதிர்ப்பதால் எனக்கு என்ன லாபம்? எதுவும் கிடையாது!
விவாதம் செய்து யார் வெற்றியாளர் என்று பார்ப்பது எனது நோக்கமாகவோ உங்கள் நோக்கமாகவோ இருக்க வேண்டாம். மறுமை வெற்றிக்காகவே நாம் அனைவரும் இவ்வுலகில் வாழ்கிறோம் என்பதை கவனத்தில் கொண்டு, அதனை நோக்கி மட்டுமே செல்வோம்.. தனி நபரை புகழ்த்தியோ, அல்லது தாழ்த்தியோ நமக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை. அந்த தனி நபர் கூட நாளை அல்லாஹ்விடம் கை கட்டி தான் நிர்க்கப்போகிறார்!

இறை வசனங்களை சிந்தித்து பின்பற்றுங்கள்.

வேறு தலைப்புகளான, கபுர் வணங்கி யார், சிலையை யார் வணங்குகிறார், அல்லாஹ்வின் உருவம், ஒழுவின்றி குரானை தொடுதல், மறைவான ஞானம், வஹீ அல்லாதவற்றை பின்பற்றுதல் போன்ற எந்த தலைப்பை குறித்து பேசுவதற்கும் நாம் எப்போதும் தயார் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்..

வஸ்ஸலாம். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக