செவ்வாய், 17 ஜூலை, 2012

தினத்தந்தியை கண்டித்தது நியாயம் தானா?

எதிர் வாதம் :  அஸ்ஸலாமு அலைக்கும் 
சகோ.நாஷித் அஹமத்,
தினத்தந்தி காவி மயமாக ஆகி வருவது உண்மைதான். 
ஆனால், இந்த பிரச்சினையில்...
அங்கே சென்று அந்த தலையங்கத்தை படித்தேன்.........
அதில் நமது இஸ்லாமிய சமுதாயத்தை பற்றி பெயர் குறிப்பிட்டோ... சூசகமாகவோ... கூட தவறாக சொல்லப்படவில்லை. பொதுவாகவே மாநிலம் முழுதும் என்று  நாட்டை குறிப்பிடாமல்..... (முஸ்லிம்கள் நாடு முழுதும் உள்ளோம்) 18 வயதுக்கு குறைவான பெண்ணுக்கு திருமணம் செய்யக்கூடாது என்பதை துச்சமாக மதிக்கும் சமுதாயம் இருக்கிறது என்று கூறுகிறது. நமக்கு இந்த சட்டம் இல்லை என்று தெரியும். அவர்களுக்குத்தான் அந்த சட்டம். அந்த சட்டத்தை ஏதோ ஒரு சாதி மதிப்பதில்லை என்று இதில் இருந்து புரிகிறது. அந்த குறிப்பிட்ட சாதிக்கு எதிராக புகச்ச்சலை கிளப்பும் ஒரு வரி இது என்றே எண்ணலாம். மாநிலம் என்று கூறுவதால்... அது ஏதோ ஒரு சாதியை தாக்குகிரது. நாடு முழுதும் உள்ள நம்மை அல்ல. தேவையே இல்லாமல் அதில் நம்மை வலுக்கட்டாயமாக நிழைத்து அது நமக்கு சொல்லப்பட்டது என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லாத நிலையில்... சம்மன் இல்ல்லாமல் ஆஜர் ஆவது வேஸ்ட்.....! :-))) 





நமது பதில் :
அஸ்ஸலாமு அலைக்கும்.

அவர்களுக்கு சார்பாக இப்படியும் பேசுவதற்கு ஆள் இருப்பார்கள் என்கிற நோக்கில் தான் பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் இது போன்ற ஊடகங்கள் தொடர்ந்து வன்மத்தை கக்கி வருகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

18 வயதிற்கு கீழ் திருமணம் செய்ய கூடாது, அது தான் நாட்டு சட்டம், அதை ஒரு சமுதாயம் துச்சமாக மதிக்கிறது ,  என்று பொதுவாக சொன்னால் அது முஸ்லிம்களை குறிக்காது என்று எப்படி எடுத்துக்கொள்ள முடியும்? 
முஸ்லிம்களை இவர்கள் சொல்லவில்லை, வேறு சாதியினரை தான் சொன்னார்கள் என்று இருந்தால் அதை தெளிவான முறையில் இவர்கள் குறிப்பிட்டு எழுத வேண்டும், அந்த சாதியினரின் பெயரை  குறிப்பிட முடியாதென்றால், 18 வயதிற்குள் திருமணம் செய்ய கூடாது என்கிற சட்டம் இருக்கிறது, ஆனாலும் இஸ்லாமியர்களுக்கு இதில் அவர்களது தனியார் சட்டத்திலேயே விதி விலக்கு இருக்கிறது, இருப்பினும், விதிவிலக்கு பெறாத வேறு சில சமுதாயம் இந்த சட்டத்தை துச்சமாக மதிக்கிறது என்று விளக்கி எழுத வேண்டும். 
அதை விட்டு விட்டு, 18 வயதிற்கு மேல் தான் திருமணம் செய்ய வேண்டும், அது தான் இந்த நாட்டு சட்டம், அதை சிலர் மீறுகிறார்கள் என்றால் அது இஸ்லாமியர்களையும் உட்படுத்தி சொன்னதாக தான் அந்த வார்த்தையின் படியும் பொருளாகிறது, தவிர, தினத்தந்தியின் சமீபத்திய காவி சிந்தனையும் இதையே தான் நமக்கு காட்டுகிறது.

மேலும், இந்த துண்டு பிரசுரம் வெளியான தேதி ஜூலை 9 .
ஜூன் 25 ஆம் தேதி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் இது போன்று 18 வயதிற்கு குறைவான ஒரு முஸ்லிம் பெண்ணிற்கு இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடத்திய போது அதில் அவசியமில்லாமல் காவல் துறை குறிக்கிட்டு பிரச்சனை ஏற்படுத்தியதையும் , தவ்ஹீத் ஜமாஅத் களமிறங்கி நம் உரிமைகளை மீட்டெடுத்தது பற்றியும் ஊடகங்களில் பரபரப்பான செய்தி வெளியாகின. 
இந்த சம்பவத்திற்கு பிறகு தினத்தந்தி போன்ற ஒரு ஜனரஞ்சக பத்திரிக்கை இப்படி கண்டனம் வெளியிட்டால் அது முஸ்லிம்களை குறிக்கவில்லை, என்று அப்பாவித்தனமாக சொல்வது, நம்மை நாமே மூடனாக்கி கொள்வதாகும்.! அறியாமையில் இருக்கலாம், மூடதனத்துடன் இருக்க கூடாது, இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக