ஞாயிறு, 15 ஜூலை, 2012

சூனியம் - புரிய வேண்டிய அளவுகோல்

 அஸ்ஸலாமு அலைக்கும்..

நபி (ஸல்) அவர்கள் ஆறு மாத காலம் மன நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்கள் என்று நம்புவது , குர் ஆனை அல்லாஹ் பாதுகாப்பான் என்பதற்கு முரண் என்று நாம் சொல்லும் போது, "ஏன்? அல்லாஹ் பாதுகாப்பான் என்று சொன்னால், அவர்கள் மன நோயால் பாதிக்கப்பட்டாலும் பாதுகாப்பான் என்று தான் புரிய வேண்டும், அல்லாஹ்வுக்கு அது சாத்தியமில்லையா ? என்று சிலர் கேட்கின்றனர்.

இவர்கள் ஒரு அடிப்படையை புரியவில்லை - அல்லாஹ் பாதுகாப்பான் என்பதனுடைய பொருள், பாதுகாப்பதற்குரிய எல்லா வழிகளையும் திறந்து வைப்பான் என்பதாகும். பாதுகாப்புக்கு தடங்கல் ஏற்பபடுதவல்ல எல்லா புறக்காரணங்களையும் அப்புறப்படுத்தி, அதன் மூலம் பாதுகாப்பான் என்பது தான் இதன் பொருள்.

இதை நாம் சுயமாகவும் சொல்லவில்லை - இதையும் அல்லாஹ்வே தனது திருமறையில் சொல்கிறான்.

29 ;48 வசனத்தில், "இந்த தூதருக்கு எழுதவோ படிக்கவோ நாம் கற்றுக்கொடுக்கவில்லை. அவ்வாறு கற்றுக்கொடுதிருந்தால், இதை காரணம் காட்டியே இறை மறுப்பாளர்கள் இந்த வேதத்தின் மீது சந்தேகம் கொண்டிருப்பார்கள், என்று அல்லாஹ் சொல்வது, சூனியம் குறித்த உங்களது கேள்விக்கே பதிலாக அமைந்துள்ளது .


இது இறை வேதம் தான் என்று பாதுகாக்க வேணடுமானால், நபி (ஸல்) அவர்களுக்கு எழுதப்படிக்க கற்றுக்கொடுத்து , அதன் பிறகும் கூட வேதத்தை பாதுகாத்திருக்க முடியும். அல்லாஹ்வுக்கு அந்த ஆற்றல் கூட உள்ளது !! 
ஆனால், இது மனித கையாடலாக இருக்குமோ? என்கிற சந்தேகம் கூட வரக்கூடாது என்பதில் அல்லாஹ் கவனமாக இருக்கிறான் என்பதற்கு மேற்கண்ட வசனம் ஆத்ஹாரமாக அமைந்துள்ளது.
வேதத்தை பாதுகாக்கவும் செய்ய வேண்டும், பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக தோன்றக்கூடிய எல்லா வாசல்களை அடைக்கவும் செய்ய வேண்டும்.

இது தான் அல்லாஹ்வின் அளவுகோல்.

இதே அளவுகோல் கொண்டு சூனியத்தையும் சிந்தித்தால் குழப்பமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக