ஞாயிறு, 15 ஜூலை, 2012

நக்கிப்பிழைக்கும் தமுமுக


மற்றுமொரு சான்று !!!


அஸ்ஸலாமு அலைக்கும்.

பாகிஸ்தானில், கட்டாய மதமாற்றம் நடைபெறுகிறது என்று ஒரு பொய்யை பரப்பி, அதன் மூலம் இங்குள்ள பெரும்பான்மை சமூகத்தை தூண்டி விடக்கூடிய விஷமமான செயலை கடந்த வாரம் தினத்தந்தி செய்தது.
அங்குள்ள இந்து பெண்கள் ஆயிரக்கணக்கில் கடத்தப்பட்டு முஸ்லிம்களாக மாற்றப்பட்டு வருகிறார்கள் என்றும், இந்தியாவில் முஸ்லிம்கள் எல்லா சலுகைகளையும் பெற்று சந்தோஷமாக வாழ்கிறார்கள் எனவும் கூறி, தனது பாஜக ஊதுகுழல் வேலையை வெளிப்படையாகவே செய்திருக்கிறது தினத்தந்தி !
இது குறித்து தமிழக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி தினத்தந்தியை முழுமையான முறையில் புறக்கணித்து, அவர்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்கிற இறுமாப்புடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இரண்டு மாத செயல் திட்டம் வகுத்துள்ளது, அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், அரசியலில் கால் பதித்து அதன் மூலம் கிடைக்கும் விளம்பரத்தையும் சுயலாபத்தையுமே தமது ஒரே லட்சியமாக கொண்டு செயல்பட்டு வரும் தமுமுக போன்ற கேடுகெட்ட இஸ்லாமிய பெயர்தாங்கிகள், வழக்கம் போல இதற்கும் முட்டுக்கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

தினத்தந்தியை கண்டித்தது போலவும் இருக்க வேண்டும் என்பதற்காக அதிரடியாக "தினத்தந்திக்கு தமுமுக மறுப்பு"என்று தலைப்பு இட்டு விட்டு, உள்ளே மிகவும் மென்மையான முறையில் தங்கள் மறுப்பை சொல்லிய விதத்தை படிக்கும் எவரும் புரிவார்கள், இவர்களின் கேடு கெட்ட பச்சோந்தித்தனத்தை.
மேலும்,
ஹிந்துக்களிடையே ஒரு வெறுப்பை ஏற்படுத்தி முஸ்லிம்களுக்கு எதிராக அவர்களை தூண்டி விட வேண்டும் என்று விரும்புகிற ஆர்எஸ்எஸ்ஸுக்கும், பாஜகவுக்கும் ஊதுகுழலாக செயல்பட்டு தங்களது காவி சிந்தனையை வெளிப்படையாகவே காட்டியுள்ள   தினத்தந்தியின் அந்த செய்திக்கு இந்த கேடுகெட்ட தமுமுக கொடுத்த மறுப்பின் லட்சணம்..

""பாகிஸ்தானில் வாழும் எமது தொப்புள் கொடி உறவான சிறுபான்மை இந்துக்கள் சந்திக்கும் இன்னல்களை குறித்து அத்தலையங்கம் கவலை தெரிவித்தது நியாயமே. அதை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்.""

முஸ்லிம்கள் பாதிக்கப்படுவதோ பற்றியோ, நமது மார்க்க கொள்கை கேலிக்குரியதாக ஆக்கப்படுவது பற்றியோ எள்ளளவும் அக்கறையில்லாதவர்கள் தான் இந்த தமுமுகவினர் என்பதை கடந்த பல வருடங்களாக பல சம்பவங்கள் நமக்கு உணர்த்தியுள்ளன. 

முஸ்லிம்களுக்கான இட ஒதிக்கீட்டை கூட தர விரும்பாமல் அரசியல் கட்சிகள் இழுத்தடித்த போது அதை கண்டு முஸ்லிம் சமுதாயமே வெகுண்டேழுத போது, இந்த கழிசடைகள் மட்டும், அது ரோஸ்டர் முறையில் கிடைக்கும் என்று கூறி அப்போதைய திமுக அரசுக்கு வால் பிடித்து சுயலாபம் அடைந்தது முதல், 
பாபர் மஸ்ஜித் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்பது முதல், 
தானே புயல் பாதிப்பிற்கு அம்மா செய்துள்ள நிவாரண உதவிகளை பார்க்கிற போது எங்கள் ஊரிலும் இது போன்று புயல் வந்து ஊரையெல்லாம் அடித்துக்கொண்டு போகாதா என்று ஒவ்வொரு மனிதனும் ஆசைப்படுகிறான் என்று கூறி ஜெயலலிதாவின் வாலை நக்கியது வரை, இவர்களின் அரசியல் ஜால்ரா பட்டியல் மிக நீளம்.

அந்த பட்டியலில் இப்போது தினத்தந்தியின் விஷமதனதிற்கு இவர்கள் அடித்துள்ள ஜால்ராவும் இடம் பிடித்துள்ளது. 
இந்த சமுதாயம் இவர்களை துடைப்பக்கட்டையால் துரத்துகிற காலம் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் தெரிகிறது.. இன்ஷா அல்லாஹ்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக