அஸ்ஸலாமு அலைக்கும்..
கீழாடையின் அளவை பொறுத்தவரை, நான்கு விதமாக ஹதீஸ்களில் சொல்லப்பட்டுள்ளன.
- கரண்டைக்கு மேல் தான் அணிய வேண்டும் என்றும்,
- கரண்டைக்கு கீழ் அணியலாம், தரையில் தொடக்கூடாது என்றும்
- தரையில் இழுபடக்கூடாது என்றும்
- தரையில் தொடுவதாக இருந்தாலும், அது பகட்டுக்காகவும் பெருமைக்காகவும் இருக்க கூடாது என்றும்
நான்கு விதமாக ஹதீஸ்கள் வருகின்றன.
சட்டம் எடுக்கும் போது எல்லா ஹதீஸ்களையும், அது சொல்லும் சட்டங்களையும் அனுசரித்து தான் முடிவு செய்ய வேண்டும்.
தவிர, தொழுகைக்கும் தொழுகை அல்லாத நேரங்களிலும் ஒரே மாதிரியான அளவை தான் ஹதீஸ் சொல்கிறது. தொழுகைக்கு என்று தனியாக எந்த அளவுகோலும் கிடையாது !
கூடுதல் விபரங்களுக்கு சகோ. அப்பாஸ் அலி அவர்களின் இந்த ஆய்வுக்கட்டுரையை படித்து, மாற்றுக்கருத்துக்கள் இருந்தால் தெரியப்படுத்தவும்..
கூடுதல் விபரங்களுக்கு சகோ. அப்பாஸ் அலி அவர்களின் இந்த ஆய்வுக்கட்டுரையை படித்து, மாற்றுக்கருத்துக்கள் இருந்தால் தெரியப்படுத்தவும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக