செவ்வாய், 17 ஜூலை, 2012

பயணிகள் பிறையை எப்படி தீர்மானிப்பது?
கேள்வி : 


அஸ்ஸலாமு அழைக்கும்.
 சகோதரர் நாஷித் அஹ்மத் அவர்களே,
ஒருவர் சவுதியில் இருக்கும்போது நோன்பை ஆரம்பித்து அம்மாதம் 30ல் முடிவதாக இருந்தால் அவர் ஊருக்கு வரும்போது இங்குள்ளவர்கள் சவுதிக்கு மறுநாள் நோன்பை ஆரம்பித்து அவர்களும் 30 ஐ பூர்த்தி செய்தால் சவுதியில் இருந்து வந்தவர் 31 நோன்பு வைக்கும் நிலை ஏற்படுமே அவர் எப்படி நடந்து கொள்வது .
பதில் :

வ  அலைக்குமுஸ்ஸலாம்.

சகோதரர் மிகவும் பயனுள்ள கேள்வியையே கேட்டுள்ளீர்கள்.

பதில் சொல்வதற்கு முன்னர், சகோ. நிஞ்சா அவர்கள் ஜாக் அனுதாபி ஒருவரை பற்றி கூறிய செயலுக்கும் சகோ. மசூத் இப்போது கேட்பதற்கும் உள்ள வேறுபாட்டை சொல்லி விடுகிறேன்.


சகோ. நிஞ்ச அவர்கள் கூறியது, அந்த சகோ. இந்த ஊரிலேயே இருக்கக்கூடியவர். இங்கேயே இருந்து கொண்டு, இங்குள்ள பிறையை ஏற்காமல், சவுதியை தான் பின்பற்றவேண்டும் என்ற கொள்கையை கொண்டு, அங்குள்ள பிறை தகவலின் படி நோன்பை துவக்குகிறார்.

பின், அங்குள்ள பிறையை வைத்தே நோன்பை விடவும் செய்கிறார்.
சவுதியை உலகம் முழுவதும் பின்பற்றலாமா கூடாதா என்ற வாதத்திற்கு நாம் செல்ல வேண்டாம்.
இந்த சகோதரர், தான் கொண்ட கொள்கையின் படி உறுதியாக செயல்படக்கூடியவறேன்றால், அவர், சவுதியை பார்த்து நோன்பை விடும் கொள்கையை கொண்டவரானதால் , சவுதி என்றைக்கு பெருநாளை கொண்டாடுகிறதோ, அன்றைக்கு தான் இவரும்  கொண்டாட வேண்டும் .

நோன்பை துவக்குவதற்கும், முடிப்பதற்கும் சவூதி, பெருநாளுக்கு மட்டும் நமது ஊர், என்ற பாகுபாடு, அப்பட்ட கொள்கையற்ற தன்மையே தவிர வேறில்லை.
இவர் மார்க்கத்தை கேலி செய்கிறார் என்று நாம் முன்னர் சொன்னது இவருக்கு பொருந்தும்.


இப்போது , சகோ. மசூத் அவர்களின் கேள்விக்கு வருவோம்.

அவர் கேட்டது, ஒருவர் தத்தமது ஊரில் பிறை பார்த்து தான் நோன்பை வைக்க வேண்டும் என்ற கொள்கையுடையவர்.
அதன் படி, சவுதியில் பிறை பார்க்கப்பட்டதன் அடிப்படையில் அங்கு ரமலானை துவக்கிய அவர், மாதத்தின் இறுதியில் தன் சொந்த ஊருக்கு வருகிறார்.
ஊரில், சவுதிக்கு ஒரு நாள் பின்னர் முதல் பிறை தென்பட்டதால்,  இவர் முப்பதை பூர்த்தி செய்யும் போது (உதாரணம் திங்கள்கிழமை) , ஊரில் உள்ளவர்களுக்கு 29 தான் ஆகியிருக்கும்.  
ஊரில், பிறை தென்படாவிட்டால், அவர்கள் 30 ஐ பூர்த்தி செய்து விட்டு, அதற்கடுத்த நாள் (புதன்கிழமை)  தான் பெருநாள் கொண்டாடுவார்கள்.

ஆனால், திங்கள் அன்ற மாதத்தை பூர்த்தி  செய்த ஒருவர், இந்த நிலைமையில் என்ன செய்வது? 30 ஐ  பூர்த்தி செய்து விட்டதால், ஊரோடு ஒன்றாமல், செவ்வாய் அன்று பெருநாள் கொண்டாடுவதா அல்லது, செவ்வாய் அன்று நோன்பும் இல்லாமல், பெருநாளும் கொண்டாடாமல், வெறுமனே இருந்து விட்டு, அனைவருடனும் சேர்ந்து புதன் அன்று பெருநாள் கொண்டாடுவதா?

ஊரில் அல்லது ஊரை சார்ந்த பகுதியில் பிறை பார்த்து தான் நோன்பை வைக்க வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக உள்ளவர் இவர். 

"நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்பு பெருநாள்", என்ற ஹதீஸின் படி, தன்  அடிப்படை கொள்கைக்கு முரண் இல்லாத வகையில், ஊரோடும், குடும்பத்தோடும் சேர்ந்து பெருநாள் என்று ஒரு நாளை தீர்மானிப்பதற்கு நமக்கு அனுமதி உள்ளது என்ற வகையில்,  இவர் கொண்டுள்ள கொள்கையில் உறுதியாக இருக்கும் நிலையிலேயே, , அவரையும் மீறி, அவர் நிர்பந்ததிர்க்குள்ளாகும் போது, மார்க்கம் அவர் விரும்புகிற வழியை தேர்ந்தெடுக்க அவருக்கு அனுமதி வழங்குகிறது.

அதாவது, தனி நபராக, பெருநாள் தொழுகை தொழ முடியாது என்பதால், செவ்வாய்க்கிழமை அன்று வேறு ஏதேனும் பிரிவுகள் (கொள்கையுடையவர்கள்) பெருநாள் கொண்டாடுவார்களேயானால், அவர்களுடன் இணைந்து இவர் தொழுதால், அதுவும் அனுமதிக்கப்பட்டது தான்.

அல்லது, இவரது குடும்பத்துடன் இவர் பெருநாள் தொழுகை தொழுது, அந்த நாளை கொண்டாட விரும்பினால், செவ்வாய் அன்று  (நோன்பு வைக்காமல் !) வெறுமனே கழித்து விட்டு, புதன் அன்று தன் ஊரோடு ஒத்து செல்வதற்கும் அனுமதி  உள்ளது என்பதே, நாம் பலமுறை, மார்க்க அறிஞர்கள் மூலம் விசாரித்து அறிந்து வைத்திருக்க கூடிய செய்தி.

நான் இதை சரி என்று நம்புவதால் தங்களுக்கு இதை  அப்படியே சொல்கிறேன்.
இதை மறுக்கும் வகையில் வேறு யாரேனும் தெளிவாக கருத்து சொல்வார்களேயானால், நமது இந்த கொள்கை தவறாகி விடும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

எந்த மறுப்பும் இதற்கு இல்லாதவரை, நாம் கூறும் இந்த சட்டமே சரி !
இதையும் பார்க்கவும்.. http://nashidahmed.blogspot.com/2012/07/blog-post_1182.html
1 கருத்து:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்
    இந்த தவறான பதிவுக்கு மறுப்பு கருத்துக்களை பின்னூட்டங்ககளாக...
    http://nashidahmed.blogspot.com/2012/07/blog-post_1182.html
    ---இந்த பதிவில் இட்டுள்ளேன்..!

    பதிலளிநீக்கு