வியாழன், 6 ஜனவரி, 2011

அர்த்தமற்ற சவால்!

அஸ்ஸலாமு அலைக்கும்
உரையாடல்களை அனைத்தையும் பதிந்தால் தன்னுடைய இயலாமை வெளிப்பட்டுவிடும் என்று பயந்து கடைசி செய்திகளை மட்டும் எடுத்து போட்டு மக்களை தன் பக்கமே இருங்கள் என கெஞ்சுவதால் மக்கள் கண்மூடி உங்களை பின்பற்றுவார்கள் என நாஷித் நினைப்பது எந்த அளவிற்கு சரி என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தைரியம் இருந்தால் நமக்குள் நடக்கும் அனைத்து உரையாடல்களையும் பதிவிடுங்கள் பார்ப்போம்.
இப்படிக்கு
சிராஜ் ஏர்வாடி




சகோ. ஏர்வாடி சிராஜ் நம்மை நோக்கி இவ்வாறு சவால் விட எந்த முகாந்திரமும் இல்லை. உங்களை நோக்கி நான் எழுப்பியக்கேள்விகளில் எந்தெந்த கேள்விகளுக்கு நீங்கள் பதில் அளிக்கவில்லையோ, அதை தொகுத்து எனது ப்ளாக்கில் எழுதியுள்ளேன். இதற்காக, அனைத்து உரையாடல்களையும் நான் பதிக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. அனைத்திற்கும் உண்டான தொகுப்பு என்று அதை நான் கருதுவதால் அதை வெளியிட்டேன்.

ஏதோ, நாம் இருவரும் ரகசியமாக வாதம் செய்து வருவதை போலவும், இப்போது எனது ப்ளாக்கில் ஒரு பகுதியை மட்டும் வெளியிட்டு மற்றவைகளை மறைத்து விட்டதை போலவும் பேசுவது சரியல்ல!
நாம் வாதிப்பதும் பொதுவான குழுமத்தின் மத்தியில் தான். இதில் , நம் வாதங்களை பார்க்கும் மக்களில் சரி பாதி பேர் தான் எனது ப்ளாக்கை பார்ப்பார்கள். அல்லது, எனது ப்ளாக்கை பார்ப்பவர்களை விடவும் பல மடங்கு அதிகமான நபர்கள் இக்குழுமங்களில் இருக்கிறார்கள்.
ஆக, நமது வாதங்கள் ஏற்கனவே பலர் மத்தியில் பரப்பப்பட்டு தான் வருகின்றன

எந்தெந்த மெயில்கள் முக்கியத்துவம் வாய்ந்தது என்று நான் கருதுகிறேனோ, அதை நான் என் ப்ளாக்கில் பதிக்கிறேன். முக்கியத்துவும் இல்லாதது என்று நான் கருதுபவற்றை நான் வெளியிட மாட்டேன், அது உங்கள் எழுத்தாக இருந்தாலும், சரி, எனது மெயில்களாக இருந்தாலும் சரி.

உங்களுக்கு வேணடுமானால், இன்னொரு 100 மின்னஞ்சல் முகவரியை தந்து, தைரியமிருந்தால் இவர்களுக்கும் காபி வைத்து அனுப்புங்கள் பார்க்கலாம் என்று வேணடுமானால் சொல்லுங்கள். அதை நாம் ஏற்றுக்கொள்வோம்.
உங்கள் தவறான கொள்கை பிறருக்கு அறிவிப்பதில் நான் என்றைக்கும் முன்னோடி!

அதை விடுத்து, எனது ப்ளாக்கில் நான் குறிப்பிட்ட சில கட்டுரைகளை எழுதி வெளியிடுவதை குறை சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை.
அது எனது தனிப்பட்ட விருப்பத்தை சார்ந்தது.

முழுவதையும் என்னால் வெளியிட இயலாது. ஒவ்வொன்றையும் தொகுக்க அதிக நேரம் எடுக்கும்.
முடிந்தால் நீங்கள் நமது அனைத்து வாதங்களையும் தொகுத்து அனுப்பி தாருங்கள். நான் எனது ப்ளாக்கில் வெளியிடுகிறேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக