(நபியே !) அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராக!அல்லாஹ் தேவைகளற்றவன்.(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.அவனுக்கு நிகராக யாருமில்லை.(112 : 1-4)
திங்கள், 10 ஜனவரி, 2011
ஆதாரம் - 9
ரமளானின் கடைசி நாள் பற்றி மக்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இரு கிராமவாசிகள் வந்து நேற்று மாலை பிறை பார்த்தோம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சாட்சி சொன்னார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறும் பெருநாள் திடலுக்கு செல்லுமாறும் மக்களுக்கு கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் : ரிப்யீ பின் கிராஷ்
நூல் : அபு தாவூத்
அதாவது, கிராமவாசிகள் நேற்று பிறை பார்த்தார்கள் என்பதை வைத்து தான் அனைவரையும் நோன்பை விடுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகிறார்கள்.
ஒவ்வொரு மாதமும் பிறை பார்த்து முடிவு செய்யாமல், அடுத்த மாதத்திற்கு எத்தனை நாள் என்று இன்றே நபி (ஸல்) அவர்கள் முடிவு செய்யக்கூடியவர்களாக இருந்தால் , கிராமவாசிகளிடம் என்ன சொல்லியிருக்க வேண்டும்?
பிறை தகவலை சொல்ல இங்கு எதற்கு வந்தீர்கள்? நாங்கள் தான் போன மாதமே கணக்கிட்டு வைத்திருக்கிறோமே, எங்களுக்கு நாளை பெருநாள் தான். இதை நீங்கள் வந்து சொல்லி நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.
என்றல்லவா சொல்ல வேண்டும்?
ஆனால் நபி (ஸல்) என்ன செய்கிறார்கள்? அவர்கள் சொன்ன பிறை தகவலை வைத்து நோன்பை விடுகிறார்கள்.
அதாவது, ஒவ்வொரு மாதமும் பிறையை பார்த்து தான் மாதங்களை தீர்மானிக்க வேண்டுமே அல்லாமல், அடுத்த வருடம் ஒவ்வொரு மாதத்திற்கும் எத்தனை எத்தனை நாட்கள் என்பதை இன்றே கணக்கிட்டு அறிவிப்பது இந்த ஹதீசுக்கு முரணான செயல்!
பிறையை முன்கூட்டியே கணக்கிடுவதற்கு எதிராக நான் ஏற்கனவே வைத்த எட்டு ஆதாரங்களுடன் சேர்த்து இது ஒன்பதாவது ஆதாரம் !!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக