அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர் ஏர்வாடி சிராஜ் அவர்களுக்கு..
இதுவரை நிகழ்ந்த விவாதத்தின் போது, பல பல கேள்விகளையும் ஹதீஸ்களையும் நான் முன்வைத்த போதும் கூட, நான் மெயில்களை பிரிக்கிறேன் என்றும், முழு ஹதீஸ்களையும் பதிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டை முன் வைத்து, அதை சரி செய்யும் பட்சத்தில் மட்டுமே நாம் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிப்பேன் என்று கூறி வந்தீர்கள்.
ஆதாரங்கள் சொன்ன பிறகும் கூட, வேறு வேறு காரணங்களை கூறி பதில் சொல்வதை விட்டும் தவிர்ப்பதை தானே இவர் நோக்கமாக கொண்டிருக்கிறார் என்ற வகையில், ஒரு கட்டத்தில், உங்களுடனான விவாதத்தை முடிவுக்கு கொண்டு வரலாம் என்று நான் நினைத்தேன்.
ஆனால், இதன் காரணமாக, அந்த ஹதீஸ்களுக்கு நீங்கள் என்ன விளக்கம் வைத்திருக்கிறீர்கள், நான் சொல்லும் ஆதாரங்கள் எனது கொள்கைக்கு எவ்வாறு முரணாக இருக்கிறது என்பதை நானும் பிறரும் அறிய ஒரு சந்தர்ப்பம் இல்லாமல் போகிறது என்ற கவலையும் இன்னொரு பக்கம் உள்ளது.
இறைவனை முன்னிறுத்தி மட்டுமே நான் இதுவரை விவாதம் செய்து வந்ததால், எனது கருத்தில் தவறு இருக்கிறதா? என்பதை இதுவரை என்னால் அறிய முடியாமல் இருப்பது ஏமாற்றத்தை தருகிறது.
இதை மனதில் கொண்டு உங்களுக்கு நான் மீண்டும் ஒரு அழைப்பை இறுதியாக கொடுக்கிறேன்..
பிறை குறித்த விவாதத்தை மீண்டும் செய்வோம், வாருங்கள்..
ஆனால், இந்த முறை சற்று நெறிமுறைகளுடனும், கண்டிஷங்களுடனும்..
நீங்கள் என் மீது என்னென்ன குற்றச்சாட்டை வைத்தீர்களோ, உதாரணம், (மெயில்களை பிரிக்கிறேன்.,.) அது போன்ற எந்த தவறுகளும் இனி தெரிந்தோ தெரியாமலோ நிகழாது, இன்ஷா அல்லாஹ்.
நான் உங்களது அந்த கோரிக்கையை முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன்.
விவாதத்தை மீண்டும் ஆக்கப்பூர்வமான முறையில் தொடர்வதற்கு (அல்லது தொடங்குவதற்கு) நீங்கள் என்னென்ன கண்டிஷன்களை சொல்கிறீர்களோ, அதை இங்கு பட்டியலிடுங்கள். முடிந்த வரைக்கும் அதை நாம் பேணி நடக்கிறோம்..
என் நினைவுக்குட்ப்பட்டு, நான் சில கண்டிஷன்களை உங்களுக்கு வைக்கிறேன்.
- நம் இருவருக்கிடையே பிறை சம்மந்தப்பட்ட கருத்துப்பரிமாற்றங்கள் அனைத்தும் ஒரே மெயிலின் கீழே, ஒரே தலைப்பின் கீழே மட்டுமே இருக்க வேண்டும். (இது நீங்கள் என்னை நோக்கி வைக்கும் கண்டிஷன் தான். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன் )
- வேலை பழு காரணமாகவும், மற்ற மற்ற மார்க்க விஷயங்களையும் அறிவதற்கு நேரம் வேண்டும் என்பதாலும், ஒரு நாளைக்கு நம் இருவரும் ஒரு மெயிலுக்கு மேலே எழுதக்கூடாது.
- நம் இருவர் தவிர்த்து வேறு எந்த சகோதரர் அந்த மெயிலில் கருத்து பதித்தாலும், அவர்களுக்கு நாம் பதில் அளிக்க கூடாது. (அவ்வாறு பதில் அளித்தால், அதுவும் ஒரு நாளைக்கு ஒரு மெயில் கோட்டாவில் வந்து விடும்.. அதாவது, அந்த நாளைக்குரிய நமது வாய்ப்பை இழந்தவர்களாகி விடுவோம்!
- பிறை சம்மந்தமாக , என்னை அல்லது உங்களை குறித்து வேறெந்த விமர்சனங்களையும் இந்த மெயில் தவிர்த்து வேறெந்த மெயிலிலும் நாம் இருவரும் பதிக்ககூடாது. அவ்வாறு பதிக்கப்பட்டது கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டாது. நாம் பேசிக்கொண்டிருக்கும் மெயிலில் சொல்லப்படும் கருத்துக்கள் மட்டுமே ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படும்.
- அதே சமயம், வேறு வேறு மெயில்களில் வேறு சகோதரர்கள் எதையாவது எழுதி, அதற்கு நாம் பதில் சொல்வது இந்த கண்டிஷனில் அடங்காது. அது போன்று நாம் பதில் மட்டுமே வேறு மெயில்களில் எழுதுவது, நமது விவாதத்தை பாதிக்காது !!
இது போக, வேறு ஏதேனும் கண்டிஷன்கள் என் நினைவுக்கு வந்தால் அதையும் எழுதுகிறேன்..
உங்களுக்கு தோன்றும் கண்டிஷன்களை இங்கு எழுதி, இத்தனை கண்டிஷங்களோடும், ஒப்பந்தத்தோடும் பிறை குறித்த கருத்துப்பரிமாற்றதை, இறைவனை முன்னிறுத்தி நீங்கள் செய்ய தயாரா? எனபதை எனக்கு பதிலாக எழுதுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக