அஸ்ஸலாமு அலைக்கும்..
ஏர்வாடி ஹிஜ்ரா கமிட்டியின் ஆதரவு பெற்ற, Er . அப்துஸ்ஸமத் அவர்களின் "பிறை பார்த்தல்", நூலில் காணப்படும் மற்றுமொரு ஹதீஸ் விளக்கத்தை இங்கே தருகிறேன்.
பக்கம் 18 :
அபு ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்ததாக சஹீ முஸ்லிமில் காணப்பெறும் நபி மொழி ஒன்று கூறுகிறது :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், (ரமலான் மாதத்) தலைப்பிறையை பார்த்தால் நோன்பு நோற்கவும்.
அதே போல் (ஷவ்வால் மாத) தலைப்பிறையை பார்த்தால் நோன்பு நோர்ப்பதை முடிவுக்கு கொண்டு வரவும்.
ஆகாயம் மேகமூட்டமாக இருந்தால் நோன்பை 30 ௦ நாட்கள் நோற்கவும்.
இது அந்த நூலில் 18 ஆம் பக்கத்தில் இடம்பெற்றுள்ள வாசகம்!
ஏர்வாடி சிராஜ் நம்மோடு விவாதத்தின் போது பேசியதை இங்கு நினைவூட்டுகிறேன்..
ஒரு மாதத்தை முடிவு செய்ய அந்த மாதத்தின் தலைப்பிறையை பார்க்க வேண்டும் என்பதற்கு என்ன ஆதாரம்? என்று நம்மிடம் கேள்வி கேட்டார் இவர்.
ஒரு மாதத்தை தீர்மானிக்க முந்தைய மாதத்தை தான் பார்க்க வேண்டும் என்று கூறினார் இவர்.
ஆனால், இந்த நூலில் இவர்கள் எழுத்துள்ளது என்ன என்பதை கவனியுங்கள்..
நோன்பை துவக்க ரமளானின் தலைப்பிறையை தான் பார்க்க வேண்டுமாம்.
நோன்பை முடிக்க (ஷவ்வால் மாதத்தை தீர்மானிக்க) ஷவ்வால் மாத தலைப்பிறையை தான் பார்க்க வேண்டுமாம்..
இவர்களது இரட்டை வேடத்தை பார்த்து விட்டீர்களா?
அடுத்து, அந்த ஹதீஸில் மேகமூட்டம் என்ற வார்த்தையை நாம் கூறிய போது, மேகமூட்டம் என்ற வார்த்தை எங்குள்ளது என்று என்னிடம் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார்கள் .
அதற்கு நாம் பதில் சொல்லும் போது, அந்த வார்த்தை இல்லை என்று சொல்கிறீர்களா? அப்படியானால் வேறு என்ன வார்த்தை இருக்கிறது? அதை நீங்களாவது விளக்கி, அந்த ஹதீஸில் நான் சொல்லும் கருத்து வராது என்பதை நிரூபியுங்கள் பார்க்கலாம், என்றேன்.
அதற்கு வாய் திறக்காதவர், மீண்டும் மீண்டும் "மேகமூட்டம்", என்ற வார்த்தை எங்குள்ளது என்று மட்டும் கேட்டு வந்தார்.
இதோ, அந்த நூலில் இவர்கள் எழுதியதை பாருங்கள்..
......ஆகாயம் மேகமூட்டமாக இருந்தால் நோன்பை 30 ௦ நாட்கள் நோற்கவும்.
இவரது இரட்டை வேடங்களை அறிந்து கொள்ளுங்கள்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக